- Wednesday
- May 13th, 2026
வட.மாகாண சபையின் முன்னாள் அமைச்சர்கள் மீது சுமத்தப்பட்ட குற்றச்சாட்டுக்களை நிரூபிப்பதற்குச் சட்டரீதியான நடவடிக்கைகள் எதனையும் முதலமைச்சர் சீ.வி.விக்னேஷ்வரன் எடுக்கவில்லை என வட.மாகாணசபை உறுப்பினர்கள் குற்றஞ்சாட்டியுள்ளனர். வட.மாகாணசபையின் 119ஆவது அமர்வு நேற்று (செவ்வாய்க்கிழமை) பேரவைச் செயலகத்தின் சபா மண்டபத்தில் நடைபெற்றது. இதன்போது எதிர்க்கட்சித் தலைவர் சி.தவராசா மாகாண முதலமைச்சர் சீ.வி.விக்னேஷ்வரனிடம் வாய்மொழி வினா ஒன்றை எழுப்பியிருந்தார். அதில்...
முல்லைத்தீவு ஆண்டான் குளபகுதியில் வீதி சோதனை நடவடிக்கையில் ஈடுபட்டிருந்த இராணுவத்தினரின் துப்பாக்கியை இருவர் பறித்து சென்றமையால் அப்பகுதியில் பதற்றம் ஏற்பட்டது. இதனையடுத்து அந்தப்பகுதியில் பெருமளவான இராணுவத்தினர் குவிக்கப்பட்டுள்ளனர். முல்லைத்தீவு குமுழமுனை ஆண்டான் குள வீதியில் நேற்று முன்தினம் (திங்கட்கிழமை) இரவு இராணுவத்தினர் வீதி சோதனை நடவடிக்கையில் ஈடுபட்ட போது அவர்களுடன் வாய்த்தர்க்கத்தில் ஈடுபட்ட இருவரே துப்பாக்கியை...
நாங்கள் ஈழ மக்கள் ஜனநாயகக் கட்சியுடன் கூட்டுச் சேரவில்லை என தமிழ் தேசிய கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் மாவை சேனாதிராஜா தெரிவித்துள்ளார். நேற்று (செவ்வாய்க்கிழமை) வல்வெட்டித்துறை, நகர சபைத் தவிசாளர் தெரிவுக்கான முதலாவது சபை அமர்வு நகரசபை மண்டபத்தில் இடம்பெற்றது. அதில் கலந்துகொண்ட பின்னர் ஊடகங்களுக்கு கருத்துத் தெரிவிக்கையிலேயே அவர் இதனைத் தெரிவித்தார். அவர் மேலும்...
அரசியல், சமூகம் மற்றும் சுற்றுச்சூழல் செயற்பாட்டு இயக்கமாகத் தொழிற்பட்டுவரும் தமிழ்த்தேசியப் பசுமை இயக்கத்தின் தலைமைப் பணிமனை யாழ்ப்பாணத்தில் நேற்று செவ்வாய்க்கிழமை (27.03.2018) திறந்து வைக்கப்பட்டுள்ளது. அரசடி வீதி கந்தர்மடத்தில் அமைந்துள்ள இந்தப் பணிமனையை வடக்கு முதலமைச்சர் க.வி.விக்னேஸ்வரன் அவர்கள் சம்பிரதாயபூர்வமாகத் திறந்து வைத்துள்ளார். தமிழ்த்தேசியப் பசுமை இயக்கத்தின் தலைவரும் வடமாகாணசபை உறுப்பினருமான பொ.ஐங்கரநேசன் அவர்களின் தலைமையில்...
சிதைக்கப்பட்ட மற்றும் கிழிந்த நாணயத்தாள்களை எதிர்வரும் 31 ஆம் திகதிக்கு முன்னர் அருகிலுள்ள வங்கிக் கிளைகளில் மாற்றி கொள்ளுமாறு இலங்கை மத்திய வங்கி அறிவித்துள்ளது. எதிர்வரும் 31 ஆம் திகதிக்கு முன்னர் இவ்வாறான நாணயத்தாள்களை வைத்திருப்பது தண்டனைக்குரிய குற்றம் என்றும் மத்திய வங்கி தெரிவித்துள்ளது. நாணயத்தாள்களை வேண்டுமென்றே சேதப்படுத்தல் 1949 ஆம் ஆண்டு இலக்க 58...
