- Wednesday
- April 29th, 2026
வவுனியா தோணிக்கல் ஆலடிப்பகுதியில் வசிக்கும் குடும்பமொன்றினை அண்மையில் சந்தித்த ஒருவருக்கு கொரனா தொற்று உறுதிப்படுத்தப்பட்டுள்ளதை அடுத்து அந்தக் குடும்பத்தைச் சேர்ந்தவர்கள் தனிமைப்படுத்தப்பட்டுள்ளனர். அத்தோடு குறித்த பகுதிக்குள் பிரவேசிக்க வேண்டாமென அறிவுறுத்தப்பட்டுள்ளது. ஆடைத்தொழிற்சாலையில் பணிபுரியும் புங்குடுதீவைச் சேர்ந்த பெண்ணொருவருக்கு கொரோனா தொற்று உள்ளமை உறுதி செய்யப்பட்டுள்ளது. குறித்த பெண் வவுனியா ஆலடிப்பகுதியில் வசிக்கும் குடும்பமொன்றினை அண்மையில் சந்தித்து...
நாட்டில் கொரோனா தொற்றுக்குள்ளான மேலும் 07 பேர் அடையாளம் காணப்பட்டுள்ளதாக தேசிய தொற்று நோயியல் பிரிவு தெரிவித்துள்ளது. இதனையடுத்து, இலங்கையில் கொரோனா வைரஸ் தொற்றினால் பாதிக்கப்பட்டவர்களின் மொத்த எண்ணிக்கை 3 ஆயிரத்து 513ஆக அதிகரித்துள்ளது. இந்த நிலையில், கம்பஹா – மினுவங்கொடை ஆடைத் தொழிற்சாலையில் பணியாற்றிய கொரோனா தொற்றுக்கு உள்ளான பெண்ணுடன் தொடர்பை பேணிய மேலும்...
தற்போதுள்ள கொரோனா சமூக தொற்று தொடர்பில் வடக்கு மாகாண மக்கள் மிகவும் அவதானமாக செயற்பட வேண்டும் என வடக்கு மாகாண சிரேஷ்ட பிரதிப் பொலிஸ்மா அதிபர் சஞ்சீவ தர்மரெட்ண அவசர கோரிக்கை விடுத்துள்ளார் தற்போதுள்ளகொரோனா நிலைமைகள் தொடர்பில் இன்று (திங்கட்கிழமை) ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கும் போது இவ்வாறு குறிப்பிட்டுள்ளார். தொடர்ந்து கருத்து தெரிவித்த அவர் “வடக்கு...
சமூகத்தில் கொரோனா தொற்று பரவுவதை தடுப்பதற்கு பொதுமக்கள் விழிப்பாக செயற்பட வேண்டியது அவசியம் என யாழ்ப்பாண போதனா வைத்தியசாலையின் பிரதிப் பணிப்பாளர் சி.யமுனாநந்தா தெரிவித்துள்ளார். தற்போது நாட்டில் ஏற்பட்டுள்ள கொரோணா தொற்று நிலைமை தொடர்பில் கருத்து தெரிவிக்கையில் அவர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார். தொடர்ந்து கருத்து தெரிவித்த அவர், “இலங்கையில் கொரோணா தொற்றானது மீண்டும் சமுகமட்டத்தில் பரவும்...
இலங்கையில் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 3 ஆயிரத்து 471 ஆக அதிகரித்துள்ளது. ஏற்கனவே 3402 பேர் அடையாளம் காணப்பட்டிருந்த நிலையில், சற்று முன்னர் மேலும் 69 பேர் அடையாளம் காணப்பட்டனர். திவுலுப்பிட்டிய பகுதியில் கொரோனா தொற்றாளர் ஒருவர் அடையாளம் காணப்பட்டதை அடுத்து அவருடன் ஆடை தொழிற்சாலையில் பணியாற்றிய நபர்களிடம் நேற்று பீ.சீ.ஆர் பரிசோதனைகள் மேற்கொள்ளப்பட்டன....
