போராட்டத்தை கைவிடுமாறு பல்கலைக்கழக நிர்வாகம் மாணவர்களுக்கு அழுத்தம்!! மாணவர்கள் மறுப்பு!!

யாழ். பல்கலைக்கழக கலைப்பீடம், விஞ்ஞானபீடம், முகாமைத்துவ வணிக பீடம் ஆகியவற்றின் கல்வி செயற்பாடுகள் இடைநிறுத்தப்பட்டிருக்கும் நிலையில், மாணவர்களுக்கும், நிர்வாகத்திற்கும் இடையில் நேற்று மாலை சந்திப்பு ஒன்று நடைபெற்றுள்ளது. இந்த சந்திப்பில் போராட்டத்தை கைவிடவேண்டும் என பல்கலைக்கழக நிர்வாகம் மாணவர்களுக்கு அழுத்தம் கொடுத்திருப்பதாக தெரியவந்துள்ளது. எனினும், இதற்கு மறுப்பு தெரிவித்திருக்கும் தாங்கள், தொடர்ந்தும் போராட்டத்தை நடத்துவோம் என...

வாள்களுடன் நின்ற நான்கு இளைஞர்கள் கைது

யாழ். மடத்தடி வீதியில் வாள்களுடன் நின்ற 4 இளைஞர்கள் யாழ்ப்பாணம் பொலிஸாரினால் கைது செய்யப்பட்டுள்ளனர். யாழ். பொலிஸார் நேற்று (30.10) இரவு 11 மணியளவில் ரோந்து நடவடிக்கையில் ஈடுபட்டிருந்த போது, சந்தேகத்திற்கு இடமான முறையில் 4 இளைஞர்கள் வாள்களுடன் வீதியில் நின்றுள்ளனர். 4 பேர்களிடமும் விசாரணை மேற்கொண்ட பொலிஸார் கைதுசெய்துள்ளனர். இவ்வாறு கைதுசெய்யப்பட்ட நால்வரும் யாழ்.மடத்தடி...
Ad Widget

ஏ9 வீதியில் கடும் பனி மூட்டம்!! சாரதிகளுக்கு எச்சரிக்கை!!

நிலவும் சீரற்ற காலநிலை காரணமாக யாழ்ப்பாணம் - கண்டிக்கான ஏ9 வீதியில் இன்று காலை முதல் கடும் பனி மூட்டம் காணப்படுகின்றது. இதற்கமைய, வவுனியா, மாங்குளம், புளியங்குளம் ஆகிய பகுதிகளிலேயே இந்த நிலை அதிகமாக காணப்படுவதாக வாகன சாரதிகள் குறிப்பிட்டுள்ளனர்.

பொலிஸ் தடைநீக்கச் சான்றிதழுக்கான புதிய கட்டண விபரம்!!

பொலிஸ் தடைநீக்கச் சான்றிதழை (Police Clearance Reports) பெற்றுக்கொள்வதற்காக அறிவிடப்படும் கட்டணம் மறுசீரமைக்கப்பட்டுள்ளதாக பொலிஸ் தலைமையகம் தெரிவித்துள்ளது. இந்த கட்டண மறுசீரமைப்பு எதிர்வரும் 5 ஆம் திகதி (2017.11.05)முதல் நடைமுறைக்குவருவதாக பொலிஸ் தமைமையகம் விடுத்துள்ள அறிவிப்பில் குறிப்பிடப்பட்டுள்ளது, பொலிஸ் தடைநீக்கச் சான்றிதழை இலங்கையிலிருந்து விண்ணப்பித்து அதனை இலங்கை முகவரிக்கு தபாலில் சேர்க்கும் போது அறவிடப்படும் புதிய...

