- Sunday
- May 10th, 2026
யாழ்ப்பாணம் – இணுவில் பிரதேசத்தின் இரு பகுதிகளை கோண்டாவிலுடன் இணைப்பதற்கு மேற்கொள்ளப்பட்டுவரும் முயற்சிகளுக்கு எதிர்ப்புத் தெரிவித்து மௌனப் போராட்டமொன்று முன்னெடுக்கப்பட்டுள்ளது. இணுவில் கந்தசுவாமி கோவில் முன்றலில் இருந்து இன்று (திங்கட்கிழமை) காலை ஆரம்பிக்கப்பட்ட மௌன ஊர்வலம், உடுவில் பிரதேச செயலக அலுவலகத்தை சென்றடைந்து, உடுவில் பிரதேச செயலாளரிடம் மனு ஒன்றினை கையளித்தலுடன் நிறைவு பெற்றது. இதன்போது...
தமிழ் மக்கள் பேரவையின் நிகழ்வு நாளைமறுதினம்(புதன்கிழமை) யாழில் நடைபெறவுள்ள நிலையில் தமிழீழ விடுதலை புலிகளின் புலிச் சின்னத்துடன் பலருக்கும் அழைப்பு கடிதங்கள் அனுப்பி வைக்கப்பட்டுள்ளமை மக்கள் மத்தியில் பெரும் அதிர்ச்சியினை ஏற்படுத்தியுள்ளது. “மாபெரும் எழுச்சி தலைவன் வழியில் மக்கள் மேலவைத் தலைவன் கைகளைப் பலப்படுத்துவோம்“ எனப் குறிப்பிடப்பட்டு தமிழ் மக்கள் பேரவையால் புலிச் சின்னம் பொறிக்கப்பட்ட...
முதலாவது வடக்கு மாகாண சபையின் ஆயுள் காலம் நாளை மறுதினம் புதன் கிழமை நள்ளிரவுடன் முடிவுக்கு வரவுள்ளது. மாகாணசபை முதலமைச்சர், அமைச்சர்கள், உறுப்பினர்கள் உள்ளிட்ட அனைவரது பதவிகளும் முடிவுக்கு வந்துவிடும். இந்த நிலையில், தமக்குத் தொடர்ந்தும் பொலிஸ் பாதுகாப்புத் தேவை என்று தெரிவித்து மூன்று உறுப்பினர்கள் விண்ணப்பித்துள்ளனர். மாகாண சபை உறுப்பினர்களில் பொலிஸ் பாதுகாப்பை தற்போது...
யாழ். கோண்டாவில் மேற்கு உப்புமடம் சந்தியில் உள்ள வர்த்தக நிலையம் மீதும், அங்கு தரித்துநின்ற முச்சக்கரவண்டி மீதும் வாள்வெட்டு குழு தாக்குதல் மேற்கொண்டு உள்ளது. குறித்த தாக்குதல் சம்பவம் நேற்று ஞாயிற்றுக்கிழமை இரவு 7.30 மணியளவில் இரண்டு மோட்டார் சைக்கிளில் வந்த ஐந்து பேரே இத்தாக்குதலிலை மேற்கொண்டதாக தெரிவிக்கப்படுகின்றது. குறித்த தாக்குதல் சம்பவம் தொடர்பில் கோப்பாய்...
வட மாகாண அமைச்சர் அனந்தி சசிதரன் தலைமையில் ஈழத் தமிழர் சுயாட்சிக் கழகம் என்ற பெயரில் புதிய கட்சி ஒன்று உதயமாகியுள்ளது. இதன் அங்குரார்ப்பண நிகழ்வு நேற்று (ஞாயிற்றுக்கிழமை) யாழ்ப்பாணத்தில் இடம்பெற்றுள்ளது. குறித்த கட்சியின் செயலாளர் நாயகமாக வட மாகாண அமைச்சர் அனந்தி சசிதரன் செயற்படவுள்ளதாகவும் அறிவிக்கப்பட்டுள்ளது. இலங்கை தமிழரசு கட்சியின் உறுப்பினராக வட மாகாண...
