Ad Widget

நம்பிக்கையில்லா பிரேரணை தொடர்பில் ஈ.பி.ஆர்.எல்.எப். நிபந்தனை!

பிரதமர் ரணில் விக்ரமசிங்கவிற்கு எதிரான நம்பிக்கையில்லா பிரேரணை தொடர்பில் ஈழ மக்கள் புரட்சிகர விடுதலை முன்னணி சில நிபந்தனைகளை விதித்துள்ளது.

அக்கட்சியின் தலைவர் சுரேஸ் பிரேமச்சந்திரன், பிரதமர் ரணில் விக்ரமசிங்கவிற்கு சில கோரிக்கைகளை முன்வைத்து கடிதம் அனுப்பியுள்ளார். குறித்த கோரிக்கைகளுக்கு கிடைக்கப்பெறும் பதில்களை பொறுத்தே நம்பிக்கையில்லா பிரேணையை ஆதரிப்பதா எதிர்ப்பதா என்பது குறித்து தீர்மானிக்கப்படுமென சுரேஸ் குறிப்பிட்டுள்ளார்.

தொல்பொருள் திணைக்களம், வனவிலங்குகள் திணைக்களம், மகாவலி அதிகாரசபை போன்ற அரச நிறுவனங்களால் வடக்கு கிழக்கில் காணிகள் அபகரிக்கப்படுகின்றன. இச்செயற்பாடு தடுத்து நிறுத்தப்பட வேண்டுமென குறித்த கடிதத்தில் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.

அத்தோடு, பயங்கரவாத தடைச் சட்டத்தின் கீழ் தடுத்து வைக்கப்பட்டுள்ள தமிழ் அரசியல் கைதிகளுக்கு அரசாங்கம் பொது மன்னிப்பு வழங்க வேண்டுமென்றும் கோரப்பட்டுள்ளது.

இக்கோரிக்கைகளுக்கு பிரதமரிடமிருந்து கிடைக்கப்பெறும் பதில்களைப் பொறுத்தே நம்பிக்கையில்லா பிரேரணை குறித்து தீர்மானிக்கப்படுமென சுரேஸ் பிரேமச்சந்திரன் மேலும் தெரிவித்தார்.

பிரதமருக்கு எதிரான நம்பிக்கையில்லா பிரேரணை நாளை மறுதினம் நாடாளுமன்றில் விவாதத்திற்கு எடுத்துக்கொள்ளப்படவுள்ளமை குறிப்பிடத்தக்கது.

Related Posts