அரசியல் கைதிகள் தொடர்பான பல்கலைக்கழக மாணவர் போராட்டமும் பல்கலைக்கழக ஊழியர் சங்கத்தின் நிலைப்பாடும்

அரசியல் கைதிகள் தொடர்பான பல்கலைக்கழக மாணவர் போராட்டமும் பல்கலைக்கழக ஊழியர் சங்கத்தின் நிலைப்பாடும் - 31-10-2017 ------------------------------------------------------------------------------------------------------- தமது வழக்குகளை மீண்டும் தமிழ் பிரதேச நீதிமன்றங்களுக்கு மாற்ற வேண்டும் என்ற உடனடிக் கோரிக்கையையும், அவ்வாறு மாற்றப்பட்டதன் பின்பு, தமது வழக்குகளைத் துரிதமாக விசாரித்து முடிவு காண வேண்டும் என்ற கோரிக்கையையும் முன்வைத்து, அநுராதபுரம் சிறையில் சாகும்...

பனை மற்றும் தென்னையிலிருந்து கள்ளை பெற்றுக்கொள்ள அனுமதிப்பத்திரம்

பனை மற்றும் தென்னையிலிருந்து கள்ளை சீவுவதற்கு அனுமதிப்பத்திரம் அவசியம் என நிதி அமைச்சு தெரிவித்துள்ளது. இது குறித்த மதுவரி திணைக்கள கட்டளைச்சட்டத்தின் 15 ஆவது பிரிவில் (பாகம் 52) திருத்தம் மேற்கொள்ள அமைச்சரவை அனுமதியளித்துள்ளது. இதற்கமைய தென்னை, பனை மரங்களிலிருந்து கள்ளை எடுப்பதற்கு மதுவரி திணைக்களத்தின் அல்லது உரிய பிரதேச செயலாளர் அலுவலகத்தில் அனுமதிப்பத்திரம் பெறுவது...

யாழ். பல்கலைக்கழகத்தின் கல்வி செயற்பாடுகள் இடைநிறுத்தப்பட்டுள்ளது!

யாழ்ப்பாணம் பல்கலைக்கழகத்தின் கலை, விஞ்ஞானம் மற்றும் முகாமைத்துவ பீடங்கள் உடனடியாக அமுலுக்கு வரும் வகையில் தற்காலிகமாக இடைநிறுத்தப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது. யாழ்ப்பாண பல்கலைக்கழக வளாகத்தில் தற்போது தோன்றியுள்ள அசாதாரண சூழ்நிலை காரணமாகவே இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. அதன்படி விடுதியில் தங்கியுள்ள அனைத்து மாணவர்களும் இன்று மாலை 4.00 மணிக்கு முன்னதாக விடுதிகளில் இருந்து வௌியேறுமாறு பணிக்கப்பட்டுள்ளது....

வவுனியாவில் பள்ளிவாசல் முன் பொலிசார் குவிப்பு!! பதற்றத்தில் மக்கள்!!

வவுனியா நகர பள்ளிவாசலுக்கு முன்பாக இன்று காலை 10 மணியளவில் பெருமளவு பொலிசார் குவிக்கப்பட்டுள்ளனர். இதையடுத்து வவுனியா நகரபள்ளிவாசல் பகுதியில் பதற்றநிலைமை நிலவிவருகின்றது. இன்று காலை வவுனியா நகர பள்ளிவாசலுக்கு முன்பாக ஆர்ப்பாட்டப் போராட்டம் ஒன்று இடம்பெறவிருந்த வேளையிலேயே திடீரென பொலிசார் அப்பகுதியில் குவிக்கப்பட்டுள்ள நிலையில் அங்கு சற்று பதற்றமான சூழ்நிலை உருவாக்கியுள்ளது. எனினும் இளைஞர்களினால்...

வடக்கு மாகாண சபை உறுப்பினருக்கு பாதாள உலகக் குழுவுடன் தொடர்பு!!

