கொக்குவில் – பூநாறி மரத்தடிப் பகுதியில் உள்ள உணகவத்திற்குள் புகுந்த வன்முறைக் கும்பல், அங்கு தாக்குதல் நடத்திவிட்டு தப்பிச் சென்றுள்ளது.

நேற்று ஞாயிற்றுக் கிழமை இரவு சுமார் 9 மணியளவில் நடந்த இந்தச் சம்பவத்தில் உணவக உரிமையாளர் காயமடைந்ததுடன், அங்கிருந்த பெறுமதியான பொருள்களும் அடித்து நொருக்கப்பட்டுள்ளன.
உணவகம் மீது நடத்தப்பட்ட தாக்குதல் சம்பவம் தொடர்பில் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளதாக யாழ்ப்பாண பொலிஸார் தெரிவித்தனர்.
கொக்குவில் கே.கே.எஸ் வீதி – பூநாறி மரத்தடிப் பகுதியில் உள்ள உணவகம் ஒன்றிற்குள் நேற்று இரவு 9 மணியளவில் புகுந்த கும்பல் ஒன்று அங்கிருந்த தளபாடங்கள், கண்ணாடி அலுமாரிகளை அடித்து நொருக்கியுள்ளது.
மேலும் உணவகத்தின் உரிமையாளர் மீதும் அந்தக் கும்பல் சரமாரியான தாக்குதலை நடத்தியுள்ளது. இதில் உணகவ உரிமையாளர் தலையில் படுகாயமடைந்துள்ளார்.
சம்பவம் தொடர்பில் யாழ்ப்பாணம் பொலிஸாருக்கு தகவல் கொடுக்கப்பட்டது. சம்பவம் இடத்திற்கு வந்த பொலிஸார், உணவகத்திற்குச் சென்று தாக்குதல் நடத்திவிட்டு அருகில் உள்ள ஒரு இடத்தில் மறைந்திருந்த நபர் ஒருவரை கைது செய்துள்ளனர்.