- Friday
- May 15th, 2026
தமிழ் மக்கள் பேரவை தற்போதையநிலையில் மக்கள் இயக்கமாகவே செயற்படும் என அதன் இணைத்தலைவரும் வடக்கு மாகாண முதலமைச்சருமான சி.வி.விக்னேஸ்வரன் தெரிவித்தார். யாழ்ப்பாணத்தில் நேற்று நடத்திய செய்தியாளர்கள் சந்திப்பிலேயே அவர் இவ்வாறு தெரிவித்தார். “தமிழ் மக்கள் பேரவை மக்கள் இயக்கமாகவே தற்போது செயற்பட்டுவருகிறது. அரசியல் ரீதியாக மாறுவதாக இல்லை. தமிழ் மக்களை ஒருங்கிணைத்துச் செல்ல வேண்டிய அவசியம்...
பல கொள்ளைகளுடன் தொடர்புபட்டவர் என தடயங்களை வைத்து மானிப்பாய், வட்டுக்கோட்டை மற்றும் சுன்னாகம் காவல்துறையினரால் தேடப்பட்டு வந்த கொள்ளைக் கும்பலில் ஒருவரை மானிப்பாய் காவல்துறையினர் கைது செய்துள்ளனர். ஏழாலை முனியப்பர் கோயில் பகுதியைச் சேர்ந்த 24 வயதுடைய நபரையே காவல்துறையினர் கைது செய்துள்ளனர். கடந்த வாரம் சங்குவேலி பகுதியில் இடம்பெற்ற கொள்ளைச்சம்பவம் தொடர்பில் சந்தேநபர் அடையாளம்...
இரணைமடு பிரதேசத்தில் இருந்து எந்தவொரு ராணுவமுகாமும் அகற்றப்படவில்லை என்று ராணுவப்பேச்சாளர் ரொஷான் செனவிரத்ன தெரிவித்துள்ளார். அமைச்சரவை தீர்மானங்களை அறிவிக்கும் ஊடகவியலாளர் சந்திப்பில் கருத்து தெரிவித்த போதே இராணுவப்பேச்சாளர் இதனை கூறியுள்ளார். குறித்த ஊடக சந்திப்பில் பங்கேற்ற ஊடகவியலாளர்கள், தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் அழுத்தங்களுக்கு அமைய இரணைமடு பகுதியில் இருந்து ராணுவ முகாம் ஒன்று அகற்றப்பட்டதா? என...
சமஸ்டி அரசியல் அமைப்பின் ஊடாகவே தமிழ் மக்களின் உரிமைகள் மீளக்கிடைக்கும் என வடமாகாண முதலமைச்சர் சீ.வி.விக்னேஸ்வரன் தெரிவித்துள்ளார். முதலமைச்சரின் செயலகத்தில் நேற்றய தினம் (புதன்கிழமை) இடம்பெற்ற ஊடக சந்திப்பில் கலந்து கொண்டு கருத்துத் தெரிவிக்கும்போதே அவர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார். இங்கு அவர் தொடர்ந்தும் கருத்துத் தெரிவிக்கையில், ”எமது பிரச்சினையை தீர்க்க வேண்டுமென்பதே எமது கரிசனை. எமது...
ஆறு அத்தியாவசிய பொருட்களுக்காக விதிக்கப்பட்டிருந்த விசேட வர்த்தக வரி நேற்று நள்ளிரவு முதல் நடைமுறைக்கு வரும் வகையில் குறைக்கப்படுவதாக நிதியமைச்சர் மங்கள சமரவீர தெரிவித்தார் கொழும்பில் நேற்று (புதன்கிழமை) இடம்பெற்ற ஊடகவியலாளர் மாநாட்டின் போதே நிதியமைச்சர் இதனை குறிப்பிட்டார். அந்தவகையில், இறக்குமதி செய்யப்படுகின்ற உருளைக்கிழங்கு மற்றும் பெரிய வெங்காயம் கிலோ கிராம் ஒன்றிற்கு விதிக்கப்பட்டுள்ள சிறப்பு...
