யாழ்.சென்.பற்றிக்ஸ் கல்லூரிக்கு அருகில் வெடிபொருள்கள் மீட்பு!!

யாழ்ப்பாணம் சென்.பற்றிக்ஸ் கல்லூரிக்கு அண்மையில் இருந்து ரிஎன்ரி வெடிமருந்து 4 கிலோ கிராம் மற்றும் டெரனேற்றர் 10 என்பன சிறப்பு அதிரடிப் படையினரால் இன்று செவ்வாய்க்கிழமை காலை மீட்ககப்பட்டுள்ளன. “யாழ்ப்பாணம் மறை மாவட்ட ஆயர் இல்லத்துக்கு அண்மையில் சென். பற்றிக்ஸ் கல்லூரிக்கு பின்புறமாக உள்ள குளத்தின் அருகில் இந்த வெடிமருந்துகள் மறைத்து வைக்கப்பட்டுள்ளன என்று சிறப்பு...

பட்டதாரி பயிலுனர்களுக்கான பயிற்சிகள் காலவரையின்றி ஒத்திவைப்பு!!

பட்டதாரி பயிலுனர்களுக்கான இரண்டாம் கட்ட பயிற்சியை காலவரையறையின்றி ஒத்திவைக்கப்பட்டுள்ளது என்று அரச ​சேவை, மாகாண சபைகள் மற்றும் உள்ளூராட்சி அமைச்சு அறிவித்துள்ளது. பட்டதாரி பயிலுனர் நியமனத்தின் முதலாவது கட்டம் கடந்த செப்ரெம்பர் 2ஆம் திகதி நடைமுறைப்படுத்தப்பட்டது. அவர்களுக்கு சுழற்சிமுறையில் முகாமைத்துவ, தலைமைதுவம் உள்ளிட்ட பயிற்சிகள் முன்னெடுக்கப்படுகின்றன. இந்த நிலையில் பட்டதாரி பயிலுனர்களுக்கான இரண்டாம் கட்ட பயிற்சிகள்...
Ad Widget

மன்னாரில் முடக்கப்பட்ட பகுதிகள் திறப்பு: இயக்கச்சி தனிமைப்படுத்தல் முகாமில் அறுவருக்கு கொரோனா!

மன்னார், பட்டித்தோட்டம் மற்றும் பெரியகடை ஆகிய பகுதிகள் தனிமைப்படுத்தப்பட்ட பகுதிகளாக அறிவிக்கப்பட்டிருந்த நிலையில் நேற்றையதினம் மாலை விடுவிக்கப்பட்டுள்ளதாக இராணுவத் தளபதி சவேந்திர சில்வா தெரிவித்துள்ளார். மன்னாரில் கடந்த மூன்று நாட்களில் ஒன்பது பேருக்கு கொரோனா தொற்று கண்டறியப்பட்டுள்ள நிலையில் குறித்த பகுதிகள் முடக்கப்படுவதாக நேற்று அறிவிக்கப்பட்ட நிலையில் இன்று விடுவிக்கப்பட்டுள்ளது. மன்னார் ஆயர் இல்லத்தில் பணியாற்றிய...

அரச, தனியார் நிறுவன ஊழியர்களின் தகவல்களை புதுப்பிக்குமாறு கோரிக்கை

அரச மற்றும் தனியார் நிறுவனங்களில் சேவையாற்றும் அனைத்து ஊழியர்களின் தனிப்பட்ட தகவல்களை புதுப்பித்துகொள்ளுமாறு பொலிஸ் ஊடகப் பேச்சாளர் பிரதி பொலிஸ்மா அதிபர் அஜித் ரோஹன கோரிக்கை விடுத்துள்ளார். சிங்கள ஊடகமொன்றில் இடம்பெற்ற நிகழ்ச்சியில் கலந்துகொண்டு கருத்து தெரிவிக்கும்போதே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார். அதற்கமைய குறித்த தகவல்களை எதிர்வரும் 3 தினங்களுக்குள் திரட்டுமாறு அவர் குறிப்பிட்டுள்ளார். மேலும்...

கரவெட்டி பிரதேசத்தில் இரண்டு தனியார் கல்வி நிலையங்களுக்கு சீல்

வடமராட்சி, கரணவாய் மற்றும் வதிரி பகுதியில் அரசின் கட்டளையை மீறி இயங்கிய தனியார் கல்வி நிலையங்கள் இரண்டு நெல்லியடி பொதுச் சுகாதார பரிசோதகரால் மறு அறிவித்தல்வரை முத்திரையிடப்பட்டு மூடப்பட்டன. யாழ்ப்பாணம் மாவட்டச் செயலாளர் தலைமையிலான மாவட்ட கோவிட் -19 உயர்மட்டக் குழுவின் அறிவுறுத்தலுக்கு அமைய யாழ்ப்பாணம் மாவட்டத்தில் தனியார் கல்வி நிலையங்கள் மறு அறிவித்தல் வரை...

