பெற்றோல் குண்டுத் தாக்குதல் நடத்திய சந்தேகத்தில் நால்வர் கைது

யாழ்ப்பாணம் கொக்குவில் கருவப்புலம் பகுதியில் உள்ள வீடொன்றின் மீது பெற்றோல் குண்டுத் தாக்குதல் மேற்கொண்ட குற்றச்சாட்டில் 4 பேர் கைதுசெய்யப்பட்டுள்ளதுடன், அவர்களிடமிருந்து வாள் மற்றும் கோடரியும் பொலிஸாரால் மீட்கப்பட்டுள்ளது. யாழ்ப்பாணம் பெரும் குற்றத்தடுப்பு பிரிவினர் நேற்று (20) இரவு சந்தேகநபர்களை கைதுசெய்துள்ளனர். யாழ்ப்பாணம் பொலிஸ் பிரிவிற்குட்பட்ட பகுதிகளில் அவர்களது வீடுகளிலேயே வைத்து கைதுசெய்துள்ளனர். கைதுசெய்யப்பட்டவர்களிடமிருந்து 2...

மீண்டும் தமிழ் மக்கள் மீதான தாக்குதலுக்கான ஒரு எச்சரிக்கையா? – நாடாளுமன்றில் கூட்டமைப்பு!

யாழ்ப்பாணத்தில் ஊடகவியலாளர் மீதான தாக்குதல் மீண்டும் தமிழ் மக்கள் மீதான தாக்குதலுக்கான ஒரு எச்சரிக்கையா என சந்தேகம் எழுவதாக தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் எஸ். சிறிதரன் கேள்வியெழுப்பியுள்ளார். சபாநாயகர் தலைமையில் நேற்று (புதன்கிழமை) கூடிய நாடாளுமன்ற அமர்வில் இலங்கை ஏற்றுமதி அபிவிருத்தி கட்டளைச்சட்டத்தின் ஒழுங்குவிதிகளை அங்கீகரிப்பது மீதான விவாதத்தில் கலந்துகொண்டு உரையாற்றுகையிலேயே இவ்வாறு...
Ad Widget

வடக்கு இளைஞர்களை குறிவைக்கிறார் கோட்டா!

பாதுகாப்பு அமைச்சின் முன்னாள் செயலாளர் கோட்டாபய ராஜபக்ஷ, வடக்கு, கிழக்கிலுள்ள இளைஞர்கள் சிலரை கொழும்புக்கு அழைத்து பேச்சு நடத்தியுள்ளார் என தகவல்கள் வெளியாகியுள்ளன. வெளிச்சம் என்ற அமைப்பின் செயற்பாடுகளை இவ்விரு மாகாணங்களிலும் தீவிரமாக முன்னெடுப்பதற்கான செயல் திட்டங்கள் குறித்தே இதன்போது விரிவாக ஆராயப்பட்டுள்ளன. இதன்படி அடுத்த மாதத்துக்குள் மாவட்ட இணைப்பாளர்கள் நியமிக்கப்படவுள்ளதுடன், தொகுதி மட்டத்திலான செயற்பாட்டாளர்களுக்கான...

வவுனியாவில் பௌத்த மாகாண நடத்தப்படுவது ஏன்? – வடக்கு ஆளுநர் விளக்கம்

வடபகுதியில் இடம்பெறும் பௌத்த ஊடுறுவலை தடுப்பது தொடர்பாக, வவுனியாவில் இடம்பெறும் பௌத்த மாநாட்டில் கலந்துரையாடப்படுமென வடக்கு மாகாண ஆளுநர் கலாநிதி சுரேன் ராகவன் குறிப்பிட்டுள்ளார். கைதடியிலுள்ள முதலமைச்சர் அலுவலகத்தில் நேற்று (புதன்கிழமை) ஊடகவியாளர்கள் சந்திப்பு இடம்பெற்றது. இதன்போது வவுனியாவில் நடத்தப்படவுள்ள பௌத்த மாநாடு குறித்து செய்தியாளர்கள் எழுப்பிய கேள்விகளுக்கு பதில் வழங்கியபோதே, அவர் இவ்வாறு கூறினார்....