கடந்த ஆண்டு கல்விப் பொதுத் தராதரப் பத்திர சாதாரண தரப் பரீட்சையின் பெறுபேறுகளை இறுவெட்டுகளில் வெளியிடவுள்ளதாக பரீட்சைகள் திணைக்களம் அறிவித்துள்ளது. இம்முறை பரீட்சைப் பெறுபேறுகளை இறுவெட்டுகளிலேயே வலயக் கல்விப் பணிப்பாளர்களுக்கு வழங்குவதற்கு ஏற்ற ஒழுங்குகள் மேற்கொள்ளப்பட்டுள்ளதாக பரீட்சைகள் ஆணையாளர் நாயகம் பி.சனத் பூஜித் தெரிவித்துள்ளார். பரீட்சைப் பெறுபேறுகளை திணைக்களத்தின் இணையத்தளத்தில் சேர்க்கப்படும். அதேவேளை கொழும்பில் உள்ள...
யுத்தம் நடைபெற்ற காலத்தில் இலங்கையின் முன்னாள் ஜனாதிபதிகள் பயன்படுத்திய அதிக விலை மதிப்பான குண்டு துளைக்காத ஆடம்பர கார்கள், ஜீப்கள் உட்பட 8 வாகனங்கள், விடுதலைப் புலிகளின் வேலின் என்ற கப்பல் என்பன நேற்று நீர்கொழும்புக்கு அருகில் மேற்கு திசையில் உள்ள ஆழ்கடலில் மூழ்கடித்து அழிக்கப்பட்டதாக கடற்படையினர் தெரிவித்துள்ளனர். வாகனங்களில் பொருத்தப்பட்டிருந்த தொடர்பாடல் கருவிகள் உட்பட...
மன்னார், ‘லங்கா சதொச’ விற்பனை நிலைய வளாகத்தில் அகழ்வு செய்யப்பட்டு விற்பனை செய்யப்பட்ட மண்ணில் மனித எலும்புகள் என, சந்தேகிக்கப்படும் எலும்புத்துண்டுகள் மீட்கப்பட்டுள்ளன. மன்னார் நகர நுழைவாயில் பகுதியில் ஏற்கனவே இயங்கி வந்த ‘லங்கா சதொச’ விற்பனை நிலையம் அண்மையில் முழுமையாக உடைக்கப்பட்டு புதிய கட்டடம் அமைக்கும் பணி இடம்பெற்று வருகின்றது. இந்நிலையில் குறித்த கட்டடம்...
நேற்றயதினம் தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியினரால் அனுப்பிவைக்கப்பட் செய்தியறிக்கை... தமிழ்த்தேசியக் கூட்டமைப்பு தமிழ்த் தேசியத்துக்கு எதிராக செயற்பட்டுவருவதோடு பதவிகளுக்காக இனப்படுகொலையாளிகளுடன் இணைந்து தமிழினத்திற்கு துரோகமிழைத்து வருகின்றது என்பதை நாம் பல்வேறு தடவைகள் சுட்டிக்காட்டி வந்துள்ளோம். அந்த வகையில் இன்றைய தினமும் இவர்களின் உண்மை முகத்தை துகிலுரித்து காண்பிப்பதற்காக தந்திரோபாய நடவடிக்கையாக யாழ் மாநகரசபை மற்றும் சாவகச்சேரி...
யாழ். மாநகர சபை மேயரைத் தெரிவு செய்வதற்காக இரகசிய வாக்கெடுப்பு இன்று நடைபெற்றது. தமிழரசுக் கட்சி சார்பில் ஆர்னோல்டும் தமிழ்த் தேசிய மக்கள் முன்னணி சார்பில் மணிவண்ணனும் ஈழ மக்கள் ஜனநாயகக் கட்சி சார்பில் றெமீடியஸும் மேயர் வேட்பாளர்களாக நிறுத்தப்பட்டுள்ள நிலையிலேயே இரகசிய வாக்கெடுப்பு இடம் பெற்றது. இரகசிய வாக்கெடுப்பு நடத்துவதா இல்லை பகிரங்க வாக்கெடுப்பு...
