நல்லூரில் முகாமிட்டுள்ள இராணுவத்தினர் அங்கிருந்து வெளியேற வேண்டும் – ஸ்ரீதரன்

நல்லூர் ஆலய வளாகத்தில் முகாமிட்டுள்ள இராணுவத்தினர் உடனடியாக அங்கிருந்து வெளியேற வேண்டும் என்று தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் ஸ்ரீதரன் மீண்டும் வலியுறுத்தியுள்ளார். இராணுவம் அங்கு தொடர்ந்தும் இருப்பதால், பக்தர்கள் அசௌகரியங்களுக்கு உள்ளாவதாகவும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார். நாடாளுமன்றில் நேற்று(செவ்வாய்கிழமை) இடம்பெற்ற சபை ஒத்திவைப்பு வேளை விவாதத்தில் உரையாற்றுகையிலேயே அவர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார். இதன்போது அங்கு...

ஐ.நாவை ஏமாற்றவே யாழில் காணாமல் ஆக்கப்பட்டோருக்கான அலுவலகம் – உறவுகள் விசனம்

ஐக்கிய நாடுகள் சபையை ஏமாற்றும் நோக்கிலேயே, வடக்கில் காணாமல் ஆக்கப்பட்டோருக்கான அலுவலகம் திறக்கப்படவுள்ளதாக வலிந்து காணாமல் ஆக்கப்பட்டோர் சங்கம் தெரிவித்துள்ளது. யாழில், நேற்று(செவ்வாய்கிழமை) இடம்பெற்ற செய்தியாளர் சந்திப்பிலேயே அந்த அமைப்பின் இணைப்பாளர், மரிய சுரேஷ் ஈஸ்வரி இவ்வாறு கூறினார். மேலும், இதனை தடுத்து நிறுத்தவேண்டிய பொறுப்பு, தமிழ்ப் பிரதிநிதிகளுக்கும் இருப்பதாக அவர் குறிப்பிட்டுள்ளார். இதன்போது அங்கு...
Ad Widget

காணாமல் போன மகனைத் தேடி போராட்டத்தில் ஈடுபட்ட தந்தை உயிரிழப்பு!

வவுனியாவில் 913ஆவது நாட்களாக தனது 26 வயதுடைய மகனைத் தேடி தொடர் போராட்டத்தில் ஈடுபட்ட தந்தை ஒருவர் சுகயீனமாக உயிரிழந்துள்ளதாக காணாமல் ஆக்கப்பட்டோரின் உறவுகள் தெரிவித்துள்ளனர். வவுனியாவில் காணாமல் போயுள்ள தங்களது உறவுகளைத் தேடி சுழற்சி முறையில் முன்னெடுக்கப்பட்டு வரும் போராட்டம் நேற்றுடன்(செவ்வாய்கிழமை) 913 ஆவது நாட்களை எட்டியுள்ளது. இந்நிலையில் 26 வயதான அச்சுதன் என்ற...

முல்லைத்தீவு பூவரசங்குளத்தில் சிசுவின் சடலம் மீட்பு

முல்லைத்தீவு மாந்தை கிழக்கு பூவரசங்குளப் பகுதியில், சிசு ஒன்றின் சடலம் குளம் ஒன்றின் அருகில் இருந்து நேற்று மீட்கப்பட்டுள்ளது. குறித்த சிசுவை தாய், குளத்தில் அருகில் பிரசவித்திருக்கலாம் எaன்றும், அதன் பின்னர் குளத்தில் வீசிவிட்டுச் சென்றிருக்கலாம் எனவும் சந்தேகிக்கப்படுகின்றது. இதேவேளை, சிசுவின் சடலம் மீட்கப்பட்ட சம்பவம் தொடர்பில், மல்லாவி பொலிஸார் விசாரணைகளை மேற்கொண்டுவருவதுடன், சிசுவின் தாயையும்...

