- Friday
- May 8th, 2026
தமிழர்களின் அழிவுக்கு வழிவகுத்தது தமிழ் தலைமைகள்தான் என முன்னாள் வட.கிழக்கு மாகாணத்தின் முதலமைச்சர் வரதராஜப் பெருமாள் தெரிவித்துள்ளார். வவுனியாவில் நேற்று (ஞாயிற்றுக்கிழமை) இடம்பெற்ற நிகழ்வொன்றில் கலந்து கொண்டு கருத்துத் தெரிவித்தபோதே அவர் இதனைக் குறிப்பிட்டுள்ளார். இது தொடர்பாக அவர் மேலும் தெரிவிக்கையில், “புலிகளின் பெயரைச் சொல்லி தங்களுடைய பதவிகளைக் காப்பாற்றிவரும் இவர்கள் முன்னாள் போராளிகளின் வாழ்வாதாரத்திற்காக...
துரையப்பா விளையாட்டரங்கின் பெயரை மாற்றுவது கண்டனத்திற்குரிய விடயம் என வட.மாகாண சபை அவைத் தலைவர் சீ.வி.கே.சிவஞானம் தெரிவித்தார். யாழ்ப்பாணத்தில் ஊடகவியலாளர்களின் கேள்விக்குப் பதிலளித்த போதே அவர் இதனைக் குறிப்பிட்டுள்ளார். இது தொடர்பாக அவர் மேலும் தெரிவித்தபோது, “எதிர்வரும் மாநகரசபை அமர்வின் போது, யாழ்.துரையப்பா விளையாட்டு அரங்கின் பெயரை பொது விளையாட்டு மைதானமாக மாற்றுவதற்கு தமிழ்த் தேசியக்...
வவுனியாவிலிருந்து கொழும்பு நோக்கி பயணித்த பேருந்து விபத்துக்குள்ளானதில் நால்வர் உயிரிழந்துள்ளதுடன், 19 பேர் காயமடைந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். சிலாபம், மஹாவெவ பகுதியில் இந்த விபத்து இன்று (திங்கட்கிழமை) அதிகாலை இடம்பெற்றுள்ளது. சாரதியின் கட்டுப்பாட்டையிழந்து மின்மாற்றி ஒன்றில் பேருந்து மோதியதாலேயே இந்த விபத்து சம்பவித்துள்ளதாக பொலிஸார் தெரிவிக்கின்றனர். இந்த விபத்தில் காயமடைந்த 19 பேரும் மாரவில வைத்தியசாலையில்...
தமிழரசுக் கட்சியின் வாலிபர் முண்ணணி மாநாட்டில் கட்சியின் காங்கேசன்துறை வாலிப முண்ணணியின் தலைவர் கந்தசாமி மயூரதன் ஆற்றிய உரை தமிழ்த்தேசிய அரசியலில் இளைஞர்களின் பங்களிப்பெனும் விடயப்பரப்பில் சிந்தனை ஓட்டத்தை செலுத்துகின்ற போது நம்முடைய ஞாபகத்திற்கு பல கனதியான விடயங்கள் வந்து சேருகின்றன. இலங்கை தமிழரசுக்கட்சி என்பது தமிழர்களுடைய ஒரு தனித்துவ அடையாளமாகவும், நீண்ட வரலாற்று பின்னணியையும்...
தலைமன்னார் – காங்கேசன்துறை ஊடாக தமிழ் நாட்டுக்கு கப்பல் சேவைகளை விரைவில் ஆரம்பிக்கவுள்ளதாக பிரதமர் ரணில் விக்கிரமசிங்க தெரிவித்தார். அது தொடர்பில் இந்திய அரசாங்கத்துடன் பேச்சுவார்த்தை நடத்தி வருவதாகவும் அதற்கிணங்க தலைமன்னாரில் பொருட்கள் துறைமுகமொன்றை நிர்மாணிக்க தீர்மானித்துள்ளதாகவும் பிரதமர் தெரிவித்தார். அதற்கான பணிப்புரைகளை அமைச்சர் சாகல ரத்நாயக்கவுக்கு வழங்கியுள்ளதாகவும் அவர் தெரிவித்தார். மன்னாரில் இடம்பெற்ற நிகழ்வொன்றின்போதே...
