Ad Widget

வவுனியா இளைஞன் படைத்த கின்னஸ் சாதனை!!

வவுனியாவைச் சேர்ந்த 28 வயதுடைய இளைஞன், மல்ரி பிளக் (நீள் மின் இணைப்பு பொருத்தி) ஒன்றை தயாரித்து கின்னஸ் சாதனை படைத்துள்ளார்.

2.914 மீற்றர் நீளமும், 0.074 மீற்றர் அகலமும், 0.050 மீற்றர் உயரமும் கொண்ட நீள் மின் இணைப்பு பொருத்தியை தயாரித்து இவர் கின்னஸ் சாதனையாளர் என்ற பட்டத்தைப் பெற்றுள்ளார்.

க.கணேஸ்வரன் என்ற இளைஞன் கடந்த பெப்ரவரி மாதம் 28 திகதியன்று வவுனியா தமிழ் மத்திய மகா வித்தியாலயத்தில் கல்லூரியின் அதிபர்,மாணவர்கள், ஊடகவியலாளர்கள் முன்னிலையில் கின்னஸ் சாதனையைப் பதிவு செய்திருந்தார்.

நில அளவைத் திணைக்களத்தைச் சேர்ந்த அரச நில அளவையாளர் பி.நிமலன் மற்றும் மின் பொறியியலாளர் கெ.ராஜ்குமார் ஆகியோரினால் இந்நிகழ்வு மேற்பார்வை செய்யப்பட்ட பின்னர் பரிசோதனைகளை மேற்கொண்டு கின்னஸ் சாதனைக்காகப் பரிந்துரைக்கப்பட்டது.

கின்னஸ் சாதனை அமைப்பினால் உத்தியோகபூர்வமாக க.கணேஸ்வரனின் உலக சாதனை அறிவிக்கப்பட்டு சான்றிதழும் அனுப்பி வைக்கப்பட்டுள்ளது.

இதேவேளை, இலங்கையில் தொழில்நுட்ப துறையில் தனிநபர் ஒருவர் செய்து காட்டிய முதலாவது சாதனையாகவும், வவுனியாவில் பதிவு செய்யப்பட்ட முதலாவது கிண்னஸ் சாதனையாகவும் இவருடைய சாதனை பதிவாகியுள்ளது.

Related Posts