- Friday
- May 15th, 2026
யானைகளின் அட்டகாசத்தினால் தமது வாழ்வாதாரம் பாதிக்கப்படுவதாக சுட்டிக்காட்டிய முல்லைத்தீவு மக்கள், பாதிப்பை தவிர்க்க பாதுகாப்பு வேலி அமைத்துத்தருமாறு கோரியுள்ளனர். முல்லைத்தீவில் மழையுடன் கூடிய சீரற்ற காலநிலை நிலவிவருகின்ற நிலையில், காட்டு யானைகள் குடியிருப்பு பகுதிகளுக்குள் நுழைந்து அட்டகாசம் புரிந்து வருகின்றது. குடியிருப்பு பகுதிகளுக்குள் நுழையும் யானைகள், வயல் நிலங்களை சேதப்படுத்துவதால், மக்களின் விவசாய நடவடிக்கைகள் பாதிக்கப்பட்டு...
தமிழ் மக்களின் பிரச்சினைகள் குறித்து ஏன் எதிர்கட்சித் தலைவர் மௌனமாக இருக்கின்றார்?? : நாமல் ராஜபக்ஷ
தமிழ் மக்களின் அன்றாட பிரச்சினைகள் குறித்து ஏன் எதிர்கட்சித் தலைவர் மௌனமாக இருக்கின்றார் என நாடாளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்ஷ கேள்வி எழுப்பியுள்ளார். நாமல் இந்த கேள்வியை நேற்றய தினம் (செவ்வாய்க்கிழமை) தனது உத்தியோகப்பூர்வ டுவிட்டர் பக்கத்தில் தமிழில் பதிவேற்றியுள்ளார். “அதிகாரப்பகிர்வு கிடைக்கும் என்பதை காரணம் காட்டி தமிழ் மக்களின் அன்றாடப் பிரச்சினைகளுக்குரிய தீர்வுகளை கோராது...
வடக்கு மாகாண கல்வி அமைச்சின் உதவிச் செயலாளர் மரியதாசன் வெளிநாட்டுக்குச் சென்று கல்வியைத் தொடர வடக்கு மாகாண ஆளுநர் ரெஜினோல்ட் குரே அனுமதி வழங்க வேண்டும் என யாழ்.மேல் நீதிமன்ற நீதிபதி இளஞ்செழியன் கட்டளையிட்டுள்ளார். வடக்கு மாகாண கல்வி அமைச்சின் உதவிச் செயலாளர் மரியதாசன் ஜேகூ, கடமையிலிருக்கும் போது அவுஸ்திரேலியாவுக்கு உயர்கல்வி கற்க செல்வதற்கான அனுமதிகேட்டு...
இன்று இரவு நேரத்தில் நாட்டின் பல்வேறு பகுதிகளில் இடியுடன் கூடிய மழை பெய்யக்கூடும் என வானிலை அவதான நிலையம் எதிர்வு கூறியுள்ளது. மேல் , தென் , சப்ரகமுவ , மத்திய மற்றும் ஊவா மாகாணங்களில் இவ்வாறு மழைப் பெய்யக்கூடும் என அந்த நிலையம் வௌியிட்டுள்ள செய்திக்குறிப்பில் குறிப்பிடப்பட்டுள்ளது. குறித்த பகுதிகளில் 100 மில்லிமீற்றருக்கும் அதிகமான...
வாகனங்களுக்கு மாத்திரம் பெற்றோல் நிரப்புவதற்கான சுற்றறிக்கை ஒன்று இன்று வௌியிடப்பட்டுள்ளதாக, பெற்றோலிய வள அமைச்சின் செயலாளர் குறிப்பிட்டுள்ளார். இதற்கமைய, வாகனங்கள் தவிர்த்து போத்தல்கள் போன்ற வேறு எவற்றிலும் பெற்றோல் வழங்கப்படாது எனத் தெரிகிறது. மேலும், இலங்கை பெற்றோல் களஞ்சிய டர்மினல்ஸில் இருந்து, இன்று 2400 மெற்றிக்தொன் பெற்றோலை விநியோகிக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.