இலங்கை பெற்றோலிய கூட்டுத்தாபனம் டுபாயிலிருந்து கொள்வனவு செய்த 40000 மெட்ரிக் டொன் எரிபொருளை தாங்கிய கப்பல் கொழும்பு துறைமுகத்தை வந்தடைந்தது. இந்த கப்பலில் 92 ஒக்டைன் ரக பெற்றோல் 32500 மெட்ரிக் டொன்னும், ஒக்டைன் 95 இற்கான பெற்றொல் 7500 மெட்ரிக் டொன்னும் காணப்படுவதாக கூறப்படுகின்றது. இதனை பரிசோதிப்பதற்காக அங்கு பரிசோதனையாளர்கள் அனுப்பி வைக்கப்படவுள்ளனர் என...
தமிழ்மக்களின் சகல பிரச்சினைகளுக்கும் தீர்வினை பெறவேண்டுமாயின் நாமல் ராஜபக்ஷ ஆக்கபூர்வமாக முழுமையான ஆதரவை வழங்க வேண்டும் என எதிர்க்கட்சித் தலைவர் இரா. சம்பந்தன் தெரிவித்துள்ளார். அதிகாரப்பகிர்வு கிடைக்கும் என்பதை காரணம் காட்டி தமிழ் மக்களின் அன்றாட பிரச்சினைக்கு உரிய தீர்வுகளை பெறாது இருக்க முடியாது என்பதை சம்பந்தன் ஐயா ஏன் உணரவில்லை நாடாளுமன்ற உறுப்பினர் நாமல்...
அதிபராக கடமையாற்றும் தனது கணவன் சில நாள்களாக வீட்டுக்கு வராத காரணத்தால் அவரை பாடசாலைக்குத் தேடிச்சென்று மண்ணெண்ணை ஊற்றி கொழுத்த முற்பட்ட பெண்ணால் யாழ் நகரப் பாடசாலை ஒன்றில் பதற்றம் ஏற்பட்டது. யாழ் மாநகரப் பகுதியில் உள்ள பாடசாலை ஒன்றில் கடமையாற்றும் அதிபர் ஒருவர் கடந்த விடுமுறை தினங்களான மூன்று நாள்களும், தனது வீட்டுக்கு செல்லாமல்...
தேசிய கொள்கைகள் மற்றும் பொருளாதார அமைச்சினால் பட்டதாரிகளுக்கான அபிவிருத்தி உத்தியோகத்தர் நியமனம் தொடர்பான விண்ணப்பங்கள் கோரப்பட்டு பல மாதங்கள் கடந்தும் இதுவரை நியமனம் தொடர்பான சரியானதொரு தகவல்கள் எதுவும் அறிவிக்கப்படவில்லை. தற்போது தேர்தலிற்கான அறிவித்தல் வெளியாகியுள்ளது. இந்நிலையில் தேர்தலிற்கு முன் தமக்கான நியமனங்களை வழங்குதல் வேண்டும் என வலியுறுத்தி வடக்கு மாகாண பட்டதாரிகள் எதிர்வரும் 15...
“2018ஆம் ஆண்டுக்கான வரவு – செலவுத்திட்டம், இளைஞர்களுக்கு இனிப்பானதாக அமையும்” என நிதி மற்றும் ஊடகத்துறை அமைச்சர் மங்கள சமரவீர தெரிவித்தார். இணைய ஊடகவியலாளர்களுடனான கலந்துரையாடல், ஊடக அமைச்சின் கேட்போர் கூட்டத்தில் இடம்பெற்றபோதே, அமைச்சர் மேற்படி தெரிவித்தார். அங்கு அவர் மேலும் தெரிவிக்கையில், “கொடும் பிடிக்குள் சிக்கியிருந்த ஊடகத்துறைக்கு, இப்போது அதிகமாகவே சுதந்திரம் கொடுக்கப்பட்டிருக்கின்றது. அந்தச்...