செல்லும் இடங்களின் பதிவைப் பராமரிக்க பொதுமக்களிடம் பொலிஸ் கோரிக்கை!!

எதிர்காலத்தில் தேவைப்படும் என்பதால், பொதுமக்கள் தாம் செல்லும் இடங்களை அலைபேசியிலோ அல்லது ஒரு நோட்புக்கிலோ பராமரிக்குமாறு பொலிஸ் கேட்டுக்கொண்டுள்ளது. ஒருவர் இருக்கும் இடத்தைப் பற்றிய தகவலை வழங்கும் அலைபேசி செயலியைப் பயன்படுத்தலாம் என்று பொலிஸ் ஊடகப் பேச்சாளர் பிரதிப் பொலிஸ் மா அதிபர் இன்ஸ்பெக்டர் அஜித் ரோஹானா தெரிவித்தார். மினுவாங்கோடா கோவிட் -19 கொத்தணியுடன் தொடர்புடைய...

அண்மைய நாள்களில் பரவிவரும் கோரோனா வைரஸ் ஒரு நபரிலிருந்து மற்றொருவருக்கு எளிதாகத் தொற்றுகிறது

நாட்டில் அண்மைய நாள்களில் பரவி வரும் கோரோனா வைரஸ் ஒரு நபரிலிருந்து மற்றொருவருக்கு எளிதில் தொற்றுகின்றமை அடையாளம் காணப்பட்டுள்ளதாக சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளது. கோரோனா வைரஸைப் பற்றி ஆராய்ந்து வரும் மருத்துவ வல்லுநர்கள், தற்போது பரவிவரும் வைரஸின் தீவிரம் மிக அதிகமாக இருப்பதாகவும், அது வேகமாகவும் எளிதாகவும் பரவக்கூடுமெனக் கண்டறியந்துள்ளனர் என்று சுகாதார அமைச்சின் பேச்சாளர்,...

மன்னாரில் 922க்கு மேற்பட்டோர் தனிமைப்படுத்தலில் உள்ளனர்- பதில் அரசாங்க அதிபர்

மன்னார் மாவட்டத்தில் கொரோனா பாதுகாப்பு நடவடிக்கை காரணமாக மாவட்டத்தில் இதுவரை 922 பேர் தனிமைப்படுத்தப்பட்டுள்ளதாக அம்மாவட்ட பதில் அரசாங்க அதிபர் எஸ்.குணபாலன் தெரிவித்துள்ளார். மன்னார்- பட்டித்தோட்டத்தை சேர்ந்த 130 குடும்பங்களை சேர்ந்த 443பேரும் பெரியகடை பகுதியை சேர்ந்த 166 குடும்பங்களை சேர்ந்த 479பேரும் இவ்வாறு தனிமைப்படுத்தப்பட்டுள்ளதாக அவர் குறிப்பிட்டுள்ளார். இன்று (திங்கட்கிழமை) நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில்...

முல்லைத்தீவில் ஊடகவியலாளர்கள் மீது கும்பலொன்று தாக்குதல்!

முல்லைத்தீவு, முறிப்புப் பகுதியில் மரக்கடத்தல் இடம்பெறுவதாக மக்கள் கூறிய தகவலின் அடிப்படையில் சம்பவ இடத்திற்கு செய்தி சேகரிக்கச் சென்ற ஊடகவியலாளர்கள் மீது கடத்தல் கும்பல் தாக்குதல் நடத்தியுள்ளது. அத்துடன், வாள் முனையில் பொய் வாக்குமூலம் ஒன்றையும் பெற்றுள்ளனர் என எமது பிராந்திய செய்தியாளர் தெரிவித்துள்ளார். இதுகுறித்து தெரியவருவதாவது, முறிப்பு பகுதியில் மரக்கடத்தல் இடம்பெறுவதாக கிடைத்த தகவலின்...

யெங் ஜியேச்சி உள்ளிட்ட சீன உயர்மட்ட குழுவினர் பிரதமருடன் சந்திப்பு!

முன்னாள் சீன வெளிவிவகார அமைச்சரும் தற்போதைய கம்யூனிஸ்ட் கட்சியின் அரசியல் பணியக உறுப்பினருமான யெங் ஜியேச்சி (Yang Jiechi) அவர்களின் தலைமையிலான சீன உயர்மட்ட குழுவினர் கடந்த 9ம் திகதி அன்று அலரி மாளிகையில் கௌரவ பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ அவர்களை சந்தித்தனர். உலகளாவிய கொரோனா தொற்றுக்கு மத்தியில் சீன அரசாங்கத்தின் உயர்மட்ட இராஜதந்திர குழுவினர்...