பாதாள உல­கக் குழுக்­க­ளு­டன் தொடர்­பு­க­ளைப் பேணி வரும் வடக்கு மாகா­ண­சபை உறுப்­பி­னர் உள்­ளிட்ட இரண்டு அர­சி­யல் வா­தி­கள் தொடர்­பில் விசா­ர­ணை­கள் ஆரம்­பிக்­கப்­பட்­டுள்­ள­தாகச் சிங்­கள ஊட­கம் செய்தி வெளி­யிட்­டுள்­ளது. மேல் மாகாண உள்­ளூ­ராட்சி மன்­ற­மொன்­றின் முன்­னாள் உறுப்­பி­னர் மற்­றும் வடக்கு மாகா­ண­ச­பை­யின் உறுப்­பி­னர் ஆகி­யோர் தொடர்­பா­கவே விசா­ர­ணை­கள் ஆரம்­பிக்­கப்­பட்­டுள்­ளன. பாதாள உல­கக் குழுக்­க­ளு­டன் தொடர்பு பேணுவ­தா­க­வும், நாட்­டின்...

சிங்கள மாணவர்களின் எதிர்ப்பினால் யாழ் பல்கலைக்கழகத்திற்கு விடுமுறை!!!

யாழ்ப்பாண பல்கலைக்கழகத்தை மூடி மாணவர்களுக்கு விடுமுறை வழங்க நிர்வாகம் முடிவு செய்தமைக்கு சிங்கள மாணவர்களின் நடவடிக்கையே காரணமென நம்பகமான தகவல் தெரிவித்தது. அநுராதபுரம் சிறைச்சாலையில் தடுத்துவைக்கப்பட்டுள்ள தமிழ் அரசியல் கைதிகள் மூவர், கடந்த செப்ரெம்பர் 25ஆம் திகதியிலிருந்து தொடர் உணவு ஒறுப்புப் போராட்டத்தை முன்னெடுத்துள்ளனர். தமக்கு எதிரான வழக்கை அநுராதபுரம் மேல் நீதிமன்றிலிருந்து வவுனியா மேல்...

யாழ் பல்கலைக்கழகத்தில்கதவடைப்புப் போராட்டம்

யாழ்ப்பாண பல்கலைக் கழகத்தின் சகல நடவடிக்கைகளையும் முடக்கும் வகையில் பல்கலைக்கழகத்தின் அனைத்து நுழைவாயில்களும் மூடப்பட்டு போராட்டம் முன்னெடுக்கபடுகின்றது. யாழ்.பல்கலைகழகம் முன்பாக தமிழ் அரசியல் கைதிகளின் விடுதலையை வலியுறுத்தி மாணவர்கள் உள்ளிட்ட பல்கலைகழக சமூகத்தினர் பல்கலை கழக வாயில்களை மூடி கொட்டும் மழைக்கு மத்தியில் போராட்டத்தில் ஈடுபட்டு உள்ளனர். சிறைச்சாலைகளில் பல வருடங்களாக எந்த விதமான விசாரணையும்...

நீதிபதியின் மெய்க்காவலர் கொலை: சந்தேகநபர்களின் விளக்கமறியல் நீடிப்பு!

யாழ்ப்பாணம் மேல் நீதிமன்ற நீதிபதி மா.இளஞ்செழியனின் மெய்ப்பாதுகாவலர் சுட்டுக்கொல்லப்பட்டமை தொடர்பான வழக்கின் சந்தேகநபர்கள் மூவரின் விளக்கமறியல் நவம்பர் மாதம் 13ஆம் திகதவரை நீடித்து யாழ்ப்பாணம் நீதிவான் நீதிமன்றம் இன்று உத்தரவிட்டது. இந்த வழக்கு நேற்று யாழ்ப்பாணம் நீதிவான் நீதிமன்றில் விசாரணைக்கு எடுக்கப்பட்டது. கொலைச் சந்தேகநபர்கள் சார்பில் சட்டத்தரணிகள் எவரும் முன்னிலையாகவில்லை. இந்த நிலையிலேயே சந்தேகநபர்களின் விளக்கமறியலை...

