அழிவை நோக்கிய பயணம் : யுத்தம் ஏற்படும் அபாயம் ஏற்பட்டு விட்டது!!

புதிய அரசியலமைப்பில் பௌத்த மதம் தற்போது கொண்டுள்ள நிலைப்பாட்டில் மாற்றங்கள் ஏதும் நிகழுமாக இருந்தால் பேரனர்த்தம் ஏற்படும் என முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ தெரிவித்துள்ளார். நேற்றைய தினம் (புதன்கிழமை) கண்டியில் இடம்பெற்ற நிகழ்வு ஒன்றில் கருத்து தெரிவிக்கும் போதே அவர் இதனைக் கூறியுள்ளார். மேலும், தற்போது இலங்கையில் மத ரீதியான யுத்தம் ஒன்று ஏற்படும்...

வடக்கு மாகாண மர நடுகை மாதம் ஆரம்பம்!

வடக்கு மாகாண விவசாய அமைச்சினால் முன்னெடுக்கப்படும் மரநடுகை மாதம், நேற்று (புதன்கிழமை) வடக்கு மாகாண விவசாய அமைச்சர் க.சிவநேசனால் மன்னாரில் ஆரம்பித்து வைக்கப்பட்டது. வடக்கு மாகாண மர நடுகை கார்த்திகை மாதம் அமுல் படுத்தப்பட்டுள்ளது. அதற்கு அமைவாக குறித்த நிகழ்வு மன்னார் திருக்கேதீஸ்வரம் சிவபுரம் கிராமத்தில் வைபவ ரீதியாக ஆரம்பித்து வைக்கப்பட்டுள்ளது. வடக்கு மாகாணத்தில் உள்ள...
Ad Widget

ஏறாவூர் இரட்டைக் கொலை சந்தேக நபர்கள் யாழில் கைது: நகைகளும் மீட்பு!

மட்டக்களப்பு,ஏறாவூரில் இடம்பெற்ற தாய் மற்றும் மகன் இரட்டைக் கொலையின் சந்தேக நபர்கள் இரண்டு பேர் கைது செய்யப்பட்டுள்ளதுடன், குறித்த வீட்டில் இருந்து கொள்ளையிடப்பட்ட நகைகளும் மீட்கப்பட்டுள்ளன. குறித்த சம்பவம் தொடர்பில் மிருசுவில் வடக்கு கொடிகாம் , யாழ்ப்பானம் எனும் முகவரியை சேர்ந்த ஒருவரையும் , சவுக்கடி தன்னாமுனை எனும் முகவரியை கொண்ட முச்சக்கர வண்டி சாரதி...

சம்பந்தனுக்கு எதிராக சிவசக்தி ஆனந்தன் முறைப்பாடு

புதிய அரசமைப்பு தொடர்பில் தமது கருத்தை தெரிவிப்பதற்கு எதிர்க்கட்சித் தலைவர் அனுமதி மறுப்பதாக தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் வன்னி மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் சிவசக்தி ஆனந்தன் குற்றம்சாட்டியுள்ளார். இது தொடர்பில் சபாநாயகர் கரு ஜயசூரியவிடம் முறையிட்டுள்ள நாடாளுமன்ற உறுப்பினர் சிவசக்தி ஆனந்தன் தனக்கு நீதியை பெற்றுத்தர வேண்டும் என்றும் கோரிக்கை முன்வைத்துதள்ளார். புதிய அரசியலமைப்பு தொடர்பான...

அணுகுண்டுச் சோதனையால் வடகொரியாவில் 200 பேர் பலி?

வடகொரியாவால் அண்மையில் மேற்கொள்ளப்பட்ட அணுகுண்டுச் சோதனையைத் தொடர்ந்து, 200க்கும் மேற்பட்டோர் பலியாகியுள்ளனர் என, ஜப்பானிய ஊடகமொன்று செய்தி வெளியிட்டுள்ளது. அணுகுண்டுச் சோதனை மேற்கொள்ளப்பட்ட சுரங்கம் இடிந்து வீழ்ந்ததிலேயே, இவ்வுயிரிழப்புகள் ஏற்பட்டுள்ளன என அறிவிக்கப்படுகிறது. ஜப்பானின் 6ஆவது அணுகுண்டுச் சோதனை, செப்டெம்பர் 3ஆம் திகதி மேற்கொள்ளப்பட்டது. இச்சோதனையே, வடகொரிய வரலாற்றில் மேற்கொள்ளப்பட்ட மிகப்பெரிய அணுச்சோதனையாகக் கருதப்பட்டது. ஆனால்,...

