- Friday
- May 15th, 2026
யாழ்ப்பாணப் பல்கலைகழக மாணவர்கள் மேற்கொண்ட பல்கலைகழக செயற்பாடுகளை முடக்கிய போராட்டத்தை நிறுத்தி, அப்போராட்டத்தை வேறு வடிவங்களில் முன்னெடுக்க தீர்மானித்துள்ளதாக, யாழ்.பல்கலைகழக மாணவர் ஒன்றியம் தெரிவித்துள்ளது. அநுராதபுரம் நீதிமன்றில் உள்ள வழக்குகளை மீளவும் வவுனியா மேல் நீதிமன்றுக்கு மாற்றுமாறு கோரி, அநுராதபுரம் சிறைச்சாலையில் மூன்று தமிழ் அரசியல் கைதிகள் உண்ணாவிரதப் போராட்டத்தை முன்னெடுத்திருந்தனர். இந்நிலையில் இவர்களுக்கு ஆதரவாக...
“தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் பாதகமான செயல்களை அம்பலப்படுத்துவதற்கு, எமக்குக் கிடைத்துள்ள இறுதிச் சந்தர்ப்பம் இதுவாகும்” என, தமிழர் விடுதலைக் கூட்டணியின் செயலாளர் நாயகம் வீ. ஆனந்தசங்கரி தெரிவித்துள்ளார். மேலும், “சம்பந்தனிடம் இருந்து, தமிழ் மக்களையும், பொதுவாக இலங்கையர்களையும் காப்பாற்ற வேண்டிய நேரம் வந்துவிட்டது” எனவும் குறிப்பிட்டுள்ளார். இது தொடர்பில், அவர் நேற்று முன்தினம் (04) வௌியிட்டுள்ள...
கேலிச்சித்திரமொன்றுக்காக, ஊடகவியலாளரும் கேலிச்சித்திரக் கலைஞருமான பாலா, தமிழகத்தில் கைது செய்யப்பட்டுள்ளமையை வன்மையாகக் கண்டிக்கின்றோம்” என, யாழ். ஊடக அமையம் தெரிவித்துள்ளது. இது குறித்து அவ்வமைப்பு விடுத்துள்ள ஊடக அறிக்கையில் மேலும் குறிப்பிடப்பட்டுள்ளதாவது, “தமிழகத்தின் நெல்லையில், கந்துவட்டிக் கொடுமைக்கு, தீயில் கருகிப் பலியான இசக்கிமுத்து குடும்பம் தொடர்பாக விமர்சன கார்ட்டூன் வரைந்த கார்டூனிஸ்ட் பாலா, சென்னை, போரூர்...
தங்களுக்கும் இலங்கை தமிழரசு கட்சியுடன் முறுகல் நிலை இருப்பதாக புளொட் அமைப்பின் தர்மலிங்கம் சித்தார்த்தன் தெரிவித்துள்ளார். இலங்கை தமிழரசு கட்சி, தமிழ் தேசிய கூட்டமைப்புக்குள் மேற்கொள்ளும் ஒருசில செயற்பாடுகள் காரணமாக கொள்கை ரீதியான பிரச்சனைகள் தோன்றியுள்ளன. எனினும் தமிழ் பேசும் மக்களின் நலனை கருத்தில் கொண்டு எதிர்வரும் உள்ளூராட்சி சபைத் தேர்தலில் கூட்டமைப்பில் இணைந்து போட்டியிட...
நாட்டின் பெரும்பாலான பகுதிகளில் தொடர்ந்தும் பிற்பகல்வேளைகளில் இடியுடன் கூடிய மழை சாத்தியப்படும் என்று வளிமண்டலவியல் திணைக்களம் தெரிவித்துள்ளது. வடக்கு, கிழக்கு, வடமத்திய மற்றும் ஊவா மாகாணங்களிலும் புத்தளம் மாத்தளை மாவட்டங்களிலும் மழை அல்லது இடியுடன் கூடிய மழை ஓரளவு பெய்யும். நாட்டின் பெரும்பாலான பகுதிகளில் பிற்பகல் 2.00 மணியின் பின்னர் மழை அல்லது இடியுடன் கூடிய...