கம்பஹா - திவுலப்பிட்டிய பிரதேசத்தில் பெண்ணொருவர் கொரோனா தொற்றுக்குள்ளானமை உறுதிப்படுத்தப்பட்டுள்ள போதிலும் அவருக்கு எவ்வாறு தொற்று ஏற்பட்டது என்பது இணங்காணப்படவில்லை. இது போன்று சமூகத்தில் தொற்றுக்குள்ளானவர்கள் இனங்காணப்படக் கூடிய வாய்ப்புக்கள் இருப்பதால் மக்கள் அனைவரையும் மிகவும் பாதுகாப்பாக இருக்குமாறு அறிவுறுத்துகின்றோம் என இராணுவத்தளபதி லெப்டினன் ஜெனரல் சவேந்திர சில்வா தெரிவித்தார். கொவிட்-19 கட்டுப்படுத்தலுக்கான தேசிய செயற்பாட்டு...
வல்வெட்டித்துறையில் இடம்பெறும் வல்வை உதைபந்தாட்ட பிரிமியர் லீக் தொடரின் நேற்றைய முதல் நாள் ஆரம்ப நிகழ்வில் அணி ஒன்றின் கொடியில் உறுமும் புலிகளின் சின்னம் இருந்தமையால் இராணுவத்தினரும் பொலிஸாரும் கடும் எதிர்ப்பை வெளியிட்டுள்ளனர். வல்வெட்டித்துறை ஊரணி மைதானத்தில் இந்த உதைபந்தாட்டத் தொடர் நேற்று ஆரம்பமாகி இடம்பெறுகிறது. அந்த சின்னம் பொறிக்கப்பட்ட கொடியை ஏற்றுவதற்கோ அல்லது காட்சிப்படுத்துவதற்கோ...
புங்குடுதீவு ஊரதீவு பாணாவிடை சிவன் ஆலய பூசகர் கொலையுடன் தொடர்புடையவர்கள் என்ற குற்றச்சாட்டில் கைது செய்யப்பட்ட அவரது உதவியாளர் உள்ளிட்ட மூவரை வரும் ஒக்டோபர் 16ஆம் திகதிவரை விளக்கமறியலில் வைக்க ஊர்காவற்றுறை நீதிவான் நிதிமன்றம் உத்தரவிட்டது. கிளிநொச்சியைச் சேர்ந்த இராசையா இராசரூப சர்மா (வயது-32) என்ற ஊரதீவு பாணாவிடை சிவன் கோவில் பூசகர் கொலை செய்யப்பட்ட...
நாடு முழுவதும் இன்று முதல் ஆரம்பமாகும் இரண்டாம் தவணை விடுமுறையானது தனியார் மற்றும் இலங்கையில் அமைந்துள்ள சர்வதேச பாடசாலைகளுக்கும் பொருந்தும் என கல்வியமைச்சு அறிவித்துள்ளது. இதேவேளை, கொழும்பு மற்றும் கம்பஹா மாவட்டத்தில் உள்ள சகல தனியார் வகுப்புக்களும் இன்று முதல் மறுஅறிவித்தல் வரும்வரை மூடப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது. அதேபோன்று, அனைத்து முன்பள்ளிகளும் இன்று முதல் மூடப்படுகிறது. கம்பஹா...
இலங்கையில் மேலும் இருவருக்கு கொரோனா வைரஸ் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளதாக சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளது. இதனையடுத்து நாட்டில் கொரோனா தொற்று உறுதியானவர்களின் எண்ணிக்கை 3 ஆயிரத்து 402 ஆக அதிகரித்துள்ளது. இதுத் தவிற நேற்றைய தினம் மேலும் ஐவருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டிருந்தது. உக்ரைன் நாட்டைச் சேர்ந்த கடலோடி ஒருவருக்கும் சவுதி அரேபியாவில் இருந்து...
