- Wednesday
- April 29th, 2026
சனி மற்றும் ஞாயிற்றுக்கிழமைகளில் நாடு முழுவதும் தனிமைப்படுத்தல் ஊரடங்கு சட்டத்தை பிறப்பிக்கும் திட்டம் தற்போதைக்கு இல்லை என பிரதி பொலிஸ்மா அதிபர் அஜித் ரோஹன தெரிவித்துள்ளார். வார இறுதி நாட்களில் நாடு முழுவதும் ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்படவுள்ளதாக வெளியாகியுள்ள தகவல் குறித்து கருத்து வெளியிடும் போதே அவர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார். இதுகுறித்து கருத்து வெளியிட்டுள்ள அவர்,...
வீட்டு கிணறு ஒன்றிலிருந்து உள்ளக புலனாய்வுதுறை அதிகாரியின் சடலம் இன்று(வெள்ளிக்கிழமை) அதிகாலை கண்டெடுக்கப்பட்டுள்ளது. வவுனியா பட்டாணிச்சூர் பட்டைக்காட்டு பகுதியில் உள்ள கிணறு ஒன்றிலிருந்தே 33 வயது மதிக்கத்தக்க இராணுவ அதிகாரியின் சடலம் கண்டெடுக்கப்பட்டுள்ளது. இச் சம்பவம் குறித்து மேலும் தெரியவருவதாவது, வவுனியா பட்டாணிச்சூர் பட்டைக்காட்டு பகுதியில் சஞ்சா வியாபாரம் நடைபெறுவதாக நேற்று மாலை இராணுவ உள்ளக...
திவுலபிடிய மற்றும் மினுவங்கொட கொரோனா கொத்தணியில் இனங்காணப்பட்டுள்ள மொத்த தொற்றாளர்களின் எண்ணிக்கை ஆயிரத்து 53 ஆக அதிகரித்துள்ளது. தொற்று நோய் விஞ்ஞான பிரிவு இதுகுறித்த தகவலினை வெளியிட்டுள்ளது. நேற்று மாத்திரம் 19 கொரோனா தொற்றாளர்கள் குறித்த கொத்தணியில் அடையாளம் காணப்பட்டுள்ளனர். தொழிற்சாலை ஊழியர் ஒருவருக்கும் மற்றும் அவர்களுடன் நெருங்கிப் பழகிய 18 பேருக்குமே இவ்வாறு கொரோனா...
இறுதி யுத்தத்தின் போது போர்க்குற்றம் நடந்தது என்பதை ஏற்றுக்கொண்ட பீல்ட் மார்ஷல் சரத் பொன்சேகா தமிழீழ விடுதலைப்புலிகளின் தலைவர் பிரபாகரனின் மகன் சிறுவர் படையணியின் தளபதி என கூறியதற்கு மன்னிப்புக் கேட்கவேண்டும் என தமிழ்த் தேசியக் கட்சியின் செயலாளரும் முன்னாள் மாகாண சபை உறுப்பினருமான எம்.கே.சிவாஜிலிங்கம் தெரிவித்தார். இலங்கை அரசாங்கத்தின் ஆட்சியாளர்களை சர்வதேச நீதிமன்றில் முற்படுத்துவதற்கும்...
“தெல்லிப்பழை புற்றுநோய் வைத்தியசாலை கதிரியக்க சிகிச்சை தொழில்நுட்பவியலாளர்களின் பணிப்புறக்கணிப்பு புற்றுநோயாளர்களுக்கான சிகிச்சையில் பாதிப்பை ஏற்படுத்தக்கூடாது. புற்றுநோயாளர்களுக்கான கதிரியக்கச் சிகிச்சை ஒழுங்குமுறையில் இடம்பெறவேண்டும்” என்று மல்லாகம் மாவட்ட நீதிமன்றம் இன்று கட்டாணை உத்தரவை வழங்கியது. புற்று நோயால் பாதிக்கப்பட்டு தெல்லிப்பழை வைத்தியசாலை கதிரியக்க சிகிச்சை மறுக்கப்பட்ட ஒருவரால் தாக்கல் செய்யப்பட்ட மனு மீதே இந்த கட்டாணை உத்தரவை...
தமிழ் தேசியக் கூட்டமைப்பின் ஒற்றுமையை முதலில் உறுதிப்படுத்த வேண்டும் என ரெலோ அமைப்பின் மன்னார் மாவட்டக் கிளை தெரிவித்துள்ளது. குறித்த விடயம் தொடர்பாக தமிழீழ விடுதலை இயக்கம் ரெலோ அமைப்பின் மன்னார் மாவட்டக் கிளை இன்று (வியாழக்கிழமை ) விடுத்துள்ள அறிக்கையிலேயே இவ்வாறு குறிப்பிடப்பட்டுள்ளது. குறித்த அறிக்கையில் மேலும் “தமிழ் தேசிய கூட்டமைப்பின் பிரதம கொரடா...