வைத்தியர் எஸ். சிவரூபன் கைது செய்யப்பட்டமைக்கு எதிர்ப்பு தெரிவித்து போராட்டம்!!

பளை வைத்தியசாலையின் வைத்திய அதிகாரி வைத்தியர் எஸ். சிவரூபன் பயங்கரவாத தடுப்பு பிரிவினரால் கைது செய்யப்பட்டுள்ளமைக்கு எதிர்ப்பு தெரிவித்து, மக்கள் கவனயீர்ப்பு போராட்டம் ஒன்றை மேற்கொண்டனர். பயங்கரவாத செயற்பாடுகளுடன் தொடர்புடைய குற்றசாட்டில் வைத்தியர் எஸ். சிவரூபன் நேற்று முன்தினம் ஞாயிற்றுக்கிழமை இரவு கைது செய்யப்பட்டார். இந்நிலையில் கைதான பளை வைத்தியசாலை வைத்தியரின் விடுதலையை வலியுறுத்தியும், பதில்...

சங்கானையில் உணவங்கள் மற்றும் மருந்தகங்கள் மீது திடீர் சோதனை!!

வடமாகாண கௌரவ ஆளுநர் கலாநிதி சுரேன் ராகவன் அவர்களின் அறிவுறுத்தலுக்கு அமைவாக சங்கானை பிரதேச சபைக்குட்பட்ட பகுதியில் உணவுக்கட்டுப்பாட்டு அதிகாரிகள் மற்றும் ஆளுநர் செயலணி இணைந்து நேற்று(19) உணவங்கள் மற்றும் மருந்தகங்கள் மீது திடீர் கண்காணிப்பு விஜயத்தை மேற்கொண்டனர். உணவகங்களின் தரம் மற்றும் சட்டத்திற்கமைவாக இயங்குகின்றனவா என்று மேற்கொள்ளப்பட்ட இந்த சோதனை நடவடிக்கையின் போது 15...

இராணுவத்தளபதி நியமனத்திற்கு ஐ.நா மனித உரிமைகள் ஆணையாளர் கடும் அதிருப்தி!

இராணுவத்தளபதியாக லெப்டினன்ட் ஜெனரல் சவேந்திர சில்வா நியமிக்கப்பட்டதற்கு ஐ.நா மனித உரிமைகள் ஆணையாளர் கடுமையான அதிருப்தியை தெரிவித்துள்ளார். “லெப்டினன்ட் ஜெனரல் ஜெனரல் சில்வாவின் பதவி உயர்வு, நீதி மற்றும் பொறுப்புக்கூறலை மேம்படுத்துவதற்கான இலங்கையின் உறுதிப்பாட்டை கடுமையாக கேள்விக்குள்ளாக்குகிறது” என பச்லெட் தெரிவித்துள்ளார். “இந்த நியமனத்தால் நான் மிகவும் கவலையடைகிறேன். போரின்போது அவரும் அவரது துருப்புக்களும் எதிரான...

கோட்டாபய ராஜபக்சவுடன் ஈழ மக்கள் ஜனநாயக கட்சி சந்திப்பு!!

ஸ்ரீ லங்கா பொதுஜன பெரமுனவின் ஜனாதிபதி வேட்பாளர் கோட்டாபய ராஜபக்சவுடன் நேற்று நடந்த சந்திப்பு முழுமையான திருப்தியளித்துள்ளதாக ஈழ மக்கள் ஜனநாயக கட்சியின் செயலாளர் நாயகம் டக்ளஸ் தேவானந்தா தெரிவித்துள்ளார். இந்த சந்திப்பில் தமிழ் மக்களின் முக்கியமான பிரச்சினைகள் குறித்து பேசப்பட்டுள்ளன. முக்கியமான பிரச்சினைகள் மற்றும் உடனடியாக தீர்வு காணப்படவேண்டிய விடயங்கள் என கருதப்படுபவற்றை பட்டியலிட்டு...