நாட்டிலுள்ள அனைத்து பாடசாலைகளும் இரண்டாம் தவணை விடுமுறைக்காக நாளை (05) முதல் மூடப்படுவதாக கல்வி அமைச்சு அறிவித்துள்ளது. நாடளாவிய ரீதியில் உள்ள அனைத்து அரசாங்க பாடசாலைகளுக்குமான 2 ஆம் தவணைக்கான விடுமுறை எதிர்வரும் வௌ்ளிக்கிழமை (09) முதல் வழங்கப்படுவதாக கல்வி அமைச்சு ஏற்கனவே அறிவித்திருந்தமை குறிப்பிடத்தக்கது.
மினுவாங்கொட ஆடைத் தொழிற்சாலை பெண் பணியாளருக்கு கோரோனா வைரஸ் தொற்று உள்ளமை நேற்றிரவு கண்டறியப்பட்டுள்ள நிலையில் அங்கு பணி புரியும் புங்குடுதீவைச் சேர்ந்த பெண்கள் இருவர் உள்பட அவர்களுடன் தொடர்புடையவர்கள் என 20 பேர் சுயதனிமைப்படுத்தலுக்கு உள்படுத்தப்பட்டுள்ளனர். வேலணை சுகாதார மருத்துவ அதிகாரியின் அறிவுறுத்தலுக்கு அமைய இந்த நடவடிக்கை முன்னெடுக்கப்பட்டுள்ளது. “மினுவாங்கொட ஆடைத் தொழிற்சாலை ஆடைத்...
கம்பஹா திவுலபிட்டியவில் சமூகத் தொற்று ஏற்பட்டுள்ள நிலையில் நாடுமுழுவதும் சுகாதார கட்டுப்பாடுகளை இறுக்கமாக நடைமுறைப்படுத்த பொலிஸாருக்குப் பணிக்கப்பட்டுள்ளது. அதனடிப்படையில் யாழ்ப்பாணம் மாநகரில் பொலிஸார் வீதி சுற்றுக்காவல் நடவடிக்கைகளை இன்று மாலை ஆரம்பித்துள்ளனர். அத்துடன், பேருந்துகளில் இருக்கைகளின் எண்ணிக்கைக்கு அமைய பயணிகள் ஏற்றப்படுகின்றரா என்று பரிசோதனை செய்யும் பொலிஸார், முகக்கவசம் அணிதல் உள்ளிட்ட சுகாதார நடைமுறைகளைப் பின்பற்ற...
யாழ் மாவட்ட மக்கள் சமூகத்தொற்று தொடர்பில் விழிப்பாக செயற்படுங்கள் என யாழ் மாவட்ட அரசாங்க அதிபர் க.மகேசன் அவசர அறிவிப்பு விடுத்துள்ளார். தற்போது நாட்டில் உள்ள Covid19 நிலைமை தொடர்பில் யாழ் மாவட்ட மக்களுக்கு மாவட்ட அரசாங்க அதிபர் க. மகேசன் விடுத்துள்ள அவசர செய்திக் குறிப்பில் மேற்கண்டவாறு குறிப்பிட்டுள்ளார். கம்பஹா மாவட்ட, மினுவாங்கொட, திவிலபிட்டிய...
பிள்ளைகளுக்கு சுதந்திரமாக மனமகிழ்வுடன் கல்வி கற்கக் கூடிய கல்வி சீர்த்திருத்தமொன்று இந்நாட்டிற்கு உடனடியாக தேவைப்படுவதாக கௌரவ பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ தெரிவித்தார். 'அபே கம' வளாகத்தில் நேற்று முன்தினம் (2020.10.02) நடைபெற்ற சர்வதேச சிறுவர் தின தேசிய நிகழ்வில் கலந்துக் கொண்டு உரையாற்றுகையிலேயே பிரதமர் இவ்வாறு குறிப்பிட்டார். அரசியலமைப்பு சீர்த்திருத்தத்தைவிட கல்வி சீர்த்திருத்தம் இந்நாட்டின் எதிர்காலத்தில்...
