Ad Widget

புதிய அரசியில் யாப்பில் வடக்கு கிழக்கில் தமிழ் உத்தியோகபூர்வ மொழி

வடக்கு, கிழக்கு மாகாணங்களில் தமிழ் மொழியும் ஏனைய மாகாணங்களில் சிங்கள மொழியும் உத்தியோகபூர்வ மொழியாக பயன்படுத்தப்படும் விதத்தில் அரசியல் யாப்பு உருவாக்கப்பட உள்ளதாக தமிழ் தேசிய கூட்டமைப்பின் தலைவரும் எதிர் கட்சித் தலைவருமான இரா.சம்பந்தன் தெரிவித்துள்ளார்

திருகோணமலை மாவட்ட அபிவிருத்திக் குழு கூட்டத்தில் கலந்து கொண்டு உரையாற்றும் போதே இரா. சம்பந்தன் மேற்கண்டவாறு தெரிவித்துள்ளார்.

இலங்கையின் உத்தியோகபூர்வ மொழி சிங்களமும் தமிழுமாகும் என்றதன் அடிப்படையில் சிங்கள மொழி ஏனைய ஏழு மாகாணங்களிலும் எவ்வாறு பயன்படுத்தப்படுகிறதோ அதே முறையில் வடக்கிலும் கிழக்கிலும் தமிழ் மொழி பயன்படுத்தப்பட வேண்டும் என அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

மேலும் பிரதேச சபைகளில் மக்களின் இன விகிதாசாரங்களின் அடிப்படையில் உத்தியோகபூர்வ மொழிகளை பயன்படுத்திக் கொள்ள முடியும் எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார். பிரிக்க முடியாத நாடாக புதிய அரசியல் சாசனம் உருவாக்கப்பட்டு வருவதாகவும் அதனப்படையில் நாட்டில் உள்ள சகல மக்களும் ஒற்றுமையுடனும் சமத்துவத்துடனும் வாழ முடியுமான சூழல் உருவாக்கப்படும் எனவும் இரா.சம்பந்தன் தெரிவித்துள்ளார்.

Related Posts