யாழ்ப்பாணத்தில் மீண்டும் விஷேட அதிரடிப்படை சோதனை!!

சமூக விரோத செயற்பாடுகளை கட்டுப்படுத்தும் நோக்குடன் குடாநாட்டில் விஷேட அதிரடிப்படை களமிறக்கப்பட்டு சோதனை நடவடிக்கைககள் முன்னெடுக்கப்பட்டுள்ளன. வீதிகளில் மோட்டார் சைக்கிள்களில் வலம்வரும் விசேட அதிரடிப்படையினர் வீதிச் சோதனை நடவடிக்கைகளை மேற்கொள்வதுடன் வீதிகளில் செல்லும் வாகனங்களையும் மக்களையும் வழிமறித்து கடுமையான சோதனைக்குட்படுத்தி வருகின்றனர். இந்நிலையானது யுத்தகாலத்தில் விசேட அதிரடிப்படையினர் வீதிச் சோதனைகளை மேற்கொண்டு மக்களை அச்சத்தில் உறையவைத்தது...

கைதட்டியதற்கு மன்னிப்புக்கோரி கடிதம் வழங்குமாறு ஊழியர்களுக்கு அறிவுறுத்தல்

கடந்த திங்கட்கிழமை வீரசிங்கம் மண்டபத்தில் நடைபெற்ற நிகழ்வில் அமைச்சர் விஜயகலாவின் உரையை வரவேற்று கைதட்டிய மற்றும் விசிலடித்து ஆரவாரித்தாக குற்றஞ்சாட்டப்பட்டுள்ள ஆண் அரச பணியாளர்களை மன்னிப்புக் கோரும் கடிதங்களை எழுதித்தருமாறு பிரதேச செயலர்களால் அறிவுறுத்தப்பட்டுள்ளது. அமைச்சர் விஜயகலா தனது உரையில் விடுதலைப் புலிகள் தெடர்பில் உரையாற்றியிருந்தார். அதன் போது வெளிவிவகார மற்றும் உள்நாட்டு அலுவல்கள் அமைச்சர்கள்,...
Ad Widget

இறப்புச் சடங்குகளில் இனிமேல் பட்டாசு கொளுத்துவது தடை? – வடக்கு மாகாண சபை

வடக்கு மாகாணத்தில் சாவுச் சடங்குகளில் பட்டாசுகள் கொளுத்துவதை தடுக்கக் கோரி பிரேரணை ஒன்று முன்மொழியப்படவுள்ளது என்று அறியவருகிறது. வடக்கு மாகாண சபையின் 126ஆவது அமர்வு எதிர்வரும் பத்தாம் திகதி இடம்பெறவுள்ளது. இந்த அமர்வில் வடக்கு மாகாண சபை உறுப்பினர் குகதாஸ் குறித்த பிரேரணையை சபையில் முன்மொழியவுள்ளார் என்று தெரிய வருகிறது. அவர் தனது பிரேரணையில், வடக்கு...

பெற்றோல், டிசல் விலைகள் உயர்வு

எரிபொருள்களின் விலை நள்ளிரவு முதல் அதிகரிக்கப்பட்டுள்ளதாக நிதி அமைச்சு அறிவித்துள்ளது. பெற்றோல் (92 ஒகரைன்) 8 ரூபாவாலும் பெற்றோல் (95 ஒக்ரைன்) 7 ரூபாவாலும் டிசல் 9 ரூபாவாலும் சுப்பர் டிசல் 10 ரூபாவாலும் அதிகரிக்கப்பட்டுள்ளது. பெற்றோல் (92 ஒக்ரைன்) 145 பெற்றோல் (95 ஒகரைன்) 155 ரூபாவாகவும் டிசல் 118 ரூபாவாகவும் சுப்பர் டிசல்...

யாழ். பல்கலைக்கழகத்திலும் கரும்புலிகள் தினம் அனுஷ்டிப்பு!

தமிழீழ விடுதலைப் புலிகளின் கரும்புலிகள் தினம் யாழ். பல்கலைக்கழகத்திலும் நேற்று (வியாழக்கிழமை) அனுஷ்டிக்கப்பட்டது. பல்கலைக்கழக வளாகத்திலுள்ள மாவீரர் நினைவிடத்தில் நேற்று மாலை 06:05 மணிக்கு இந்த நிகழ்வு இடம்பெற்றது. குறித்த நிகழ்வில் பொதுச்சுடர் ஏற்றப்பட்டு மலர்கள் தூவி அஞ்சலி செலுத்தப்பட்டது. ஜீலை-5 கரும்புலிகள் தினமான நேற்று யாழ். குடாநாட்டின் முக்கிய இடங்களில் கரும்புலி நாள் நினைவு...