அரசியல் அமைப்பு குறித்து சர்வகட்சி, சர்வமத மாநாடு : ஜனாதிபதி

புதிய அரசியல் அமைப்பு தொடர்பில் பாராளுமன்றத்தில் அங்கம் வகிக்கும் அனைத்து கட்சிகளின் அங்கத்துவத்துடனான சர்வகட்சி மற்றும் மதத்தலைவர்கள் உள்ளடங்கிய சர்வமத மாநாடு ஒன்று நடத்தப்படவுள்ளதாக ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தெரிவித்துள்ளார். முன்மொழியப்பட்டுள்ள புதிய அரசியலமைப்பு தொடர்பாக காணப்படும் சில தவறான அபிப்பிராயங்களை நீக்கும் பொருட்டு எதிர்காலத்தில் 3 படிமுறைகளை நடைமுறைப்படுத்த எதிர்பார்ப்பதாக ஜனாதிபதி தெரிவித்தார். அதற்கேற்ப...

வடக்கில் “கள்” இறக்கும் தொழில் செய்வோர் பாதிப்பு!

தென்னை, பனை மரங்களில் இருந்து கள் இறக்க தடை விதிக்கப்படவுள்ளதால், வடக்கில் கள் இறக்கும் தொழில் செய்வோர் சுமார் 60 ஆயிரத்திற்கு மேற்பட்டோர் பாதிப்படைந்துள்ளதாக தமிழ்தேசிய மக்கள் முன்னணியின் செயலாளர் செ.கஜேந்திரன் தெரிவித்துள்ளார். சமகால அரசியல் நிலமைகள் குறித்து யாழ்.ஊடக அமையத்தில் நடைபெற்ற ஊடகவியலாளர்கள் சந்திப்பில் கலந்து கொண்டு கருத்து தெரிவிக்கும்போதே அவர் மேற்கண்டவாறு கூறினார்....

கூட்டமைப்பிலிருந்து வெளியேறுகிறது ஈ.பி.ஆர்.எல்.எஃப்!

தமிழ் தேதிய கூட்டமைப்பிலிருந்து வெளியேறி தனித்து போட்டியிடுவதற்கு தயாராகி வருவதாக ஈ.பி.ஆர்.எல்.எஃப் தலைவர் சுரேஷ் பிரேமசந்திரன் தெரிவித்துள்ளார். தனியார் தொலைக்காட்சிக்கு வழங்கிய பிரத்தியேக செவ்வியில் உள்ளூராட்சி தேர்தல் தொடர்பான கேள்விகளுக்கு பதிலளிக்கையிலேயே அவர் இவ்வாறு குறிப்பிட்டார். இதன்போது அவர் மேலும் கூறுகையில், கடந்த 15 வருடங்களாக தனது கட்சி தமிழ் தேசிய கூட்டமைப்போடு இணைந்து செயற்பட்ட...

மென் பாணங்களிலுள்ள சீனியின் அளவை குறைக்க புதிய வரி!

மென் பாணங்களிலுள்ள சீனியின் அளவை குறைக்க புதிய வரி திட்டமொன்றை நடைமுறைப்படுத்தவுள்ளதாக சுகாதார அமைச்சர் ராஜித்த சேனாரத்ன தெரிவித்துள்ளார். அலரிமாளிகையில் இடம்பெற்ற நிகழ்வொன்றில் கலந்து கொண்டு உரையாற்றுகையிலேயே அவர் இதனைக் குறிப்பிட்டார். இதன்போது அவர் மேலும் கூறுகையில், “சீனி நுகர்வைக் கட்டுப்படுத்தும் நோக்கில், மென் பாண வகைகளில் 6 கிராமுக்கும் அதிக சீனி காணப்படுமாயின், மேலதிகமாக...

