- Monday
- May 18th, 2026
முல்லைத்தீவில் இனப்பரம்பலைச் சிதைக்கும் நோக்குடனான சட்டவிரோத குடியேற்றத்தை மேற்கொள்ளும் திட்டத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து கவனயீர்ப்பு பேரணி ஒன்று இடம்பெற்றது. மேற்படி கவனயீர்ப்பு பேரணியானது முள்ளியவளை ஆலடி சந்தியிலிருந்து நேற்று (ஞாயிற்றுக்கிழமை) காலை 11 மணிக்கு ஆரம்பமானது. போருக்குப் பின்னரான நல்லிணக்க முயற்சிகளைக் கட்டியெழுப்பும் விதமாக உருவாக்கப்பட்ட கற்றுக்கொண்ட பாடங்கள் மற்றும் நல்லிணக்க ஆணைக்குழுவின் அறிக்கையில் கூட,...
வடக்கில் அண்மையில் இடம்பெற்ற சம்பவங்கள் பயங்கரவாத செயற்பாடுகளாக கொள்ள முடியாதென்பதுடன், நாட்டை மீண்டும் பயங்கரவாதத்திற்குள் உட்படுத்துவதற்கு அனுமதிக்கப்போவதில்லை என பொலிஸ் மா அதிபர் பூஜித் ஜயசுந்தர தெரிவித்தார். இலங்கையின் செய்திச்சேவை ஒன்றிற்கு அளித்த செவ்வி ஒன்றிலேயே அவர் இதனைத் தெரிவித்தார். இது குறித்து அவர் மேலும் தெரிவிக்கையில், “நாட்டின் நல்லிணக்கத்தைச் சீர்குலைக்க முயற்சிப்பவர்களுக்கு எதிராக பொதுமக்களின்...
இந்திய மத்திய குற்றப்புலனாய்வு அதிகாரிகளால் பெங்களூர் நகரில் வைத்து நேற்று (ஞாயிற்றுக்கிழமை) மூவர் கைது செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. கைது செய்யப்பட்டவர்களில், யாழ்ப்பாணத்தைச் சேர்ந்த ஒருவர் உள்ளடங்குவதாகவும், குறித்த சந்தேக நபர்களிடமிருந்து 144 போலியான கடன் அட்டைகள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகின்றது. குறித்த நபர்கள் மூவரும் இந்தியாவின் பல இடங்களில் கடனட்டை மோசடியில் ஈடுபட்டிருக்கலாம் எனவும் இவர்கள்...
எமது மண்ணில் இருந்து எம்மைத் துரத்தலாம் என நினைத்து, இளைஞர்களின் மனநிலையினை மீண்டும் வேறு திசைகளுக்கு மாற்றாதீர்கள் என வடமாகாணசபை உறுப்பினர் து.ரவிகரன் தெரிவித்துள்ளார். முள்ளியவளையில் நேற்று (ஞாயிற்றுக்கிழமை) இடம்பெற்ற ஆர்ப்பாட்டத்தில் கலந்து கொண்டு உரையாற்றியபோதே இதனைத் தெரிவித்துள்ளார். இது குறித்து அவர் மேலும் தெரிவிக்கையில், “எமது இளைஞர்கள் இன்று ஆக்கபூர்வமான வேலைகளில் ஈடுபட்டுள்ளனர். எமது...
மாலபே நெவில் பெர்ணான்டோ வைத்தியசாலை பொறுப்பேற்றுக் கொள்ளும் நிகழ்வு இன்று (திங்கட்கிழமை) நடைபெறவுள்ளது. ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தலைமையில் இதற்கான நிகழ்வு நடைபெறவுள்ளதாகவும் அரசியல்வாதிகள் உட்பட அரச அதிகாரிகள் பலர் இன்றைய நிகழ்வில் கலந்துகொள்ளவுள்ளதாக சுகாதார அமைச்சர் ராஜித சேனாரத்ன தெரிவித்துள்ளார். மூன்று பில்லியன் ரூபா பெறுமதியான நெவில் பெர்னர்ணடோ தனியார் வைத்தியசாலை, அதன் உபகரணங்கள்,...