கடந்த ஆண்டு முல்லைத்தீவு மாவட்டத்தின் வெலிஓயா பிரதேசத்தில் 411பேரும் மல்லாவிப் பிரதேசத்தில் 362பேரும் சிறுநீரக நோயினால் பாதிக்கப்பட்டுள்ளதாக மாவட்ட பிராந்திய சுகாதாரச் சேவைகள் பணிமனையின் தகவல்கள் மூலம் அறியமுடிகின்றது. முல்லைத்தீவு மாவட்டத்தில் மாந்தை கிழக்கு, வெலிஓயா ஆகிய பகுதிகளில் சிறுநீரக நோயாளிகளின் எண்ணிக்கை அதிகரித்துக் காணப்படுகின்றது. இது தொடர்பில் தகவல் அறியும் சட்டம் மூலம் ஊடாக...
போரின் போது தமிழீழ விடுதலைப்புலிகள் மற்றும் இராணுவத்தினர் என இருதரப்பினரும் போர்க்குற்றங்களையிழைத்துள்ளனர் என்று பிரதமர் ரணில் விக்கிரமசிங்க தெரிவித்த கருத்தை தமிழ் தேசியக் கூட்டமைப்பு வரவேற்றுள்ளது. “போரில் இராணுவத்தினர் குற்றமிழைத்தனர் என்ற உண்மையை நாட்டின் பிரதமர் முதன்முறையாக பகிரங்கமாகவும் உத்தியோகபூர்வமாகவும் ஏற்றுக்கொண்டுள்ளார். இதனை இலங்கை அரசு ஏற்றுக்கொள்ள 10 ஆண்டுகள் எடுத்துள்ளது. இது வரவேற்கப்படவேண்டிய விடயம்”...
மன்னார் மனித புதைகுழியில் மீட்கப்பட்ட எச்சங்களின் காபன் பரிசோதனை அறிக்கை அகழ்வுப் பணிகளுக்கு பொறுப்பான சட்ட மருத்துவ நிபுணர் சமிந்த ராஜபக்ஷவினால் பெறப்பட்டுள்ளது. அவ்வாறு பெறப்பட்ட அறிக்கை, எதிர்வரும் 20ஆம் திகதி (புதன்கிழமை) மன்னார் நீதிவான் நீதிமன்றில் முன்வைக்கப்படும் என்று சட்ட மருத்துவ நிபுணர் தெரிவித்துள்ளார். மனித எச்சங்கள் அமெரிக்காவின் புளோரிடா மாநிலத்திலுள்ள பீட்டா ஆய்வுக்...
வவுனியா, ஈச்சங்குளம் பகுதியில் இராணுவத்தினரால் இளைஞன் ஒருவர் மீது தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது. ஈச்சங்குளம் பகுதியில் அமைந்துள்ள இராணுவ முகாமுக்கு முன்பாக அமைந்துள்ள சிற்றுண்டிச்சாலை ஒன்றில் வைத்தே குறித்த இளைஞன்மீது நேற்றிரவு (வெள்ளிக்கிழமை) தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது. இச்சம்பவம் குறித்து மேலும் தெரியவருவதாவது, ‘வவுனியா, கல்மடு பகுதியைச் சேர்ந்த 23 வயதுடைய இளைஞர் ஒருவர் ஈச்சங்குளம் இராணுவ முகாமின்...
இன்று காலை யாழ்ப்பாணம் ஏ9 கச்சேரிக்கு அருகில் ஏற்படவிருந்த ரயில் விபத்து ரயில் சாரதியின் சமயோகிதத்தால் தடுக்கப்பட்டது. யாழ்ப்பாணத்திலிருந்து கொழும்பு நோக்கி காலை 6.10 மணிக்கு புறப்பட்ட உத்தரதேவி (புதிய ரயில்) கச்சேரி ரயில் கடவையை அண்மித்த வேளை கடவை காப்பாளர் கேட்டினை பூட்டாது தூக்கத்தில் இருந்துள்ளார். ரயில் சாரதி திடீரன ரயிலின் வேகத்தை குறைத்து...