யாழ்ப்பாணம் இந்துக் கல்லூரிக்கு அருகில் நேற்றுமாலை ஒருவர் வாள்வெட்டுக்கு இலக்காகி யாழ்ப்பாணம் போதனா மருத்துவமனையில் சேர்க்கப்பட்டார். ‘‘இந்துக் கல்லூரி சுற்றுவட்டத்தில் எனது வாகனத்திலிருந்து இறங்கி அருகிலுள்ள கடைக்குச் சென்ற போது மோட்டார் சைக்கிளில் சென்றவர்கள் வாளால் வெட்டினர்’’ என்று காயமடைந்த உரும்பிராயைச் சேர்ந்தவ ஜோன் ஜான்சன் (வயது 34) தெரிவித்தார். அவர்கள் வீதியில் வாளை வீசிக்கொண்டு...
தமிழ் அரசுக் கட்சியுடனான உறவுகளை முறித்துக் கொள்ளும் முடிவை எடுத்த, ஈபிஆர்எல்எவ் தலைவர் சுரேஸ் பிரேமச்சந்திரனுக்காக வருத்தப்படுவதாக தெரிவித்திருக்கும் வட மாகாணசபையின் அவைத் தலைவரும், தமிழ் அரசுக் கட்சியின் பிரமுகருமான சி.வி.கே.சிவஞானம் அவரது முடிவு பரிதாபகரமானது என்றும் அதனால் தமிழரைசுக் கட்சிக்கு இலாபமே என்றும் தெரிவித்திருக்கிறார். இதுகுறித்து அவர் கருத்து வெளியிடுகையில், “இந்த முடிவை எடுத்தமைக்காக...
வவுனியா தாண்டிக்குளம் ஐயனார் கோவில் அருகே இன்று முற்பகல் 11.30 மணியளவில் பெண் ஒருவரின் தங்கச் சங்கிலியை மோட்டார் சைக்கிளில் வந்த இரு நபர்கள் அபகரித்துச் செல்ல முயன்ற போது அப்பகுதி மக்கள் துரத்தி பிடித்து நையப்புடைத்த சம்பவமொன்று இடம்பெற்றுள்ளது. இச் சம்பவம் பற்றி மேலும் தெரியவருவதாது, இன்று முற்பகல் 11.30 மணியளவில் வவுனியா தாண்டிக்குளம்...
எதிர்காலத்தில் வழக்கமான முறையில் பெற்றோலிய விநியோகம் இடம்பெறும் எனவும் மக்கள் இது குறித்து எவ்வித அச்சமுமடையத் தேவையில்லையென பெற்றோலிய வளங்கள் அபிவிருத்தி அமைச்சர் அர்ஜுன ரணதுங்க பெதுமக்களிடம் வேண்டுகோள்விடுத்துள்ளார். இதேவேளை, நாட்டில் தற்போது பெற்றோலுக்கான தட்டுப்பாடு இல்லையெனவும் அவர் மேலும் தெரிவித்துள்ளார். இது தொடர்பில் பெற்றோலிய வளங்கள் அபிவிருத்தி அமைச்சர் அர்ஜுன ரணதுங்க விடுத்துள்ள ஊடக...
புங்குடுதீவு மாணவி வித்தியா சிவலோகநாதன் படுகொலை தொடர்பில், நாடாளுமன்ற உறுப்பினர் மாவை சேனாதிராஜாவிடம் குற்றப் புலனாய்வுப் பிரிவினர் இன்று(சனிக்கிழமை) வாக்குமூலம் பெற்றுள்ளனர். வித்தியா கொலை வழக்கின் சூத்திரதாரியான சுவிஸ்குமார் என அழைக்கப்படும் மகாலிங்கம் சசிக்குமார் தப்பிக்க உதவியதாகக் குற்றம்சாட்டப்பட்டு கைது செய்யப்பட்டுள்ள சிரேஷ்ட பொலிஸ்மா அதிபர் லலித் ஜயசிங்கவிற்கு எதிரான வழக்கு தொடர்பிலேயே குறித்த வாக்குமூலம்...
