- Wednesday
- April 29th, 2026
யாழ். மாவட்டத்தில் நீண்ட காலமாக பல்வேறு கொள்ளை மற்றும் வழிப்பறி சம்பவங்களில் ஈடுபட்டு வந்த கொள்ளை கும்பலை யாழ்ப்பாணம் மாவட்ட குற்றத் தடுப்பு பொலிஸார் கைது செய்துள்ளனர். இருபாலை மற்றும் கோப்பாய் பகுதிகளைச் சேர்ந்த இருவரே நீண்ட காலமாக தலைமறைவாக இருந்த நிலையில் இன்று கைது செய்யப்பட்டுள்ளனர். மானிப்பாய், காரைநகர், கொடிகாமம் சாவகச்சேரி, காங்கேசன்துறை, கிளிநொச்சி...
ஹம்பகா மாவட்டத்திலிருந்து யாழ்ப்பாணம் வந்திருந்த கோப்பாய் பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி தனிமைப்படுத்தப்பட்டுள்ளார். அபாய பிரதேசமான ஹம்பகா மாவட்டத்திலிருந்து குறித்த பொலிஸ் அதிகாரி யாழ்ப்பாணம் வந்திருந்த நிலையில் தனிமைப்படுத்தப்படாமலிருந்தார். இதனையடுத்து குறித்த விடயம் சுகாதார பிரிவின் கவனத்திற்கு கொண்டுவரப்பட்டதை தொடர்ந்து பொலிஸ் அதிகாரி அவருடைய இருப்பிடத்திலேயே இன்று தனிமைப்படுத்தப்பட்டுள்ளார். கோப்பாய் பிரதேச மருத்து அதிகாரி இதற்கான நடவடிக்கைகளை...
வடக்கில் மன்னார், வவுனியா மற்றும் முல்லைத்தீவு பிரதேசங்களுக்கான 6682 வீடுகளை கொண்ட வீட்டுத்திட்டம் அடுத்த ஆண்டு பூர்த்தியாகும் என பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ தெரிவித்தார். மேலும் இந்த வேலைத்திட்டத்தை அரசாங்கம் முழுமைப்படுத்தி வழங்கும் எனவும் அவர் வாக்குறுதியளித்தார். நாடாளுமன்றில் இன்று (புதன்கிழமை) பிரதமர் இடத்திலான கேள்வி நேரத்தில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் வன்னி மாவட்ட நாடாளுமன்ற...
“வசந்தபுரம் வீட்டுத்திட்டங்களுக்கான மீதிப்பணம் வழங்கும் செயற்திட்டம் நேற்றையதினம் (06) காலை இடம்பெற்றது. இந்த பணம் தேசிய வீடமைப்பு அதிகாரசபையின் ஒழுங்கமைப்பில் யாழ் மாவட்ட அபிவிருத்தி ஒருங்கிணைப்பாளரும் பாராளுமன்ற குழுக்களின் பிரதி தவிசாளர் அங்கஜன் இராமநாதன் அவர்களின் பிரத்தியேக செயலாளரும் கரவெட்டி பிரதேச சபை உறுப்பினருமான சதாசிவம் இராமநாதன் அவர்களால் வசந்தபுரம் நாவாந்துறை அண்ணா சனசமூக நிலையத்தில்...
ஹம்பகா - மினுவாங்கொட ஆடை தொழிற்சாலையில் பணியாற்றிய யாழ்ப்பாணத்தை சேர்ந்த 10 பேர் கொரோனா தொற்றுக்குள்ளாகியுள்ள நிலையில், அவர்கள் கொழும்பிலேயே சிகிச்சை பெற்றுவருவதாக மாகாண சுகாதார பணிப்பாளர் வைத்திய கலாநிதி ஆ.கேதீஸ்வரன் கூறியுள்ளார். தொற்றுக்குள்ளான 10 போில் 9 பேர் புங்குடுதீவை சேர்ந்தவர்கள் எனவும், மற்றொருவர் சாவகச்சோியை சேர்ந்தவர் எனவும் பணிப்பாளர் கூறியுள்ளதுடன், தொற்றுக்குள்ளானவர்கள் யாழ்ப்பாணம்...