வடமாகாண சுகாதார திணைக்களத்தின் கீழ், யாழ் மாவட்டத்தில் உள்ள வைத்தியசாலைகளில் மருந்து பொருட்களிற்கு தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளது. வைத்தியசாலைகளில் இல்லாத மருந்துகளை, தனியார் மருந்தகங்களில் வாங்கிக் கொண்டு சிகிச்சைக்கு வருமாறு வைத்தியர்கள் அறிவுறுத்திய சம்பவங்கள் யாழ் மாவட்ட வைத்தியசாலைகளில் அவதானிக்கப்பட்டுள்ளன. குறிப்பாக காயத்திற்கு இடும் திரவ மருந்துகள், கட்டுப் போடும் துணி, பண்டேஜ் என்பனவற்றிற்கு யாழ் மாவட்டத்தில்...
போர்க்குற்ற விசாரணை தேவையில்லை. வழக்கு தொடர்வதென்றால் மாறி மாறி தொடுத்து கொண்டிருக்கலாம். ஆகவே, இரண்டு தரப்பும் இந்த குற்றச்சாட்டை இத்துடன் முடித்துக் கொள்ள வேண்டும்“ இப்படி கிளிநொச்சியில் வைத்து தெரிவித்தார் பிரதமர் ரணில் விக்கிரமசிங்க. நேற்று (15) கிளிநொச்சி மாவட்ட செயலகத்தில் நடந்த அபிவிருத்தி கலந்துரையாடலிலேயே இதனை தெரிவித்தார். போர்க்குற்றச்சாட்டுக்கள் இரண்டு தரப்பிலும் உள்ளன. இலங்கை...
யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலை சட்ட மருத்துவ நிபுணர் உ.மயூரதனுக்கு எதிராக இணையத்தளம் ஊடாக அவதூறு பரப்பட்ட முறைப்பாடு தொடர்பில் இணையக் குற்றங்களை விசாரிக்கும் இலங்கை அவசர கணினி தயார்நிலைப் பிரிவிடம் விசாரணை அறிக்கையை குறுகிய காலப்பகுதிக்குள் கோருமாறு யாழ்ப்பாணம் நீதிமன்ற மேலதிக நீதிவான் காயத்திரி சைலவன் உத்தரவிட்டார். தனது சட்ட மருத்துவ சேவை தொடர்பில் தனக்கு...
கொடிகாமம், மிருசுவிலில் இராணுவ பவுசர் மோதியதில் பெண் ஒருவர் படுகாயமடைந்த நிலையில் யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையில் சேர்க்கப்பட்டுள்ளார் என்று பொலிஸார் தெரிவித்தனர். இந்தச் சம்பவம் நேற்று வெள்ளிக்கிழமை மாலை இடம்பெற்றது. சம்பவத்தையடுத்து இராணுவ பவுசர் வாகனம் பொலிஸாரால் தடுத்து வைக்கப்பட்டதுடன், அதன் சாரதி கைது செய்யப்பட்டார் என்றும் பொலிஸார் தெரிவித்தனர். படுகாயமடைந்த பெண், யாழ்ப்பாணம் போதனா...
பருத்தித்துறை இலங்கை போக்குவரத்துச் சபை சாலைக்கு விஜயம் மேற்கொண்ட போக்குவரத்து அமைச்சருக்கு அமோக வரபேற்பு அளிக்கப்பட்டது. போக்குவரத்து மற்றும் சிவில் விமான போக்குவரத்து அமைச்சர் அர்ஜுண ரணதுங்க நேற்று (வெள்ளிக்கிழமை) பருத்தித்துறை சாலைக்கு விஜயம் மேற்கொண்டார். முன்னதாக வருகைதந்த அமைச்சர் உள்ளிட்ட குழுவினர் மருதடி வைரவர் ஆலயத்திற்கு சென்று வழிபாடுகளை முடித்த பின்னர் சாலை முகாமையாளர்...