கிறீன் கார்ட் லாட்டரியை அகற்ற வேண்டும் என ட்ரம்ப் யோசனை

கிறீன் கார்ட் லாட்டரியை அகற்ற வேண்டும் என்று அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் டிரம்ப் யோசனை தெரிவித்துள்ளார். இந்த லாட்டரி நியூயார்க்கில் ஒரு டிரக் தாக்குதல் சந்தேகநபருக்கு அமெரிக்காவிற்குள் நுழைய அனுமதித்துள்ளது என்று அவர் குறிப்பிட்டுள்ளார். அவர் குடிவரவு திட்டத்திற்கு பதிலாக ஒரு தகுதி அடிப்படையிலான முறைமைக்கு அழைப்பு விடுத்துள்ளார். பயங்கரவாத எதிர்ப்பு நிதிகளை குறைக்கும் டிரம்ப்பை...

பட்டதாரிகள் அரச நியமனங்களுக்காகக் காத்திருப்பது நியாயமற்றது: அமைச்சர் தயாசிரி ஜயசேகர

பட்டதாரிகள் அரச நியமனங்களை எதிர்பார்த்துக் காத்திருப்பது நியாயமற்றது. அனைவருக்கும் அரச நியமனங்கள் வழங்க வேண்டும் என்ற கோரிக்கையை நான் எதிர்க்கிறேன் என்று விளையாட்டுத் துறை அமைச்சரும் அமைச்சரவை இணைப் பேச்சாளருமான தயாசிரி ஜயசேகர தெரிவித்தார். நேற்று (01) அரசாங்க தகவல் திணைக்களத்தில் நடைபெற்ற அமைச்சரவை முடிவுகளை அறிவிக்கும் மாநாட்டில் பட்டதாரிகளுக்கு நியமனம் வழங்குவது தொடர்பில் ஊடகவியாளரொருவரால்...

டிசம்பரில் வேட்புமனு!! ஜனவரி இறுதிவாரம் தேர்தல் !

புதிய தேர்தல் முறையின் கீழ் நடைபெறவுள்ள உள்ளுராட்சிமன்ற தேர்தலுக்கான வர்த்தமானி அறிவிப்பில் மாகாண சபை மற்றும் உள்ளுராட்சி அமைச்சர் பைசர் முஸ்தபா நேற்று (01) கைச்சாத்திட்டார். இந்நிலையில் உள்ளூராட்சி மன்றங்களுக்கான தேர்தல், 2018 ஆம் ஆண்டு ஜனவரி 20 ஆம் திகதிக்கும் 31 ஆம் திகதிக்கும் இடைப்பட்ட திகதியொன்றில் நடத்தப்படுமென தேர்தல்கள் ஆணைக்குழு அறிவித்துள்ளது. இந்த...

மாணவர் போராட்டம் தோல்வியிலேயே முடியும் என்கிறார் துணைவேந்தர்!

நிர்வாகத்தை முடக்கி யாழ்ப்பாணப் பல்கலைக்கழக மாணவர்கள் முன்னெடுத்துள்ள போராட்டம் தவறானது. இப்போராட்டம் தோல்வியிலேயே முடியும் என யாழ் பல்கலைகழகத் துணைவேந்தர் ஆர்.விக்னேஸ்வரன் தெரிவித்துள்ளார். மாணவர்கள் அரசியல் கைதிகளுக்கு ஆதரவாக போராட்டம் நடாத்துவதை நாங்கள் எதிர்க்கவில்லை. ஆனால், அவர்கள் நிர்வாகத்தை முடக்கி போராட்டத்தை முன்னெடுக்க இயலாது. நிர்வாக முடக்கல் எதிரொலியாக 3 பீடங்களின் கல்விச் செயற்பாடுகளை நிறுத்துவதற்குத்...

தமிழ் கட்சிகளின் நாடாளுமன்ற, மாகாணசபை உறுப்பினர்களுக்கு பல்கலை மாணவர்கள் பகிரங்க அழைப்பு!

தமிழ் அரசியல் கைதிகளின் துரிதமான விடுதலை தொடர்பில் கலந்துரையாடுவதற்காக வடக்கு கிழக்கில் உள்ள அனைத்து பாராளுமன்ற உறுப்பினர்களையும் மாகாணசபை உறுப்பினர்களையும் கலந்துரையாடலுக்கு வருமாறு யாழ்.பல்கலைகழக மாணவர் ஒன்றியம் பகிரங்க அழைப்பு விடுத்துள்ளது. 03 ஆம் திகதி வெள்ளிக்கிழமை பிற்பகல் 02 மணிக்கு யாழ் பல்கலைக்கழக முன்றலில் இக் கலந்துரையாடல் நடைபெறும் எனவும் மாணவர்களால் அறிவிக்கப்பட்டுள்ளது. அநுராதபுரம்...

