- Monday
- May 18th, 2026
கணித, விஞ்ஞான பாடங்களிற்கான பட்டதாரிகள் 27 பேருக்கு நேற்றயதினம் நியமனங்கள் வழங்கிவைக்கப்பட்டன. வடமாகாண கல்வி அமைச்சில் இவர்களுக்கான நியமனக் கடிதங்கள் வழங்கிவைக்கப்பட்டன. இவர்களுக்கான நியமனங் ககடிதங்களை வடமாகாண கல்வி அமைச்சர் க.சர்வேஸ்வரன் மற்றும் கல்வி அமைச்சின் செயலாளர் இ.ரவீந்திரன் ஆகியோர் வழங்கி வைத்தனர். பட்டதாரி நியமனத்திற்காக இடம்பெற்ற நேர்முகத் தேர்வின் போது சான்றிதழ் சமர்ப்பிக்கத் தவறிய...
நீர்வழங்கல் வடிகாலமைப்பு அமைச்சின் ஏற்பாட்டில் மருதங்கேணியில் இருந்த தாழையடி பெரும் கடல்பரப்பில் கடல் நீரை நன்னீராக்கும் செயற்றிட்டம் ஒன்றை முன்னெடுக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. இதுதொடர்பாக, விசேட கலந்துரையாடல் யாழ் மாவட்ட செயலகத்தின் கேட்போர் கூடத்தில் மாவட்ட அரசாங்க அதிபர் நாகலிங்கம் வேதநாயகன் தலைமையில் நடைபெற்றது. இதில் எதிர்வரும் 05 ஆண்டு காலப்பகுதியில் முன்னெடுக்கப்படவுள்ள கடல் நீரை...
வடமாகாண மீன்பிடி போக்குவரத்து அமைச்சராக என்.விந்தன் கனகரத்தினம் தமிழீழ விடுதலை இயக்கத்தின் செயற்குழுவினால் பரிந்துரைக்கப்பட்டுள்ளார். பரிந்துரைக்கான கடிதம் நேற்றயதினம் (திங்கட்கிழமை) கட்சியின் செயலாளர் நாயகத்தினால் வடமாகாண முதலமைச்சருக்கு அனுப்பி வைக்கப்படவுள்ளதாகவும் அக்கட்சியின் செயற்குழுவினர் தெரிவித்துள்ளனர். இது குறித்து தமிழீழ விடுதலை இயக்கத்தின் உயர்மட்ட கலந்துரையாடல் வவுனியாவில் நடைபெற்றது. இதன்போது 8 உறுப்பினர்கள் கலந்துகொண்டிருந்தனர். இந்நிலையில், டெனிஸ்வரனின்...
எதிலும் குறை கூறுவதில் நாம் வல்லவர்கள் என்பதனாலேயே பல அபிவிருத்தி திட்டங்களை முன்னெடுக்க முடியாமல் உள்ளோம் என வடக்கு முதலமைச்சர் சி.வி. விக்னேஸ்வரன் தெரிவித்தார். ஒப்பந்த முகாமைத்துவம் மற்றும் முரண்பாடுகளை தீர்வு செய்தல் தொடர்பான கருத்தரங்கு யாழ்ப்பாணத்தில் நேற்று (திங்கட்கிழமை) ஆரம்பமானபோது அதிதியாக கலந்துகொண்டு உரையாற்றும்போதே அவர் இவ்வாறு தெரிவித்தார். தொடர்ந்தும் அங்கு கருத்து தெரிவித்த...
நேரியகுளம், மாங்குளம் பகுதியில் குடும்பத்தினர்களுக்கிடையில் ஏற்பட்ட முரண்பாட்டின்போது ஏற்பட்ட கைகலப்பில் ஒருவர் உயிரிழந்துள்ளார். நேற்றுமுன்தினம் (ஞாயிற்றுக்கிழமை) இடம்பெற்ற இச்சம்பவத்தில் மாங்குளத்தை சேர்ந்த 68 வயதுடைய இஸ்மாயில் சம்சுதீன் என்பவரே இவ்வாறு உயிரிழந்துள்ளதாகத் தெரிவிக்கப்படுகின்றது. இச்சம்பவம் தொடர்பாக தெரியவருவதாவது, இரவு 8 மணியளவில் நேரியகுளம் மாங்குளம் பகுதியில் உள்ள சம்சுதீன் என்பவரது வீட்டில் உறவினர்களுக்கிடையில் முரண்பாடு ஏற்பட்டுள்ளது....