ஷவேந்திர சில்வாவை இராணுவத் தளபதியாக நியமித்தமை தமிழ் மக்களை எட்டி உதைத்தது போல் உள்ளது! – சுமந்திரன்

இராணுவத் தளபதியாக ஷவேந்திர சில்வா நியமித்தமை தொடர்பில் தமிழ் தேசியக் கூட்டமைப்பினர் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர். தமது டுவிட்டர் பக்கத்தில் பதிவு ஒன்றை பதிவிட்டு அவர்கள் இதனை தெரிவித்துள்ளனர். தமிழ் தேசிய கூட்டமைப்பு சார்பில் எம்.ஏ சுமந்திரன் இந்த பதிவை பதிவிட்டுள்ளார். குறித்த பதிவில், கடுமையான யுத்த குற்றங்களுடன் தொடர்புடைய நபர் ஒருவரை இராணுவத் தளபதியாக நியமித்தமை...

எச்சரிக்கையை மீறிய விடுதி மீதும் உரிமையாளர் மீதும் ஆவா குழு தாக்குதல்!!

கொக்குவில் – ஆடியபாதம் வீதியில் உள்ள விடுதியினை மூடுமாறு ஆவா குழுவால் அச்சுறுத்தல் விடுவக்கப்பட்டிருந்த நிலையில் கடந்த ஞாயிறு இரவு அந்த விடுதிக்குள் புகுந்த கும்பல் ஒன்று உரிமையாளர் மீது வாளால் வெட்டியதுடன், விடுதி மீது பெற்றோல் குண்டுத் தாக்குதலை நடத்திவிட்டுத் தப்பிச் சென்றுள்ளது. சம்பவத்தில் விடுதியின் உரிமையாளர் கையில் காயமடைந்துள்ளார். கொக்குவில் ஆடியபாதம் வீதியில்...

மதுபோதையில் சிக்கிய சாரதிக்கு 77,500 ரூபா தண்டம்!!

உரிய ஆவணங்கள் இல்லாமல் வாகனம் செலுத்தியமை மற்றும் மதுபோதையில் சாரத்தியம் செய்தமை உள்ளிட்ட குற்றங்களை புரிந்த ஒருவருக்கு 77 ஆயிரத்து 500 ரூபா தண்டம் விதித்து யாழ்ப்பாணம் நீதிவான் நீதிமன்றம் இன்று உத்தரவிட்டது. யாழ்ப்பாணம் பொலிஸ் பிரிவுக்குட்பட்ட பகுதியில் மதுபோதையில் சாரத்தியம் செய்த குற்றச்சாட்டில் ஒருவர் பொலிஸாரால் கைது செய்யப்பட்டார். அவருக்கு எதிராக யாழ்ப்பாணம் நீதிவான்...

போர்க் குற்றங்களுக்கு பொறுப்புக் கூறவேண்டிய சவேந்திர சில்வா புதிய இராணுவத் தளபதியாக நியமனம்

புதிய இராணுவத் தளபதியாக மேஜர் ஜெனரல் சவேந்திர சில்வா நியமிக்கப்பட்டுள்ளார். 23ஆவது இராணுவத் தளபதியாக மேஜர் ஜெனரல் சவேந்திர சில்வா ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவினால் இன்று (திங்கட்கிழமை) நியமிக்கப்பட்டுள்ளார். இதற்கு முன்னர் லெப்.ஜெனரல் மகேஸ் சேனநாயக்க இந்த பதவியை வகித்திருந்தார். இந்நிலையில் அவரின் பதவிக்காலம் நேற்றுடன் நிறைவடைந்திருந்தது. இதனையடுத்து இராணுவத்தின் புதிய தளபதியை நியமிப்பது தொடர்பாக...