பிலியந்தலவில் பேருந்து ஒன்றை இலக்கு வைத்து கிளைமோர் குண்டுத் தாக்குதலை நடத்திய குற்றச்சாட்டில், விடுதலைப் புலிகள் இயக்க சந்தேக நபருக்கு, கொழும்பு மேல்நீதிமன்றம் ஆயுள் தண்டனை விதித்து தீர்ப்பளித்துள்ளது. எஸ்.ஆனந்த சுதாகர் எனப்படும், லோறன்ஸ் டேவிட் ராஜா என்ற சந்தேக நபருக்கே கொழும்பு மேல் நீதிமன்ற நீதிபதி பியசேன ரணசிங்க நேற்று ஆயுள் தண்டனை விதித்து...
வடமாகாண மரநடுகை மாதத்தை முன்னிட்டு சூரிச் சிவன் கோவிலின் அன்பேசிவம் அமைப்பால் வரப்புயர மரநடுகைத் திட்டம் முன்னெடுக்கப்பட்டுள்ளது. வடக்கின் முன்னாள் விவசாய அமைச்சரும் மாகாணசபை உறுப்பினருமான பொ.ஐங்கரநேசன் கடந்த செவ்வாய்க்கிழமை (07.11.2017) முகமாலையில் சம்பிரதாயபூர்வமாக இம்மரநடுகையை ஆரம்பித்து வைத்துள்ளார். சுவிற்சர்லாந்தில் அமைந்துள்ள சூரிச் சிவன் ஆலயத்தின் அன்பேசிவம் அமைப்பு தமிழர் தாயகமான வடக்கு கிழக்கெங்கும் பல்வேறு...
இலங்கையில் சித்திரவதைக்கு உட்பட்டதாக 50க்கும் மேற்பட்டவர்கள் ஐரோப்பாவில் முறைப்பாடு செய்துள்ளனர். ஐரோப்பிய நாடுகளில் புகலிடம் கோரி விண்ணப்பித்துள்ள 50க்கும் மேற்பட்ட இலங்கைத் தமிழர்களே இவ்வாறு முறைப்பாடு செய்துள்ளனர். [caption id="attachment_87594" align="aligncenter" width="634"] In this July 18, 2017, photo, a Sri Lankan man known as Witness #202 shows branding...
இலங்கையில் தடுத்துவைக்கப்பட்டுள்ள தமிழ் அரசியல் கைதிகள் விடயத்தில், தமிழ் மக்களும் தமிழ் அரசியல் கட்சிகளும் தமது பொறுப்பை உணர்ந்து செயற்பட வேண்டுமென யாழ். பல்கலைக்கழக மாணவர் ஒன்றியம் தெரிவித்துள்ளது. யாழ்.பல்கலைக்கழகத்தின் சமகால செயற்பாடுகள் தொடர்பாக இன்று (புதன்கிழமை) ஊடகங்களுக்குக் கருத்து தெரிவித்த ஒன்றியத்தின் தலைவர் கே.கிருஷ்ணமேனன் இவ்வாறு கூறியுள்ளார். தமிழ் அரசியல் கைதிகளுக்கு ஆதரவாக யாழ்.பல்கலைக்கழக...
Techstars அமைப்பின் வணிக புத்தாக்குநர்களுக்கான Startup Weekend Jafffna நிகழ்வு, யாழ்ப்பாணத்தில் 2வது தடவையாக எதிர்வரும் 10ம் திகதி தொடக்கம் 12ம் திகதி வரை கோப்பாயில் அமைந்துள்ள சக்தி ஓய்வு விடுதியில் நடைபெற உள்ளது. இலங்கையில் முதன்முறையாக யாழ்ப்பாணத்தில், கடந்த ஆண்டு ஜூன் மாதம் நடாத்தப்பட்டது. இதில் நுாற்றுக்கும் மேற்பட்ட தொழில்முனைவோர் கலந்து கொண்டு சிறப்பித்தனர்....