கிரிக்கெட்டில் ஆஸியின் மோசமான செயல் ; ஐ.சி.சி.யின் அதிரடித் தீர்ப்பு ; பதவி விலகினர் ஸ்மித், வோர்னர்
கிரிக்கெட் வரலாற்றில் அவுஸ்திரேலிய அணி தனது மோசமான செயலை வெளிக்காட்டியுள்ளதால் அவ்வணியின் தலைவர் ஸ்மித், உபதலைவர் வோர்னர் ஆகியோர் பதவியிலிருந்து விலகியுள்ளதுடன் அணித் தலைவருக்கு அபராதமும் போட்டித் தடையும் மற்றைய வீரரான போன்கிராப்ட்டிற்கு அபராதம் விதிக்கப்பட்டுள்ளது. தென்னாபிரிக்காவுக்கு எதிரான டெஸ்ட் போட்டியின் போது பந்தை சேதப்படுத்திய குற்றச்சாட்டிற்கே இவ்வாறு அபராதமும் தடையும் மேற்கண்ட வீரர்களுக்கு விதிக்கப்பட்டுள்ளது....
பட்டதாரிகளுக்கு எதிர்வரும் ஜுலை மாதத்திற்குள் வேலை வழங்காவிடின் நாடு தழுவிய ரீதியில் போராட்டத்தினை முன்னெடுக்கப்போவதாக, உயர் தேசிய கணக்கியல் டிப்ளோமா பட்டதாரிகளின் தொழிற்சங்கத்தின் பொதுச்செயலாளர் எம்.குஷையின் முபாரக் தெரிவித்துள்ளார். நேற்று (ஞாயிற்றுக்கிழமை) காலை சாய்ந்தமருது பகுதியில் இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துக்கொண்டு உரையாற்றும் போதே அவர் இதனைக் குறிப்பிட்டார். இந்த நாட்டில் நல்லாட்சி அரசாங்கம் ஆட்சிக்கு...
யாழ்ப்பாணம் – காங்கேசந்துறை பிரதான வீதி, முட்டாசுக் கடை சந்தியில் அமைந்துள்ள கடை ஒன்றின் மீது பெற்றோல் குண்டு தாக்குதல் மேற்கொள்ளப்பட்டுள்ளது. நேற்று (ஞாயிற்றுக்கிழமை) மாலை மோட்டார் சைக்கிளில் வந்த இனந்தெரியாதவர்கள் குறித்த கடை மீது பெற்றோல் குண்டு தாக்குதல் மற்றும் கற்களை வீசித் தாக்கிவிட்டு தப்பிச்சென்றுள்ளனர். இதனால் குறித்த கடையின் கண்ணாடிகள் நொறுங்கியுள்ளதுடன், பெற்றோல்...
இலகு தமிழ்ப் பாவனை என்ற பெயரில் தமிழ் மொழியை சீரழிக்கும் செயற்பாடுகள் மிகவும் கண்டிக்கத்தக்கவை என வடக்கு மாகாண முதலமைச்சர் சீ.வீ.விக்னேஸ்வரன் தெரிவித்துள்ளார். அத்துடன் இன்றைய இளைய தலைமுறையினரில் கூடுதலானவர்கள் இலக்கிய உணர்வு குன்றியவர்களாகவே உள்ளதாக அவர் தெரிவித்தார். வடக்கு மாகாணத்தின் 2017 ஆம் ஆண்டிற்கான முதலமைச்சர் விருது வழங்கும் விழா நேற்று (ஞாயிற்றுக்கிமை) யாழ்.நல்லூர்...
தமிழரசுக்கட்சியின் பத்திரிகையாக வெளியாகியுள்ள புதிய சுதந்திரன் தொடர்பில் பங்காளிக்கட்சிகள் தமது கடும் அதிருப்தியை வெளியிட்டுள்ளன. மேலும், தமிழரசுக்கட்சியின் சில செயற்பாடுகள் காரணமாக, தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் ஒற்றுமையை கேள்விக்குட்படுத்தும் வகையில் அப்பத்திரிகை அமைந்துள்ளதாகவும் அவர்கள் தெரிவித்துள்ளனர். அத்துடன், சிலரின் தனிப்பட்ட விருப்பு, வெறுப்புக்களுக்கு ஏற்ப அந்தப் பத்திரிகை வெளியாகியுள்ளது எனத் தெரிவித்துள்ள அவர்கள், சர்வதேச சமூகத்துடனான...
