அசிட் வீச்சு செய்தியில் உண்மையில்லை! ; தமீம் இக்பால்

பங்களாதேஷ் கிரிக்கெட் அணியின் ஆரம்ப ஆட்ட நாயகனான தமீம் இக்பாலின் மனைவி மற்றும் மகனுக்கு லண்டனில் அசிட் வீசி தாக்குதல் என வெளியான தகவல் பொய்யானது என இக்பால் தெரிவித்துள்ளார். இக்பாலின் மனைவி ஆயிஸா சித்திக் மற்றும் அவரது மகன் இருவரும் லண்டனில் உள்ள உணவகத்திற்கு சென்றிருந்த வேளை அவ் உணவக உரிமையாளர் மற்றும் ஊழியர்களால்...

தயாரிப்பதற்கு ஒருநாளைக்கு முன்னரே பணிஸ் விற்பனை

பேக்கரிகளில் தயாரிக்கப்படும் பொருட்கள், “தயாரிக்கப்பட்ட நாளுக்கு”, முதல்நாளன்றே விற்பனை செய்யப்பட்ட சம்பவ​மொன்று இடம்பெற்றுள்ளது. இந்த சம்பவம், நுவரெலியா- பெக்கும்புர பகுதியிலேயே இடம்பெற்றுள்ளது. பணிஸ் பொதியிடப்பட்ட பக்கெற்றுகளில், உற்பத்தி செய்யப்பட்ட திகதியென 18.07.2017 திகதியிடப்பட்டுள்ளது. எனினும், அந்த பணிஸ் முதல்நாளான 17.07.2017 அன்றைய தினமே, கடைகளில் பெற்றுக்கொள்ளக்கூடியதாக இருந்தது என நுகர்வோர் விசனம் தெரிவிக்கின்றனர். ​ ​பொருட்களை...
Ad Widget

சூசையின் படகு விவகாரம் குறித்த செய்திகள் உண்மையில்லை

தமிழீழ விடுதலைப் புலிகளின் கடற்புலிகள் அமைப்பின் முன்னாள் தலைவர் சூசை பயன்படுத்தியதாக கூறப்படும் படகு முல்லைத்தீவு கடலில் இருப்பதாக வௌியான தகவல்களில் உண்மையில்லை என, கடற்படையினர் குறிப்பிட்டுள்ளனர். இந்தப் படகு அண்மையில் முல்லைத்தீவு கடலில் இருப்பதாக சில ஊடகங்கள் செய்தி வௌியிட்டுள்ளன. எதுஎவ்வாறு இருப்பினும், இந்தத் தகவலில் எந்தவித உண்மையும் இல்லை என, கடற்படை ஊடகப்...

கிளிநொச்சியில் மழை வேண்டி யாகபூஜையும் 1008 இளநீரில் அபிசேகமும்

கிளிநொச்சியில் மழை வேண்டி இரணைமடு கனகாம்பிகை ஆலயத்தில் யாக பூஜை ஒன்றும் ஆயிரத்து எட்டு இளநீர் கொண்டு கனகாம்பிகை அம்மனுக்கு அபிசேகமும் செய்யப்பட்டது. கிளிநொச்சியில் இரணைமடுக் குளத்தை நம்பி மேற்கொள்ளப்பட்ட குறைந்தளவு ஏக்கர் சிறுபோக நெற்செய்கையில் கூட, மழை இன்மையால் குளத்தில் இருந்த மிகக்குறைந்த அளவு நீர் மட்டமும் குறைந்து செல்வதனால் நெற்பயிர்கள் அழிவடைந்து கொண்டுள்ளது....

வித்தியா வழக்கில் சுவிஸ்குமார் விடுவிக்கப்பட்ட விதம் குறித்து சாட்சியம் பதிவு

புங்குடுதீவு மாணவி வித்தியா படுகொலையின் முக்கிய சூத்திரதாரியான சுவிஸ் குமார் எனப்படும் மகாலிங்கம் சசிகுமார், யாழ். பொலிஸ் நிலையத்தில் இருந்து விடுவிக்கப்பட்ட விதம் தொடர்பில் நேற்று (18) சாட்சியம் பதிவு செய்யப்பட்டது. இந்த வழக்கின் Trial at Bar விசாரணை யாழ். மேல் நீதிமன்றத்தில் நேற்று மீண்டும் ஆரம்பமானது. மேல் நீதிமன்ற நீதிபதிகளான மாணிக்கவாசகர் இளஞ்செழியன்,...

சுகாதார சேவையில் நிலவும் வெற்றிடங்களை நிரப்புவதற்கு நடவடிக்கை!