அஜித் பற்றி ஜோதிடர் கூறிய கருத்தால் திரையுலகில் பரபரப்பு!

தமிழ் சினிமாவில் தற்போது முன்னணி ஹீரோவாக இருப்பவர் தல அஜித். இவர் இன்னும் 3 படங்கள் மட்டுமே நடிப்பார் என பிரபல ஜோதிடர் ஒருவர் கூறி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளார். பல தயாரிப்பாளர்கள் மற்றும் இயக்குனர்களுக்கு ஜோசியம் பார்க்கும் சங்கரநாராயணன் என்ற ஜோதிடர் தான் இப்படி தெரிவித்துள்ளார். மேலும் அஜித் 2019ல் அரசியலில் குதிப்பார் எனவும் அவர்...

யாழ். பல்கலைக்கழக மாணவர்கள் மூன்றாவது நாளாகவும் நிர்வாக முடக்கல் போராட்டம்!

யாழ். பல்கலைக்கழகத்தின் மூன்று பீடங்களின் கல்வி நடவடிக்கைகளை பல்கலைக்கழக நிர்வாகத்தினர் நேற்று முதல் இடைநிறுத்தியிருந்த நிலையில் இன்று மூன்றாவது நாளாகவும் மாணவர்கள் தமது நிர்வாக முடக்கல் போராட்டத்தை முன்னெடுத்து வருகின்றனர். தமது வழக்குகளை மீண்டும் வவுனியா நீதிமன்றிற்கு மாற்றுமாறு கோரிக்கை வைத்து அநுராதபுரம் சிறைச்சாலையில் இன்று 37வது நாளாக உணவு தவிர்ப்பு போராட்டத்தினை தமிழ் அரசியல்...

வட. மாகாணத்தில் பொறியியலாளர்களுக்கு நியமனங்கள் வழங்கி வைப்பு!

வடமாகாண பொதுச்சேவைகள் ஆணைக்குழுவினால் சேவைக்கு இணைக்கப்பட்ட பொறியியலாளர்களுக்கு சம்பிரதாயபூர்வமாக நியமனக் கடிதங்களை வட மாகாண ஆளுநர் றெயினோல்ட் குரே இன்று (புதன்கிழமை) வழங்கி வைத்தார். வடக்கு மாகாணத்தில் நிலவும் பொறியியலாளர்களுக்கான வெற்றிடங்களை நிரப்பும் வகையில் ஒப்பந்த அடிப்படையில் 7 பொறியலாளர்களுக்கான நியமனங்கள் வழங்கி வைக்கப்பட்டன. இந்நிகழ்வில் வடமாகாண பிரதம செயலாளர் ஏ.பத்திநாதன், பொதுச் சேவைகள் ஆணைக்குழுவின்...

முன்னாள் போராளிக்கு ஆயுள் தண்டனை!

கொலைக்குற்றம் சாட்டப்பட்டிருந்த விடுதலைப் புலிகளின் முன்னாள் உறுப்பினர் ஒருவருக்கு, கொழும்பு மேல் நீதிமன்றம் ஆயுள் தண்டனை விதித்து தீர்ப்பளித்துள்ளது. முல்லைத்தீவு முள்ளிவாய்க்கால் பகுதியைச் சேர்ந்த செல்வதுரை கிருபாகரன் என்பவருக்கு, இன்று (புதன்கிழமை) இத்தீர்ப்பு வழங்கப்பட்டுள்ளது. தெஹிவளை பொலிஸ் புலனாய்வுப் பிரிவின் முன்னாள் பொறுப்பதிகாரியான சுனில் தாப்ரூ என்பவரை சுட்டுக்கொன்றதாக அவர் மீது குற்றஞ்சாட்டப்பட்டிருந்தது. இது குறித்த...

பெட்ரோல், டீசலின் விலையில் அதிரடி மாற்றம்!

கனியவள கூட்டுத்தாபனம் எதிர்வரும் தினத்தில் எரிபொருளின் விலையை குறைக்க தீர்மானித்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.தற்போதைய நிலையில் , கனியவள கூட்டுத்தாபனத்தின் வளர்ச்சியை கருத்திற் கொண்டு எதிர்வரும் தேர்தல் மற்றும் பாதீட்டை இலக்காக வைத்து இந்த தீர்மானம் மேற்கொள்ளப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.கடந்த 26ம் திகதி கனியவள கூட்டுத்தாபனத்தால் நடாத்தப்பட்ட செய்தியாளர் சந்திப்பின் போது , கனியவள கூட்டுத்தாபனத்தின் ஓகஸ்ட் மாத இலாபம் 7 ஆயிரத்து 729 மில்லியன்...

ஆசிரியர் ஒருவர் சடலமாக மீட்பு!

