Ad Widget

பேச வேண்டிய இடங்களில் தமிழ் நாடாளுமன்ற உறுப்பினர்கள் பேசவேண்டும் – வலிந்து காணாமலாக்கப்பட்டவர்களின் உறவுகள்

தமிழ் மக்களின் உரிமைகள் குறித்து பேச வேண்டிய இடங்களில் தமிழ் நாடாளுமன்ற உறுப்பினர்கள் பேசவேண்டும் என வடக்கு, கிழக்கு வலிந்து காணாமலாக்கப்பட்டவர்களின் உறவுகளின் சங்கத் தலைவி யோகராசா கலாரஞ்சினி தெரிவித்துள்ளார்.

சர்வதேச மனித உரிமைகள் தினமான இன்று (வியாழக்கிழமை) கிளிநொச்சி கந்தசுவாமி ஆலயத்திற்கு முன்பாக இடம்பெற்ற போராட்டத்தின்போதே அவர் இதனைத் தெரிவித்துள்ளார்.

இதன்போது அவர் மேலும் குறிப்பிடுகையில், தாங்கள் தங்களுடைய உரிமை பற்றியும், காணாமல் போனவர்களுடைய நிலைமை பற்றியும் அறிவதற்காக நாடாளுமன்றத்திற்கு தெரிவு செய்து அனுப்பிய தமிழ் நாடாளுமன்ற உறுப்பினர்கள், நாடாளுமன்றத்தில் இதுபற்றி எதுவும் பேசாமல் இருக்கின்றார்கள் என தெரிவித்துள்ளார்.

சர்வதேச மனித உரிமைகள் தினமான இன்று காணாமல் ஆக்கப்பட்ட தமது உறவுகளுக்கு நீதியை பெற்றுத்தர சர்வதேசத்தில் வாழும் உறவுகள் ஒன்றிணைந்து முன்வரவேண்டும் என கோரிக்கை விடுத்துள்ளார்.

மேலும் பேச வேண்டிய இடங்களில் தமிழ் நாடாளுமன்ற உறுப்பினர்கள் பேசவேண்டும் எனவும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

Related Posts