சுகாதார சேவையில் வைத்தியர்கள், தாதியர்கள் தவிர்ந்த ஏனைய சேவையில் நிலவும் வெற்றிடங்களை பூர்த்தி செய்வதற்கு நடவடிக்கை மேற்கொள்ளுமாறு சுகாதார அமைச்சர் ராஜித சேனாரட்ன அதிகாரிகளுக்கு பணிப்புரை விடுத்துள்ளார். சுகாதாரதுறை தொழிற்சங்கத்துடன் அண்மையில் நாரஹென்பிட்டியில் நடைபெற்ற பேச்சுவார்த்தையின் போதே அமைச்சர் இதற்கான உத்தரவை பிறப்பித்துள்ளார். இதற்கமைவாக மகப்பேறு, சுகாதார கனிஷ்ட அலுவலக உதவியாளர், குடும்ப சுகாதார சேவை...

ஊடகவியலாளர்களை வெளியேறுமாறு போக்குவரத்து அமைச்சர் டெனிஸ்வரன் உத்தரவு!

வவுனியாவில் அமைக்கப்பட்ட புதிய பேரூந்து நிலையத்தினை திறந்து செயற்படுத்துவது தொடர்பில் ஏற்பட்டுள்ள இழுபறி நிலைக்கு தீர்வு காணும் வகையில் வவுனியா மாவட்ட செயலகத்தில் நேற்று (செவ்வாய்க்கிழமை) இடம்பெற்ற கூட்டத்திலிருந்து ஊடகவியலாளர்கள் வெளியேற்றப்பட்டனர். 195 மில்லியன் ரூபா பெறுமதியில் அமைக்கப்பட்ட வவுனியா புதிய பேரூந்து நிலையமானது கடந்த ஜனவரி மாதம் திறந்து வைக்கப்பட்ட நிலையில் தனியார் மற்றும்...

டெனிஸ்வரனின் மீதான நடவடிக்கையை நிறுத்துங்கள்: தனியார் பேரூந்து உரிமையாளர் சங்கம்

வட மாகாண போக்குவரத்து அமைச்சர் பா.டெனிஸ்வரன் மீது தமிழீழ விடுதலை இயக்கம் எடுத்துள்ள நடவடிக்கைகளை போக்குவரத்து துறையின் நலன் கருதி நிறுத்தியோ அல்லது தாமதப்படுத்தியோ ஒத்துழைப்பு வழங்குமாறு வட மாகாண தனியார் பேரூந்து உரிமையாளர் சங்கத்தினர் தமிழீழ விடுதலை இயக்கத்திடம் கோரிக்கை விடுத்துள்ளனர். இது தொடர்பான கடிதத்தினை கட்சியின் தலைமையிடம் ஒப்படைக்கும் விதமாக நேற்று (செவ்வாய்க்கிழமை)...

தமிழ்தேசிய கூட்டமைப்புடன் புதிய அரசு உருவாகலாம்: மகிந்த அமரவீர

ஐக்கிய தேசியக் கட்சி, தமிழ்தேசிய கூட்டமைப்புடன் இணைந்து ஆட்சியமைக்கும் நிலை ஏற்படலாம் என துறைமுக மற்றும் கடற்தொழில்துறை அமைச்சர் மகிந்த அமரவீர தெரிவித்துள்ளார். ஸ்ரீலங்கா சுதந்திரகட்சியின் தலைமையகத்தில் நேற்று இடம்பெற்ற ஊடக சந்திப்பில் கருத்து தெரிவிக்கும் போதே அவர் மேற்படி தெரிவித்துள்ளார். இது குறித்து அவர் மேலும் தெரிவிக்கையில், “வேறு மாற்றுவழி இல்லாததால் நல்லாட்சி அரசில்...

இலங்கை 4 விக்கெட்டுகளால் வெற்றி

சிம்பாப்வே அணிக்கெதிரான ஒரேயொரு டெஸ்ட் போட்டியில் இலங்கை அணி 4 விக்கெட்டுகளால் வெற்றிபெற்று சிம்பாப்வே அணியின் வரலாற்று வெற்றிக்கனவை தகர்த்தது. இலங்கை –சிம்­பாப்வே அணி­க­ளுக்­கி­டை­யி­லான ஒரே­யொரு போட்டி கொண்ட டெஸ்ட் தொடர் கொழும்பு ஆர்.பிரே­ம­தாச கிரிக்கெட் அரங்கில் நடைபெற்றது. இதில் முதலில் துடுப்­பெ­டுத்­தா­டிய சிம்­பாப்வே அணியின் எர்வின் விளாசிய சதத்தால் (160) அந்த அணி முதல்...

