Ad Widget

இணையத்தில் வரும் அறிவுறுத்தல்களின் அடிப்படையில் மருந்துகளைப் பயன்படுத்த வேண்டாம் – அரசு அறிவுரை

கோவிட் – 19 நோய்த் தொற்றுக்கு நன்மை பயக்கும் என்று கூறி, உள்நாட்டு மருத்துவத்தில் பயன்படுத்தப்படும் பொருள்களுடன் இணையத்தில் புழக்கத்தில் இருக்கும் பல்வேறு மருந்துகளைப் பயன்படுத்துவதைத் தவிர்க்குமாறு சுதேச வைத்திய ஊக்குவிப்பு இராஜாங்க அமைச்சு பொதுமக்களை கேட்டுள்ளது.

இதுதொடர்பில் சுதேச வைத்திய மருந்துகளின் உற்பத்தி, வழங்கல் மற்றும் ஒழுங்குமுறை அமைச்சின் செயலாளர் குமாரி வீரசேகர வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது;

நோயெதிர்ப்பு சக்தியை அதிகரிக்க உள்நாட்டு மருத்துவ சிகிச்சைகள் பயன்படுத்தப்பட்டாலும் கூட, உலக சுகாதார அமைப்பு வழங்கிய வழிகாட்டுதல்களின்படி அமைச்சு வழங்கிய வழிகாட்டுதல்களை கடைபிடிப்பது அவசியம்.

சில மருந்துக் கலவைகள் ஒருவரின் உடலுக்கு தீங்கு விளைவிக்கும் என்பதும் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.

பல உள்ளூர் மருந்துகள் குறித்து ஆராய்ச்சி மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. ஆராய்ச்சி முடிந்தவுடன் அவை குறித்து பொதுமக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்த நடவடிக்கை எடுக்கப்படும் – என்றுள்ளது.

Related Posts