நான் அரசியல் செய்த காலத்தில் சுமந்திரன் பிறக்கவேயில்லை – ஆனந்தசங்கரி

தமிழர்களின் பிரச்சனைகளை தீர்ப்போம் என எழுத்துமூலமான உறுதிமொழியை தருபவர்களுக்கு ஆதரவு கொடுக்கலாம் என்ற வடக்கு மாகாண முன்னாள் முதலமைச்சர் க.வி.விக்னேஸ்வரனின் கருத்தினை ஏற்றுக்கொள்ள முடியாது. அவர்கள் வாக்குறுதிகளை நிறைவேற்றுவார்கள் என நினைப்பது முட்டாள்த் தனம் என தமிழர் விடுதலைக் கூட்டணியின் தலைவர் வீ.ஆனந்தசங்கரி தெரிவித்தார். யாழ்ப்பாணம் நாச்சிமார் வீதியில் அமைந்துள்ள அவரது கட்சி அலுவலகத்தில் அவர்...

கொக்குவிலில் உள்ள உணவகம் மீது தாக்குதல்!! – தாக்குதல் நடாத்தியவர்களில் ஒருவர் கைது

கொக்குவில் – பூநாறி மரத்தடிப் பகுதியில் உள்ள உணகவத்திற்குள் புகுந்த வன்முறைக் கும்பல், அங்கு தாக்குதல் நடத்திவிட்டு தப்பிச் சென்றுள்ளது. நேற்று ஞாயிற்றுக் கிழமை இரவு சுமார் 9 மணியளவில் நடந்த இந்தச் சம்பவத்தில் உணவக உரிமையாளர் காயமடைந்ததுடன், அங்கிருந்த பெறுமதியான பொருள்களும் அடித்து நொருக்கப்பட்டுள்ளன. உணவகம் மீது நடத்தப்பட்ட தாக்குதல் சம்பவம் தொடர்பில் ஒருவர்...

பளை வைத்தியசாலை அத்தியட்சகர் பயங்கரவாத விசாரணைப் பிரிவினரால் கைது!

பளை வைத்தியசாலை அத்தியட்சகர் மருத்துவர் சின்னையா சிவரூபன், பயங்கரவாத விசாரணைப் பிரிவினரால் கைது செய்யப்பட்டுள்ளார். பயங்கரவாத தடைச் சட்டத்தின் கீழ் மருத்துவர் நேற்றிரவு கைது செய்யப்பட்டார் என்று பொலிஸார் தெரிவித்தனர். பளையில் முன்னாள் போராளி ஒருவர் ஆயுதங்களுடன் கைது செய்யப்பட்ட சம்பவம் தொடர்பில் மருத்துவர் சிவரூபனிடம் பயங்கரவாத விசாரணைப் பிரிவினர் வாக்குமூலம் பதிவு செய்திருந்தனர். இந்த...

யாழ் பல்கலை மாணவர்களின் வகுப்பு புறக்கணிப்பு முடிவு!

வகுப்பு புறக்கணிப்பை மேற்கொண்டுவரும் யாழ். பல்கலைக்கழகத்தின் மாணவர்கள் தமது புறக்கணிப்பை முடிவுக்குக் கொண்டு வருவதாக அறித்துள்ளனர். இந்த விடயம் தொடர்பான மாணவர் ஒன்றியம் வெளியிட்டுள்ள அறிக்கையில், “ஒரு இனத்தினுடைய வளர்ச்சியின் முதுகெலும்பாக விளங்குவது கல்வி ஒன்றேயாகும். முப்பது ஆண்டுகால யுத்தத்தின் பின்பும் எழுந்து நிற்க நாம் இன்று கல்வியைத் தவிர வேறு எதனையும் நம்பியிருக்க முடியாது....

