Ad Widget

அழிவை நோக்கிய பயணம் : யுத்தம் ஏற்படும் அபாயம் ஏற்பட்டு விட்டது!!

புதிய அரசியலமைப்பில் பௌத்த மதம் தற்போது கொண்டுள்ள நிலைப்பாட்டில் மாற்றங்கள் ஏதும் நிகழுமாக இருந்தால் பேரனர்த்தம் ஏற்படும் என முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ தெரிவித்துள்ளார்.

நேற்றைய தினம் (புதன்கிழமை) கண்டியில் இடம்பெற்ற நிகழ்வு ஒன்றில் கருத்து தெரிவிக்கும் போதே அவர் இதனைக் கூறியுள்ளார்.

மேலும், தற்போது இலங்கையில் மத ரீதியான யுத்தம் ஒன்று ஏற்படும் அபாயம் ஏற்பட்டுள்ளதாகவும் மஹிந்த எச்சரிக்கை விடுத்துள்ளார்.

புதிய அரசியலமைப்பானது அனைத்து தரப்பினரையும் அழிவிற்கு கொண்டு செல்லும் எனவும் மஹிந்த ராஜபக்ச மேலும் தெரிவித்துள்ளார்.

இதேவேளை, இன்றைய தினம் நாடாளுமன்றில் அரசியலமைப்பு தொடர்பில் மஹிந்த கருத்து முன்வைத்தபோது இனங்களுக்கு இடையில் குரோதத்தை ஏற்படுத்த வேண்டாம் எனத் தெரிவித்துள்ளார்.

மேலும், அரசியலமைப்பு தொடர்பில் பல்வேறு சந்தேகங்கள் காணப்பட்ட போதும் நாட்டின் மீதும், இனத்தின் மீதும் கொண்ட பற்று காரணமாகவே இந்த விவாத்தில் தான் கலந்து கொண்டுள்ளதாக, இன்று நாடாளுமன்றத்தில் மஹிந்த கருத்து வெளியிட்டிருந்தார்.

இதன் அடிப்படையில் மஹிந்த தற்போது புதிய அரசியலமைப்புக்கு எதிராக செயற்பட்டு வருவது வெளிப்படையாக தெரிந்து விட்டதாக அரசியல் அவதானிகள் கருத்து வெளியிட்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கது.

Related Posts