Ad Widget

யாழ். திண்மக்கழிவு பிரச்சினைக்கு தீர்வு கிட்டியது!

யாழ்.மாவட்ட பிரதேச சபைகளில் சேகரிக்கப்படும் திண்மக் கழிவுகளை கீரிமலைப் பகுதியில் கொட்டும் வகையில் ஒப்பந்தமொன்று கைச்சாத்திடப்பட்டுள்ளது.

வட. மாகாண முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரனுக்கும் சுற்றாடல் அதிகார சபை அதிகாரிகள், உள்ளூராட்சி உதவி ஆணையாளர் மற்றும் வலிகாமம் வடக்கு பிரதேச செயலாளர் ஆகியோருக்கு இடையே நேற்று (வியாழக்கிழமை) குறித்த ஒப்பந்தம் கையெழுத்திடப்பட்டுள்ளது.

வலிகாமம் வடக்கில் முன்னர் சீமெந்து தொழிற்சாலை இயங்கிய காலப்பகுதியில், சுன்னக்கல் அகழ்வதற்கு தோண்டப்பட்ட குழிகளில், திண்மக் கழிவுகளை இட்டு அதனை நிரப்பும் வகையிலேயே குறித்த உடன்படிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது.

இத்திட்டம் குறித்து கருத்து தெரிவித்த வடமாகாண முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரன், இவ் ஒப்பந்தத்தின் ஊடாக யாழ்ப்பாணத்தில் வெளியேற்றப்படும் திண்மக் கழிவுகள் உரிய முறையில் அகற்றப்படும் என்று நம்பிக்கை வெளியிட்டதுடன், இரண்டு வருடத்தில் இதற்கான ஆரம்ப வேலைகள் பூர்த்தி செய்யப்படும் என்றும் தெரிவித்தார்.

Related Posts