அரியாலை இளைஞனின் படுகொலை விவகாரம்: விஷேட அதிரடிபடையினரிடம் விசாரணை

யாழ்ப்பாணம் அரியாலை பகுதியில் இளைஞன் ஒருவர் சுட்டுக்கொல்லப்பட்ட சம்பவம் தொடர்பில், விஷேட அதிரடிபடையினரிடம் விசாரணை நடத்தப்பட்டுள்ளது. கொழும்பிலிருந்து வந்த விஷேட விசாரணைக் குழுவொன்றே நேற்று (திங்கட்கிழமை) யாழ்ப்பாணம் பொலிஸ் நிலையத்தில் வைத்து விசாரணைகளை மேற்கொண்டுள்ளது. பொலிஸ்மா அதிபர் பூஜித் ஜயசுந்தரவின் ஏற்பாட்டிலேயே கடந்த வியாழக்கிழமை குறித்த விசேட குற்றத்தடுப்பு விசாரணை அதிகாரிகள் அனுப்பிவைக்கப்பட்டனர். அரியாலை கிழக்கு...

மாவீரர் தினம் அனுஷ்டிப்பதற்கு ஏற்பாட்டுக்குழு

மன்னார் மாவட்டத்தில் மாவீரர் தினத்தை அனுஷ்டிப்பதற்கு, ஏற்பாட்டுக் குழு ஒன்று அமைக்கப்பட்டுள்ளதென, மன்னார் மாவட்ட பொது அமைப்புகளின் ஒன்றியத் தலைவர் வி.எஸ்.சிவகரன் தெரிவித்தார். இது குறித்து, அவர் தொடர்ந்து கருத்துத் தெரிவிக்கையில், “மாவட்டத்தில் உள்ள ஆட்காட்டிவெளி, பெரிய பண்டிவிரிச்சான் ஆகிய இரண்டு மாவீரர் துயிலுமில்லங்களில் உள்ள மாவீரர்களின் பெற்றோர்கள், முன்னாள் போராளிகள், பொது அமைப்புகளின் பிரதிநிதிகள்...

நாட்டின் சில பாகங்களில் 150 மி.மி மழை எதிர்பார்ப்பு!

நாடளாவிய ரீதியாக சில பாகங்களில் 150 மி.மி மழை எதிர்பார்ப்பதாக காலநிலை அவதான நிலையம் தெரிவித்துள்ளது. மத்திய, சப்ரகமுவ, மேல் மாகாணங்களிலும் காலி, மாத்தறை, அம்பாறை மாவட்டங்களில் இவ்வாறு அதிக மழை பெய்யக்கூடும் எனவும் எதிர்வு கூறப்பட்டுள்ளது. சில பிரதேசங்களில் மழை அல்லது இடியுடன் கூடிய மழை பெய்யக் கூடும் என்றும் எதிர்பார்க்கப்பட்டுள்ளது.

சிறைத்தண்டனை விதிக்கப்பட்டவர்களுக்கு மன்னிப்பு வழங்கவேண்டும் : டக்ளஸ்

களுத்துறைச் சிறைச்சாலையில் தன்மீது தாக்குதல் நடத்திய சம்பவத்தின்போது குற்றவாளிகளாக இனங்காணப்பட்டு கடூழிய சிறைத்தண்டனை விதிக்கப்பட்டவர்களுக்கு மன்னிப்பு வழங்கவேண்டும் என்பதே தமது நிலைப்பாடாகும் என்று ஈழ மக்கள் ஜனநாயக கட்சியின் செயலாளர் நாயகம் டக்ளஸ் தேவானந்தா தெரிவித்துள்ளார். இதுவிடயம் தொடர்பாக தாம் நீதிமன்ற விசாரணைகளின்போது இனங்காணப்பட்ட குறித்த குற்றவாளிகளுக்கு மன்னிப்பு வழங்கவேண்டும் என்ற தனது நிலைப்பாட்டை முன்னர்...
Loading posts...

All posts loaded

No more posts