Ad Widget

மறப்போம், மன்னிப்போம்; போர்க்குற்ற விசாரணை தேவையில்லை: கிளிநொச்சியில் பிரதமர் ரணில்!

போர்க்குற்ற விசாரணை தேவையில்லை. வழக்கு தொடர்வதென்றால் மாறி மாறி தொடுத்து கொண்டிருக்கலாம். ஆகவே, இரண்டு தரப்பும் இந்த குற்றச்சாட்டை இத்துடன் முடித்துக் கொள்ள வேண்டும்“ இப்படி கிளிநொச்சியில் வைத்து தெரிவித்தார் பிரதமர் ரணில் விக்கிரமசிங்க.

நேற்று (15) கிளிநொச்சி மாவட்ட செயலகத்தில் நடந்த அபிவிருத்தி கலந்துரையாடலிலேயே இதனை தெரிவித்தார்.

போர்க்குற்றச்சாட்டுக்கள் இரண்டு தரப்பிலும் உள்ளன. இலங்கை ஜனாதிபதி கொல்லப்பட்டிருக்கிறார். பாதுகாப்பு அமைச்சின் செயலாளர் கொல்லப்பட்டிருக்கிறார். அமைச்சர்கள், படைவீரர்கள், பொதுமக்கள் கொல்லப்பட்டுள்ளனர். ஏன்.. தமிழ் அரசியல் தலைவர்களும் கொல்லப்பட்டுள்ளனர். அவர்கள் எல்லோரும் புலிகளால் கொல்லப்பட்டவர்கள்.

அதேபோல, இராணுவத்தினர் மீதும் குற்றச்சாட்டுக்கள் வைக்கப்படுகின்றன.

இவற்றிற்கு எதிராக இரண்டு தரப்பும் வழக்கு தொடர முயன்றால், முடிவின்றி மாறி மாறி தொடர்ந்து கொண்டு செல்லலாம். இதையெல்லாம் மறந்து, மன்னித்து, உண்மையை கண்டறிந்து, அனைவரும் ஒன்றுபட்டு நாட்டை கட்டியெழுப்புவதே அவசியமானது.

தென்னாபிரிக்க உதாரணத்தை நாம் பின்பற்றலாம். இந்த விடயத்தில் இருதரப்பும் மறந்து, மன்னிப்பளிப்பதே சிறந்த தீர்வாக இருக்கும்“ என்றார்.

Related Posts