கிளிநாச்சியில் பயங்கரவாத எதிர்ப்பு சட்டம் மற்றும் பயங்கரவாத தடைச்சட்டம் ஆகியவற்றை எதிர்த்து போராட்டம்!

இலங்கையில் தற்போது பயங்கரவாதம் இல்லை என அரசு அறிவித்த போது ஏன் இன்னும் பயங்கரவாத தடைச் சட்டத்தை மாத்திரம் நடைமுறையில் வைத்திருக்கிறது எனத் தெரிவித்து கிளிநொச்சியில் இன்று ஆர்ப்பாட்டம் ஒன்று இடம்பெற்றுள்ளது. கிளிநொச்சி யாழ்,முல்லைத்தீவு வவுனியா மாவட்ட மக்கள் சிலர் இணைந்து இன்று கிளிநாச்சியில் பயங்கரவாத எதிர்ப்பு சட்டம் மற்றும் பயங்கரவாத தடைச்சட்டம் ஆகியவற்றை எதிர்த்து...

அதிபருக்கெதிரான முறைப்பாட்டினை மீளப்பெறுமாறு மாணவனுக்கு மிரட்டல்

தன் மீது தாக்குதல் மேற்கொண்டார் என பாடசாலை அதிபர் ஒருவருக்கு எதிராக பாடசாலை மாணவன் காவல் நிலையத்தில் மேற்கொண்ட முறைப்பாட்டை மீளப்பெறுமாறு மாணவனுக்கு வலய கல்வி அதிகாரிகள் அழுத்தம் கொடுத்து வருவதாகவும் , முறைப் பாட்டை மீளப் பெற்றாலே உயர்தர தர பரீட்சை அனுமதிக்க விண்ணப்பிக்க அனுமதிப்போம் என மிரட்டி வருவதாகவும் பாதிக்கப்பட்ட மாணவனின் உறவினர்கள்...

சமரச முயற்சி தோல்வி! – ஊடகவியலாளரை தாக்கிய பொலிஸ் அதிகாரி கைது!

யாழில் ஊடகவியலாளர் மீது தாக்குதல் மேற்கொண்ட, கோப்பாய் பொலிஸ் அதிகாரி கைது செய்யப்பட்டுள்ளார். யாழ்ப்பாணம் பொலிஸாரினால் இன்று (புதன்கிழமை) காலை அவர் கைது செய்யப்பட்டுள்ளார். கோப்பாய் பொலிஸ் நிலைய பதில் பொலிஸ் பொறுப்பதிகாரியான குணரத்தின என்பவரே இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளார். யாழ்ப்பாணம் கொக்குவில் கருவேப்புலம் வீதியில், வீடொன்றின் மீது இனந்தெரியாத குழுவினரால் நேற்று பெற்றோல் குண்டுத்...

மறப்போம் மன்னிப்போம் என்ற பேச்சுக்கு இடமளிக்கமாட்டோம்!! – சம்பந்தன் ரணிலுக்கு பதிலடி!!

“பிரதமர் ரணில் விக்கிரமசிங்கவின் மறப்போம் மன்னிப்போம் என்ற கருத்தை அடியோடு நிராகரிக்கின்றோம். மறப்போம் மன்னிப்போம் என்ற பேச்சுக்கு ஒருபோதும் இடமளிக்கமாட்டோம். படையினரின் போர்க்குற்றங்களால் பாதிக்கப்பட்ட மக்கள் வன்னியில் இன்னமும் இருக்கின்றார்கள். பாதிக்கப்பட்ட மக்களுக்கும், கொன்றொழிக்கப்பட் மக்களுக்கும், காணாமல் ஆக்கப்பட்ட மக்களுக்கும் நீதி வேண்டும். சர்வதேச பொறிமுறை ஊடாக உண்மைகள் கண்டறியப்பட வேண்டும். குற்றவாளிகள் தண்டிக்கப்பட வேண்டும்.”–...

