- Wednesday
- May 6th, 2026
பலாலி விமான நிலையம் தொடர்பான விசேட கலந்துரையாடல் பிரதமர் ரணில் விக்ரமசிங்க தலைமையில் இடம்பெற்றது. பலாலி விமான நிலையத்தில் நேற்று (வெள்ளிக்கிழமை) நடைபெற்ற இந்தக் கலந்துரையாடலில் பலாலியிலிருந்து சர்வதேச விமான சேவையை ஆரம்பிப்பது தொடர்பாக கலந்துரையாடப்பட்டது. அந்தவகையில், வரும் செப்டெம்பரில் அலுவலக நடவடிக்கைகள் ஆரம்பிக்கப்பட்டு பின்னர் ஒக்டோபரில் விமான சேவைகளை ஆரம்பிக்கும் வகையில் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது....
பருத்தித்துறை ஆதார வைத்தியசாலையை விரைவில் மாவட்ட வைத்தியசாலையாக தரமுயர்த்துவதற்கு நடவடிக்கை எடுக்கப்படுவதாக சுகாதார அமைச்சர் ராஜித சேனாரத்ன தெரிவித்துள்ளார். யாழ்ப்பாணம், பருத்தித்துறை ஆதார வைத்தியசாலையில் விபத்து மற்றும் அதிதீவிர சிகிச்சைப் பிரிவில் புதிய கட்டிடத்திற்கான அடிக்கல்லை அமைச்சர் நேற்று (வெள்ளிக்கிழமை) நாட்டிவைத்தார். இக்கட்டடம் நெதர்லாந்து அரசாங்கத்தின் 1,180 மில்லியன் ரூபாய் செலவில் அமைக்கப்படவுள்ளது. இந்நிகழ்வில் தமிழ்...
காணியற்ற நிலையில் உள்ள முஸ்லிம்களை யாழ்ப்பாணத்தில் குடியமர்த்துவதற்கான வீட்டுத் திட்டங்களை நிர்மாணிப்பதற்கு அங்கீகாரம் வழங்கப்பட்டுள்ளது. யாழ்ப்பாணத்தில் நேற்று (வெள்ளிக்கிழமை) இடம்பெற்ற மாவட்ட அபிவிருத்திக் குழுக் கூட்டத்தின்போது, பிரதமர் ரணில் விக்ரமசிங்க குறித்த நடவடிக்கையை மேற்கொள்ளுமாறு அறிவுறுத்தியுள்ளார். சில முஸ்லிம் வர்த்தகர்கள் 7.5 ஏக்கர் காணியை வழங்கியுள்ள நிலையில், அவர்களுக்கான வீடமைப்புத் திட்டங்களை வழங்குவது தொடர்பாக கவனம்...
யாழ்ப்பாணம் வலிகாமம் வடக்கு உயர் பாதுகாப்பு வலயத்திற்குட்பட்ட ஒரு பகுதி காணியை விடுவிப்பதற்கு 1200 மில்லியன் ரூபாய் பணம் தேவைப்படுகிறது என இராணுவம் தெரிவித்துள்ளது. எனினும் இந்தப் பணத்தை அரசாங்கம் கொடுக்கவில்லை என பிரதமர் முன்னிலையில் இராணுவம் கூறியுள்ளது. யாழ்.மாவட்ட அபிவிருத்தி குழு கூட்டம்நேற்று (வெள்ளிக்கிழமை) பிரதமர் ரணில் விக்ரமசிங்க தலைமையில் யாழ். மாவட்ட செயலக...
நல்லூர் கந்தசுவாமி ஆலயத்தில் பாதுகாப்பு சோதனைகளுக்காக பொருத்தப்பட்ட புதிய ஸ்கானர் இயந்திரங்கள் அகற்றப்பட்டன. குறித்த இயந்திரம் நகைகள், ஊசிகள் என சிறு உலோகங்களுக்கும் எச்சரிக்கை ஒலி எழுப்புவதனால் அவை இன்று (வெள்ளிக்கிழமை) காலை அகற்றப்பட்டுள்ளன. நல்லூர் கந்தசுவாமி ஆலயத் திருவிழாவை முன்னிட்டு இம்முறை அதிகளவிலான பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டிருக்கின்றன. இதற்கமைய ஆலயத்திற்கு வருபவர்களிடம் விசேட சோதனைகளும்...