விடுதலைப் புலிகளின் தலைவர் வே.பிரபாகரனின் இளைய மகன் பாலச்சந்திரன், விடுதலைப் புலிகள் அமைப்பின் குழந்தைப் படையணியின் தளபதியாக இருந்தார், அவரை இராணுவம் கொல்லவில்லை என ஐக்கிய மக்கள் சக்தியின் நாடாளுமன்ற உறுப்பினர் பீல்ட் மார்ஷல் சரத் பொன்சேகா தெரிவித்துள்ளார். நேற்றையதினம் (6) நாடாளுமன்றத்தில் நடந்த விவாதத்தில் உரையாற்றிய போது இதனை தெரிவித்தார். அகில இலங்கை தமிழ்...
யாழ் மாவட்டத்தில் தற்போதைய அனர்த்தத்தினை மிகவும் சிக்கலான நிலைமையில் எதிர்கொள்ளும் பாரிய ஒரு அபாயகரமான நிலைமை ஏற்பட்டிருக்கின்றதாக யாழ் மாவட்ட அரசாங்க அதிபர் க. மகேசன் தெரிவித்துள்ளார். யாழ் மாவட்ட செயலகத்தில் யாழ்ப்பாண மாவட்ட கொரோனா ஒழிப்பு செயலணி கூட்டம் நேற்று இடம்பெற்றது. கூட்ட நிறைவில் ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கும் போதே அரசாங்க அதிபர் மேற்கண்டவாறு...
போலித் தமிழ்த் தேசியத்தின் எடுபிடிகளாக இருந்து, மக்களின் அவலங்களுக்கு துணைபோகாமல், எமது மக்களின் நலன்சார்ந்து செயற்படுவதற்கு அனைத்து தமிழ் ஊடகங்களும் முன்வர வேண்டும் என அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா கோரிக்கை விடுத்துள்ளார். நாடாளுமன்றத்தில் நேற்று(செவ்வாய்கிழமை) நிதித் திருத்தக் கட்டளைச் சட்டத்தின் இரண்டாம் வாசிப்பு மற்றும் ஏற்றுமதி, இறக்குமதி சட்டத்தின் கீழான கட்டளைகள் தொடர்பிலான விவாதத்தில் கலந்து...
யாழ்ப்பாணம் மாவட்டத்தில் இன்று(புதன்கிழமை) முதல் நடைமுறைக்கு வரும் வகையில் அனைத்து தனியார் கல்வி நிலையங்களையும் காலவரையறையின்றி மூடுவதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளது. யாழ்ப்பாணம் மாவட்ட செயலகத்தில் நேற்று இடம்பெற்ற உயர்மட்டக் கூட்டத்திலேயே இந்தத் தீர்மானம் எட்டப்பட்டது. நாட்டில் கோரோனா வைரஸ் பரவல் ஏற்பட்டுள்ள நிலையில் யாழ்ப்பாணம் மாவட்டத்தில் முன்னெடுக்கப்பட வேண்டிய நடவடிக்கைகள் தொடர்பில் யாழ்ப்பாணம் மாவட்டச் செயலாளர் க.மகேசன்...
நாட்டில் மறுஅறிவித்தல் வரும் வரை மாநாடுகள், திருவிழாக்கள், கண்காட்சிகள், இசை நிகழ்ச்சிகள், ஊர்வலங்கள், அணிவகுப்புகள் மற்றும் அத்தியாவசியமற்ற வகையில் கூடுவதற்கு தடை விதிக்கப்பட்டுள்ளதாக சுகாதார அமைச்சு அறிவித்துள்ளது. பதில் சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகம் மருத்துவர் எஸ்.சிறிதரன் இந்த பணிப்பை விடுத்துள்ளார். நாட்டில் ஏற்பட்ட கோரோனா வைரஸ் பரவல் நிலையை கருத்தில் எடுத்து தனிமைப்படுத்தல் சட்டத்தின்...