ரிஷாட் பதியூதீனின் சகோதரரை மீண்டும் கைது செய்து சட்டத்தை நடைமுறைப்படுத்த ஆளும் கட்சியின் பாராளுமன்ற உறுப்பினர்கள் கோரிக்கை!

உயிர்த்த ஞாயிறு தாக்குதலுடன் தொடர்புடையவர் என்ற குற்றச்சாட்டில் கைது செய்யப்பட்ட, முன்னாள் அமைச்சர் ரிஷாட் பதியூதீனின் சகோதரரான ரியாஜ் பதியூதீன் குற்றப்புலனாய்வு திணைக்களத்தினால் விடுதலை செய்யப்பட்டமைக்கு எதிராக ஆளும் கட்சியின் உறுப்பினர்கள் 100 பேரினால் கையெழுத்திடப்பட்ட கடிதம் மேன்மைதங்கிய ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ மற்றும் பிரதமர் மஹிந்த ராஜபக்ஷவிடம் கடந்த 9ம் திகதி அலரி மாளிகையில்...

யாழ். பல்கலை. விரிவுரையாளர்கள் வகுப்புகளுக்குச் செல்லாமல் புறக்கணிப்பில்!!

யாழ்ப்பாணப் பல்கலைக்கழகத்தில் நேற்று மாலை முதல் இடம்பெற்ற சம்பவங்களின் போது, பல்கலைக்கழகத் துணைவேந்தர், விரிவுரையாளர்கள் மற்றும் பாதுகாப்பு ஊழியர்கள் தாக்கப்பட்டமையைக் கண்டிக்கும் வகையிலும், தாக்குதலாளிகள் அடையாளம் காணப்பட்டு, அவர்கள் தண்டிக்கப்பட வேண்டும் என்று வலியுறுத்தியும் கலைப்பீட விரிவுரையாளர்கள் வகுப்புகளுக்குச் செல்லாமல் புறக்கணிப்பில் ஈடுபடுவதற்கு முடிவு செய்துள்ளனர். இன்று காலை இடம்பெற்ற விரிவுரையாளர்கள் சந்திப்பொன்றினை அடுத்து இந்த...

யாழில் சுமார் 411 குடும்பங்களைச் சேர்ந்த 868நபர்கள் சுயதனிமைப்படுத்தலுக்குள்ளாக்கப்பட்டுள்ளார்கள்!!

அனலைதீவு பகுதி மறு அறிவித்தல் வரை சுகாதார பிரிவினரால் முடக்கப்பட்டுள்ளதாக யாழ்ப்பாண மாவட்ட அரசாங்க அதிபர் க.மகேசன் தெரிவித்தார். இன்று காலை அனலைதீவு பகுதியைச் சேர்ந்த மஞ்சள் கடத்தலில் ஈடுபட்ட இருவர் கடற்படையினர் கைது செய்யப்பட்டதை அடுத்து கைது செய்யப்பட்ட நபர்கள் அனலைதீவு பிரதேசத்தில் நடமாடியதாக கருதப்படுவதன் காரணமாக அனலைதீவு பிரதேசம் சுகாதாரப் பிரிவினர் மறு...

மன்னார் மாவட்டத்தில் அனைத்து பேருந்து சேவைகளும் இடை நிறுத்தம்! ஆயர் இல்லமும் மூடப்பட்டது!!

கொரோனா அச்சுறுத்தல் காரணமாக மன்னார் மாவட்டத்தில் இருந்து செல்லுகின்ற அனைத்து பேருந்து சேவைகளும் இடை நிறுத்தப்பட்டுள்ளது என மன்னார் மாவட்ட பதில் அரசாங்க அதிபர் எஸ்.குணபாலன் தெரிவித்தார். இன்று (வெள்ளிக்கிழமை) காலை மன்னார் மாவட்டச் செயலகத்தில் இடம் பெற்ற ஊடக சந்திப்பில் கலந்து கொண்டு ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கையிலேயே அவர் அவ்வாறு தெரிவித்தார். அவர் மேலும்...

பண பரிவர்த்தனையின் போது கொரோனா வைரஸ் தொற்று பரவும் அபாயம் காணப்படுவதாக எச்சரிக்கை!

பண பரிவர்த்தனையின் போது கொரோனா வைரஸ் தொற்று பரவும் அபாயம் காணப்படுவதாக எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. பிரதி பொலிஸ் மா அதிபர் அஜித் ரோஹன இந்த எச்சரிக்கையினை விடுத்துள்ளார். இதன் காரணமாக பண பரிவர்த்தனையின் போது மிகவும் கவனமாக செயற்படுமாறும் அவர் பொதுமக்களிடம் வேண்டுகோள் விடுத்துள்ளார். நாட்டில் 18 பொலிஸ் அதிகார பிரிவுகளுக்கு ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ள...