பிளவுபடாத நாட்டுக்குள் அனைவரும் ஒன்றிணைந்து வாழ்வதே தனது எதிர்பார்ப்பு என வட மாகாண ஆளுனர் சுரேன் ராகவன் தெரிவித்துள்ளார். கண்டி தலதா மாளிகைக்குநேற்று (வெள்ளிக்கிழமை) வட மாகாண ஆளுனர் சுரேன் ராகவன் விஜயம் மேற்கொண்டார். இதன் போது அங்கு அஸ்கிரிய மற்றும் மல்வத்து பீட மகாநாயக்க தேரர்களை சந்தித்து ஆளுனர் சுரேன் ராகவன் ஆசிபெற்றார். இதன்...
சட்டத்தை எவருமே தவறாகக் கையில் எடுக்க முடியாது. சுகாதாரச் சீர்கேடுகள் இறம்பெறுகின்றன என்றால் அவற்றைத் தடுக்க வழிமுறைகள் உள்ளன. அவற்றை உரிமுறையில் பின்பற்றவேண்டும்” என்று யாழ்ப்பாணம் நீதிமன்ற நீதிவான் அந்தோனி சாமி பீற்றர் போல் தெரிவித்தார். யாழ்ப்பாணம் நீதிமன்ற எல்லைக்குட்பட்ட வியாபார நிலையங்களில் விற்பனை செய்யப்படும் காலாவதியான உணவுப் பண்டங்களை அகற்றல் மற்றும் சுகாதாரக் கேடான...
பிரதமர் ரணில் விக்கிரமசிங்கவுடன் யாழ்ப்பாணத்துக்கு வருகைதந்த அவரது செயலாளர்களில் ஒருவரின் அலைபேசி திருட்டுப் போயுள்ளதாக யாழ்ப்பாணம் பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்யப்பட்டுள்ளது. யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையில் புதிய விபத்து மற்றும் அவசர சிகிச்சைப் பிரிவு கட்டடத் திறப்பு நிகழ்வில் பங்கேற்ற போதே அவரின் கைப்பையிலிருந்த அலைபேசி திருடப்பட்டுள்ளது. 55 ஆயிரம் ரூபா பெறுமதியான அதிதிறன் அலைபேசி...
கிளிநொச்சிக்கு விஜயம் செய்துள்ள பிரதமர் ரணில் விக்ரமசிங்க, கிளிநொச்சி பொது வைத்தியசாலையின் விபத்து சிகிச்சை பிரிவு கட்டடத்திற்கு அடிக்கல் நாட்டியுள்ளார். மூன்று நாள் விஜயத்தை மேற்கொண்டு வடக்கிற்கு சென்றுள்ள பிரதமர், இன்று (வெள்ளிக்கிழமை) காலை 09.30 மணிக்கு கிளிநொச்சிக்கு விஜயம் செய்திருந்தார். கிளிநொச்சி விஜயத்தின் முதல் கட்டமாக பொது வைத்தியசாலையின் விபத்து சிகிச்சை பிரிவு கட்டடத்திற்கு...
வவுனியா – நெடுங்கேணி பகுதியில் கிணற்றிலிருந்து சிறுவன் ஒருவனின் சடலம் கண்டெடுக்கப்பட்டுள்ளதாக நெடுங்கேணி பொலிஸார் தெரிவித்துள்ளனர். இந்த சம்பவம் நேற்று (வியாழக்கிழமை) இடம்பெற்றுள்ளது. குறித்த சிறுவனின் பெற்றோர் வெளியில் சென்ற நிலையில், தனது சகோதரனுடன் கிணற்றிற்கு அண்மையில் விளையாடிக்கொண்டிருந்த சிறுவன், தவறுதலாக உள்ளே விழுந்திருக்கலாம் என நெடுங்கேணி பொலிஸார் தெரிவித்துள்ளனர். இந்த சம்பவத்தில் முதிரம்பிட்டி பகுதியைச்...
Loading posts...
All posts loaded
No more posts