வடக்கு, கிழக்கு மாகாணங்களில் தமிழ் மொழியும் ஏனைய மாகாணங்களில் சிங்கள மொழியும் உத்தியோகபூர்வ மொழியாக பயன்படுத்தப்படும் விதத்தில் அரசியல் யாப்பு உருவாக்கப்பட உள்ளதாக தமிழ் தேசிய கூட்டமைப்பின் தலைவரும் எதிர் கட்சித் தலைவருமான இரா.சம்பந்தன் தெரிவித்துள்ளார் திருகோணமலை மாவட்ட அபிவிருத்திக் குழு கூட்டத்தில் கலந்து கொண்டு உரையாற்றும் போதே இரா. சம்பந்தன் மேற்கண்டவாறு தெரிவித்துள்ளார். இலங்கையின்...
மாணவர் ஒன்றியத்தின் கோரிக்கையை புறந்தள்ளி 33வது பொதுப்பட்டமளிப்பினை இரண்டு பகுதியாகவே நடாத்துவதற்கு யாழ் பல்கலை நிர்வாகம் தீர்மானத்துள்ளதாக அறிவித்தமைக்கு மாணவர் ஒன்றியம் எதிர்ப்பு தெரிவித்துள்ளது. முதல் பகுதி டிசம்பர் 09 2017இல் கலை மற்றும் விஞ்ஞான பீட மாணவர்களை தவிர்த்து நடத்தப்பட தீர்மானிக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.
இரணைமடு குளத்திற்கு அருகில் முகாம் அமைத்திருந்த இராணுவத்தினர் அப்பகுதியை விட்டு வெளியேறியுள்ளதாக பொதுமக்கள் தெரிவிக்கின்றனர். இரணைமடுக்குளத்தின் நீர்பாசன திணைக்களத்திற்கு சொந்தமான குறித்த பகுதியில் அமைந்திருந்த நீர்பாசன திணைக்களத்தின் விடுதிகளை இராணுவத்தினர் தமது கட்டுப்பாட்டில் வைத்திருந்து பாதுகாப்பு கடமையில் ஈடுபட்டிருந்தனர். இதேவேளை குறித்த இரணைமடுக் குளத்திற்கு சுற்றுலாவாக வருகை தரும் பிரயாணிகளிற்கு சிற்றுண்டிச் சாலை அமைத்து வியாபாரமும்...
ஊர்காவற்றுறை கர்ப்பிணிப் பெண் படுகொலை தொடர்பான சந்தேகநபர்கள், நீதிமன்றத்தைத் தவறாக வழிநடத்த முற்படுகின்றனர் என, பாதிக்கப்பட்டவர் சார்பில் மன்றில் முன்னிலையான சட்டத்தரணி க.சுகாஷ், மன்றில் தெரிவித்தார். இப்படுகொலை வழக்கு, ஊர்காவற்றுறை நீதவான் நீதிமன்றில் நீதவான் ஏ.எம்.எம்.றியாழ் முன்னிலையில், நேற்று (06) விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்டது. இதன்போதே, குறித்த சட்டத்தரணி இவ்வாறு தெரிவித்தார். இதன்போது குறித்த வழக்கில் கைது...
டெங்கு நுளம்பை போன்று மலேரியா நுளம்புகளும் வடமாகாணத்தில் பல இடங்களில் காணப்படுவதாக யாழ் மாவட்ட சுகாதார அமைச்சு தொற்றுநோய் தடுப்பு பிரிவு டொக்டர் ஜி.ரஜீவ் தெரிவித்தார். இந்த மலேரியா நுளம்பு முதன்முறையாக மன்னாரில் கண்டுபிடிக்கப்பட்டதாகவும். பின்னர் இது யாழ்ப்பாணம் , கிளிநொச்சி, வவுனியா உள்ளிட்ட வடமாகாண பிரதேசங்களில் காணப்படுவதாகவும். இதனை இல்லாதொழிப்பதற்கு தீவிர நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டுள்ளதாகவும்...