கொழும்பு தனியார் கல்வி நிறுவனத்தில் கல்வி பயிலும் மாணவர் ஒருவருக்கு கொரோனா வைரஸ் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. குறித்த மாணவன் இறுதியாக கடந்த 4ஆம் திகதி ஐ.சி.பி.டி வளாகத்திற்கு வருகை தந்துள்ளதாக ஐ.சி.பி.டி. கெம்பஸ் நிர்வாகத்தினர் அறிக்கை வெளியிட்டுள்ளனர். தற்போது குறித்த மாணவன் வைத்தியக் கண்காணிப்பில் வைக்கப்பட்டுள்ளதுடன், மாணவனுடன் தொடர்புகளை பேணியவர்கள் குறித்தும் விரைவில் நடவடிக்கை...
மினுவாங்கொடை ஆடை தொழிற்சாலையில் கொவிட்-19 தொற்று ஏற்பட்ட நிலையில் இனங்காணப்பட்ட பெண் முதலாவது தொற்றாளர் அல்ல. முதல் தொற்றாளர் யார் , எவ்வாறு தொழிற்சாலையிலுள்ளவர்களுக்கு தொற்று ஏற்பட்டது என்பதை இனங்காண்பதில் நெருக்கடி ஏற்பட்டுள்ளதாக சுகாதார அமைச்சின் தொற்று நோய் பிரிவின் பணிப்பாளர் விஷேட வைத்திய நிபுணர் சுதத் சமரவீர தெரிவித்தார். தற்போது இனங்காணப்படும் நோயாளர்களில் வைரஸின்...
திரையரங்குகள், இரவு விடுதிகள், உணவகங்கள் மற்றும் சூதாட்ட நிலையங்களை மறு அறிவித்தல் வரை மூடுவதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளது. பிரதான தொற்றுநோயியல் நிபுணர், விசேட வைத்திய நிபுணர் சுதத் சமரவீர இதனைத் தெரிவித்துள்ளார். கொரோனா தொற்றினை கட்டுப்படுத்தும் வகையில் இந்நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.
கஞ்சா மற்றும் ஏனைய போதைப்பொருள் ஊக்குவிப்பு மற்றும் வர்த்தகத்தை தடுப்பதற்கான பொறிமுறையை பலப்படுத்துவதற்கும், விரைவுபடுத்துவதற்கும் அரசாங்கம் நடவடிக்கை எடுக்கும் - கௌரவ பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ கஞ்சா மற்றும் ஏனைய போதைப்பொருள் ஊக்குவிப்பு மற்றும் வர்த்தகத்தை தடுப்பது தொடர்பில் காணப்படும் பொறிமுறையை பலப்படுத்துவதற்கும், விரைவுபடுத்துவதற்கும் அரசாங்கம் நடவடிக்கை எடுத்து வருவதாகவும், அதில் காணப்படும் மோசமான சுகாதார...
“நாட்டின் பல்வேறு பகுதிகளில் கோரோனா தொற்றாளர்கள் அடையாளம் காணப்பட்டுள்ளனர். ஆகையால், எதிர்வரும் 7 நாள்கள் தீர்மானமிக்கவை” என இராணுவத் தளபதி லெப்டினன்ட் ஜெனரல் சவேந்திர சில்வா தெரிவித்தார். “நாட்டின் பல்வேறு பகுதிகளில் 16 பேருக்கு கோரோனா தொற்றுள்ளமை கண்டறியப்பட்டுள்ளது. பல மாவட்டங்களுக்கு கோரோனா வைரஸ் பரவியுள்ளது. ஆகையால், எதிர்வரும் 7 நாட்கள் தீர்மானமிக்கது” என்று அவர்...
அனைத்து மதத் தலங்களுக்கும் செல்வதை இயலுமான வரை குறைத்துக் கொள்ளுமாறு அரசு கேட்டுக்கொண்டுள்ளது. சமய நிகழ்வுகளை இயலுமானளவு வரையறுத்துக் கொள்ளுமாறும் அறிவிக்கப்பட்டுள்ளது. புத்தசாசன மத மற்றும் கலாசார அலுவல்கள் அமைச்சு நேற்றையதினம் (07) புதன்கிழமை இந்த அறிவிப்பை அறிக்கை ஒன்றின் ஊடாக விடுத்துள்ளது.
வடக்கு, வடமத்திய, கிழக்கு, ஊவா மற்றும் வடமேல் மாகாணங்களில் பல இடங்களில் பிற்பகல்வேளையில் மழையோ அல்லது இடியுடன் கூடிய மழையோ பெய்யக் கூடிய சாத்தியம் காணப்படுகின்றது. சில இடங்களில் 50 மி.மீ க்கும் அதிகமான பலத்த மழைவீழ்ச்சி எதிர்பார்க்கப்படுகின்றது. மேல், சப்ரகமுவ மற்றும் மத்தியமாகாணங்களிலும் காலி மற்றும் மாத்தறை மாவட்டங்களிலும் பல இடங்களில் மழை பெய்யும்...