கட்சிகளின் தேர்தல் அறிக்கையின் பின்னரே வேட்பாளர் ஆதரவு குறித்து முடிவு – சிவாஜிலிங்கம்

ஜனாதிபதி வேட்பாளர் தொடர்பாக குறித்த கட்சிகளின் விஞ்ஞாபனத்தின் அடிப்டையிலேயே ஆதரவு தெரிவிப்போம் என தமிழீழ விடுதலை இயக்கத்தின் தவிசாளர் எம்.கே. சிவாஜிலிங்கம் தெரிவித்துள்ளார். வவுனியாவில் அமைந்துள்ள தமிழீழ விடுதலை இயக்கத்தின் அலுவலகத்தில் நேற்று (ஞாயிறற்றுக்கிழமை) இடம்பெற்ற தலைமைக் குழுவின் கூட்டத்தின் பின்னர் இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பின் போதே அவர் இவ்வாறு தெரிவித்தார். அவர் தெரிவிக்கையில், “இலங்கையின்...

போர்க்குற்றங்களில் ஈடுபட்டவரேன ஐநாவினால் குற்றம் சுமத்தப்பட்ட கோத்தாவின் நெருங்கிய சகாவுக்கு இராணுவத் தளபதி பதவி?

இராணுவத் தளபதி லெப்.ஜெனரல் மகேஸ் சேனநாயக்க நாளையுடன் ஓய்வுபெறவுள்ள நிலையில், புதிய இராணுவத் தளபதியாக மேஜர் ஜெனரல் சவேந்திர சில்வா நியமிக்கப்படவுள்ளார் என உயர்மட்ட வட்டாரங்கள் தகவல் வெளியிட்டுள்ளன. தற்போதைய இராணுவத் தளபதியின் பதவிக்காலம் நாளையுடன் முடிவடையவுள்ள நிலையில், அவரது பதவிக்காலத்தை இன்னும் சில மாதங்களுக்கு நீடிப்பதா- அல்லது புதிய இராணுவத் தளபதியை நியமிப்பதாக என்று...

அரசின் தலைவிதியை மாற்றும் வல்லமை மாணவர்களிடம் உள்ளது!! – வடக்கு மாகாண பட்டதாரிகள்

பட்டதாரிகளிடத்தே பாகுபாடு காட்டாமல் தேர்தல் வருவதற்கு முன்னர் அனைத்துப் பட்டதாரிகளுக்கும் நியமனத்தை வழங்க வேண்டுமென வடக்கு மாகாண பட்டதாரிகள், பிரதமர் ரணில் விக்ரமசிங்கவிடம் கோரிக்கை விடுத்தள்ளனர். பிரதமர் ரணில் விக்கிரமசிங்க யாழ்.மாவட்ட செயலகத்திற்கு வந்திருந்த தருணத்தில், பட்டதாரி நியமனங்கள் அனைவருக்கும் வழங்கப்படாமைக்கு எதிர்ப்புத் தெரிவிக்கும் முகமாக வட.மாகாண பட்டதாரிகள் அப்பகுதியில் கூடியிருந்தனர். இதன்போது பட்டதாரிகள் சங்கத்தின்...

எந்த ஒரு தமிழனும் கோட்டாபய ராஜபக்ஷவுக்கு வாக்களிக்கக்கூடாது!

தமிழ் மக்கள் கோட்டாபாயவிற்கு வாக்களிக்க மாட்டார்கள். வாக்களிக்க கூடாது. சுயமாக சிந்திக்கும் தமிழர்கள் அவருக்கு வாக்களிக்கமாட்டார்கள். நான் சுதந்திரக்கட்சியின் சார்பில் ஜனாதிபதி தேர்தலில் போட்டியிட போவதாக விசயம் தெரியாத சிலர் வதந்தி பரப்புகிறார்கள் என தெரிவித்துள்ளார் தமிழ் மக்கள் கூட்டணியின் செயலாளர் க.வி.விக்னேஸ்வரன். விக்னேஸ்வரன் சுதந்திரக்கட்சியில் போட்டியிட போகிறார் என சிலரால் பரப்பப்பட்டு வந்த வதந்தி...
Loading posts...

All posts loaded

No more posts