ஆடைகளை உலர்த்த உழவு இயந்திரத்திற்கு அருகில் சென்ற பெண் ஒருவர், உழவு இயந்திரத்தில் பொருத்தப்பட்டிருந்த காற்றாடியில் சிக்குண்டு பரிதாபமாக உயிரிழந்த சம்பவம், புத்தூர் பகுதியில் இடம்பெற்றுள்ளது. புத்தூர் பகுதியினை சேர்ந்த 58வயதுடைய பெண்னொருவரே கடந்த ஞாயிற்றுக்கிழமை இவ்வாறு உயிரிழந்துள்ளார். மழையில் நனைந்திருந்த வெங்காய பிடிகளை உலர்த்துவதற்காக உழவு இயந்திரத்தினை இயக்கி அதனூடாக காற்றாடியினை இணைத்து வெங்காயத்தினை...
யாழ். கொழும்புத் துறை நெலுக்குளம் பகுதியில், போலி பணத்தாள்களை அச்சிட்ட இளம் தம்பதியினரை பொலிஸார் கைதுசெய்துள்ளனர். விஷேட புலனாய்வுத் துறையினருக்கு கிடைத்த இரகசிய தகவலையடுத்து அவர்கள் நேற்று (திங்கட்கிழமை) கைதுசெய்துசெய்யப்பட்டுள்ளனர். குறித்த தம்பதியினரின் வீட்டை சுற்றி வளைத்த அதிகாரிகள், 24 வயது மதிக்கதக்க மனைவியை முதலில் கைதுசெய்ததாவும், பின்னர் கணவரை கைதுசெய்தாகவும் அங்கிருக்கும் எமது பிராந்திய...
வடமாகாணத்தின் சில மாவட்டங்களுக்கு இன்றைய தினம் மின்சாரம் தடை ஏற்படும் என மின்சார சபையின் வடமாகாணப் பிரதி பொது முகாமையாளர் அறிவித்துள்ளார். வடக்கில் கிளிநொச்சி, மன்னார், வவுனியா ஆகிய மாவட்டங்களின் சில பகுதிகளில் மின்சார பராமரிப்பு தொடர்பிலான புனரமைப்பு பணிகள் காரணமாக மின் தடை ஏற்படும் எனக் குறிப்பிடப்பட்டுள்ளது. காலை 8.30 மணி முதல் மாலை...
நாட்டில் காணப்பட்டு வரும் பெற்றோல் நெருக்கடிகளுக்கு மத்தியில் வாகனங்களுக்கு மாத்திரம் பெற்றோலை விநியோகிக்க வேண்டும் என அனைத்து எரிபொருள் நிரப்பு நிலையங்களுக்கும் அறிவிக்கப்பட்டுள்ளது. கனிய வள அபிவிருத்தி அமைச்சு வெளியிட்டுள்ள சுற்றறிக்கை ஒன்றின் மூலமாகவே இந்த அறிவிப்பு விடுக்கப்பட்டுள்ளது. குறித்த விடயம் தொடர்பில், கனிய எண்ணெய் வள அமைச்சின் செயலாளர் உபாலி தென்னகோன் கருத்து வெளியிடுகையில்,...
யாழ். சாவகச்சேரியில், இடம்பெற்ற சட்ட விரோதமான பிரமிட் வியாபாரம் தொடர்பான தெளிவூட்டும் நிகழ்வில், நிறுவன முகவர்களால் ஏமாற்றப்பட்டவர்களுக்கு மிரட்டல் விடுக்கப்பட்டுள்ளது. தனியார் நிறுவனத்தால் மேற்கொள்ளப்படும் அரசால் தடைசெய்யப்பட்ட பிரமிட் முறையிலான வியாபார முறை மூலம் ஏமாற்றப்பட்ட மக்கள், ஏமாற்றிய பணத்தை திருப்பி வழங்குமாறும் இந்நிகழ்வின் போது எதிர்ப்பில் ஈடுபட்டனர். இதன்போது, எதிர்ப்பில் ஈடுபட்டவர்களை அடிபணியும் வகையில்...
