பருத்தித்துறை இலங்கை போக்குவரத்துச் சபை சாலைக்கு விஜயம் மேற்கொண்ட போக்குவரத்து அமைச்சருக்கு அமோக வரபேற்பு அளிக்கப்பட்டது.

போக்குவரத்து மற்றும் சிவில் விமான போக்குவரத்து அமைச்சர் அர்ஜுண ரணதுங்க நேற்று (வெள்ளிக்கிழமை) பருத்தித்துறை சாலைக்கு விஜயம் மேற்கொண்டார்.
முன்னதாக வருகைதந்த அமைச்சர் உள்ளிட்ட குழுவினர் மருதடி வைரவர் ஆலயத்திற்கு சென்று வழிபாடுகளை முடித்த பின்னர் சாலை முகாமையாளர் கந்தசாமி அமைச்சருக்கு பொன்னாடை போர்த்தி கௌரவித்தார்.
இதனைத் தொடர்ந்து கலந்துரையாடல் இடம்பெற்றது. இதில் பதின்மூன்று கோரிக்கைகள் அடங்கிய மகஜரினை போக்குவரத்து அமைச்சரிடம் சாலை முகாமையாளர் கையளித்தார்.
அத்துடன் இலங்கை முழுவதும் உள்ள போக்குரத்து சபையின் சாலைகளில் காணப்படும் உள்ளக கட்டமைப்பு வசதிகளையும் செய்து தருவதற்கு நிதி ஒதுக்குவதாக அமைச்சர் இதன் பொது உறுதியளித்தார்.