பயணத்தடை திகதி மேலும் நீடிக்கப்படவேண்டும் – சுகாதாரத் துறை வலியுறுத்து

பயண தடை திகதி மேலும் நீட்டிக்கப்பட வேண்டும் என்று சுகாதார அதிகாரிகள் வலியுறுத்தியுள்ளனர். போக்குவரத்து கட்டுப்பாடுகள் மற்றும் தனிமைப்படுத்தப்பட்ட விதிகள் பின்பற்றப்படாவிட்டால், தற்போதைய சூழ்நிலையில் தொற்றுநோயைக் கட்டுப்படுத்துவது கடினம் என்று பிரதி சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகம், மருத்துவர் ஹேமந்த ஹேரத் தெரிவித்துள்ளார். இன்று கொழும்பில் இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பிலேயே அவர் இதனைத் தெரிவித்தார். அப்படியானால்...

பொலிஸார் எனத் தெரிவித்து பொலிஸாரையே ஏமாற்ற முயன்ற இருவரை மறியலில் வைக்க நீதிமன்றம் உத்தரவு!!

பொலிஸார் எனத் தெரிவித்து பயணத் தடை உத்தரவை மீறி வீதிகளில் நடமாடிய இருவரை விளக்கமறியலில் வைக்க யாழ்ப்பாணம் நீதிமன்ற நீதிவான் ஏ.பீற்றர் போல் இன்று உத்தரவிட்டார். அவர்களில் ஒருவர் பொலிஸ் சேவையிலிருந்து இடைநிறுத்தப்பட்டவர் என்று மன்றில் அறிக்கையிடப்பட்டது. யாழ்ப்பாணம் மாநகரில் பயணத் தடையை மீறி நடமாடிய ஒருவரை பொலிஸார் வழிமறித்து விசாரணை செய்துள்ளனர். அவர் தான்...
Ad Widget

நயினாதீவு கடலில் கரையொதுங்கும் மருத்துவக்கழிவுகள் – அச்சத்தில் மக்கள்!

நயினாதீவு தெற்கு கடற்கரையில் மருத்துவ கழிவுகள் கரை ஒதுங்குவதால் மக்கள் இடையே அச்சநிலை ஏற்பட்டுள்ளது. அவை இந்தியாவில் கடலில் போட்ட நிலையில் இங்கு, வந்தவையா என்ற குழப்ப நிலையே காணப்படுவதாக ஆதவனின் பிராந்திய செய்தியாளர் குறிப்பிட்டார். வெற்று ஊசிகள், மாத்திரை வெற்று கடதாசிகள் உள்ளிட்டவையே இவ்வாறு கரை ஒதுங்கியுள்ளமை நேற்று(திங்கட்கிழமை) கண்டறிப்பட்டது. சம்பவம் தொடர்பில் நயினாதீவு...

யாழ்.நாவற்குழி கொரோனா இடைத்தங்கல் பராமரிப்பு நிலையம் திறந்து வைப்பு!

நாவற்குழி கொரோனா இடைத்தங்கல் பராமரிப்பு நிலையம் இன்றைய தினம்(செவ்வாய்கிழமை) வைபவ ரீதியாக திறந்து வைக்கப்பட்டது. யாழ்.மாவட்ட செயலகத்திற்கு சொந்தமான நெல் களஞ்சியத்தில் தற்போது யாழ்.மாவட்டத்தில் அதிகரித்துவரும் கொரோனா தொற்றாளர்களை பராமரிக்கவென 200 கட்டிகளுடன் தயார்படுத்தப்பட்டுள்ள குறித்த இடைத்தங்கல் பராமரிப்பு நிலையமானது இன்றைய தினம் யாழ் மாவட்ட இராணுவ கட்டளைத் தளபதி மற்றும் அரச அதிபரினால் வைபவ...

வவுனியா, கிளிநொச்சி, முல்லைத்தீவில் உள்ள மாவட்ட பொது வைத்தியசாலைகள் சுகாதார அமைச்சின் கீழ்!

மாகாண சபை நிர்வாகத்தின் கீழ் உள்ள மாவட்ட பொது வைத்தியசாலைகளை சுகாதார அமைச்சின் கீழ் கொண்டுவருவதற்கு அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளது. அதன்படி வவுனியா, கிளிநொச்சி, முல்லைத்தீவு, மன்னார், மாத்தளை, நாவலப்பிட்டி, எம்பிலிபிட்டி, அவிசாவளை, கம்பஹா மாவட்ட பொது வைத்தியசாலைகளை சுகாதார அமைச்சின் கீழ் கொண்டுவரப்படவுள்ளன. இலங்கையில் தேசிய வைத்தியசாலைகளில் காணப்படும் மருத்துவ சிகிச்சைகள், அறுவை சிகிச்சைகள்...

பனிஸ் உட்பட அனைத்து பேக்கரி வகை பொருட்களின் விலை அதிகரிப்பு!