பொதுமக்களுக்கு தேர்தல் திணைக்களம் முக்கிய அறிவித்தல்!

எதிர்வரும் 8 ஆம் திகதிக்கு முன்னர் வாக்காளர்கள் தமது வாக்குரிமை பத்திரத்தை பூரணப்படுத்தி கிராம சேவையாளர்களிடம் கையளிக்க வேண்டுமென தேர்தல் திணைக்களம் பொதுமக்களுக்கு அறிவுறுத்தியுள்ளது. நடைபெறவுள்ள மாகாணசபை தேர்தலின்போது தமது வாக்குரிமையை உறுதிசெய்யும் பொருட்டு குறித்த வாக்குபத்திரத்தை விரைவாக பூரணப்படுத்தி கையளிக்குமாறு தேர்தல் திணைக்களம் தெரிவித்துள்ளது. மேலும் குறிப்பிட்ட காலப்பகுதியில் வாக்காளர் பதிவேற்றில் பெயரை பதிவுசெய்ய...

பிரபாகரன் காலத்தில் மக்கள் பாதுகாப்பாக இருந்தார்கள் என்பது உலகறிந்த உண்மைதானே – முதலமைச்சர்

பிரபாகரன் காலத்தில் எம் மக்கள் பாதுகாப்பாக இருந்தார்கள் என்ற உண்மையைக் கூறுவதால் நாங்கள் எவரும் பயங்கரவாதிகள் ஆகிவிட மாட்டோம் எனத் தெரிவித்திருக்கும் வடக்கு மாகாண முதலமைச்சர் சி.வி.விக்கினேஸ்வரன் அந்த நாள் இன்று வந்திடாதோ என்று கௌரவ விஜயகலா கூறுவதால் அவர் தீவிரவாதி ஆகிவிட முடியாது. புலிகள் காலத்தில் எம் மக்கள் (யுத்தத்தில் ஏற்பட்ட பாதிப்புக்களை விட)...

வவுனியா இளைஞன் படைத்த கின்னஸ் சாதனை!!

வவுனியாவைச் சேர்ந்த 28 வயதுடைய இளைஞன், மல்ரி பிளக் (நீள் மின் இணைப்பு பொருத்தி) ஒன்றை தயாரித்து கின்னஸ் சாதனை படைத்துள்ளார். 2.914 மீற்றர் நீளமும், 0.074 மீற்றர் அகலமும், 0.050 மீற்றர் உயரமும் கொண்ட நீள் மின் இணைப்பு பொருத்தியை தயாரித்து இவர் கின்னஸ் சாதனையாளர் என்ற பட்டத்தைப் பெற்றுள்ளார். க.கணேஸ்வரன் என்ற இளைஞன்...

அராலி பகுதியில் ஆணொருவரின் சடலம் மீட்பு!

அராலி பகுதியில் ஆணொருவரின் சடலம் இன்று (வியாழக்கிழமை) காலை கண்டெடுக்கப்பட்டுள்ளதாக வட்டுக்கோட்டை பொலிஸார் தெரிவித்துள்ளனர். அராலி, மேற்கை சேர்ந்த 71 வயதான கந்தையா நாகசாமியென பொலிஸாரினால் அடையாளம் காணப்பட்டுள்ளது. சம்பவத்தில் உயிரிழந்தவர் நேற்று இரவு வீட்டிற்கு வெளியே படுத்துறங்கியுள்ளார். இந்நிலையில் இன்று காலை 6 மணியளவில் வீட்டார் வெளியே வந்து பார்த்தபோது அவர் சடலமாக காணப்பட்டுள்ளார்....

வடக்கில் குற்றச்செயல்களை கட்டுப்படுத்த 400 பொலிஸார் களத்தில்!

வடக்கில் குற்றச்செயல்கள் அதிகரித்து வருகின்றமையினால் அதனை கட்டுப்படுத்துவதற்கு 400 க்கு மேற்பட்ட பொலிஸ் அதிகாரிகள் சேவைக்காக அமர்த்தப்பட்டுள்ளதாக வடக்கு மாகாணத்தின் பிரதி பொலிஸ்மா அதிபர் ரொஷான் பெர்ணான்டோ தெரிவித்துள்ளார் வடக்கில் தலைதூக்கியுள்ள ஆவா குழுவை இதன்போது கட்டுப்படுத்துவதற்கும் நடவடிக்கை முன்னெடுக்கப்பட்டுள்ளதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார் இதற்காக வவுனியா,மன்னார், முல்லைத்தீவு மற்றும் கிளிநொச்சி ஆகிய பகுதிகளைச் சேர்ந்த 100க்கும்...

