Ad Widget

அதிகரிக்கும் சிறுவர் துன்புறுத்தல்கள்: 6 மாதத்தில் 4,831 முறைப்பாடுகள்

சிறுவர்கள் மீதான துன்புறுத்தல் அதிகரித்து வருவதாக தேசிய சிறுவர் பாதுகாப்பு அதிகார சபை தெரிவித்துள்ளது.

வருடத்தின் 6 மாத காலத்திற்குள், துன்புறுத்தல் தொடர்பில் 4,831 முறைப்பாடுகள் கிடைத்துள்ளதாக சபையின் பணிப்பாளர் நாயகம் அனோமா சிறிவர்தன குறிப்பிட்டுள்ளார்.

சிறுவர்களைத் துன்புறுத்துவது தொடர்பில் 1,201 முறைப்பாடுகளும் வன்கொடுமை தொடர்பில் 581 முறைப்பாடுகளும் பதிவு செய்யப்பட்டுள்ளதாக அவர் தெரிவித்துள்ளார்.

கடந்த வருடத்துடன் ஒப்பிடுகையில், துன்புறுத்தல்கள் தொடர்பில் பதிவுசெய்யப்பட்டுள்ள முறைப்பாடுகளின் எண்ணிக்கை அதிகரித்துள்ளதாக தேசிய சிறுவர் பாதுகாப்பு அதிகார சபை சுட்டிக்காட்டியுள்ளது.

இதனால் பெற்றோர் தமது பிள்ளைகள் தொடர்பில் அதிக கவனம் செலுத்த வேண்டும் என வலியுறுத்தப்பட்டுள்ளது.

பிள்ளைகளுக்கு 18 வயதாகும் வரை, அவர்களைப் பாதுகாப்பது பெற்றோர்களின் கடமையாகும் என தேசிய சிறுவர் பாதூப்பு அதிகார சபை குறிப்பிட்டுள்ளது.

Related Posts