அதிகாரப் பகிர்வு தொடர்பாக அரசமைப்பு பேரவை தனது அறிக்கையில் வெளிப்படுத்தியுள்ள கொள்கைக் கோட்பாடே தமிழ் மக்களின் எதிர்பார்ப்புத் தொடர்பான ஐக்கிய தேசியக் கட்சியின் ஒரே நிலைப்பாடு என பிரதமர் ரணில் விக்கிரமசிங்க தெரிவித்துள்ளார். யாழ். குருநகர் பகுதியில் நவீன வசதிகளுடன் அமையவுள்ள புதிய துறைமுகத்திற்கான அடிக்கல் நாட்டு விழாவில் நேற்று(வியாழக்கிழமை) கலந்து கொண்டு உரையாற்றிய போதே...
ஐக்கிய தேசிய முன்னணி அரசாங்கத்திற்கு தமிழ்த் தேசியக் கூட்டமைப்பினர் வழங்கிவரும் ஆதரவுக்கு கல்வி இராஜாங்க அமைச்சர் விஜயகலா மகேஸ்வரன் நன்றி தெரிவித்துள்ளார். புனரமைக்கப்பட்ட மயிலிட்டி துறைமுகத்தை திறந்து வைக்கும் நிகழ்வு பிரதமர் ரணில் விக்கிரமசிங்க தலைமையில் நேற்று(வியாழக்கிழமை) இடம்பெற்றது. இந்த நிகழ்வில் கலந்து கொண்டு உரையாற்றிய போதே கல்வி இராஜாங்க அமைச்சர் விஜயகலா மகேஸ்வரன் இவ்வாறு...
சாவகச்சேரி பகுதியில் உட்கார்ந்த நிலையில் தூக்கில் தொங்கிய உயிரிழந்த நபர் ஒருவரின் சடலத்தை பொலிஸார் நேற்று (15) மீட்டுள்ளனர். சாவகச்சேரி - தனங்கிளப்பு வீதியில் கண்ணாடிப்பிட்டி மயானத்திற்கு அருகிலேயே குறித்த சடலம் மீட்கப்பட்டுள்ளது. சாரம் மற்றும் சேர்ட் ஆகியன கழற்றப்பட்ட நிலையில் உள்ளாடையுடன் சிறிய பூவரச மரத்தில் தொங்கிய நிலையில் சடலம் இருந்ததாகவும் குறிப்பிடப்பட்டுள்ளது. சுமார்...
புலமைப் பரிசில் பரீட்சைக்கான வினாத்தாளில் பாட்டத்திட்டத்துடன் தொடர்பு படாத பல கேள்விகள் உள்ளடக்கப்பட்டுள்ளதாக இலங்கை ஆசிரியர் சங்கம் தெரித்துள்ளது. அண்மையில் நடைபெற்ற ஐந்தாம் தர புலமைப் பரிசில் பரீட்சைக்கான வினாத்தாளில், பாட்டத்திட்டத்துடன் தொடர்பு படாத பல கேள்விகள் உள்ளடக்கப்பட்டிருந்ததாக இலங்கை ஆசிரியர்கள் சங்கம் தெரிவித்துள்ளது. குறிப்பாக அந்த வினாத்தாளின் 6ஆவது கேள்வி, 3ஆம், 4ஆம் அல்லது...
யுத்தத்தினால் பாதிக்கப்பட்ட யாழ்ப்பாணத்தை மீள கட்டியெழுப்ப முழுமூச்சாக செயற்படுவேன் என பிரதமர் ரணில் விக்ரமசிங்க உறுதியளித்துள்ளார். யாழ்ப்பாணத்திற்கு விஜயம் மேற்கொண்டிருந்த பிரதமர் ரணில் விக்ரமசிங்க, நேற்று (வியாழக்கிழமை) மயிலிட்டி துறைமுகத்தினை திறந்து வைத்து உரையாற்றும்போதே மேற்கண்டவாறு கூறினார். அவர் அங்கு மேலும் கருத்து தெரிவிக்கையில், “மயிலிட்டி மீன்பிடி துறைமுகம் இன்று புனரமைக்கப்பட்டு திறந்து வைக்கப்பட்டுள்ளது. இதற்கு...