அரச முகாமைத்துவ சேவையில் இந்த வருடத்தில் புதிதாக மூவாயிரத்திற்கும் மேற்பட்டோரை இணைத்துக் கொள்வதற்காக எதிர்வரும் 22ம் 23ம் திகதிகளில் இதற்கான போட்டிப் பரீட்சை நடத்தப்படவிருப்பதாக அரச நிர்வாக மற்றும் முகாமைத்துவ அமைச்சு குறிப்பிட்டுள்ளது. இதேவேளை, இதற்காக ஒரு இலட்சத்திற்கும் மேற்பட்ட பரீட்சார்த்திகள் தோற்றவுள்ளனர். அனைத்து பரீட்சார்த்திகளுக்குமான பரீட்சை அனுமதி அட்டைகள் தற்பொழுது அனுப்பி வைக்கப்பட்டுள்ளதாக பரீட்சைகள்...
தற்போதைய சூழ்நிலைகளை எமது அடுத்த தலைமுறைக்கு கொண்டு செல்வதற்கு இடமளிக்க கூடாது என வடமாகாண சபை அவைத்தலைவர் சீ.வி.கே.சிவஞானம் வலியுறுத்தியுள்ளார். மாகாண அவைத்தலைவர்களின் 8 ஆவது மாநாடு யாழ்.மாதகல் பகுதியில் உள்ள கடற்படையினரின் விருந்தினர் விடுதியில் இடம்பெற்றபோதே அதனைத் தெரிவித்துள்ளார். இது குறித்து அவர் மேலும் தெரிவிக்கையில், “தமிழ் பேசும் மக்களுடைய இனப் பிரச்சினைக்கு ஒரு...
2025 ஆம் ஆண்டில் மலையத்தில் வீட்டுக்கு ஒரு பட்டதாரி உருவாக வேண்டும் என, கல்வி இராஜாங்க அமைச்சர் வே.இராதாகிருஸ்ணன் கூறியுள்ளார். லிந்துல்ல பம்பரகல்ல தோட்டம் அப்பர்கிரன்லி பிரிவில் 30 வீடுகளுக்கான அடிகல் நாட்டும் நிகழ்வில் பிரதம அதிதியாக கலந்துக் கொண்டு உரையாற்றும் போதே இதனைத் தெரிவித்துள்ளார். இது குறித்து அவர் மேலும் தெரிவிக்கையில், “பெருந்தோட்ட மக்களின்...
மலையக மக்களை பிரதேச ரீதியாக ஒடுக்கும் வகையில் கருத்துக்களை வெளியிட்டதாக குற்றஞ்சாட்டப்பட்ட நாடாளுமன்ற உறுப்பினர் சிறிதரனிற்கு எதிரானவை எனக் கருதப்படும் சுவரொட்டிகள் கிளிநொச்சியின் பல்வேறு பகுதிகளில் ஒட்டப்பட்டுள்ளன. கரைச்சி பிரதேச அபிவிருத்தி குழு கூட்டம், இன்று (செவ்வாய்க்கிழமை) நடைபெறவுள்ள நிலையில், இவ்வாறு விமர்சிக்கப்படும் வகையில் சுவரொட்டிகள் ஒட்டப்பட்டுள்ளமை பெரும் சர்ச்சையை தோற்றுவித்துள்ளது. மக்கள் அதிகம் நடமாடும்...
வடக்கு மாகாண விவசாய அபிவிருத்திக்கு “மாகாணத்துக்கான குறித்து ஒதுக்கப்பட்ட அபிவிருத்தி நன்கொடை நிதிமூலம் 135 மில்லியன் ரூபா ஒதுக்கீடு செய்யப்பட் டுள்ளது. இந்த நிதி யாழ்ப்பாணம் மன்னார் வவுனியா, முல்லைத்தீவு, கிளிநொச்சி ஆகிய ஐந்து மாவட்டங்களுக்கும் பகிரப்படும். அந்த நிதியில் 18 வகையான விவசாய அபிவிருத்தி வேலைத்திட்டங்களை முன்னெடுப்பதற்கு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. ஒவ்வொருமாவட்டத்திலும் 18 வகையான...
ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன மற்றும் பிரதமர் ரணில் விக்ரமசிங்க ஆகியோரை நீதிமன்றத்தில் முன்னிலையாகுமாறு கொழும்பு மேல் நீதிமன்றம் அறிவித்துள்ளது. 2015ஆம் ஆண்டு ஜனாதிபதித் தேர்தல் காலத்தில், போலி ஆவணங்களை வெளியிட்ட குற்றச்சாட்டில் ஐக்கிய தேசியக் கட்சியின் முன்னாள் பொதுச் செயலாளர் திஸ்ஸ அத்தநாயக்கவுக்கு எதிராக தாக்கல் செய்யப்பட்ட வழக்கு விசாரணைகள் இன்று இடம்பெற்றன. இந்த வழக்கில்...
தடுப்புக்காவலில் வைக்கப்பட்டுள்ள விடுதலைப் புலிகளின் 71 உறுப்பினர்களை எக்காரணத்திற்காகவும் விடுதலை செய்ய முடியாதென நீதியமைச்சர் விஜயதாச ராஜபக்ஷ தெரிவித்துள்ளார். இலங்கைக்கு விஜயம் மேற்கொண்ட மனித உரிமைகள் மற்றும் தீவிரவாத எதிர்ப்பு தொடர்பான ஐக்கிய நாடுகள் சபையின் சிறப்பு அறிக்கையாளர் பென் எமர்ஷன் முன்வைத்த குற்றச்சாட்டுக்களுக்கு பதிலளிக்கும் விதமாகவே நீதியமைச்சர் இவ்வாறு தெரிவித்துள்ளார். இதுகுறித்து அவர் தொடர்ந்து...
வடமாகாண போக்குவரத்து மீன்பிடி அமைச்சர் பா.டெனிஸ்வரன் தொடர்பில் நடவடிக்கைகள் எடுக்கப்படுமென வடமாகாண முதலமைச்சர் சி.வி.விக்கினேஷ்வரன் அறிவித்துள்ளார். வடமாகாண அமைச்சர் பா.டெனிஸ்வரன் தொடர்பாக அவர் பிரதிநிதித்துவம் தமிழீழ விடுதலை இயக்கத்தின் செயலாளர் ந.ஸ்ரீகாந்தாவினால் அனுப்பி வைக்ககப்பட்ட கடிதத்திற்கு பதிலளிக்கும் வகையில் முதலமைச்சர் விக்கினேஸ்வரனால் அனுப்பிவைக்கப்பட்டுள்ள கடிதத்திலேயே மேற்கண்டவாறு அறிவிக்கப்பட்டுள்ளது. முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரன் அனுப்பிய பதில் கடிதத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது,...
குற்றப்புலனாய்வு பிரிவினரால் கைதுசெய்யப்பட்ட சிரேஷ்ட பிரதிப் பொலிஸ்மா அதிபர் லலித் ஏ.ஜெயசிங்கவை, இம்மாதம் 25ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு உத்தரவிடப்பட்டுள்ளது. புங்குடுதீவு மாணவி கொலைச் சம்பவம் தொடர்பில், சுவிஸ்குமார் என அழைக்கப்படும் மகாலிங்கம் சசிக்குமார், பொலிஸ் காவலில் இருந்து தப்பிச் சென்றமை தொடர்பாக வாக்குமூலம் பெற்றுக்கொள்வதற்காக, வட மாகாண முன்னாள் சிரேஷ்ட பிரதிப் பொலிஸ்மா...
“அடிமைத்தனத்தில் இருந்து விடுபட வேண்டுமானால், தனியே அரசியல் ரீதியிலான விடுதலை மட்டுமல்லாது, போதைவஸ்தில் இருந்தும் மதுபாவனையில் இருந்தும் எங்கள் குடும்பங்கள் விடுவிக்கப்பட வேண்டும். குறிப்பாக, இந்த மாணவ சந்ததி, இவற்றைக் கிரகித்துக் கொண்டு, ஒழுக்கமுள்ள சந்ததியாக, எதிர்காலத்தை நோக்கிப் பயணிக்க வேண்டும். பிள்ளைகளுக்கு பெற்றோர்கள் விழிப்புணர்ச்சியைக் கொடுக்க வ்வேண்டும். மதுவுக்கு எதிராகவும் போதைவஸ்துக்கு எதிராகவும் அவர்கள்...