சக்தி வாய்ந்த பூமியதிர்ச்சி ; சுனாமி எச்சரிக்கை

பசிபிக் பெருங்கடலில் ஏற்பட்ட சக்தி வாய்ந்த பூமியதிர்ச்சியினை அடுத்து குறித்த பகுதியில் சுனாமி எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளதாக சர்வதேச ஊடகங்கள் தெரிவிக்கின்றன. பசிபிக் பெருங்கடலில் 7.7 ரிச்டர் அளவிற்கு சக்தி வாய்ந்த பூமியதிர்ச்சி ஏற்பட்டுள்ளது. ரஷ்யாவின் பெரிங் தீவிலிருந்து சுமார் 200 கிலோமீற்றர் தொலைவில் பசிபிக் பெருங்கடலில் 11.7.கிலோமீற்றர் ஆழத்தில் சக்தி வாய்ந்த பூமியதிர்ச்சியொன்று ஏற்பட்டுள்ளது.மேலும் அங்கு...

“கேப்பாபுலவு மக்களின் ஒருதொகுதி காணிகள் நாளை விடுவிப்பு” சுவாமிநாதன்

தமது சொந்த நிலங்களை மீட்க தொடர்ந்து 141 நாட்களாக கேப்பாபுலவில் அமைந்துள்ள முல்லைத்தீவு இராணுவத்தலைமையக வாயில் முன்பாக கேப்பாபுலவு பூர்வீக கிராம மக்கள் தொடர் போராட்டத்தினை முன்னெடுத்துள்ளனர். இந்த நிலையில் கேப்பாபுலவு மக்களிடம் மீள் குடியேற்ற அமைச்சர் டி.எம் சுவாமிநாதன் தொலைபேசிவாயிலாக ஒரு தொகுதி காணிகள் நாளை விடுவிக்கப்படும் என்று உறுதியளித்ததாக போராட்டத்தில் ஈடுபட்டுவரும் மக்கள்...

கல்வியங்காடு பொதுச் சந்தைக்கு முதலமைச்சர் திடீர் விஜயம்!

கல்வியங்காடு பொதுச் சந்தையில் நிலவிவரும் பல்வேறு பிரச்சினைகள் தொடர்பாக வடமாகாண முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரன் அவர்களுக்கு வர்த்தகர்கள் கொடுத்த முறைப்பாடுகளையடுத்து இன்று காலை 10.30 மணியளவில் அங்கு வருகை தந்து நிலவும் பிரச்சினைகள் குறித்து கேட்டறிந்தார். முதலமைச்சருடன் மாநகர சபை அதிகாரிகளும் வருகை தந்தனர். 2015 தொடக்கம் மாநகர சபைக்கு முறையிட்டும் உரிய வசதி செய்து தரப்படவில்லையெனவும்...

வித்தியா வழக்கு இன்று முதல் தொடர் விசாரணை: அரசியல்வாதி ஒருவருக்கும் சிக்கல்?

யாழ்ப்பாணத்தில் நடைபெற்ற வருகின்ற வித்தியா படுகொலை வழக்கு விசாரணைகள் இன்று(செவ்வாய்கிழமை) தொடக்கம் மீண்டும் தொடா்ச்சியாக நடைபெறவுள்ளது. யாழ். புங்குடுதீவு பாடசாலை மாணவி வித்தியாவின் படுகொலை வழக்கு, தமிழ் மொழி பேசும் மூன்று நீதிபதிகள் அடங்கிய ட்ரயல் அட்பார் நீதிமன்ற தீா்ப்பாயத்தில் நடைபெற்று வருகின்றது. இன்று ஆரம்பிக்கப்படும் வழக்கு விசாரணையானது 19, 20, 24 மற்றும் 26...

முல்லைத்தீவு பாடசாலையில் வெடிபொருள் வெடிப்பு: எட்டு மாணவர்கள் வைத்தியசாலையில் அனுமதி

முல்லைத்தீவு கொக்கிளாய் முகத்துவாரம் பகுதியிலுள்ள பாடசாலையொன்றில் இன்று (செவ்வாய்க்கிழமை) வெடிப்பு சம்பவமொன்று இடம்பெற்றுள்ளது. குறித்த வெடிப்பு சம்பவத்தினால் மாணவர்கள் அதிர்ச்சியடைந்த நிலையில், எட்டு மாணவர்கள் மயக்கமடைந்துள்ளனர். மயக்கமடைந்த மாணவர்கள் மாஞ்சோலை வைத்தியசாலையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளனர். மீன்பிடிக்க பயன்படுத்தப்படும் ஜெலெக் நைட் எனும் வெடிபொருள் வெடித்ததிலேயே குறித்த அனர்த்தம் ஏற்பட்டதாக தெரிவிக்கப்படுகிறது. இந்நிலையில், இது தொடர்பான மேலதிக...