யாழ்.மாநகர சபை உறுப்பினரையும், வாள் வெட்டுக்குழு விட்டுவைக்கவில்லை!!!

யாழ்.மாநகர சபை உறுப்பினரின் வீட்டுக்கு சென்ற வாள் வெட்டுக்குழு உறுப்பினரை தாக்க முயற்சித்த போது, உறுப்பினர் தப்பி சென்ற நிலையில் வீட்டில் அட்டகாசம் புரிந்து விட்டு தப்பி சென்றுள்ளனர். தமிழ் தேசிய மக்கள் முன்னணியின் யாழ்.மாநகர சபை உறுப்பினர் செ.ரஜீவ்காந்தின் மீதே தாக்குதல் முயற்சி மேற்கொள்ளப்பட்டுள்ளது. குறித்த உறுப்பினரின் வீட்டிற்கு நேற்று செவ்வாய்க்கிழமை மூன்று மோட்டார்...

ஊடகவியலாளரை தாக்கியமைக்காக பொலிஸ்நிலைய பதில் பொறுப்பதிகாரியை கைதுசெய்ய உத்தரவு

யாழ்ப்பாணம் கொக்குவில் பகுதியில் உள்ள வீடொன்றின் மீது பெற்றோல் குண்டுகள் வீசி தாக்குதல் சம்பவத்தையடுத்து அங்கு சென்று காணொளிப் பதிவில் ஈடுபட்டிருந்த ஊடகவியலாளர் ஒருவரை தாக்கிய குற்றச்சாட்டில் கோப்பாய் பொலிஸ் நிலைய பதில் பொறுப்பதிகாரியைக் கைது செய்ய உத்தரவிடப்பட்டுள்ளது. இந்த நிலையில் கோப்பாய் பொலிஸ் நிலைய பதில் பொறுப்பதிகாரி யாழ்ப்பாணம் தலைமையக பொலிஸ் நிலையத்துக்கு அழைக்கப்பட்டு...

நடந்த உண்மைகளை மறப்போம் – மீண்டும் வலியுறுத்துகிறார் பிரதமர்!

நடந்த உண்மைகளை மறந்து, மன்னித்து புதிய வழியில் செல்வோமென மீண்டும் பிரதமர் ரணில் விக்ரமசிங்க வலியுறுத்தியுள்ளார். யாழ்ப்பாணத்திற்கு அண்மையில் விஜயம் மேற்கொண்டிருந்த ரணில், பழையதை மறப்போம் மன்னிப்போம் என கூறியிருந்தார். இக்கருத்து, பாதிக்கப்பட்டவர்கள் மத்தியில் பெரும் தாக்கத்தை ஏற்படுத்தியுள்ளது. இந்நிலையில், கொழும்பிலுள்ள ஊடகமொன்றுக்கு வழங்கிய செவ்வியிலும் இக்கருத்தை மீண்டும் ரணில் வலியுறுத்தியுள்ளார். அவர் மேலும் கூறியுள்ளதாவது,...

யாழில் ஊடகவியலாளர் மீது தாக்குதல்

யாழ்.கொக்குவில் பகுதியில் இடம்பெற்ற பெற்றோல் குண்டு தாக்குதல் தொடர்பாக செய்திகளை சேகரிக்கச் சென்ற ஊடகவியலாளர் மீது பொலிஸார் தாக்குதல் மேற்கொண்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த சம்பவம் நேற்று (செவ்வாய்க்கிழமை) பகல் இடம்பெற்றுள்ளது. சம்பவ இடத்தில் செய்தி சேகரிப்பதற்காக தான் சென்றிருந்தபோது, தனக்கு அருகில் வந்த கோப்பாய் பொலிஸ் நிலைய பொலிஸ் அதிகாரி, தன்னை அங்கிருந்து செல்லுமாறு கூறியதாகவும்...

