- Wednesday
- May 13th, 2026
பாசையூர் அந்தோனியார் கோவில் பகுதியில் இரு இளைஞர் குழுக்களுக்கிடையில் இடம்பெற்ற மோதல் காரணமாக அந்தப்பகுதியில் பதற்றம் ஏற்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. இந்நிலையில் குறித்த சம்பவத்தையடுத்து அங்கு பொலிஸார் மற்றும் விசேட படையினர் வரவழைக்கப்பட்ட நிலையில் நிலைமை சுமூகமடைந்துள்ளது பாசையூர் இளைஞர்களுக்கும் ஈச்சமோட்டை இளைஞர்களுக்கும் இடையில் இடம்பெற்ற இந்த மோதல் சம்பவத்தில் நால்வர் படுகாயமடைந்துள்ள நிலையில் யாழ். போதனா...
புளியம்பொக்கனை ஆலய வளாகத்தில் பாடசாலை மாணவன் மீது கத்திக் குத்து தாக்குதல் மேற்கொள்ளப்பட்டுள்ளது. இந்நிலையில் தாக்குதலை மேற்கொண்டவர்கள் தப்பியோடியுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. கிளிநொச்சி, புளியம்பொக்கனை நாகதம்பிரான் ஆலயத்தின் வருடாந்த பொங்கல் உற்வசத்திற்கு வருகை தந்திருந்த கிளிநொச்சி பிரபல பாடசாலை ஒன்றின் மாணவனே கடந்த வெள்ளிக்கிழமை கத்தி குத்துக்கு இலக்காகியுள்ளார். எனினும் மாணவன் மீது தாக்குதல் நடத்தியவர்களை பொலிஸாருக்கு...
பிரதமர் ரணில் விக்ரமசிங்கவிற்கு எதிரான நம்பிக்கையில்லா பிரேரணை தொடர்பில் ஈழ மக்கள் புரட்சிகர விடுதலை முன்னணி சில நிபந்தனைகளை விதித்துள்ளது. அக்கட்சியின் தலைவர் சுரேஸ் பிரேமச்சந்திரன், பிரதமர் ரணில் விக்ரமசிங்கவிற்கு சில கோரிக்கைகளை முன்வைத்து கடிதம் அனுப்பியுள்ளார். குறித்த கோரிக்கைகளுக்கு கிடைக்கப்பெறும் பதில்களை பொறுத்தே நம்பிக்கையில்லா பிரேணையை ஆதரிப்பதா எதிர்ப்பதா என்பது குறித்து தீர்மானிக்கப்படுமென சுரேஸ்...
வடக்கின் பாரம்பரிய உணவகமான “அம்மாச்சி” உணவகம் நேற்று (ஞாயிற்றுக்கிழமை) யாழ்ப்பாணம் கீரிமலையில் திறந்துவைக்கப்பட்டுள்ளது. இதனை நல்லிணக்க செயலணியின் தலைவி சந்திரிக்கா பண்டாரநாயக்க குமாரதுங்க திறந்து வைத்தார். வடக்கு மாகாண விவசாய அமைச்சினால் வட. மாகாணத்தில் சகல பகுதிகளிலும் “அம்மாச்சி” உணவகம் திறக்கப்பட்டுள்ளது. அந்தவகையில் கீரிமலை நகுலேஸ்வரம் ஆலயத்தை அண்மித்த பகுதியில் அமைக்கப்பட்ட அம்மாச்சி உணவகமே நேற்றையதினம்...
பிரதமருக்கு எதிரான நம்பிக்கையில்லாப் பிரேரணை, தமிழ் மக்களுக்கு ஏதேனும் நன்மையைப் பெற்றுக் கொடுக்க வேண்டும் என வட மாகாண முதலமைச்சர் சீ.வி.விக்னேஸ்வரன் தெரிவித்துள்ளார். வாராந்த கேள்விகளுக்கு பதிலளிக்கும், அறிக்கையின் ஊடாகவே அவர் இந்த விடயத்தினை குறிப்பிட்டுள்ளார். இதில் அவர் மேலும் குறிப்பிட்டுள்ளதாவது, “தமிழ் மக்களுக்கு ஏதேனும் நன்மையைப் பெற்றுக் கொடுப்பதற்கு ஏற்றவாரே தமிழ் தேசிய கூட்டமைப்பின்...
ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் பேரவையின் பக்க அமர்வொன்றில் இலங்கை கடற்படை அதிகாரிகளின் குற்றச்சாட்டை மறுதலித்து தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியின் தலைவர் கஜேந்திரகுமார் பொன்னம்பலத்தினால் கொடுக்கப்பட்ட விளக்கத்தைத் திரிவுபடுத்தி செய்திகளை வெளியிட்டு சில தரப்புக்கள் குறுகிய அரசியல் இலாபம் தேட முயல்கின்றன என தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியின் பொதுச் செயலாளர் செல்வராஜா கஜேந்திரன்...
யாழ்ப்பாணப் பல்கலைக்கழக மாணவர்கள் இருவர் துப்பாக்கிச் சூட்டில் கொல்லப்பட்ட சம்பவம் தொடர்பான வழக்கின் சந்தேகநபர்களான 5 பொலிஸ் உத்தியோகத்தர்களும் மீளவும் சேவையில் இணைக்கப்பட்டுள்ளனர். 5 பொலிஸாரும் சேவையில் மீள இணைக்கப்பட்டதனையடுத்து அவர்களின் பிணை நிபந்தனைகளில் ஒன்றை இலகுபடுத்தப்படுத்துமாறு முன்வைக்கப்பட்ட விண்ணப்பத்துக்கு யாழ்ப்பாணம் மேல் நீதிமன்றம் நேற்று முன்தினம் (27) அனுமதியளித்தது. யாழ்ப்பாணம் நீதிவான் நீதிமன்றில் இந்த...
அரசியல் தண்டனைக் கைதி சச்சிதானந்தன் ஆனந்தசுதாகருக்கு பொது மன்னிப்பளிப்பது தொடர்பில் உரிய நடவடிக்கையை முன்னெடுப்பதாக அவரது இரண்டு பிள்ளைகளிடமும் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன உறுதியளித்தார். ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவை இன்று காலை ஆனந்தசுதாகரின் புதல்வனும் புதல்வியும் சந்தித்து கலந்துரையாடிய போதே அவர் இந்த உறுதிமொழியை வழங்கினார்.
நள்ளிரவு வெளியாகியுள்ள கல்விப் பொதுத்தராதர சாதாரணதரப் பரீட்சையில் தமிழ்மொழி மூலம் தோற்றிய பரீட்சார்த்திகளுள் அகில இலங்கை ரீதியில் முதலிடத்ததை யாழ் மாணவி பெற்றுள்ளார். யாழ். வேம்படி மகளிர் கல்லூரி மாணவி மிருனி சுரேஷ்குமார் தமிழ் மொழி மூலம் தோற்றிய பரீட்சார்த்திகளில் அகில இலங்கையில் முதலிடம் பெற்றுள்ளார். கடந்த 2017 ஆம் ஆண்டு இடம்பெற்ற கல்விப் பொதுத்...
யுத்தத்திற்கு பின்னர் யாழ்ப்பாணத்தின் கல்வி செயற்பாடுகள் முற்றாக வீழ்ச்சியடைந்துள்ளது. இதனால் அதனை மீண்டும் கட்டியெழுப்பும் வகையில் 10 வருட செயற்திட்டம் ஒன்று முன்னெடுக்கவுள்ளதாக பிரதமர் ரணில் விக்ரமசிங்க தெரிவித்துள்ளார். அலரிமாளிகையில் நேற்று (புதன்கிழமை) இடம்பெற்ற வட மாகாணத்திற்கு புதிதாக நியமிக்கப்பட்ட ஆசிரியர்களுக்கான நியமனக்கடிதங்களை வழங்கி வைக்கும் நிகழ்வில் உரையாற்றும் போதே அவர் இதனைக் குறிப்பிட்டுள்ளார். தொடர்ந்தும்...