யாழ்ப்பாணம் வலி. வடக்கு மக்களின் மீள்குடியேற்றம் தொடர்பில் ராணுவ உயர்மட்டத்தின் கவனத்துக்கு கொண்டுசென்று நடவடிக்கை எடுப்பதாக, யாழ். மாவட்ட கட்டளைத் தளபதி மேஜர் ஜெனரல் ஹெட்டியாராச்சி வாக்குறுதி வழங்கியுள்ளார். குறித்த வாக்குறுதியை தொடர்ந்து, மக்களின் போராட்டம் கைவிடப்பட்டது. வலிகாமம் வடக்குப் பிரதேச செயலகத்துக்கு உட்பட்ட வசாவிளான் மற்றும் பலாலி தெற்கு மக்கள் முன்னெடுத்த இந்த போராட்டம்,...
யாழ்ப்பாணம் அரியாலை பகுதியில் டொன் பொஸ்கோ என்ற இளைஞன் படுகொலைச் செய்யப்பட்ட சந்தர்ப்பத்தில், அங்கு விசேட அதிரடிப்படையினர் இருந்தமைக்கான ஆதாரம் வெளியாகியுள்ளது. சம்பவம் தொடர்பில் விசேட அதிரடிப்படையின் இரு அதிகாரிகள் கைதுசெய்யப்பட்டு விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ள நிலையில், அவர்களது தொலைபேசிகள் ஆய்வுக்குட்படுத்தப்பட்டுள்ளன. அதன் அடிப்படையில் சம்பவம் இடம்பெற்ற நேரத்தில் குறித்த இரு அதிகாரிகளும் சம்பவ இடத்தில் இருந்தமை...
தமிழீழ விடுதலை புலிகளின் தலைவர் எங்கள் மத்தியில் இன்றும் வாழ்ந்து கொண்டிருப்பதாக, விடுதலை புலிகளின் திருமலை மாவட்ட புலனாய்வு துறை தளபதிகளில் ஒருவராக இருந்த அன்பு என அழைக்கப்படும் இன்பராசா தெரிவித்துள்ளார். கிளிநொச்சியில் நேற்று (ஞாயிற்றுக்கிழமை), புனர்வாழ்வு அளிக்கப்பட்டு சமூகமயப்படுத்தப்பட்ட முன்னாள் போராளிகளினால் நடத்தப்பட்ட நிகழ்வில் கலந்துக்கொண்டு உரையாற்றுகையிலேயே அவர் இதனைக் குறிப்பிட்டார். அங்கு அவர்...
கர்பிணி தாய்மார்கள் எதிர்வரும் காலங்களில் வரிசையில் நிற்காமல், தொலைபேசி ஊடாக போசாக்கு பொருட்களை பெற்றுக்கொள்ளக் கூடிய வசதியினை மேற்கொள்ளவுள்ளதாக பாதுகாப்பு அமைச்சர் சாகலரத்னாயக்க தெரிவித்துள்ளார். மாத்தறை-தெனியாய பிரதேசத்தில் நேற்று (ஞாயிற்றுக்கிழமை) இடம்பெற்ற காணி உறுதிபத்திரம் வழங்கி வைக்கும் நிகழ்வில் கலந்துக்கொண்டு உரையாற்றுகையிலேயே அவர் இதனைக் குறிப்பிட்டார். இதன்போது அவர் மேலும் கூறுகையில், “நாங்கள் கர்பிணி தாய்மார்களுக்கு...
கிளிநொச்சி பூநகரி தெற்கு பிரதேசத்தில் உள்ள சமுர்த்தி வங்கி முகாமையாளரை இடமாற்றம் செய்யுமாறு பயனாளிகள் கோரிக்கை விடுத்துள்ளனர். குறித்த முகாமையாளரின் மனிதாபிமானமற்ற செயற்பாடுகளால் பயனாளிகள் தொடர்ச்சியாக பாதிக்கப்பட்டு வருகின்ற நிலையிலே இந்த கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. அண்மையில், சமுர்த்தி கொடுப்பனவை பெற்றுக் கொள்வதற்காக பயனாளிகள் பூநகரி சமுர்த்தி வங்கிக்கு வருகைத் தந்துள்ளனர். அதன்போது, அவர்களை சில மணிநேரம்...
Loading posts...
All posts loaded
No more posts
