Ad Widget

கூட்டமைப்பிலிருந்து வெளியேறுகிறது ஈ.பி.ஆர்.எல்.எஃப்!

தமிழ் தேதிய கூட்டமைப்பிலிருந்து வெளியேறி தனித்து போட்டியிடுவதற்கு தயாராகி வருவதாக ஈ.பி.ஆர்.எல்.எஃப் தலைவர் சுரேஷ் பிரேமசந்திரன் தெரிவித்துள்ளார்.

தனியார் தொலைக்காட்சிக்கு வழங்கிய பிரத்தியேக செவ்வியில் உள்ளூராட்சி தேர்தல் தொடர்பான கேள்விகளுக்கு பதிலளிக்கையிலேயே அவர் இவ்வாறு குறிப்பிட்டார்.

இதன்போது அவர் மேலும் கூறுகையில்,

கடந்த 15 வருடங்களாக தனது கட்சி தமிழ் தேசிய கூட்டமைப்போடு இணைந்து செயற்பட்ட நிலையில், கூட்டமைப்பின் பிரதான கட்சியான தமிழரசு கட்சி ஏனைய கட்சிகளின் கருத்துக்களை மதிப்பளிக்காது செயற்படுவதோடு மக்களின் அபிலாஷைகளுக்கு மாறாக செயற்படுவதால் தனது கட்சி இத்தீர்மானத்தை மேற்கொள்ள வேண்டிய நிர்பந்தத்திற்குள்ளாகியுள்ளதாக தெரிவித்தார்.

தனித்து போட்டியிடுவதற்கான ஆயத்த பணிகளில் ஈடுபட்டு வருகின்ற போதிலும் கொள்கை ரீதியான உடன்பாட்டோடு ஏனைய கட்சிகள் இணைந்து போட்டியிட ஆர்வம் செலுத்துமாயின் அதுதொடர்பில் பரீசிலிக்க தயாராக இருப்பதாகவும் கூட்டமைப்புக்கு மாற்றான தலைமை ஒன்று தொடர்பில் அண்மைக்காலமாக தான் அவதானம் செலுத்திவருதால் ஏனைய கட்சிகளுடன் இணைந்து செயற்பட தயராகவுள்ளதாகவும் அவர் மேலும் குறிப்பிட்டார்.

Related Posts