வவுனியாவிலிருந்து பயணித்த பேருந்து விபத்துக்குள்ளானதில் நால்வர் உயிரிழப்பு

வவுனியாவிலிருந்து கொழும்பு நோக்கி பயணித்த பேருந்து விபத்துக்குள்ளானதில் நால்வர் உயிரிழந்துள்ளதுடன், 19 பேர் காயமடைந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

சிலாபம், மஹாவெவ பகுதியில் இந்த விபத்து இன்று (திங்கட்கிழமை) அதிகாலை இடம்பெற்றுள்ளது.

சாரதியின் கட்டுப்பாட்டையிழந்து மின்மாற்றி ஒன்றில் பேருந்து மோதியதாலேயே இந்த விபத்து சம்பவித்துள்ளதாக பொலிஸார் தெரிவிக்கின்றனர்.

இந்த விபத்தில் காயமடைந்த 19 பேரும் மாரவில வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதோடு, குறித்த விபத்து தொடர்பாக பொலிஸார் மேலதிக விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர்.

Related Posts