முல்லைத்தீவின் ஆழ்கடல் பிரதேசம் வழியாக அரியவகை இராட்சதப் பறவை ஒன்று பறந்து சென்றுள்ளது. கடற்கரையில் இருந்து சுமார் 600 மீற்றர் தொலைவில் நேற்று (ஞாயிற்றுக்கிழமை) தென்பட்ட இந்த இராட்சதப் பறவை, வட – கிழக்கு கடல் வழியாக ஆழ்கடல் நோக்கிப் பறந்து சென்று மறைந்துள்ளதாக மீனவர்கள் தெரிவிக்கின்றனர். கடந்த காலங்களில் முல்லைத்தீவுப் பெருங்கடலில் ஏற்பட்ட பல்வேறு...
உடையார்கட்டு குளத்தில் இருந்து இராணுவப் பண்ணைகளுக்கு பாரிய இயந்திரங்கள் மூலம் இராணுவத்தினர் நீர் இறைப்பதற்கு எதிர்ப்புத் தெரிவித்து கவனயீர்ப்பு போராட்டம் ஒன்று முன்னெடுக்கப்பட்டது. உடையார்கட்டு பொதுநோக்கு மண்டபத்தில் நேற்று (ஞாயிற்றுக்கிழமை) ஒன்று கூடிய மக்கள் பதாகைகளுடன் பரந்தன்-முல்லைத்தீவு வீதிவரை சென்று வீதியின் கரையாக நின்று ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். பின்னர் அங்கிருந்து உடையார்கட்டுக் குளத்தில் நீர் இறைக்கும்...
யாழ். மாநகர சபையின் முதலாவது அமர்வு உள்ளூராட்சி ஆணையாளர் பற்றிக் நிரஞ்சன் தலைமையில் பலத்த எதிர்பார்ப்புகளுக்கு மத்தியில் இன்று (திங்கட்கிழமை) ஆரம்பமாகியுள்ளது. மாநகர சபையின் மாநாட்டு மண்டபத்தில் ஆரம்பமாகியுள்ள அமர்வின் முதல் அங்கமாக மாநகர மேயர் மற்றும் துணை மேயர் தெரிவுகள் இடம்பெறவுள்ள நிலையில், அதற்கான வாக்கெடுப்புகள் ஆரம்பமாகவுள்ளன. கடந்த பெப்ரவரி மாதம் 10ஆம் திகதி...
இன்றைய அரசியல் கலாசாரத்தில் ஒடுக்கப்பட்டவர்களாக உருமாறி வரும் தமிழ் சமூகம் கல்வி அறிவிலும் பின்தங்குவார்களாயின் எமது இனத்தின் எதிர்காலம் கேள்விக்குறியாகும் என வடமாகாண முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரன் தெரிவித்துள்ளார். இளைஞர்களின் எதிர்காலத்திற்கான வழிகாட்டி நூல் வெளியீட்டு விழா யாழ். வீரசிங்கம் மண்டபத்தில் நேற்று (வெள்ளிக்கிழமை) நடைபெற்றது. குறித்த நிகழ்வில் பிரதமர அதிதியாகக் கலந்துக் கொண்டு உரையாற்றுகையிலேயே அவர்...
தந்தையுடன் இணைந்து வாழ வழியமைக்குமாறு கோரி அரசியல் கைதியான சச்சிதானந்தம் ஆனந்தசுதாகரின் பிள்ளைகள் கொழும்பிற்கு சென்றுள்ளனர். கொழும்பிற்கு சென்றுள்ள அவர்கள் இன்று (சனிக்கிழமை) வடமாகாண ஆளுநரை சந்தித்து கலந்துரையாடியுள்ளனர். ஆனந்தசுதாகரின் விடுதலைக்காக பல்வேறுபட்ட தரப்பினர் ஊடாக முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்ற நிலையில், தந்தையை மீட்கும் முயற்சியில் அவரது பிள்ளைகள் நம்பிக்கையுடன் களமிறங்கியுள்ளனர். ஆயுள் தண்டனை விதிக்கப்பட்ட...
Loading posts...
All posts loaded
No more posts