கடந்த 12-07-2017 அன்று வசந்தம் தொலைக்கபட்சியின் அதிர்வுகள் நேரடி விவாத நிகழ்வில் ஒளிபரப்பான தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியின் தலைவரும் அகில இலங்கை தமிழ் காங்கிரஸ் கட்சியின் பொதுச் செயலாளருமான கஜேந்திரகுமார் பொன்னம்பலம் அவர்களுடனான கேள்விபதில் நிகழ்வு இங்கு இணைக்கப்பட்டுள்ளது. https://www.youtube.com/watch?v=5zm8jUk95PE&feature=youtu.be
முல்லைத்தீவு மாவட்டத்தில் காடழிப்பினை மேற்கொண்டு திட்டமிட்ட குடியேற்றங்களை மேற்கொள்ளவு ள்ளமைக்கு எதிர்ப்பு தெரிவித்து பாரிய எதிர்ப்பு போராட்டம் நாளைய தினம் ஞாயிற்றுக்கிழமை முன்னெடுக்கப்படவுள்ளது. முல்லைத்தீவு மாவட்டத்தில் கூழாமுறிப்பு எனும் பகுதியில் உள்ள சுமார் 177 ஏக்கர் காட்டினை அழித்து குடியேற்றங்கள் மேற்கொள்ளபட உள்ளமைக்கு எதிர்ப்பு தெரிவித்தே குறித்த போராட்டம் முன்னெடுக்கப்படவுள்ளது. முல்லைத்தீவு முள்ளியவளை காட்டா விநாயகர்...
ஒற்றையாட்சி எனும் சொல்லோ அல்லது சமஸ்டி எனும் சொல்லோ இல்லாமல் அதி கூடிய உறுதியான மத்திய அரசினால் மீளப்பெறப்பட முடியாத அதிகார பகிர்வு புதிய அரசியல் சாசனத்தின் மூலம் கொண்டுவரப்படுமானால் அதனை நாங்கள் பரிசீலிப்போம் என தமிழ்த்தேசியக் கூட்டமைப்பின் தலைவரும் எதிர்க் கட்சி தலைவருமான இரா. சம்மந்தன் தெரிவித்துள்ளார். கடந்த 12 ஆம் திகதி கிளிநொச்சி...
புங்குடுதீவு மாணவி வித்தியா கொலைச் சம்பவத்தின் முக்கிய சூத்திரதாரியான சுவிஸ் குமாருக்கு, தப்பிச் செல்வதற்கு உதவிய குற்றச்சாட்டில் சிரேஷ்ட பிரதி பொலிஸ் மா அதிபர் லலித் ஜயசிங்க கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸ் ஊடக பிரிவு அறிவித்துள்ளது. கொழும்பு பல்கலைக்கழகத்தின் சட்டப் பிரிவு பேராசிரியர் தமிழ்மாறனின் கோரிக்கைக்கமைய பிரதான சந்தேகநபரை, லலித் ஜயசிங்க விடுவித்ததாக அவர் மீது...
இலங்கைக் கடற்படையினரால் கைப்பற்றப்பட்ட தமிழக மீனவர்களின் 42 படகுகளை விடுவிக்குமாறு யாழ் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. மனிதாபிமான அடிப்படையில் மேற்படி படகுகளை விடுவிப்பதாகவும் நீதிமன்றம் தெரிவித்துள்ளது. விடுவிக்கப்படவுள்ள படகுகள் கடந்த 2015 ஆம் ஆண்டு பெப்ரவரி 26 ம் திகதியிலிருந்து நவம்பர் 10ஆம் திகதி வரை கைப்பற்றப்படவை எனவும் தெரிவிக்கப்பட்டள்ளது. மேலும் விடுவிக்கப்படும் இந்த படகுகள் எதிர்வரும்...