ஆவா வினோதனின் வீட்டுக்குள் புகுந்த வன்முறைக் கும்பல் ஒன்று அங்கு உள்ள போருள்களை சேதப்படுத்தியும் மோட்டார் சைக்கிள்கள் இரண்டை தீவைத்து எரியூட்டியும் அட்டூழியத்தில் ஈடுபட்டுவிட்டுத் தப்பித்துள்ளது. இணுவில் துரை வீதியில் உள்ள வீட்டிலேயே இன்று செவ்வாய்க்கிழமை பிற்பகல் 2.30 மணியளவில் இந்தச் சம்பவம் இடம்பெற்றது. கடந்த 26ஆம் திகதி யாழ்ப்பாணம் நகர் பெருமாள் கோவிலடியில் மானிப்பாயைச்...
யாழ்ப்பாண மத்திய பேருந்து நிலையத்தில் கிருமிநீக்கும் நடவடிக்கை இன்று (செவ்வாய்க்கிழமை) முன்னெடுக்கப்பட்டது. யாழ்ப்பாண பொலிஸார் யாழ்ப்பாண மாநகர சபையின் சுகாதார பிரிவின் ஏற்பாட்டில் யாழ்ப்பாண நகரப் பகுதி மற்றும் மத்திய பேருந்து நிலையம் தனியார் பேருந்து தரிப்பிடம், யாழ் நகர வர்த்தக நிலையங்களிற்கு கிருமி தொற்று நீக்கி மருந்து விசிறும் பணி முன்னெடுக்கப்பட்டது கொரோணா இரண்டாம்...
நாட்டில் கொரோனா தொற்று உறுதியான மொத்த நோயாளிகளின் எண்ணிக்கை 3,979 ஆக அதிகரித்துள்ளது. இன்று இதுவரையான காலப்பகுதியில் 466 பேர் புதிதாக அடையாளம் காணப்பட்டுள்ள நிலையில் இந்த அதிகரிப்பு ஏற்பட்டுள்ளதாக சுகாதார அமைச்சின் தொற்றுநோயியல் பிரிவு அறிவித்துள்ளது. இதேவேளை நாட்டில் கொரோனா தொற்றில் இருந்து கடந்த 24 மணிநேரத்தில் மேலும் 07 பேர் குணமடைந்துள்ளனர். அதன்படி,...
கம்பஹாவில் இருந்து யாழ்ப்பாணப் பல்கலைக்கழகத்துக்கு அண்மைய நாள்களில் வருகை தந்த 9 மாணவர்களின் மாதிரிகள் நேற்றையதினம் (05) மாலை பெறப்பட்டு பிசிஆர் பரிசோதனைக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளன. நல்லூர் சுகாதார மருத்துவ அதிகாரியால் இந்த நடவடிக்கை முன்னெடுக்கப்பட்டுள்ளது. இந்த 9 மாணவர்கள் அவர்கள் தங்கியுள்ள இடங்களில் தனிமைப்படுத்தப்பட்டுள்ளனர். அவர்களின் பிசிஆர் பரிசோதனை அறிக்கை இன்று மாலை (06)...
புங்குடுதீவு - குறிகட்டுவான் ஊடாக தீவு பகுதிகளுக்கான படகு சேவைகள் இன்று தொடக்கம் முற்றாக நிறுத்தப்படுவதாக அறிவிக்கப்பட்டிருக்கின்றது. புங்குடுதீவு ஊடான பொது போக்குவரத்து நடவடிக்கைகள் முற்றாக நிறுத்தப்பட்டதை தொடர்ந்து இந்த தீர்மானம் எடுக்கப்பட்டிருக்கின்றது. மினுவாங்கொட ஆடைத் தொழிற்சாலையில் பணிபுரியும் புங்குடுதீவைச் சேர்ந்த பெண்கள் இருவர் வீடு திரும்பிய நிலையில் அவர்களுடன் தொடர்புடையோரை தனிமைப்படுத்தும் நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டன....