மயிலிட்டி மண்ணுக்குரிய மக்கள் முற்றிலும் அந்தப் பகுதிகளில் மீள்குடியேற்றப்பட வேண்டும் என தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் மாவை சேனாதிராஜா தெரிவித்தார். இல்லாவிடின் மயிலிட்டி துறைமுகம் திறக்கப்பட்டமைக்கு அர்த்தம் இல்லாமல் போய்விடும் என்றும் மாவை சேனாதிராஜா சுட்டிக்காட்டினார். யாழ்ப்பாணத்திற்கு விஜயம் மேற்கொண்டிருந்த பிரதமர் ரணில் விக்ரமசிங்க,நேற்று (வியாழக்கிழமை) மயிலிட்டி துறைமுகத்தினை திறந்து வைத்தார். இந்த...
வரலாற்று சிறப்புமிக்க நல்லூர் கந்தசுவாமி ஆலயத்தில் பாதுகாப்பு சோதனைகளுக்காக புதிய ஸ்கானர் இயந்திரங்கள் பொருத்தப்பட்டுள்ளன. ஆலய திருவிழாவை முன்னிட்டு இம்முறை அதிகளவிலான பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டிருக்கின்றன. இதற்கமைய ஆலயத்திறகு வருபவர்களிடம் விசேட சோதனைகளும் மேற்கொள்ளப்பட்டிருந்தன. இந்நிலையில் பொலிஸாரின் இந்த சோதனை நடவடிக்கைகளால் ஆலயத்திற்கு செல்கின்ற அடியவர்கள் பல அசௌகரியங்களை எதிர்நோக்குவதாக வடக்கு ஆளுநரின் கவனத்திற்கு கொண்டு...
யாழ்ப்பாணம் மைலிட்டி துறைமுகத்தை பிரதமர் ரணில் விக்ரமசிங்க திறந்துவைத்துள்ளார். மிக நீண்டகாலத்தின் பின்னர் புனரமைப்பு செய்யப்பட்டுள்ள இந்த துறைமுகம் இன்று (வியாழக்கிழமை) காலை பிரதமர் ரணில் விக்ரமசிங்கவினால் பொதுமக்களிடம் கையளிக்கப்பட்டுள்ளது. சுமார் 30 வருடங்கள் உயர்பாதுகாப்பு வலயத்திற்குள் முடக்கப்பட்டிருந்த மைலிட்டி துறைமுகம் விடுவிக்கப்படாது என இராணுவம் உறுதியாக கூறியிருந்த நிலையில், நல்லாட்சி அரசாங்கத்தினால் விடுவிக்கப்பட்டதுடன் மக்களின்...
வடக்குக்கு வருகை தந்துள்ள பிரதமர் ரணில் விக்கிரமசிங்க, நல்லூர் கந்தசுவாமி ஆலயத்தில் இன்று வழிபாடுகளை மேற்கொண்டார். வரலாற்றுச் சிறப்புமிக்க நல்லூர் கந்தசுவாமி ஆலய வருடாந்தத் திருவிழா நடைபெற்றுவருகிறது. இன்று 10ஆம் திருவிழா இடம்பெறுகிறது. யாழ்ப்பாணத்தில் தங்கியிருக்கும் பிரதமர் ரணில் விக்கிரமசிங்க, நல்லூர் ஆலயத்துக்கு இன்று காலை வருகை தந்து வழிபாடுகளில் ஈடுபட்டார். முன்னதாக நல்லூர் ஆதீன...
நல்லுாா் ஆலயத்திற்குவரும் பக்தா்களின் நன்மைகளுக்காகவே பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டு ள்ளதாக இராணுவ தளபதி மகேஸ் சேனநாயக்க கூறியுள்ளாா். யாழ்ப்பாணத்திற்கு விஜயம் செய்துள்ள அவர், நல்லூர் கந்தசுவாமி கோயிலுக்குச் சென்று வழிபாடுகளில் ஈடுபட்டிருந்தார். அதன் பின்னர் ஊடகங்களுக்கு கருத்து வெளியிடும்போதே அவர் இவ்வாறு தெரிவித்தார்.இங்கு தொடர்ந்தும் கருத்து வெளியிட்டுள்ள அவர், “நாட்டிலுள்ள நிலைமைக்கு அமைவாக, நல்லூர் கோயிலுக்கு வரும்...