வடமாகாண கல்வி அமைச்சினால் கணிதம் மற்றும் விஞ்ஞான பாட ஆசிரியர் நியமனம் பெற்ற 38 பேர் ஒரு மாத காலத்தை கடந்ததும் தமது கடமைகளை பொறுப்பேற்கவில்லை என தெரிவிக்கப்படுகின்றது. இது குறித்து மேலும் தெரியவருவதாவது, வடமாகாண கல்வி அமைச்சிற்கு உட்பட பாடசாலைகளில் கணிதம் மற்றும் விஞ்ஞான பாடத்திற்கு 418 ஆசிரியர் வெற்றிடம் காணப்பட்டது. அதனை நிரப்புவதற்காக...
ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனா தனது ஆட்சியை நல்லாட்சி எனக் கூறிக்கொண்டு என் கணவனை பயங்கரவாதி என அடையாளப்படுத்தி சிறையிலடைத்தது மட்டுமல்லாமல் என் 15 வயது மகனை மேசன் தொழிலாளி ஆக்கி ஒரு பாடசாலை சிறுவனின் எதிர்காலத்தையே அழித்துவிட்டார். உண்மையில் இங்கே நடப்பது நல்லாட்சி என்றால் என் கணவனை விடுதலை செய்யுங்கள். என் மகனின் எதிர்காலத்தை பாதுகாத்து...
தெற்கில் வெள்ளத்தினால் கடுமையாக பாதிக்கப்பட்ட மக்களுக்கான மருத்துவ முகாமொன்று புலம்பெயர் தமிழர் அமைப்பான உலகத் தமிழர் பேரவையினால் முன்னெடுக்கப்பட்டுள்ளது. களுத்துறை, மாத்தறை ஆகிய மாவட்டங்களில் முன்னெடுக்கப்பட்ட மருத்துவ முகாம்களின் மூலம் சுமார் 780 பேர்வரை நன்மையடைந்ததாக தெரிவிக்கப்படுகிறது. இந்நிலையில், தென்பகுதி மக்களுக்கு உதவிகளை வழங்கிய உலகத் தமிழர் பேரவைக்கு அரசாங்கம் நன்றி பாராட்டியுள்ளதாக ஊடகமொன்று செய்தி...
கிளிநொச்சி, முறிகண்டி ரயில் நிலையத்தை அண்மித்த பகுதியிலிருந்து சடலமொன்று கண்டெடுக்கப்பட்டுள்ளதாக அங்கிருக்கும் எமது செய்தியாளர் குறிப்பிட்டுள்ளார். இவர் நேற்று (வெள்ளிக்கிழமை) யாழிலிருந்து கொழும்பு நோக்கி பயணித்த ரயிலிலிருந்து தவறி விழுந்தவராக இருக்கலாம் என்ற ரீதியில் தற்போது விசாரணைகள் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன. நேற்றிரவு யாழிலிருந்து கொழும்பு நோக்கிய பயணித்த ரயிலில், மிதிப்பலகையில் சென்ற நபரொருவர் தவறி விழுந்ததாக...
எதிர்கட்சித் தலைவரான தமிழ் தேசியக் கூட்டமைப்பின் தலைவர் இரா.சம்பந்தனுக்கும், வட. மாகாண முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரனுக்கும் இடையே பேச்சுவார்த்தையொன்று இடம்பெறவுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. தமிழ்த் தேசியக் கூட்டமைப்பிலுள்ள பங்காளிக் கட்சிகளிடையே ஏற்பட்டுள்ள குழப்பகரமான சூழ்நிலைக்கு முற்றுப்புள்ளி வைக்கும் வகையிலேயே குறித்த சந்திப்பு இடம்பெறவுள்ளது. இந்த சந்திப்பு இம்மாத இறுதிக்குள் கொழும்பில் நடைபெறும் என தகவல்கள் வெளியாகியுள்ளன. வடமாகாண முதலமைச்சர்...