தமக்கு இனந்தெரியாத நபர்களினால் தொலைபேசி ஊடாக கொலை அச்சுறுத்தல் விடுக்கப்பட்டுள்ளதாக அம்பாறை மாவட்ட காணாமல் ஆக்கப்படடோர் உறவுகளின் சங்கத் தலைவி தம்பிராசா செல்வராணி தெரிவித்துள்ளார். அம்பாறை திருக்கோவில் பிரதேசத்தில் அமைந்துள்ள காணாமல் அக்கப்பட்டோர் உறவுகளின் சங்க அலுவலகத்தில் நேற்று (ஞாயிற்றுக்கிழமை) இடம்பெற்ற ஊடகவியலாளர்கள் சந்திப்பில் கலந்து கொண்டு கருத்து வெளியிடும் போதே அவர் இந்த விடயத்தை...
விவசாயத்துறையில் தன்னிறைவு பொருளாதாரத்தை வலுப்படுத்துவதே எமது நோக்கம் என விவசாய பிரதி அமைச்சர் அங்கஜன் இராமநாதன் தெரிவித்துள்ளார். வடக்கின் விவசாய நடவடிக்கைகள் தொடர்பாக அமைச்சர் அங்கஜன் இராமநாதன் நேற்று (ஞாயிற்றுக்கிழமை) வெளியிட்டுள்ள அறிக்கையிலேயே இதனைக் குறிப்பிட்டுள்ளார். இது தொடர்பாக அவர் மேலும் தெரிவிக்கையில், “விவசாயிகளின் தேவைகளை அறிந்து உள்ளீடுகளை வழங்கி மேலதிகமான உற்பத்திகளின் மூலம் ஏற்றுமதிகளை...
அண்மையில் விடுவிக்கப்பட்ட முள்ளிக்குளம் கிராமத்திற்கு செல்லும் பிரதான வீதியை கடற்படையினர் முடியதால் கடற்படையினருக்கும், முள்ளிக்குளம் கிராம மக்களுக்கும் இடையில் முறுகல் நிலை ஏற்பட்டுள்ளது. கடற்படை முகாமினூடாக முள்ளிக்குளம் கிராமத்திற்கு செல்லும் பிரதான வீதியை நேற்று (ஞாயிற்றுக்கிழமை) கடற்படையினர் மூடியதாலேயே இருதரப்பினருக்கும் இடையில் முறுகல்நிலை ஏற்பட்டுள்ளது. இச்சம்பவம் தொடர்பாக முள்ளிக்குளம் பங்குத்தந்தை லோரான்ஸ் லியோ தெரிவிக்கையில், “முள்ளிக்குளம்...
கொடூரமான முறையில் ஆயுதரீதியாக முன்னெடுத்த யுத்தத்தை நிறுத்திக்கொண்ட அரசு இப்போது யுத்தத்தை வேறு வடிவங்களில் முன்னெடுக்க ஆரம்பித்திருக்கிறது. சூழல் பாதுகாப்பு என்ற போர்வையில் அரசு சத்தம் இல்லாத யுத்தம் ஒன்றை எம்மீது தொடுத்திருக்கிறது. வனங்களைப் பாதுகாத்தல், வன ஜீவராசிகளைப் பாதுகாத்தல் என்றுசொல்லி ஏராளமாக எமது நிலங்களைக் கையகப்படுத்திவருகிறது. இந்த நிலஅபகரிப்பைத் தடுக்கத்தவறினால் அமெரிக்காவில் அதன் பூர்வகுடிகளான...