அனலைதீவுக்கான போக்குவரத்து சேவை நிறுத்தம்!!

அனலைதீவு பகுதியைச் சேர்ந்த கடற்தொழிலில் ஈடுபடும் இருவர் இந்தியாவிலிருந்து மஞ்சள் கடத்தலில் ஈடுபட்டதாக தெரிவிக்கப்படுகின்ற நிலையில் ஊர்காவற்துறை பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளனர். குறித்த இருவரும் அனலைதீவு பகுதியில் நடமாடியதாக தெரிவிக்கப்படுகின்றது. இதன் காரணமாக முதல் கட்டமாக யாழ்ப்பாணம் – அனலைதீவிற்கான போக்குவரத்து சேவைகள் இடைநிறுத்தப்பட்டுள்ளன. இதேவேளை கைது செய்யப்பட்ட இருவரும் இன்றைய தினம்(வெள்ளிக்கிழமை) கடற்படையினரின் உதவியுடன்...

கம்பஹாவிலிருந்து வடமாகாணத்துக்கு வருகை தந்தவர்கள் தொடர்பில் ஆளுநரின் அறிவிப்பு!

மினுவாங்கொடை ஆடை தொழிற்சாலையிலிருந்து வந்தவர்கள் வடமாகாணத்தின் எப்பகுதியில் தங்கியிருந்தாலும் உடனடியாக அருகிலிருக்கும் சுகாதார மருத்துவ அதிகாரிக்கு அறிவிக்கும்படி வடமாகாண ஆளுநர் பி.எஸ்.எம் சாள்ஸ் கோரிக்கை விடுத்துள்ளார். குறித்த விடயம் தொடர்பாக ஆளுநரின் ஊடகப் பிரிவு அனுப்பிவைத்த செய்திக் குறிப்பிலேயே இவ்வாறு கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. குறித்த அறிக்கையில் மேலும், ”கம்பஹா, மினுவாங்கொட ப்ரண்டிக்ஸ் தொழிற்சாலையில் அடையாளம் காணப்பட்ட...

இலங்கை சமுத்திர பல்கலைக்கழகத்தின் பௌதீக மற்றும் மனித வளத்தை விரிவுபடுத்துவதற்கு பிரதமர் ஆலோசனை

சுபீட்சத்தின் நோக்கு கொள்கை திட்டத்தின் கீழ் இலங்கை சமுத்திர பல்கலைக்கழகத்தில், மீனவ, சமுத்திர மற்றும் கடற்படை பொறியியல் துறைகளில் தொழில்சார் மற்றும் கல்வி வாய்ப்புகளை விரிவுபடுத்துவதற்கு பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ அவர்கள் நேற்றையதினம் ( 2020.10.08 )அறிவுறுத்தினார். சமுத்திர பல்கலைக்கழகத்தின் பௌதீக மற்றும் மனித வள மேம்பாடு தொடர்பில் அலரி மாளிகையில் இடம்பெற்ற சந்திப்பொன்றின் போதே...

மன்னாரில் ஒருவருக்கு கொரோனா தொற்று உறுதி!!

மன்னார் மாவட்டத்தில் மத ஸ்தாபனம் ஒன்றில் பணி புரியும் வெளி மாவட்டத்தை சேர்ந்த நபர் ஒருவருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்படுள்ளது. நேற்றைய தினம் வியாழக்கிழமை மேற்கொள்ளப்பட்ட பி.சி.ஆர் பரிசோதனையில் குறித்த நபருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இந்த நிலையில் குறித்த மத ஸ்தாபனம் முழுமையாக தனிமைப்படுத்தப்பட்டுள்ளதோடு,குறித்த நபரை உரிய சுகாதார நடைமுறைகளுக்கு அமைவாக...

யாழ். பல்கலை மாணவ குழுக்களுக்கிடையிலான அமைதியின்மை கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வரப்பட்டுள்ளது!

யாழ்ப்பாணப் பல்கலைக்கழக மாணவர் குழுக்களுக்கிடையில் ஏற்பட்ட கைகலப்பு, அதனால் ஏற்பட்ட அமைதியின்மை நிலமைகள் அமைதியான முறையில் கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவரப்பட்டிருக்கிறது என்று துணைவேந்தர் பேராசிரியர் சி. சிறிசற்குணராஜா தெரிவித்துள்ளார். சம்பவம் தொடர்பில் ஊடகங்களுக்கு விளக்கமளிக்கும் காணொளிப் பதிவிலேயே அவர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார். தொடர்ந்து கருத்து தெரிவித்த அவர் “இன்று (வியாழக்கிழமை) காலை, கலைப்பீடத்தின் இரண்டாம், மூன்றாம் வருட...
Loading posts...

All posts loaded

No more posts