இளையவர்களின் விவாதத்திறனை மேம்படுத்தும் நோக்கில் யாழ்ப்பாணத் தமிழ்ச் சங்கம் விவாதச்சுற்றுப்போட்டியொன்றை நடாத்தவுள்ளது. பாடசாலை மாணவர்கள் மற்றும் பாடசாலை கல்வியை நிறைவு செய்த 35 வயதுக்குட்பட்ட இளையவர்கள்(திறிந்த பிரிவு) என இரு பிரிவுகளாக இவ் விவாதச் சுற்றுப்போட்டி நடைபெறவுள்ளது. பாடசாலை மாணவர்களுக்கான போட்டி யாழ்.மாவட்ட பாடசாலைகளுக்கிடையில் மட்டுப்படுத்தப்பட்டுள்ளதுடன் திறந்த பிரிவு போட்டிகள் நாடாளவிய ரீதியில் நடாத்தப்படவுள்ளன. திறந்த...
காங்கேசன்துறை துறைமுகத்தின் அபிவிருத்திப் பணிகள் முன்னெடுக்கப்படவுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது. இது தொடர்பாக அமைச்சர் மகிந்த சமரசிங்க சமர்ப்பித்த ஆவணங்களுக்கு அமைச்சரவை நேற்று (புதன்கிழமை) அங்கீகாரம் வழங்கியுள்ளது. அரசாங்கத்தின் அபிவிருத்திக் கொள்கைக் கட்டமைப்பிற்கு அமைவாக, வடக்கின் பொருளாதார நுழைவாயில் வலயமாக அபிவிருத்தி செய்யும் திட்டத்தின் கீழ் காங்கேசன்துறை துறைமுகம் அபிவிருத்தி செய்யப்படவுள்ளது. இதன்படி இந்திய அரசாங்கம் வழங்கியுள்ள நிதியைப்...
குற்றம் செய்தவர் எவராக இருந்தாலும் ரணில் விக்ரமசிங்க பாரபட்சம் வழங்கவோ அல்லது காப்பாற்றவோ மாட்டார் என அரசாங்கத்தின் சிரேஷ்ட அமைச்சர் ராஜித சேனாரத்ன தெரிவித்துள்ளார். அரசாங்க தகவல் திணைக்கள கேட்போர் கூடத்தில் நேற்று (புதன்கிழமை) இடம்பெற்ற அமைச்சரவை முடிவுகளை அறிவிக்கும் செய்தியாளர் சந்திப்பில், ஊடகவியலாளர் ஒருவர் கேட்ட கேள்விக்கு பதில் அளிக்கும் போதே அவர் இதனைக்...
தமிழ் அரசியல் கைதியான ஆனந்த சுதாகரனை விடுவிக்குமாறு வலியுறுத்தி, தலைநகர் கொழும்பில் ஆர்ப்பாட்டமும் கையெழுத்து வேட்டையும் இடம்பெற்றது. நேற்று (புதன்கிழமை) நவோதயா அமைப்பின் ஏற்பாட்டில் கோட்டை ரயில் நிலையத்திற்கு முன்னால், இனம், மதம், மொழிகளை கடந்து திரண்ட மக்கள் ஆனந்த சுதாகரனை விடுவிக்குமாறு கோரிய பதாதைகளை தாங்கியவாறு ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். அத்தோடு, ஜனாதிபதிக்கு கருணை மனு...
இலங்கையில் ஃபேஸ்புக் உள்ளிட்ட சமூக வலைத்தளங்கள் முடக்கப்பட்டமைக்கு சர்வதேச அமைப்புகள் பாராட்டு தெரிவித்ததாக ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தெரிவித்துள்ளார். கண்டியில் அண்மையில் கட்டவிழ்த்துவிடப்பட்ட இனங்களுக்கு இடையிலான மோதலை தொடர்ந்து, வெறுப்பூட்டும் பிரசாரங்களை தவிர்க்கும் வகையில் சமூக வலைத்தளங்கள் முடக்கப்பட்டிருந்தன. கொழும்பு தாமரை தடாக அரங்கில் நடைபெற்ற பாத்திமா முஸ்லிம் மகளிர் கல்லூரியின் நூற்றாண்டு விழா நிகழ்வில்...