தபால் உத்தியோகத்தர் மீது வாள் வெட்டு

வாள்வெட்டுக்கு இலக்காகிய தபால் உத்தியோகத்தர் ஒருவர் யாழ். போதனா வைத்தியசாலை அவசரசிகிச்சை பிரிவில் சிகிச்சை பெற்றுவருவதாக தெரிவிக்கப்படுகின்றது. முல்லைத்தீவு உடையார்கட்டைச் சேர்ந்த குணபாலன் வயது 50 என்பவரே இவ்வாறு சிகிச்சை பெற்றுவருவதாக தெரிவிக்கப்படுகின்றது. சம்பவம் தொடர்பில் மேலும் தெரியவருவதாவது, நேற்று முன்தினம் குறித்த உத்தியோகத்தரின் வீட்டிற்குள் நுளைந்த மர்ம நபர் ஒருவர் அவருடன் உரையாடிக்கொண்டிருந்த சமயம்...

ஜனாதிபதி தலைமையில் நெவில் பெர்ணான்டோ மருத்துவமனை அரசுடமையாக்கப்பட்டது

மாலபே நெவில் பெர்ணான்டோ மருத்துவமனையை அரசுடமையாக்கும் நிகழ்வு நேற்று (17) முற்பகல் ஜனாதிபதி மைத்ரிபால சிறிசேன தலைமையில் நடைபெற்றது. நெவில் பெர்ணான்டோ மருத்துவமனையின் உரிமையாளர் மருத்துவ கலாநிதி நெவில் பெர்ணான்டோ மற்றும் சுகாதார அமைச்சின் செயலாளர் ஜனக்க சுகததாச ஆகியோர் குறித்த உடன்படிக்கையில் கைச்சாத்திட்டனர். இதற்கமைய ஓகஸ்ட் முதலாம் திகதி முதல் இம்மருத்துவமனை அரச மருத்துவமனையாக...

மயானங்களைக் அகற்றக் கோரிய போராட்டம் தொடர்கிறது

குடிமனைக்கு மத்தியில் உள்ள மயானங்களை அகற்றுமாறு கோரி, தொடர் கவனயீர்ப்புப் போராட்டத்தில் ஈடுபட்டுவரும் புத்தூர் கலைமதி பிரதேச மக்கள், ஆறாவது நாளாகவும் தமது போராட்டத்தை நேற்று தொடர்ந்துள்ளனர். சமூக நீதிக்கான வெகுஜன அமைப்பு ஏற்பாடு செய்துள்ள குறித்த கவனயீர்ப்புப் போராட்டத்தில், வேறு பிரதேச மக்களும் தமது ஆதாரவினை தெரிவித்து வருகின்றனர். புத்தூர் கலைமதி மக்கள் முன்றிலில்,...

கணித, விஞ்ஞான பாடங்களிற்கான பட்டதாரிகள் நியமனங்கள்

கணித, விஞ்ஞான பாடங்களிற்கான பட்டதாரிகள் 27 பேருக்கு நேற்றயதினம் நியமனங்கள் வழங்கிவைக்கப்பட்டன. வடமாகாண கல்வி அமைச்சில் இவர்களுக்கான நியமனக் கடிதங்கள் வழங்கிவைக்கப்பட்டன. இவர்களுக்கான நியமனங் ககடிதங்களை வடமாகாண கல்வி அமைச்சர் க.சர்வேஸ்வரன் மற்றும் கல்வி அமைச்சின் செயலாளர் இ.ரவீந்திரன் ஆகியோர் வழங்கி வைத்தனர். பட்டதாரி நியமனத்திற்காக இடம்பெற்ற நேர்முகத் தேர்வின் போது சான்றிதழ் சமர்ப்பிக்கத் தவறிய...

பெரும் கடல்பரப்பில் கடல் நீரை நன்னீராக்கும் செயற்றிட்டம்

நீர்வழங்கல் வடிகாலமைப்பு அமைச்சின் ஏற்பாட்டில் மருதங்கேணியில் இருந்த தாழையடி பெரும் கடல்பரப்பில் கடல் நீரை நன்னீராக்கும் செயற்றிட்டம் ஒன்றை முன்னெடுக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. இதுதொடர்பாக, விசேட கலந்துரையாடல் யாழ் மாவட்ட செயலகத்தின் கேட்போர் கூடத்தில் மாவட்ட அரசாங்க அதிபர் நாகலிங்கம் வேதநாயகன் தலைமையில் நடைபெற்றது. இதில் எதிர்வரும் 05 ஆண்டு காலப்பகுதியில் முன்னெடுக்கப்படவுள்ள கடல் நீரை...
Loading posts...

All posts loaded

No more posts