Ad Widget

நாட்டில் கொரோனா தொற்றினால் மேலும் இருவர் மரணிப்பு!

நாட்டில் கொரோனா வைரஸ் தொற்றினால் மேலும் இருவர் உயிரிழந்துள்ளதாக சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகம் உறுதிப்படுத்தியுள்ளார்.

இந்நிலையில், நாட்டில் நேற்றைய தினம் மொத்தமாக 538 புதிய கொரோனா தொற்று நோயாளர்கள் அடையாளம் காணப்பட்டுள்ளனர்.

அதனால் இலங்கையில் பதிவாகியுள்ள மொத்த கொரோனா தொற்றாளர்களின் எண்ணிக்கையானாது 30,613 ஆக உயர்வடைந்துள்ளதாக சுகாதார அமைச்சின் தேசிய தொற்று நோயியல் பிரிவு தெரிவித்துள்ளது.

நேற்றைய தினம் அடையாளம் காணப்பட்ட 538 நோயாளர்களில் 448 பேர் மினுவாங்கொடை – பேலியகொட கொத்தணிப் பரவலுடன் தொடர்புடையவர்கள் ஆவர். ஏனைய 69 பேர் வெளிநாட்டிலிருந்து வருகை தந்தவர்களும், 21 பேர் சிறைச்சாலைகளில் உள்ளவர்களும் ஆவர்.

இதேவேளை நேற்றைய தினம் கொரோனா தொற்றுக்குள்ளான 461பேர் பூரண குணமடைந்த நிலையில் வைத்தியசாலைகளிலிருந்தும் வெளியேறியுள்ளனர்.

அதனால் நாட்டில் குணமடைந்த மொத்த கொரோனா நோயாளர்களது எண்ணிக்கை 22,261 ஆக உயர்வடைந்துள்ளது.

தற்போது நாடு முழுவதும் உள்ள வைத்தியசாலை மற்றும் சிகிக்சை நிலையங்களில் 8,206 பேர் சிகிச்சை பெற்று வருவதுடன், கொரோனா தொற்று சந்தேகத்தில் 716 பேர் வைத்தியக் கண்காணிப்பிலும் உள்ளனர்.

இதனிடையே கொரோனா தொற்றுக்குள்ளாகி மேலும் இருவர் உயிரிழந்திருப்பதாக அரசாங்க தகவல் திணைக்களத்தினால் நேற்று மாலை வெளியிடப்பட்ட அறிக்கையில் தெரிவிக்கப்பட்டிருந்தது.

அதனால் நாட்டில் கொரோனா தொற்றால் பதிவான மொத்த உயிரிழப்புகளின் எண்ணிக்கை 146 ஆக அதிகரித்தது.

01.கொழும்பு 02 பிரதேசத்தைச் சேர்ந்த 66 வயது பெண். கொவிட் 19 தொற்றுக்குள்ளானவர் என இனங்காணப்பட்ட பின்னர் கொழும்பு தேசிய வைத்தியசாலையில் இருந்து ஹோமாகம ஆதார வைத்தியசாலைக்கு மாற்றப்பட்டுள்ளார். அந்த வைத்தியசாலையில் டிசம்பர் மாதம் 10 ஆம் திகதி உயிரிழந்துள்ளார். மரணத்திற்கான காரணம் கொவிட் 19 தொற்றினால் இருதயத்தில் ஏற்பட்ட தொற்று நிலையென தெரிவிக்கப்பட்டுள்ளது.

02.வெலிகம பிரதேசத்தைச் சேர்ந்த 54 வயதான பெண் . டுபாயிலிருந்து வந்ததையடுத்து தனிமைப்படுத்தல் மத்திய நிலையத்திலிருந்து ஹோமாகம ஆதார வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். அந்த வைத்தியசாலையில் தீவிர சிகிச்சைப் பிரிவில் சிகிச்சைப் பெற்று வந்ததுடன் 2020 டிசம்பர் மாதம் 10 ஆம் திகதி உயிரிழந்துள்ளார். மரணத்திற்கான காரணம் நீரிழிவு நோய் நிலைமை அதிகரித்தமை மற்றும் கொவிட் நிமோனியா நோய் நிலைமை என தெரிவிக்கப்பட்டுள்ளது என்று தெரிவிக்பட்டுள்ளது.‍

Related Posts