முல்லைத்தீவு ஒட்டுசுட்டான் தட்டார்மலை, பெரிய சாளம்பன், முத்தையன்கட்டு ஆகிய கிராமங்களில் தொடர்ச்சியாக யானைகளின் தொல்லையினை கிராமங்களின் மக்கள் எதிர்கொண்டுள்ளனா் கடந்த மூன்றாண்டுகளாக குறித்த பகுதிகளில் யானைகளின் தொல்லையினைக் கட்டுப்படுத்துவதற்கு மின்சார வேலி அமைப்பதென முடிவு எடுக்கப்பட்ட போதிலும் 2019ம் ஆண்டில்தான் மின்சார வேலி அமைக்கப்படும் என அதிகாரிகளினால் தெரிவிக்கப்படும் நிலையில் ஆயிரம் குடும்பங்கள் வரை நாள்தோறும்...
முல்லைத்தீவில் குளங்களின் நீர் மட்டம் வெகுவாக குறைவடைந்து செல்வதனால் விவசாயம் நன்னீர் மீன்பிடி நிலத்தடி நீர், விலங்குகளுக்கான குடிநீர், உள்ளிட்ட நீர்த்தேவைகளை பூர்த்தி செய்வதில் மக்கள் பெரும் சிரமங்களை எதிர்கொள்கின்றனா். முல்லைத்தீவின் முக்கிய குளங்களான முத்தையன்கட்டுக் குளம், வவுனிக்குளம் என்பவற்றின் நீர் மட்டம் அடிநிலையினைச் சென்றடைந்துள்ளதன் காரணமாக இக்குளங்களின் கீழான விவசாயச் செய்கைகள் பாதிக்கப்பட்டுள்ளது அத்தோடு...
”தமிழ் மக்களுக்காக போராடியது குற்றமா – தமிழ் மண்ணில் பிறந்தது குற்றமாக – ஏன் எங்களை புறக்கணித்து சந்தேகக் கண் கொண்டு பாா்க்கின்றீா்கள்” என்று முன்னாள் போராளியும் புனா்வாழ்வளிக்கப்பட்ட நபா்களின் ஒன்றியத்தின் தலைவரும், தமிழீழ விடுதலைப் புலிகளின் திருமலை மாவட்ட புலனாய்வுதுறையின் சிரேஷ்ட தளபதியாக இருந்தவருமான அன்பு (கந்தசாமி இன்பராசா) கேள்வி எழுப்பியுள்ளாா். புனா்வாழ்வு பெற்ற...
உள்ளூராட்சி மன்றத் தேர்தலை எதிர்வரும் நவம்பர் மாதம் இறுதி வாரத்தில் நடாத்துவதற்கு கட்சித் தலைவர்கள் தீர்மானித்துள்ளதாக செய்திகள் வெளியாகியுள்ளன. நேற்று (ஞாயிற்றுக்கிழமை) மாலை அலரி மாளிகையில் பிரதமர் தலைமையில் இடம்பெற்ற கட்சித் தலைவர்களுடனான கலந்துரையாடலின் போது இந்த இணக்கப்பாடு காணப்பட்டுள்ளது. இந்த கலந்துரையாடலில் தேர்தல்கள் ஆணைக்குழு மற்றும் சட்டமா அதிபர் திணைக்களம் என்பவற்றின் அதிகாரிகளும் கலந்துகொண்டதாக...
இந்த வருடத்தின் இதுவரையான காலப்பகுதியில், டெங்கு நோயினால் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 272 ஆக உயர்வடைந்துள்ளதாக தேசிய டெங்கு ஒழிப்புப் பிரிவு தெரிவித்துள்ளது. நாடு முழுவதும் இக்காலப் பிரிவில் மாத்திரம் 91000 டெங்கு நோயாளர்கள் அடையாளம் காணப்பட்டுள்ளதாகவும் அப்பிரிவின் பேச்சாளர் ஒருவர் குறிப்பிட்டுள்ளார். தத்தமது வீடு, சூழல் என்பவற்றை சுத்தமாக வைத்திருப்பதன் ஊடாக மாத்திரமே இந்த டெங்கு...
Loading posts...
All posts loaded
No more posts