இயந்திர வாள்களை பதிவு செய்யும் நடவடிக்கை முன்னெடுப்பு

நாட்டில் பாவனையில் உள்ள சகல இயந்திர வாள்களையும் பதிவு செய்யும் நடவடிக்கை முன்னெடுக்கப்படவுள்ளதாக பாதுகாப்பு அமைச்சு தெரிவித்துள்ளது. குறித்த நடவடிக்கை இன்று (புதன்கிழமை) ஆரம்பமாகவுள்ளதோடு, இந்த பணிகள் இம்மாதம் 28ஆம் திகதிவரை முன்னெடுக்கப்படவுள்ளன. பாதுகாப்பு அமைச்சராகவுள்ள ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவின் உத்தரவிற்கு அமைவாக, பாதுகாப்பு அமைச்சின் தீர்மானத்துக்கமைய இந்த நடவடிக்கை முன்னெடுக்கப்படவுள்ளதாக அமைச்சு தெரிவித்துள்ளது. இது...

மும்மொழிகளும் அடங்கிய பிறப்புச் சான்றிதழை வழங்க நடவடிக்கை

மும்மொழிகளும் அடங்கிய பிறப்புச் சான்றிதழை வழங்குவதற்கு நடவடிக்கை எடுத்துள்ளதாக பதிவாளர் திணைக்களம் அறிவித்துள்ளது. அந்தவகையில், சிங்கள மொழியில் வழங்கப்படும் பிறப்புச் சான்றிதழுக்கு மேலதிகமாக ஆங்கில மொழியில் குறித்த சான்றிதழ் மொழிபெயர்க்கப்பட்டு வழங்கப்படவுள்ளது. அதேபோல் தமிழ்மொழியில் வழங்கப்படும் பிறப்புச் சான்றிதழுக்கு மேலதிகமாக ஆங்கில மொழியில் சான்றிதழ் மொழிபெயர்க்கப்பட்டு வழங்கப்படவுள்ளது. இந்த நடவடிக்கை வரும் ஏப்ரல் மாதத்திற்குள் ஆரம்பிக்கப்படும்...

பிரதமரின் உரைக்கு காணாமலாக்கப்பட்டோரின் உறவுகள் கண்டனம்

வடக்கு விஜயத்தின்போது பிரதமர் ரணில் விக்ரமசிங்க தமிழர்கள் தொடர்பாக தெரிவித்த கருத்துக்கு, காணாமலாக்கப்பட்டோரின் உறவுகள் கண்டனம் தெரிவித்துள்ளனர். அத்தோடு பிரதமரின் கருத்து தொடர்பாக தமிழ் அரசியல்வாதிகள் மௌனமாக இருப்பதாக, அவர்கள் குற்றம் சுமத்தியுள்ளனர். கிளிநொச்சியில் நேற்று (செவ்வாய்க்கிழமை) இடம்பெற்ற ஊடக சந்திப்பின்போதே அவர்கள் இவ்வாறு தெரிவித்துள்ளனர். யாழ்ப்பாணத்திற்கு அண்மையில் விஜயம் மேற்கொண்டிருந்த ரணில், பழையதை மறப்போம்...

பெண்ணின் சடலத்தை கண்டெடுக்கச் சென்ற பொலிஸ் அதிகாரி அதிர்ச்சியில் உயிரிழப்பு!

ஏறாவூர் பொலிஸ் பிரிவிலுள்ள திகிலிவெட்டை எனும் கிராமத்தில் காட்டு யானை தாக்கி உயிரிழந்த இளம் பெண்ணின் சடலத்தை கண்டெடுக்கச் சென்ற பொலிஸ் உத்தியோகஸ்தர் அதிர்ச்சியில் உயிரிழந்துள்ளதாக ஏறாவூர பொலிஸார் தெரிவித்துள்ளனர். இந்த சம்பவம் நேற்று (ஞாயிற்றுக்கிழமை) இடம்பெற்றுள்ளது. ஏறாவூர் பொலிஸ் நிலையத்தில் கடமையாற்றும் பொலிஸ் உத்தியோகஸ்தர் ஒருவரே இவ்வாறு உயிரிழந்துள்ளார். ஏறாவூர் பொலிஸ் பிரிவிலுள்ள திகிலிவெட்டை...