விடுதலைப் புலிகளின் தலைவர் வேலுப்பிள்ளைப் பிரபாகரனின் படத்துடன் பதிவிடப்பட்ட வாழ்த்துச் செய்தியை லைக், ஷேர் செய்தார் என்ற குற்றச்சாட்டில் கைதான தமிழ் இளைஞர் ஒருவரை 10 மாதங்களுக்குப் பிறகு நேற்று (10) புதன்கிழமை கொழும்பு மேல் நீதிமன்றம் பிணையில் செல்ல அனுமதித்தது. சர்ச்சைக்குரிய பேஸ்புக் பதிவொன்றை மையப்படுத்தி இரத்தினபுரியைச் சேர்ந்த இரண்டு இளைஞர்களை பயங்கரவாதத் தடுப்புப்...
கனடா நாடு கஞ்சா பயன்பாட்டை தற்போது சட்டபூர்வமாக்கியுள்ளது. அக்டோபர் 17, 2018 அன்றுமுதல் கஞ்சா என்று தமிழில் அழைக்கப்படும் கன்னாபிசு (Cannabis) என்னும் வயப்பொருளை அகவை 19 ஐத் தாண்டிய யாரும் உட்கொள்வது சட்டப்படி குற்றமில்லை. இதனால் உலகின் மிகப்பெரிய சட்டரீதியான கஞ்சா விற்பனை சந்தையாக கனடா உருவெடுத்துள்ளது. கஞ்சா பயன்படுத்துபவர்கள் மற்றும் அந்த தொழிலில்...
புதிய தொழில் முயற்சியாளர்களை ஊக்குவிக்கும் மத்திய நிலையம் ஒன்றை யாழ்ப்பாணத்தில் அமைப்பதற்கு அமைச்சரவை ஒப்புதல் வழங்கியுள்ளது. இந்திய அரசாங்கத்தின் நிதி உதவியுடன் யாழ்ப்பாணத்தில் வர்த்தக மத்திய நிலையம் ஒன்றை அமைப்பதற்காக அபிவிருத்தி மூலோபாயம் மற்றும் சர்வதேச வர்த்தக அமைச்சர் மலிக் சமரவிக்கிர சமர்ப்பித்த ஆவணத்துக்கே அமைச்சரவை ஒப்புதல் வழங்கியது. நேற்று நடைபெற்ற அமைச்சரவைக் கூட்டத்தின் போதே...
யாழ்ப்பாணம் மாநகர சபை சுகாதார தொழிற்சங்கத்தின் இரண்டு தரப்புகளுக்கு இடையே இடம்பெற்ற மோதலையடுத்து 8 பேர் கைது செய்யப்பட்டு நீதிமன்றின் உத்தரவில் விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளனர். யாழ்ப்பாணம் மாநகர சபையின் சுகாதார ஊழியர்களின் தொழிற்சங்கத்தின் முன்னாள் தலைவர் கையூட்டு வாங்கினார் என்ற குற்றச்சாட்டை அந்தச் சங்கத்தின் புதிய தலைவர் முன்வத்ததையடுத்தே இந்த மோதல் ஏற்பட்டுள்ளது. யாழ்ப்பாணம் மாநகர...
வவுனியா வடக்கு பிரதேச செயலகத்திற்குட்பட்ட காஞ்சிரமோட்டை கிராமம் மற்றும் வெடுக்குநாறி மலைப்பகுதிகளுக்கு வட மாகாணசபை அவைத்ததலைவர் சி.வி,கே. சிவஞானம் தலைமையிலான 12 மாகாணசபை உறுப்பினர்கள் அடங்கிய குழு நேற்று (புதன்கிழமை) விஜயம் செய்துள்ளனர். வவுனியா வடக்கில் பழைய கிராமமான காஞ்சிரமாட்டை கிராமத்தில் வாழ்ந்த சுமார் 300 குடும்பத்தினர் யுத்தம் காரணமாக அங்கிருந்து இடம்பெயர்ந்து இந்தியாவிற்கும் நாட்டின்...