மது போதையில் முச்சக்கர வண்டியை செலுத்திய சாரதியின் சாரதி அனுமதி பத்திரத்தை நிரந்தமாகத் தடை செய்ய ஊர்காவற்றுறை நீதிமன்ற நீதிவான் ஏ.எம்.எம்.ரியால் உத்தரவிட்டார். ஊர்காவற்றுறை பொலிஸ் பிரிவுக்கு உட்பட்ட பிரதேசத்தில் மதுபோதையில் முச்சக்கர வண்டியை செலுத்திய குற்றச்சாட்டில் சாரதியை பொலிஸார் கைது செய்து நீதிமன்றில் முற்படுத்தினர். அது தொடர்பிலான விசாரணைகளை மேற்கொண்ட நீதவான் சாரதியின் ,...
யாழ்ப்பாணக் குடாநாடு உட்பட வடமாகாணத்தின் பல இடங்களில் கடுமையான மழை பெய்வதனால் வீதிகள் அனைத்தும் வெள்ளம் நீரால் சூழ்ந்துள்ளன. தொடர்ந்து 5 நாட்களுக்கும் மேலாக கடுமையான மழை பெய்வதனால் மக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டுள்ளது. வங்கக் கடலில் வளிமண்டல தாழமுக்கம் நிலைகொண்டிருப்பதனாலேயே யாழ்ப்பாணத்தில் கடுமையான மழை பெய்வதாக வளிமண்டலவியல் திணைக்கள பொறுப்பதிகாரி ரி.பிரதீபன் தெரிவித்தார். அத்துடன்...
தமிழ் தேசியக் கூட்டமைப்பின் தீர்மானங்களை, தமிழரசுக் கட்சி தனித்து எடுப்பதை ஏனைய கட்சிகள் ஏற்றுக்கொள்ள முடியாதென தமிழ் மக்கள் பேரவையின் வவுனியா மாவட்ட அமைப்பாளர் கி.தேவராசா தெரிவித்துள்ளார். வவுனியாவில் நேற்று (வெள்ளிக்கிழமை) நடைபெற்ற செய்தியாளர் சந்திப்பிலேயே அவர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார். குறிப்பாக, அரசியல் யாப்பு தொடர்பான இடைக்கால அறிக்கை மீதான விவாதத்தில் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர்...
கிளிநொச்சி பூநகரி பகுதியில் மோட்டார் சைக்கிளில் இருந்து தவறி விழுந்து, பெண்ணொருவர் உயிரிழந்துள்ளார். பூநகரி 4ஆம் கட்டையைச் சேர்ந்த சந்திரலோகராசலிங்கம் நிர்மலா (வயது-55) என்ற குறித்த பெண், நண்பர் ஒருவரது மோட்டார் சைக்கிளில் சென்றபோது தவறி விழுந்துள்ளார். படுகாயங்களுக்கு உள்ளான அவரை அவரது நண்பர் பூநகரி வைத்தியசாலைக்கு கொண்டுசென்ற போது, அங்கு வைத்தியர் இருக்கவில்லை. அதனைத்...
யாழ்ப்பாணம் - நல்லூர் வீரமாகாளி அம்மன் ஆலய வளாகத்தில் பெய்த மழைநீரில் மீன்களும் வந்து வீழ்ந்துள்ளது. நேற்று மாலை தொடக்கம் அங்கு ´மீன் மழை´ பெய்து வருவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. மழையுடன் சில வகை மீன்களும் நிலத்தில் பரவலாக வந்து வீழ்வதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த நிகழ்வு தொடர்ச்சியாக மூன்றாவது ஆண்டாக நடைபெறுவதாக அந்தப் பகுதியைச் சேர்ந்தவர்கள் தெரிவித்தனர்....