ஈச்சமோட்டை பகுதியில் இடம்பெற்ற வாள்வெட்டு சம்பவமொன்றில் நால்வர் படுகாயமடைந்த நிலையில், யாழ். போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். நேற்றிரவு (வெள்ளிக்கிழமை) மேற்கொள்ளப்பட்ட வாள்வெட்டு சம்பவமானது ஆவா குழுவுடன் தொடர்புடைய சந்தேகநபர்களினாலேயே முன்னெடுக்கப்பட்டிருப்பதாக சந்தேகம் வெளியாகியுள்ளது. யாழ்ப்பாணம் ஈச்சமோட்டை குளத்தடிப்பகுதியில் உள்ள யாழ்.மாவட்ட உள்ளூராட்சி ஆணையாளரது வீட்டிற்குள்ளும், அருகிலிருந்த மற்றுமொரு வீட்டினுள்ளும் அத்துமீறி நுழைந்த மர்ம நபர்கள் வீட்டில்...
முல்லைத்தீவு மாவட்டத்தின் உள்ளூர் பேருந்து சேவைகள் அதிகரிக்கப்பட வேண்டும் என பல கிராமங்களின் மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். இறுதிப் போர் நடைபெற்ற மாத்தளன், அம்பலவன்பொக்கணை, வலைஞர்மடம் மற்றும் குமுழமுனை, முத்தையன்கட்டு, மாந்தை கிழக்கு, துணுக்காய் ஆகிய பகுதிகளின் பல கிராமங்கள் பேருந்து சேவைகள் நடைபெறாததன் காரணமாக மக்கள் போக்குவரத்து நெருக்கடிகளை எதிர்கொண்டுள்ளனர். முல்லைத்தீவு மாவட்டத்தில் அதிக...
இலங்கையில் தமிழர்கள் திட்டமிட்ட அடிப்படையில் சித்திரவதை செய்யப்படுவதாக சர்வதேச உண்மைகள் மற்றும் நீதிக்கான திட்டத்தின் நிறைவேற்றுப் பணிப்பாளர் யாஸ்மீன் சூகா தெரிவித்துள்ளார். புதிய அரசாங்கம் ஆட்சிப் பொறுப்பினை ஏற்றுக்கொண்டு 30 மாதங்கள் கடந்துள்ள நிலையிலும் உரிய நடவடிக்கை எடுக்கப்படவில்லை என அவர் தெரிவித்துள்ளார். இராணுவ முகாம்களில் சித்திரவதைகள், குடிவரவு மோசடிகள், சட்டவிரோத ஆட்கடத்தல்கள், கப்பம் கோரல்கள்...
இலங்கையில் மலேரியா நோயினை முற்றாக அழித்த போதிலும் டெங்கு நோயினை அழிக்க முடியாதுள்ளது. இலங்கையில் எச். ஐ.வி மற்றும் டெங்கு நோய் பரவல் அதிகரித்துள்ளது என சுகாதாரத் துறை அமைச்சர் ராஜித சேனாரத்ன தெரிவித்தார். இந்த மாதத்தின் பின்னர் டெங்கு நோய் பரவல் குறைவடையும் எனினும் ஒக்டோபர் மாதத்தின் பின்னர் மீண்டும் அதிகரிக்கும் அபாயம் உள்ளதாகவும்...
காங்கேசன்துறை நடேஸ்வர கல்லூரிக்கு அருகில் உள்ள கல்லூரி வீதியில் உள்ள தொடருந்துக் கடவையில் எந்தவிதமான முன்னெச்சரிக்கை சமிச்ஞைகளும் இயங்காதுள்ளன. முன்னெச்சரிக்கை ஒலி, சமிச்கை விளக்குகள் என்பன இயங்காதுள்ளதால் நடேஸ்வர கல்லூரி பாடசாலை மாணவர்கள், ஆசிரியர்கள் மற்றும் பொது மக்களின் பாதுகாப்பு கேள்விக்குறியாகவே காணப்படுகின்றது. இந்தப் பிரதேசத்தின் சில பகுதிகளை இராணுவத்தினர் விடுவிக்காமல் வைத்துள்ள போதும் பாடசாலையைச்...
Loading posts...
All posts loaded
No more posts