வடக்கில் உள்ள முச்சக்கர வண்டி சாரதிகள் கட்டுப்பாடு இல்லாமல் கட்டணங்களை அறவிடுவதை கட்டுப்படுத்த வடமாகாண முதலமைச்சர் நடவடிக்கை எடுக்க வேண்டும் என வடமாகாண எதிர்க்கட்சி தலைவர் சி.தவராசா விசேட கவனயீர்ப்பு பிரேரணையை முன் மொழிந்தார். வடமாகாண சபையின் 109ஆவது அமர்வு நேற்றய தினம் கைதடியில் உள்ள பேரவைக் கட்டடத்தில் நடைபெற்றது. அதன் போதே அவ்வாறு தெரிவித்தார்....
போலி நாணயத்தாள்களை அச்சிட்டனர் என்ற குற்றச்சாட்டில் கைது செய்யப்பட்ட தம்பதியரில் குடும்பத்தலைவரை எதிர்வரும் 21ஆம் திகதிவரை விளக்கமறியலில் வைக்க யாழ்.நீதவான் நீதிமன்ற நீதவான் உத்தரவிட்டு உள்ளார். அத்துடன் அவரது மனைவி கர்ப்பவதி என்ற காரணத்தால் 60 ஆயிரம் ரூபா பெறுமதியான ஆள்பிணையில் செல்ல அனுமதிக்கப்பட்டார். போலி நாணயத்தாள்களை அச்சிட்ட குற்றச்சாட்டில் தம்பதியர் அரியாலை மணியந்தோட்டப் பகுதியிலுள்ள...
வடமாகாண ஆளுனரின் அலுவலகத்தின் பின் கதவு எங்கே இருக்கின்றது என தனக்கு தெரியாது என வடமாகாண சபை ஆளும் கட்சி உறுப்பினர் எம்.கே. சிவாஜிலிங்கம் தெரிவித்துள்ளார். வடமாகாண சபையின் 109ஆவது அமர்வு நேற்றய தினம் கைதடியில் உள்ள பேரவைக் கட்டடத்தில் நடைபெற்றது. அதன் போதே அவ்வாறு தெரிவித்தார். அவர் இதுதொடர்பில் மேலும் தெரிவிக்கையில் , அரசியல்...
யாழ்ப்பாணம் பல்கலைக்கழகத்தின் கலை, விஞ்ஞானம் மற்றும் முகாமைத்துவ பீடங்கள் எதிர்வரும் 13ம் திகதி மீண்டும் கல்வி நடவடிக்கைக்காக திறக்கப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. அதன்படி அந்த பீடங்களில் கல்வி பயிலும் மாணவர்கள் எதிர்வரும் 12ம் திகதி காலை முதல் தமது விடுதிகளுக்கு திரும்புமாறு கேட்டுக் கொள்ளப்பட்டுள்ளனர். அதேவேளை கடந்த 30 மற்றும் 31ம் திகதிகளில் நடைபெற இருந்த...
வாகனங்களுக்கு மாத்திரம் பெற்றோல் நிரப்புவதற்கான சுற்றறிக்கையை உடனடியாக அமுலுக்கு வரும் வகையில் மீளப் பெற, பெற்றோலிய வள அபிவிருத்தி அமைச்சர் அர்ஜூன ரணதுங்க உத்தரவிட்டுள்ளார். நாட்டில் ஏற்பட்டுள்ள பெற்றோல் தட்டுப்பாட்டையடுத்து, வாகனங்கள் தவிர்த்து போத்தல்கள் போன்ற வேறு எவற்றிலும் பெற்றோல் வழங்கப்படாது என, சுற்றறிக்கை ஒன்று வௌியிடப்பட்டமை குறிப்பிடத்தக்கது. இந்த நிலையில் குறித்த சுற்றறிக்கையை தற்போது...
Loading posts...
All posts loaded
No more posts