தமிழ் மக்களுக்காக பதவியை தியாகம் செய்கிறேன்: விஜயகலா மகேஸ்வரன்

தமிழ் மக்களுக்காக தமது பதவியை தியாகம் செய்ய தீர்மானித்துள்ளதாக இராஜாங்க அமைச்சர் விஜயகலா மகேஸ்வரன் தெரிவித்தார். வடக்கில் குற்றங்கள் அதிகரித்துள்ளதால் மீண்டும் விடுதலைப் புலிகள் உருவாகுவதை எதிர்பார்ப்பதாக விஜயகலா தெரிவித்த கருத்து, நாட்டில் பாரிய அதிர்வலைகளை தோற்றுவித்துள்ளது. இந்நிலையில், தமிழ் மக்களின் கௌரவத்திற்காகவும் பாதுகாப்பை உறுதிப்படுத்துவதற்காகவுமே விடுதலைப் புலிகள் தொடர்பான கருத்தை வெளிப்படுத்தியதாக தெரிவித்த விஜயகலா,...

ஐ.நா. பிரேரணையை அமுல்படுத்துவதில் அமெரிக்கா உறுதி! – சம்பந்தன்

தமிழ் மக்களின் பிரச்சினைகள் தொடர்பாக ஐ.நா.வுக்கு வழங்கப்பட்ட வாக்குறுதிகள் இவ்வருடத்திற்குள் நிறைவேற்றப்பட வேண்டுமென்பதில் அமெரிக்கா உறுதியாக உள்ளதென எதிர்க்கட்சித் தலைவரும் தமிழ் தேசியக் கூட்டமைப்பின் தலைவருமான இரா.சம்பந்தன் தெரிவித்தார். இலங்கைக்கான அமெரிக்க உயர்ஸ்தானிகராக கடமையாற்றி வந்த அதுல் கெஷாப், தனது பதவிக்காலம் நிறைவடைந்து செல்லவுள்ளார். இந்நிலையில், எதிர்க்கட்சித் தலைவரை இன்று (வியாழக்கிழமை) அவரது உத்தியோகபூர்வ இல்லத்தில்...

வாள்வெட்டுக் கும்பலின் வன்முறையில் மாணவன் உள்பட இருவர் காயம்!!

கொக்குவில் மற்றும் குப்பிளான் ஆகிய இடங்களில் நேற்றிரவு இடம்பெற்ற வாள்வெட்டுக் கும்பலின் வன்முறைகளில் காயமடைந்த மாணவன் உள்பட இருவர் வைத்தியசாலைகளில் சேர்க்கப்பட்டுள்ளனர். கொக்குவில் மேற்கு பகுதியில் வீடொன்றுக்குள் நேற்றிரவு 8 மணியளவில் புகுந்த இருவர், குடும்பத்தலைவரை கூரிய ஆயுதங்களால் தாக்கிக் காயப்படுத்திவிட்டுச் சென்றனர் என்று யாழ்ப்பாணம் பொலிஸார் தெரிவித்தனர். இலக்கத் தகடு இல்லாத மோட்டார் சைக்கிளிலில்...

விஜயகலாவின் உரைக்கு கோஷமெழுப்பியவர்கள் மீது விசாரணை!

உள்நாட்டு அலுவல்கள் அமைச்சர் கலந்து கொண்ட நிகழ்வில் அநாகரிகமாக நடந்து கொண்ட அரச ஊழியர்கள் தொடர்பில் விசாரணை செய்து அறிக்கை சமர்ப்பிக்குமாறு அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த அறிவித்தலை யாழ்.மாவட்ட அரசாங்க அதிபர் என்.வேதநாயகன், கடிதம் மூலம் நேற்று (செவ்வாய்க்கிழமை) சகல பிரதேச செயலாளர்களுக்கும் அறிவித்துள்ளார். ‘ஐனாதிபதியின் மக்கள் சேவை’ தேசிய நிகழ்ச்சித் திட்டத்தின் 8 ஆவது நிகழ்வு...

வடக்கில் வன்முறைகள் அதிகரிப்பு!- பொலிஸாரின் விடுமுறைகள் ரத்து

யாழ். மாவட்டத்தில் அண்மைக் காலமாக வன்முறைகள் அதிகரித்து வருகின்ற நிலையில், அங்கு பணியாற்றும் பொலிஸ் அதிகாரிகளின் விடுமுறைகள் ரத்து செய்யப்பட்டுள்ளன. இதற்கமைய, யாழ். மாவட்டத்தில் கடமையாற்றும் அனைத்து பொலிஸ் அதிகாரிகளுக்குமான விடுமுறைகள் இன்று (புதன்கிழமை) முதல் எதிர்வரும் 18ஆம் திகதி வரை இரத்து செய்யப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது. கடந்த சில நாட்களாக குடா நாட்டின் பல இடங்களிலும்...

வேலையற்ற விரக்தி நிலையில் பட்டதாரி இளைஞன் தற்கொலை!