கோப்பாய் - கைதடி வீதியில் பாலத்தடியில் ஆசிரியர் ஒருவரின் சடலம் ஒன்று மீட்கப்பட்டுள்ளது. Np HP-6340 இலக்க மோட்டார் சைக்கிளில் வந்த சாவகச்சேரி சங்கத்தானையை வசிப்பிடமாக கொண்ட 3 பிள்ளைகளின் தந்தையான கனகரட்னம் கோணேஸ்வரன் (வயது 49) இவ்வாறு சடலமாக மீட்கப்பட்டராவார். சாவகச்சேரி சகலகலாவள்ளி ஆரம்ப பாடசாலையின் ஆசிரியருமாவார். இவர் நேற்றிரவு 9 மணியளவில் தனது...

அரியாலை துப்பாக்கிச் சூட்டுக்கு பயன்படுத்திய கைத்துப்பாக்கி, ஓட்டோ, மோ.சைக்கிள் அதிரடிப்படை முகாமுக்குலிருந்து மீட்பு!!

யாழ்ப்பாணம் அரியாலை கிழக்கு மணியந்தோட்டம் சந்தியில் இளைஞர் மீதான துப்பாக்கிச் சூட்டை மேற்கொண்ட சிறப்பு அதிரப்படையின் புலனாய்வுப் பிரிவினர் பயன்படுத்திய துப்பாக்கி மற்றும் முச்சக்கரவண்டி, மோட்டார் சைக்கிள் என்பன கொழும்பு குற்றத் தடுப்பு பிரிவினர் மீட்டனர். யாழ்ப்பாணம் பண்ணை வீதியில் உள்ள சிறப்பு அதிரடிப் படை முகாமில் இருந்தே நேற்று இரவு இவை மீட்கப்பட்டன. கடந்த...

வாளுடன் கைதாகிய நான்கு சிறுவர்களையும் சீர்திருத்தப் பாடசாலையில் தடுத்து வைக்குமாறு உத்தரவு!

யாழ்ப்பாணம் கண்டி வீதியில் மடத்தடி சாந்தி பகுதியில் வாளுடன் கைது செய்யப்பட்ட நான்கு சிறுவர்களையும் 14 நாள்களுக்கு சான்று பெற்ற சீர்திருத்தப் பாடசாலையில் தடுத்து வைக்குமாறு யாழ்ப்பாணம் நீதிவான் கட்டளையிட்டார். யாழ்ப்பாண காவல்துறையினர் நேற்றிரவு 10 மணியளவில் ரோந்து நடவடிக்கையில் ஈடுபட்டிருந்தபோது மடத்தடிப்பகுதியில் , நின்ற சிலர் காபவல்துறையினரின் வாகனத்தை கண்டு சிலர் தப்பியோடியுள்ளனர். அவர்களை...

அசா­தா­ரண கால­நிலை தொடரும்! சாரதிகளுக்கு எச்சரிக்கை!!

நாட்டில் நிலவும் மழை­யு­ட­னான கால ­நிலை தொடரும் என கால­நிலை அவ­தான நிலையம் அறி­வித்­துள்­ளது. நாட்டின் பெரும்­பா­லான பகு­திகளில் பனி­மூட்­டத்­துடன் மழை­வீ­ழ்ச்சி காணப்­படும் என எதிர்வு கூறப்­பட்­டுள்­ளது. அதே போன்று நாட்டின் பெரும்­பா­லான பகு­தி­களில் சில நேரங்­களில் கடும் காற்று ஏற்­படும் எனவும் மலைப்­பாங்­கான பகு­தி­களில் அதிக மழை பெய்­வ­தற்­கான வாய்ப்பு காணப்­ப­டு­வ­தா­கவும் கால­நிலை அவ­தான...

சர்வகட்சி மாநாடு சர்வதேசத்தின் நன்மதிப்பை இழக்கச்செய்யும்! : மாவை

புதிய அரசியல் யாப்பு தொடர்பில் எழுந்துள்ள சர்ச்சைகளுக்கு முற்றுப்புள்ளி வைக்கும் வகையில் சர்வகட்சி மாநாடு உள்ளிட்ட மூன்று விடயங்களை செயற்படுத்தவுள்ளதாக ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன கூறியுள்ளமை, பிரச்சினைகளுக்கு தீர்வு வழங்கும் செயற்பாட்டை இழுத்தடிக்கும் சதியா என்ற சந்தேகத்தை ஏற்படுத்துகின்றதென தமிழ் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் மாவை சேனாதிராஜா குறிப்பிட்டுள்ளார். புதிய அரசியல் யாப்பை உருவாக்கி...
Loading posts...

All posts loaded

No more posts