மாணவிக்கு பாலியல் வதை: கைதாகிய ஆசிரியரை விளக்கமறியலில் வைக்க நீதிமன்று உத்தரவு!

பதின்ம வயது மாணவிக்கு பாலியல் துன்புறுத்தல் வழங்கிய குற்றச்சாட்டில் கைது செய்யப்பட்ட ஆசிரியரை விளக்கமறியலில் வைக்க யாழ்ப்பாணம் நீதிமன்ற நீதிவான் ஏ.எஸ்.பி.போல் உத்தரவிட்டார். யாழ்ப்பாணம் கல்வி வலயத்துக்குட்பட்ட பாடசாலையில் சித்திர பாடம் கற்பிக்கும் ஆசிரியர் ஒருவர் மாணவியை தண்டிப்பதாக அவரது உடலில் பாலியல் துன்புறுத்தலுக்கு உள்படுத்தினார் என்ற குற்றச்சாட்டின் கீழ் யாழ்ப்பாணம் பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு...

செம்பியன்பற்று பகுதியில் பாரிய ஆயுதக் கிடங்கு அடையாளம் காணப்பட்டுள்ளதாக அகழ்வு

வடமராட்சி கிழக்கு செம்பியன்பற்று மாமுனனை கடற்கரையை அண்மித்த பகுதியில் பாரிய ஆயுதக் கிடங்கு ஒன்று அடையாளம் காணப்பட்டுள்ளதாக தெரிவித்து அங்கு அகழ்வுகள் நடத்தப்படுகின்றது. அடையாளம் காணப்பட்ட பகுதி தற்போது பளை காவல்துறையினர் மற்றும் விசேட அதிரடிப் படையினருடைய கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவரப்பட்டு தற்போது அகழ்வு பணிகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளது. கடந்த காலத்தில் தமிழீழ விடுதலைப் புலிகள் நிலை கொண்டுள்ள...

யாழில் திருடப்பட்ட பிரதமரின் செயலாளரின் தொலைபேசி மீட்பு!!!

பிரதமரின் யாழ்ப்பாண விஜயத்தின் போது, அவருடைய செயலாளரடமிருந்து திருடப்பட்ட ஸ்மார்ட்போன் பொலிசாரால் நேற்று (17) மீட்கப்பட்டது. யாழ்ப்பாணத்திலுள்ள தொலைபேசி விற்பனை நிலையமொன்றில் வைத்து தொலைபேசியை பொலிசார் மீட்டனர். ஸ்மார்ட்போனை திருடிய கில்லாடியும் அடையாளம் காணப்பட்டார். பிரதமர் ரணில் விக்கிரமசிங்க வடக்கிற்கு மூன்று நாள் உத்தியோகபூர்வ விஜயம் மேற்கொண்டிருந்தார். 14ம் திகதி மாலை யாழ் போதனா வைத்தியசாலையின்...

யாழில் இரு சிறுவர்கள் கடத்தல்!! : பொலிஸில் முறைப்பாடு

யாழ். பண்டத்தரிப்பில் சகோதரர்கள் இருவர் கடத்தப்பட்டதாக பெற்றோரால் பொலிஸ் நிலையத்தில் நேற்று (ஞாயிற்றுக்கிழமை) முறைப்பாடு பதிவு செய்யப்பட்டுள்ளது. பண்டத்தரிப்பு, சாந்தை பகுதியில் நேற்று மதியம் விளையாடிக் கொண்டிருந்த 13 வயதான சதீஸ்வரன் வினோத் மற்றும் 8 வயதான சதீஸ்வரன் பூஜா ஆகியோரே காரில் வந்தவர்களால் கடத்திச் செல்லப்பட்டதாக முறைப்பாடு அளிக்கப்பட்டுள்ளது. வீட்டிற்கு அருகிலுள்ள பகுதியில் சிறுவர்கள்...
Loading posts...

All posts loaded

No more posts