தென்மராட்சிப் பகுதியில் பட்டதாரி இளைஞன் ஒருவர் சடலமாக மீட்கப்பட்டுள்ளார். பட்டதாரியான அவர் வேலையற்ற விரக்தி நிலையிலேயே உயிரை மாய்த்துக்கொண்டதாககத் தெரிவிக்கப்பட்டுள்ளது. இச்சம்பவம் நேற்று முன்தினம் (02) பகல் வேளையில் கொடிகாமம் கச்சாய் துறைமுகச் சாலையில் நடைபெற்றுள்ளது. சம்பவத்தில் அதே இடத்தைச் சேர்ந்த கிருஸ்ணபிக்ளை சத்தியசீலன் வயது (29) என்பவரே உயிரிழந்துள்ளார். இழைஞனின் இறப்புத் தொடர்பாக விசாரணைகளை...

யாழ். மாநகர சபை உறுப்பினரை பதவி நீக்கக் கோரி வழக்கு தாக்கல்!

தமிழ் தேசிய மக்கள் முன்னணியின் தேசிய அமைப்பாளர் வி.மணிவண்ணனின் யாழ்.மாநகர சபை உறுப்புரிமையை நீக்க கோரி நீதிமன்றில் வழக்கு தாக்கல் செய்யப்பட்டு உள்ளது. கொழும்பு மேன்முறையீட்டு நீதிமன்றில் நேற்று (செவ்வாய்க்கிழமை) குறித்த வழக்கு தாக்கல் செய்யப்பட்டு உள்ளது. கடந்த சில தினங்களுக்கு முன்பாக மாநகர சபை எதிர்க்கட்சி உறுப்பினர் வி.மணிவண்ணனின் முகவரியை தகவல் அறியும் உரிமை...

அதிகரிக்கும் சிறுவர் துன்புறுத்தல்கள்: 6 மாதத்தில் 4,831 முறைப்பாடுகள்

சிறுவர்கள் மீதான துன்புறுத்தல் அதிகரித்து வருவதாக தேசிய சிறுவர் பாதுகாப்பு அதிகார சபை தெரிவித்துள்ளது. வருடத்தின் 6 மாத காலத்திற்குள், துன்புறுத்தல் தொடர்பில் 4,831 முறைப்பாடுகள் கிடைத்துள்ளதாக சபையின் பணிப்பாளர் நாயகம் அனோமா சிறிவர்தன குறிப்பிட்டுள்ளார். சிறுவர்களைத் துன்புறுத்துவது தொடர்பில் 1,201 முறைப்பாடுகளும் வன்கொடுமை தொடர்பில் 581 முறைப்பாடுகளும் பதிவு செய்யப்பட்டுள்ளதாக அவர் தெரிவித்துள்ளார். கடந்த...

கட்சியிலிருந்து நீக்கப்படுவாரா விஜயகலா?

அரசியல் களத்தில் பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ள இராஜாங்க அமைச்சர் விஜயகலா மகேஸ்வரன் குறித்து, பிரதமர் ரணில் விக்ரமசிங்க முக்கிய அறிவிப்பொன்றை விடுக்கவுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. பிரதமர் நாடாளுமன்றத்தில் இன்று (புதன்கிழமை) குறித்த அறிவிப்பை வெளியிடுவார் என்றும் நம்பத்தகுந்த வட்டாரத் தகவல்கள் வெளியாகியுள்ளன. இதேவேளை, விஜயகலாவிற்கு எதிராக விசாரணைகளை மேற்கொள்வதற்கும் பிரதமர் அழைப்பு விடுத்துள்ளதாகவும் தெரிவிக்கப்படுகிறது. வடக்கில் அதிகரித்துள்ள...

நான் பதற்றத்தில் அவ்வாறு கூறிவிட்டேன்! விடுதலைப் புலிகள் மீளவும் புத்துயிர் பெற முடியாது!! – அமைச்சர் விஜயகலா பல்டி

“நான் பதற்றத்தில் அவ்வாறு கூறிவிட்டேன். விடுதலைப் புலிகள் மீளவும் புத்துயிர் பெற முடியாது. போதைப்பொருளால் ஏற்படும் அச்சுறுத்தல்களை நிறுத்தவேண்டும் என்பதே எனது நோக்கம்” இவ்வாறு மகளிர் விவகார இராஜாங்க அமைச்சர் விஜயகலா மகேஸ்வரன் இன்று பல்டி அடித்தார். பிரதி அமைச்சர் ரஞ்சன் ராமநாயக்கவுடன் தொலைபேசியில் உரையாடிய போதே அவர் இன்று இதனைத் தெரிவித்தார். பிரதி அமைச்சர்...
Loading posts...

All posts loaded

No more posts