யாழ்ப்பாணம் அரியாலை பகுதியில் இளைஞன் ஒருவர் சுட்டு படுகொலை செய்யப்பட்ட சம்பவம் தொடர்பில், விசேட அதிரடிப்படை அதிகாரிகள் இருவர் கைதுசெய்யப்பட்டுள்ளனர். விசேட அதிரடிப்படையின் புலனாய்வுப் பிரிவைச் சேர்ந்த இவர்கள் இருவரும் நேற்று (வெள்ளிக்கிழமை) நண்பகல் கைதுசெய்யப்பட்டுள்ளனர். அரியாலை மணியந்தோட்டம் பகுதியில் கடந்த மாதம் 22ஆம் திகதி டொன் பொஸ்கோ (வயது-24) என்ற இளைஞன், இனந்தெரியாதோரால் சுட்டு...
அத்தியாவசிய பொருட்கள் பலவற்றின் விலைகளை சத்தோச நிறுவனம் குறைத்துள்ளது. இதற்கமைய இந்த புதிய விலைக்கு கடந்த 2ம் திகதி முதல் சத்தோச நிறுவன விற்பனை கிளைகளில் பின்வரும் பொருட்களை பெற்றுக்கொள்ளமுடியும்: சம்பா அரிசி ஒரு கிலோ ரூபா 78.00 நாட்டரிசி ஒரு கிலோ ரூபா 74.00 வெள்ளை பச்சரிசி ஒரு கிலோ ரூபா 65.00 சிவப்பு...
ஜனவரியில் நடை பெறவுள்ள உள்ளுராட்சி தேர்தலில் வட கிழக்கில் தமிழரசுக் கட்சி தனித்துப் போட்டியிட முடிவுசெய்திருப்பதாக தகவல்கள் வெளியிடப்பட்டுள்ளன. இந்நிலையில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பில் அங்கம் வகிக்கும் கட்சிகள் விரும்பினால் தமிழரசுக் கட்சியால் ஒதுக்கித்தரப்படும் இடங்களில் போட்டியிட முடியும் என்றும் அன்றில் தமிழ் தேசிய கூட்டமைப்பிலிருந்து யாரும் வெளியேறலாம் என்றும் கூறப்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. யாழ்ப்பாணத்தில்...
அனுராதபுரம் சிறைச்சாலையில் தொடர்ச்சியான உண்ணாவிரத போராட்டத்தில் ஈடுபட்டுவரும் தமிழ் அரசியல் கைதிகளிடம், அவ் உண்ணாவிரத போராட்டத்தை கைவிடுமாறு வலியுறுத்தப்பட்டுள்ளது. அது தொடர்பில் கோரிக்கை விடுவிப்பதற்காக யாழ்.பல்கலைகழக மாணவர்களும் தமிழ் அரசியல் தலமைகளும் இன்று சனிக்கிழமை அனுராதபுரம் சிறைச்சாலைக்கு செல்லவுள்ளதாக தீர்மானிக்கப்பட்டுள்ளது. வவுனியா நீதிமன்றத்திற்கு மீண்டும் வழக்குகளை மாற்ற வேண்டும் என்ற கோரிக்கை தொடர்பில் பல்கலைகழக மாணவர்களாகிய...
அரசியல் கைதிகளின் விடுதலையை வலியுறுத்தி நிர்வாக முடக்கல் போராட்டத்தில் ஈடுபட்டுவரும் யாழ் பல்கலைக்கழக மாணவர்கள் அடுத்து மேற்கொள்ளப்படவேண்டிய அவசர நடவடிக்கைகள் தொடர்பில் ஆராய நேற்று வெள்ளிக்கிழமை பிற்பகல் வருகைதருமாறு வடக்கு கிழக்கிலுள்ள அனைத்து தமிழ் நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கும் பகிரங்க அழைப்பு விடுத்திருந்தனர். பல்கலைக்கழக மாணவர்களின் இவ் அழைப்பினை தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு நிராகரித்துள்ள அதேவேளை தமிழரசுக்...
Loading posts...
All posts loaded
No more posts