மூன்று கோரிக்கைகளை முன்வைத்து யாழ்ப்பாண பல்கலைக்கழக மாணவர்கள் இன்று 15ஆம் திகதி வியாழக்கிழமை தமது கல்வி நடவடிக்கைகளைப் புறக்கணிக்கவுள்ளதாக அறிவித்துள்ளனர். யாழ்ப்பாண பல்கலைக்கழக மாணவர் ஒன்றியத்தினால் நேற்று முன்தினம் 13ஆம் திகதி யாழ்ப்பாண பல்கலைக்கழக தகுதி வாய்ந்த அதிகாரிக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ள கடிதத்தின் மூலம் இந்த விடயம் அறிவிக்கப்பட்டுள்ளது. யாழ்ப்பாண பல்கலைக்கழகத்தில் பட்டக் கல்வியை நிறைவு...
வடக்கிற்கு விஜயம் செய்துள்ள பிரதமர் ரணில் விக்ரமசிங்க யாழ்ப்பாணத்தில் பல்வேறு அபிவிருத்தி திட்டங்களை ஆரம்பித்து வைக்கவுள்ளார். அதற்கமைய இன்று (வியாழக்கிழமை) பிரதமர் தலைமையில் யாழில் பல்வேறு நிகழ்வுகள் இடம்பெறவுள்ளன. முதல் நிகழ்வாக இன்று காலை நல்லூர் கந்தசுவாமி ஆலயத்தில் வழிபாடுகளில் ஈடுபடவுள்ள பிரதமர், அதன்பின்னர் நல்லை ஆதீன சுவாமிகளை சந்தித்து கலந்துரையாடவுள்ளார். அங்கு சைவ சமய...
இனப்படுகொலையாளியான கோட்டாபய ராஜபக்ஷவிற்கு தமிழ் மக்கள் வாக்களிக்க மாட்டார்கள் என தமிழ் தேசிய கூட்டமைப்பு தெரிவித்துள்ளது. கிளிநொச்சியில் இன்று(செவ்வாய்கிழமை) இடம்பெற்ற ஊடகவியலாளர்கள் சந்திப்பின் போதே தமிழ் தேசிய கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் சிறிதரன் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார். தமிழ் மக்களை பொறுத்த வரையில் கோட்டாபய ராஜபக்ஷ ஒரு நேரடியான இனப்படுகொலையாளி எனவும் அவர் இதன்போது தெரிவித்துள்ளார். அவர்...
பட்டதாரிகளுக்கு வழங்கப்பட்ட நியமனத்தில் 51 பேர் தமது கடமைகளைப் பொறுப்பேற்கவில்லை என வவுனியா மாவட்டச் செயலாளர் தெரிவித்துள்ளார். நாடு முழுவதும் 20 ஆயிரம் பட்டதாரிகளுக்கு வழங்கப்படும் நியமனத்தில் இரண்டாம் கட்டமாக கடந்த முதலாம் திகதி 16 ஆயிரத்து 800 பேருக்கு நியமனங்கள் வழங்கப்பட்டன. அதில் வவுனியா மாவட்டத்தில் 199 பட்டதாரிகளுக்கு நியமனம் வழங்கப்பட்டிருந்தது. அவர்களில் 197...
நல்லூர் கந்தசுவாமி ஆலய வளாகத்தில் சந்தேகத்துக்கிடமான முறையில் நடமாடிய மூன்று முஸ்லிம் இளைஞர்கள் பொலிஸாரால் கைது செய்யப்பட்டு, விசாரணைகளின் பின்னர் விடுவிக்கப்பட்டனர். யாழ்ப்பாணம் நல்லூர் கந்தசுவாமி ஆலயத்தின் வருடாந்தத் திருவிழா ஆரம்பமாகி நடைபெற்று வருகிறது. நேற்று திங்கட்கிழமை இரவு 10 மணியளவில் நல்லூர் ஆலய வீதியில் சந்தேகத்துக்கிடமான முறையில் நடமாடிய மூன்று முஸ்லிம் இளைஞர்கள் யாழ்ப்பாண...
Loading posts...
All posts loaded
No more posts
