Ad Widget

கல்வியங்காடு பொதுச் சந்தைக்கு முதலமைச்சர் திடீர் விஜயம்!

கல்வியங்காடு பொதுச் சந்தையில் நிலவிவரும் பல்வேறு பிரச்சினைகள் தொடர்பாக வடமாகாண முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரன் அவர்களுக்கு வர்த்தகர்கள் கொடுத்த முறைப்பாடுகளையடுத்து இன்று காலை 10.30 மணியளவில் அங்கு வருகை தந்து நிலவும் பிரச்சினைகள் குறித்து கேட்டறிந்தார். முதலமைச்சருடன் மாநகர சபை அதிகாரிகளும் வருகை தந்தனர்.

2015 தொடக்கம் மாநகர சபைக்கு முறையிட்டும் உரிய வசதி செய்து தரப்படவில்லையெனவும் இங்கு மலசலகூட வசதிகள் சீரின்மை, உரிய முறையில் சந்தையை சுத்தப்படுத்துவதில்லை, சீரான நீர்வசதி, சந்தைக் கட்டத்தின் மேல்மாடியில் உள்ள கடைகள் சிலருக்கு ரெண்டர் கொடுக்கப்பட்டுள்ளது ஆனால் அவர்கள் கடையை திறப்பதில்லையெனவும் அதனை வேறு ஆட்களுக்கு மாற்றிக் கொடுக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என முதலமைச்சருக்கு எடுத்துக் கூறினர்.

பல்வேறு விடயங்களை கேட்டறிந்த முதலமைச்சர் நீர் வசதி, சுகாதார விடயங்களை உடன் நடைமுறைப்படுத்தவேண்டும் என கோரியதுடன் மாநகர சபை அதிகாரிகளிடம் இதுகுறித்து தமக்கு 3 நாளுக்குள் அறிக்கை சமர்ப்பிக்குமாறு கண்டிப்பான உத்தரவினை வழங்கினார்.

இதையடுத்து வர்த்தகர்களால் முதலமைச்சரிடம் மகஜரும் வழங்கப்பட்டது.

Related Posts