ஹோமாகம, பிடிபன ஸ்லின்டெக் (SLINTEC) வலயத்தில் நிறுவப்பட்டுள்ள மொறிசன் ஒளடத உற்பத்தி மற்றும் பரிசோதனை நிலையத்தை திறந்து வைக்கும் நிகழ்வில் கௌரவ பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ கடந்த வெள்ளிக்கிழமை 2020.10.02 கலந்து கொண்டார். மூன்று ஆண்டுகளுக்கு முன்னர் ஆரம்பிக்கப்பட்ட நிர்மாணப் பணிகளை நிறைவு செய்வதற்காக 13.8 மில்லியன் அமெரிக்க டொலர் செலவிடப்பட்டுள்ளது. இலங்கைக்கு ஆண்டுதோறும் 1.8...
புங்குடுதீவில் வீடு புகுந்து பூசகரை அடித்துக் கொலை செய்துள்ள கும்பல் அங்கிருந்து தப்பித்துள்ளது. அவரது உதவியாளரைக் கட்டிவைத்துவிட்டு இந்தக் கொலை நள்ளிரவு இடம்பெற்றது என்று ஊர்காவற்றுறை பொலிஸார் தெரிவித்தனர். புங்குடுதீவு ஊரதீவுச் சிவன் கோவில் பூசகரான கிளிநொச்சியைச் சேர்ந்த ரூபன் சர்மா (வயது-33) என்பவரே இவ்வாறு கொலை செய்யப்பட்டுள்ளார். புங்குடுதீவில் பல ஆலயங்களில் பூஜை செய்யும்...
பதிவுசெய்யப்படாத கையடக்கத் தொலைபேசிகளில் பயன்படுத்தப்படும் அனைத்து சிம் அட்டைகளும் இன்று முதல் இரத்து செய்யப்படும் என்று இலங்கை தொலைத் தொடர்பு ஒழுங்குபடுத்தல் ஆணைக்குழு தெரிவித்துள்ளது. தனிப்பட்ட பயன்பாட்டிற்காக வெளிநாடுகளில் இருந்து கையடக்க தொலைபேசிகளை கொண்டு வந்தவர்கள் தங்கள் தொலைபேசிகளை இலங்கை தொலைத் தொடர்பு ஒழுங்குபடுத்தல் ஆணைக்குழுவின் வலைத்தளத்தின் மூலம் பதிவு செய்து கொள்ளுமாறும் அறிவுறுத்தப்பட்டுள்ளது. அதேநேரம்...
அனைத்து மாகாணங்களிலும் சிறுவர் வைத்தியசாலையொன்று நிறுவப்பட வேண்டும் என தான் எதிர்பார்ப்பதாக பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ நேற்று (2020.10.01) தெரிவித்தார். கொழும்பு மற்றும் கண்டி மாவட்டத்திற்குள் மாத்திரம் மட்டுப்படுத்தப்பட்டுள்ள சிறுவர் வைத்தியசாலைகள், எதிர்காலத்தில் மாகாணத்திற்கொரு வைத்தியசாலை என்ற ரீதியில் அபிவிருத்தி செய்யப்பட்டு முன்னெடுத்து செல்வது தொடர்பில் அரசாங்கம் கவனம் செலுத்தி வருவதாக பிரதமர் குறிப்பிட்டார். சர்வதேச...
மதுவரித் திணைக்களத்தை மறுசீரமைப்பதற்கு ஒருங்கிணைப்பு குழுவொன்றை நியமிக்குமாறு பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ 2020.09.30 பிற்பகல் தெரிவித்தார். மதுவரித் திணைக்கள அதிகாரிகளின் தொழில்சார் பிரச்சினைகள் குறித்து கலந்துரையாடும் வகையில் தொழிற்சங்கங்களின் பிரதிநிதிகளுடன் அலரி மாளிகையில் நடைபெற்ற கலந்துரையாடலின்போதே பிரதமர் இவ்வாறு குறிப்பிட்டார். இதன்போது, மதுவரித் திணைக்கள அதிகாரிகளின் தொழில்சார் பிரச்சினைகள் குறித்து கவனம் செலுத்திய பிரதமர், அரசியல்...
Loading posts...
All posts loaded
No more posts