அரசியல் கைதிகளை விடுவிப்பது குறித்து அடுத்த வாரம் தீர்மானம் எடுக்கப்படும் என, ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன உறுதியளித்துள்ளதாக, கூட்டமைப்பு அறிவித்துள்ளது. அரசியல் கைதிகளின் விடுதலைத் தொடர்பில் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவிற்கும், தமிழ்த் தேசியக் கூட்டமைப்பினருக்கும் இடையில் நேற்று முன்தினம் (செவ்வாய்க்கிழமை) மாலை முக்கிய கலந்துரையாடல் ஒன்று நடைபெற்றது. இந்த கலந்துரையாடலில் அரசியல் கைதிகளின் விடுதலைக் குறித்து...
இறுதிக்கட்ட போரின்போது இராணுவத்திடம் சரணடைந்த பெண் விடுதலை புலி உறுப்பினர்கள் பலர் பாலியல் பலாத்காரம் செய்யப்பட்டு கொலை செய்யப்பட்டமையை உறுதிப்படுத்தும் இன்னொரு சான்றாக #MeToo பரப்புரையில் தகவல் ஒன்று வெளிவந்துள்ளது. இந்தியா, இலங்கை உட்பட உலகம் முழுவதும் தற்போது பெரும் பூதாகரமான பிரச்சினையாக #MeToo விவகாரம் காணப்படுகின்றது. குறிப்பாக பெண்கள் சமூகத்தில் எதிர்நோக்கிய பிரச்சினைகளை வெளிக்கொண்டுவரும்...
மன்னார் சதொச கட்டட வளாகத்திலுள்ள மனித புதைகுழியிலிருந்து மீட்கப்பட்ட எச்சங்களை ஆய்வுக்குட்படுத்துவதற்காக, அவற்றை அமெரிக்காவிற்கு அனுப்பிவைக்க நீதிமன்றம் அனுமதி வழங்கியுள்ளது. மீட்கப்பட்ட மனித எச்சங்கள் எந்த காலப்பகுதிக்குரியது என்பதை ஆய்வு செய்வதற்கான காபன் சோதனைக்காக அவை அனுப்பி வைக்கப்படவுள்ளதாக மனித புதைகுழியின் அகழ்வுப் பணிகளை வழிநடத்தும் மன்னார் சட்ட வைத்திய நிபுணர் சமிந்த ராஜபக்ஸ தெரிவித்துள்ளார்....
இரண்டு அரச வங்கிகள் மற்றும் முதலீட்டு சபையின் பணிப்பாளர் சபைகள் கலைக்கப்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. நேற்று(புதன்கிழமை) நள்ளிரவு முதல் அமுலுக்கு வரும் வகையில் இவை கலைக்கப்பட்டுள்ளதாக கூறப்படுகின்றது. இதற்கமைய இலங்கை வங்கி, மக்கள் வங்கி, மற்றும் இலங்கை முதலீட்டு சபை என்பவற்றின் பணிப்பாளர் சபைகளைக் கலைக்குமாறு ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவினால் உத்தரவிட்டிருந்ததாக ஜனாதிபதி செயலகத்தின் தகவல்கள்...
யுத்தத்தினால் பாதிக்கப்பட்ட மக்களுக்கான அரசாங்கத்தின் 65 ஆயிரம் வீட்டுத்திட்டத்தின் முதற்கட்ட நிர்மாணப் பணிகளுக்கு அமைச்சரவை அனுமதி வழங்கியுள்ளது. இதன்கீழ் ஒவ்வொன்றும் 1.2 மில்லியன் ரூபாய் பெறுமதியான 28 ஆயிரம் வீடுகள் நிர்மாணிக்கப்படவுள்ளன. இந்த வீடுகளை இந்திய மற்றும் இலங்கை கட்டுமான நிறுவனங்கள் இணைந்து மேற்கொள்ளவிருப்பதாக தெரிவிக்கப்படுகிறது. இதற்கான யோசனையை மீள்குடியேற்றத்துறை அமைச்சர் டி.எம்.சுவாமிநாதன் முன்வைத்திருந்தார்.
Loading posts...
All posts loaded
No more posts