“உள்ளூராட்சி சபைகளில் ஆட்சி அமைப்பதற்காக தமிழ் தேசியக் கூட்டமைப்பு, ஈ.பி.டி.பியின் ஆதரவைப் பெற்றுக் கொண்டால், அது பதவிகளுக்காக – சுயநலங்களுக்காக கொள்கைகளைக் கைவிட்டதாகவே கருதப்படும்” இவ்வாறு வடக்கு மாகாண முதலமைச்சர் நீதியரசர் க.வி.விக்னேஸ்வரன் தெரிவித்தார். யாழ்ப்பாணம் கந்தர்மடம், அரசடி வீதியில் அமைந்துள்ள தமிழ் தேசிய பசுமை இயக்கத்தின் அலுவலகம் நேற்று முதலமைச்சரால் திறந்து வைக்கப்பட்டது. இந்த...
யாழ்.பல்கலைக்கழகத்தின் கல்வி சாரா ஊழியர்களது போராட்டத்தை முடக்க நிர்வாகம் எடுத்துவருகின்ற சதி முயற்சிகள் சர்ச்சைகளை தோற்றுவித்துள்ளது. குறிப்பாக மின் விநியோகம் மற்றும் குடிநீர் விநியோகத்தை வெளியாட்களை கொண்டு யாழ்.பல்கலைக்கழக நிர்வாகம் இயக்க தொடங்கியுள்ளது. இதனிடையே தமக்கான ஊதியத்தை பெற்றுக்கொள்ள துணைவேந்தர்,பீடாதிபதிகள் உள்ளிட்ட கல்வி சமூகம் பல்கலைக்கழக நிதியாளரை அச்சுறுத்தியமை தொடர்பில் விசாரணைகள் கோரப்பட்டுள்ளது. கல்வி சாரா...
முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ, பாதுகாப்பு அமைச்சின் முன்னாள் செயலாளர் கோட்டாபய ராஜபக்ஷ மற்றும் முன்னாள் இராணுவத்தளபதி சரத் பொன்சேகா ஆகிய மூவரையும் படுகொலைச் செய்வதற்கு சூழ்ச்சிகளை மேற்கொண்டனர் என்று குற்றஞ்சாட்டப்பட்டிருந்த தமிழீழ விடுதலைப் புலிகள் அமைப்பின் முன்னாள் உறுப்பினர்கள் இவருவர் விடுவிக்கப்பட்டனர். அவ்விருவருக்கு எதிரான வழக்கு, கொழும்பு மேல் நீதிமன்ற நீதிபதி சம்பத் அபேகோன்...
2017ம் ஆண்டுக்கான கல்விப் பொதுத்தராதர சாதாரண தரப் பரீட்சையின் பெறுபேறுகளை இன்று வௌியிடுவதாக பரீட்சைகள் திணைக்களம் கூறியுள்ளது. இன்று நள்ளிரவுக்குள் பரீட்சை பெறுபேறுகளை இணையத்தில் வௌியிடுவதாக பரீட்சைகள் ஆணையாளர் நாயகம் சனத் பூஜித கூறினார். இம்முறை கல்விப் பொதுத்தராதர சாதாரண தரப் பரீட்சைக்காக 06 இலட்சத்து 88,573 மாணவர்கள் தோற்றியிருந்தனர். இதேவேளை இந்தப் பரீட்சைக்கு தோற்றிய...
வட.மாகாண தொண்டர் ஆசிரியர்களது முற்றுகைக்குள் இருந்து வடமாகாண சபை உறுப்பினர்கள் அனைவரும் ஈழ மக்கள் ஜனநாயகக் கட்சியின் செயலாளர் நாயகம் டக்ளஸ் தேவானந்தாவின் முயற்சியால் விடுவிக்கப்பட்டுள்ளனர். குறித்த சம்பவம் தொடர்பில் தெரியவருவதாவது, நிரந்த நியமனத்தை வழங்குமாறும், நிரந்தரமாக்கலுக்கான நேர்முகத் தேர்வுத் திகதியை உறுதிப்படுத்தி தெரிவிக்குமாறும் கோரி நேற்று போராட்டத்தை மேற்கொண்டனர். இதன்போது தொண்டராசிரியர்கள் திடீரென வட.மாகாணசபையை...
Loading posts...
All posts loaded
No more posts
