Ad Widget

தற்போது ஆட்சியில் இருக்கும் அரசாங்கமும் சித்திரவதைகளை மேற்கொள்வதாகக் குற்றம் சுமத்தப்பட்டுள்ளது

இலங்கையில் சித்திரவதைக்கு உட்பட்டதாக 50க்கும் மேற்பட்டவர்கள் ஐரோப்பாவில் முறைப்பாடு செய்துள்ளனர். ஐரோப்பிய நாடுகளில் புகலிடம் கோரி விண்ணப்பித்துள்ள 50க்கும் மேற்பட்ட இலங்கைத் தமிழர்களே இவ்வாறு முறைப்பாடு செய்துள்ளனர்.

In this July 18, 2017, photo, a Sri Lankan man known as Witness #202 shows branding marks on his back during an interview in London. Memories of his 2016 rape and torture have compelled him to speak out. Like many of the other tortured men, he was accused of trying to revive the Tamil Tigers rebel group. (AP Photo/Frank Augstein)

தற்போது ஆட்சியில் இருக்கும் அரசாங்கமும் சித்திரவதைகளை மேற்கொள்வதாகக் குற்றம் சுமத்தப்பட்டுள்ளது. கடத்தப்பட்டு தாம் சித்திரவதைக்கு உட்படுத்தப்பட்டதாக இந்த இலங்கைத் தமிழர்கள் தெரிவித்துள்ளனர்.

கடந்த ஜூலை மற்றும் ஓகஸ்ட் மாதங்களில் இவ்வாறு பாதிக்கப்பட்டவர்கள் தங்களது உடல் காயங்கள் மற்றும் சித்திரவதை பற்றிய விபரங்களை சர்வதேச ஊடகமொன்றுக்கு காண்பித்துள்ளனர்.

கால்கள், நெஞ்சுப் பகுதி போன்றவற்றில் சித்திரவதைகள் மூலம் ஏற்பட்ட காயங்கள் பற்றிய புகைப்படங்கள் வெளியிடப்பட்டுள்ளன. யுத்தம் நிறைவடைந்து எட்டு ஆண்டுகள் கடந்துள்ள நிலையிலும் மீளவும் பயங்கரவாத செயற்பாடுகளில் ஈடுபட முயற்சிப்பதாகக் குற்றம்சு மத்தியே இவ்வாறு துன்புறுத்தப்பட்டதாக இவர்கள் தெரிவித்துள்ளனர்.

இதேவேளை, இந்தக் குற்றச்சாட்டுக்களை இலங்கையின் இராணுவத் தளபதி மகேஸ் சேனாநாயக்க மறுத்துள்ளார். இலங்கையில் இவ்வாறான சித்திரவதைச் சம்பவங்கள் இடம்பெறவில்லை என அவர் குறிப்பிட்டுள்ளார்.

Related Posts