கொரோனா தொற்றுக்குள்ளான யாழ்.புங்குடுதீவை சேர்ந்த பெண் புத்தளத்திலிருந்து கொடிகாமம் வரையில் பயணித்த இ.போ.ச பேருந்தில் பயணித்த ஒரு சிலரே தம்மை அடையாளப்படுத்தியிருக்கும் நிலையில் ஏனையவர்களும் தம்மை அடையாளப்படுத்துமாறு மாகண சுகாதார பணிப்பாளர் வைத்திய கலாநிதி ஆ.கேதீஸ்வரன் மீண்டும் கோரிக்கை விடுத்துள்ளார். இது குறித்து மேலும் அவர் கேட்டுள்ளதாவது, புத்தளத்திலிருந்து - கொடிகாமம் வந்து பின்னர் பருத்துறைக்கு...
ஆட்பதிவுத் திணைக்களத்தின் சேவைகள் தற்காலிகமாக இடைநிறுத்தப்பட்டுள்ளதாக ஆட்பத்திவுத் திணைக்களத்தின் ஆணையாளர் நாயகம் தெரிவித்துள்ளார். இந்த நிலையில், தேசிய அடையாள அட்டையைப் பெற்றுக்கொள்ளும் ஒருநாள் சேவை உள்ளிட்ட பொது மக்கள் சேவைகள் அனைத்தும் நாளை முதல் மூன்று நாட்களுக்கு இடம்பெற மாட்டாதென அறிவிக்கப்பட்டுள்ளது.
இலங்கையில் கொவிட்-19 பரவலின் தற்போதைய நிலைமை குறித்து நாளைய தினமே முக்கிய தீர்மானங்கள் எடுக்கப்படும் என அமைச்சரவை பேச்சாளர் கெஹலிய ரம்புக்வெல்ல தெரிவித்துள்ளார். இன்று இடம்பெற்ற அமைச்சரவை கூட்டத்தின் முடிவுகளை அறிவிக்கும் ஊடகவியலாளர் மாநாட்டின் போதே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார். இதன் போது அவர் மேலும் தெரிவிக்கையில், நாளைய தினம் (07) வெளியாகவுள்ள பி.சி.ஆர். பரிசோதனைகளின்...
மினுவாங்கொட ஆடைத் தொழிற்சாலையில் பணிபுரியும் புங்குடுதீவைச் சேர்ந்த பெண்ணுக்கு கோரோனா வைரஸ் தொற்றுள்ளமை உறுதிப்படுத்தப்பட்ட நிலையில், அவர் புத்தளத்திலிருந்து கொடிகாமம் வரை பயணித்த பருத்தித்துறை சாலைக்குச் சொந்தமான பேருந்தில் பயணித்த 50பேர் வரை அடையாளம் காணப்படவில்லை என்று சுகாதாரத் துறை அறிவித்துள்ளது. எனவே அந்தப் பேருந்தில் பயணித்தவர்கள் உடனடியாக மாகாண சுகாதாரத் திணைக்களத்தின் 021 222...
மினுவாங்கொட ஆடைத் தொழிற்சாலையில் பணிபுரியும் புங்குடுதீவைச் சேர்ந்த பெண்ணுக்கு கோரோனா வைரஸ் தொற்றுள்ளமை உறுதிப்படுத்தப்பட்ட நிலையில் அவர் புத்தளத்திலிருந்து கொடிகாமம் வரை பயணித்த பருத்தித்துறை சாலைக்குச் சொந்தமான பேருந்தின் சாரதி, நடத்துனர் இருவரும் தனிமைப்படுத்தப்பட்டுள்ளனர். இந்த தகவலை பருத்தித்துறை சுகாதார மருத்துவ அதிகாரி பணிமனை தெரிவித்துள்ளது. அத்துடன், பருத்தித்துறை பேருந்தில் பயணித்தவர்கள் சமூகப்பொறுப்புடன் தம்மையும் சமூகத்தையும்...
Loading posts...
All posts loaded
No more posts
