பளை வைத்தியசாலை அத்தியட்சகர் மருத்துவர் சின்னையா சிவரூபன், பயங்கரவாத விசாரணைப் பிரிவினரால் கைது செய்யப்பட்டுள்ளார்.

பயங்கரவாத தடைச் சட்டத்தின் கீழ் மருத்துவர் நேற்றிரவு கைது செய்யப்பட்டார் என்று பொலிஸார் தெரிவித்தனர்.
பளையில் முன்னாள் போராளி ஒருவர் ஆயுதங்களுடன் கைது செய்யப்பட்ட சம்பவம் தொடர்பில் மருத்துவர் சிவரூபனிடம் பயங்கரவாத விசாரணைப் பிரிவினர் வாக்குமூலம் பதிவு செய்திருந்தனர்.
இந்த நிலையில் அவர் மேலதிக விசாரணைக்காக நேற்றிரவு கைது செய்யப்பட்டார் என்று பொலிஸார் தெரிவித்தனர்.
மருத்துவர் சின்னையா சிவரூபன், யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலை சட்ட மருத்துவ அதிகாரியாகவும் கடமையாற்றியிருந்தார் என்பதும் குறிப்பிடத்தக்கது.