கம்பஹா – மினுவங்கொடை ஆடைத்தொழிற்சாலையில் இருந்து கொரோனா வைரஸ் பரவியமைக்கும் இந்தியர்களுக்கும் தொடர்புண்டு என கூறுவது உண்மைக்கு புறம்பான விடயம் என இராணுவத் தளபதி சவேந்திர சில்வா தெரிவித்துள்ளார். அரசாங்க தகவல் திணைக்களத்தில் நேற்று (புதன்கிழமை) இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துகொண்டு கருத்து வெளியிடும்போதே அவர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார். இதன்போது தொடர்ந்தும் கருத்து வெளியிட்ட அவர்,...
கோரோனா தொற்றால் பாதிக்கப்பட்ட 62 வயதுடைய முதியவர், ராகமை வைத்தியசாலையில் இருந்து தப்பித்துள்ள நிலையில் அவரைக் கண்டறிவதற்கு உதவுமாறு பொலிஸ் தலைமையகம் கேட்டுள்ளது. இல. 307 வத்த, பெலியகொட பகுதியைச் சேர்ந்த தோன் சரத் குமார என்ற குறித்த நபரை அடையாளம் கண்டால், உடனடியாக அருகிலுள்ள பொலிஸ் நிலையத்துக்கு அறிவிக்குமாறு பொலிஸ் தலைமையகம் கேட்டுக்கொண்டுள்ளது.
கொரோனா வைரஸ் பரவலை கட்டுப்படுத்துவதற்காக பொலிஸ் மா அதிபர் கட்டுப்பாட்டு மையம் மற்றும் பொலிஸ் மா அதிபர் செயற்பாட்டு மையம் என்பன பொலிஸ் தலைமையகத்தில் ஸ்தாபிக்கப்பட்டுள்ளன. இந்த நிலையில், கொரோனா வைரஸ் பரவல் குறித்து பொதுமக்கள் 1933 என்ற அவசர இலக்கத்திற்கு பொலிஸ் மா அதிபர் கட்டுப்பாட்டு மையத்தை தொடர்புகொண்டு தகவல்களை வழங்க முடியும் என...
முன்னர் அறிவிக்கப்பட்ட திகதிகளில் கல்வி பொதுத்தராதர உயர்தரம் மற்றும் 5 ஆம் ஆண்டு புலமைப்பரிசில் பரீட்சைகளை நடாத்த அரசாங்கம் முடிவு செய்துள்ளதாக கல்வி அமைச்சர் ஜி.எல்.பீரிஸ் தெரிவித்துள்ளார். தற்போது இடம்பெற்றுவரும் விசேட செய்தியாளர் சந்திப்பில் கலந்துகொண்டு கருத்து தெரிவிக்கும்போதே அவர் மேற்கண்டவாறு கூறினார். தேவையான சுகாதார வழிகாட்டுதல்கள் மற்றும் நெறிமுறைகளுக்கு ஏற்ப பரீட்சைகள் நடத்தப்படும் என்றும்...
யாழ். மாவட்டத்தில் நீண்ட காலமாக பல்வேறு கொள்ளை மற்றும் வழிப்பறி சம்பவங்களில் ஈடுபட்டு வந்த கொள்ளை கும்பலை யாழ்ப்பாணம் மாவட்ட குற்றத் தடுப்பு பொலிஸார் கைது செய்துள்ளனர். இருபாலை மற்றும் கோப்பாய் பகுதிகளைச் சேர்ந்த இருவரே நீண்ட காலமாக தலைமறைவாக இருந்த நிலையில் இன்று கைது செய்யப்பட்டுள்ளனர். மானிப்பாய், காரைநகர், கொடிகாமம் சாவகச்சேரி, காங்கேசன்துறை, கிளிநொச்சி...
ஹம்பகா மாவட்டத்திலிருந்து யாழ்ப்பாணம் வந்திருந்த கோப்பாய் பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி தனிமைப்படுத்தப்பட்டுள்ளார். அபாய பிரதேசமான ஹம்பகா மாவட்டத்திலிருந்து குறித்த பொலிஸ் அதிகாரி யாழ்ப்பாணம் வந்திருந்த நிலையில் தனிமைப்படுத்தப்படாமலிருந்தார். இதனையடுத்து குறித்த விடயம் சுகாதார பிரிவின் கவனத்திற்கு கொண்டுவரப்பட்டதை தொடர்ந்து பொலிஸ் அதிகாரி அவருடைய இருப்பிடத்திலேயே இன்று தனிமைப்படுத்தப்பட்டுள்ளார். கோப்பாய் பிரதேச மருத்து அதிகாரி இதற்கான நடவடிக்கைகளை...
வடக்கில் மன்னார், வவுனியா மற்றும் முல்லைத்தீவு பிரதேசங்களுக்கான 6682 வீடுகளை கொண்ட வீட்டுத்திட்டம் அடுத்த ஆண்டு பூர்த்தியாகும் என பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ தெரிவித்தார். மேலும் இந்த வேலைத்திட்டத்தை அரசாங்கம் முழுமைப்படுத்தி வழங்கும் எனவும் அவர் வாக்குறுதியளித்தார். நாடாளுமன்றில் இன்று (புதன்கிழமை) பிரதமர் இடத்திலான கேள்வி நேரத்தில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் வன்னி மாவட்ட நாடாளுமன்ற...
Loading posts...
All posts loaded
No more posts
