வவுனியாவில் 913ஆவது நாட்களாக தனது 26 வயதுடைய மகனைத் தேடி தொடர் போராட்டத்தில் ஈடுபட்ட தந்தை ஒருவர் சுகயீனமாக உயிரிழந்துள்ளதாக காணாமல் ஆக்கப்பட்டோரின் உறவுகள் தெரிவித்துள்ளனர்.

வவுனியாவில் காணாமல் போயுள்ள தங்களது உறவுகளைத் தேடி சுழற்சி முறையில் முன்னெடுக்கப்பட்டு வரும் போராட்டம் நேற்றுடன்(செவ்வாய்கிழமை) 913 ஆவது நாட்களை எட்டியுள்ளது.
இந்நிலையில் 26 வயதான அச்சுதன் என்ற தனது மகனை கடந்த 2009ஆம் ஆண்டு ஓமந்தை இராணுவச் சோதனைச்சாவடியில் வைத்து கையளித்த நிலையில் தொடர் போராட்டத்தில் ஈடுபட்ட 56 வயதான வேலாயுதம் செல்வராசா 56 என்ற வயோதிபரே இவ்வாறு உயிரிழந்துள்ளார்.
எனினும், உயிரிழந்தவரின் மனைவி தொடர்ந்தும் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றார்.
வடகிழக்கு மாவட்டத்தில் போராட்டம் மேற்கொண்டு வரும் உறவுகள் நேற்று வரையிலும் 39 பேர் தமது பிள்ளைகளைத் தேடிய போராட்டத்தில் உயிரிழந்துள்ளமை குறிப்பிடத்தக்கது.