பாண் தவிர்ந்த அனைத்து வகையான பேக்கரி பொருட்களின் விலைகளும் அதிகரிக்கப்பட்டுள்ளதாக பேக்கரி உரிமையாளர்கள் சங்கம் தெரிவித்துள்ளது. அதன் அடிப்படையில் மாளுபான், பனிஸ் உட்பட அனைத்து பேக்கரி வகை பொருட்களும் 5 ரூபாய் முதல் 10 ரூபாய் வரையில் விலை அதிகரிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

ஊர்காவற்துறை – சுருவில் கடற்கரையில் கரையொதுங்கியது திமிங்கலம்

ஊர்காவற்துறை – சுருவில் கடற்கரையில் இறந்த நிலையில் திமிங்கலம் ஒன்று கரையொதுங்கியுள்ளது. 32 அடி நீளமான கரையொதுங்கிய குறித்த திமிங்கலத்தை காலை 8.30 மணியளவில் மீனவர்கள் கண்டுள்ளனர். தொடர்ந்து மீனவர்களால் சம்பந்தப்பட்ட அதிகாரிகளுக்கு அறிவிக்கப்பட்டதை அடுத்து குறித்த திணைக்கள அதிகாரிகளும் வருகை தந்துள்ளனர். குறிப்பாக வன ஜீவராசிகள் திணைக்களத்தினர் திமிங்கலம் தொடர்பான ஆய்வுகளை மேற்கொண்டுள்ளனர். சம்பவ...

தமிழக முதலமைச்சருக்கு செல்வம் அடைக்கலநாதன் அவசர கடிதம்!

முகாம்களில் வாழும் தமிழ் மக்களின் நலன்களை கருத்தில் கெண்டும், திருச்சி சிறப்பு சிறைச்சாலையில் தங்களது விடுதலை தொடர்பாக சாகும் வரை உண்ணாவிரதம் மேற்கொள்ளும் சிறைக் கைதிகளின் விடுதலை குறித்தும் தமிழ் தேசியக் கூட்டமைப்பின் வன்னி மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் செல்வம் அடைக்கலநாதன் தமிழ் நாட்டு முதலமைச்சர் மு.க.ஸ்டாலினுக்கு இன்றைய தினம் (14) அவசர கடிதம் ஒன்றை...

அடுத்த சில நாட்களில் கொரோனா தொற்று அதிகரிக்கலாம்!!! – சுகாதார அமைச்சு

இந்தியாவுடன் ஒப்பிடும்போது இலங்கையில் நாளாந்த கொரோனா நோயாளிகளின் எண்ணிக்கை அதிகமாக இருப்பதாக சுகாதார அமைச்சு சுட்டிக்காட்டியுள்ளது. கொழும்பில் இன்று (திங்கட்கிழமை) நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துகொண்டு கருத்து தெரிவிக்கும்போதே விசேட வைத்திய நிபுணர் ஹேமந்த ஹேரத் இவ்வாறு கூறினார். அடுத்த சில நாட்களிலும் நாட்டில் கொரோனா தொற்று உறுதியாகும் நோயாளிகளின் எண்ணிக்கை அதிகரிக்கும் என எதிர்பார்க்கப்படுவதாகவும்...

யாழில் திருமண நிகழ்வில் கலந்து கொண்டவர்கள் தனிமைப்படுத்தப்பட்டனர்!

அனுமதிக்கு மேலதிகமாக பலரும் திருமண நிகழ்வில் கூடியதால் குருநகர் பகுதியில் இடம்பெற்ற திருமண நிகழ்வில் பங்கேற்ற 16 பேர் இன்றைய தினம்(திங்கட்கிழமை) தனிமைப்படுத்தப்பட்டனர். இன்றைய தினம் குருநகர் பகுதியில் யாழ்.பொலிஸார் கண்காணிப்பு நடவடிக்கையில் ஈடுபட்ட போது அதிகளவானவர்கள் திருமண நிகழ்வில் பங்குபற்றியதை அவதானித்து யாழ்ப்பாண மாநகர சுகாதார வைத்திய அதிகாரி பணிமனைக்கு அறிவித்தனர். இதனையடுத்து அங்கு...

சமஷ்டி ஆட்சி முறை வருகின்ற போது மலையக மக்களின் இருப்பு பாதுகாக்கப்படும் – கஜேந்திரன்

" ஒற்றையாட்சி முறைமை ஒழிக்கப்பட்டு சமஷ்டி அரசியலமைப்பு கொண்டு வரப்பட வேண்டும். அதற்காகவே நாம் போராடி வருகின்றோம். சமஷ்டி முறை வருகின்ற போது மலையக மக்களின் இருப்பும் பாதுகாக்கப்படும்." என தமிழ் தேசியக மக்கள் முன்னணியின் பாராளுமன்ற உறுப்பினர் செல்வராசா கஜேந்திரன் தெரிவித்தார். பொது முடக்கத்தால் வாழ்வாதாரம் பாதிக்கப்பட்டுள்ள மஸ்கெலியா பகுதிகளில் உள்ள சுமார் 600...

மாணவர்களின் இணையவழிக் கற்றலுக்கு கட்டணமின்றிய இணைய வசதி – நாமல்

நாட்டில் உள்ள அனைத்து பாடசாலை மாணவர்களும் எந்தவொரு இணைய கட்டணமும் இன்றி இணையவழிக் கற்றலில் ஈடுபட உதவும் இ-தக்ஸலவா திட்டத்தை விரைவுபடுத்துமாறு இளைஞர் மற்றும் விளையாட்டு அமைச்சரும் டிஜிட்டல் தொழில்நுட்ப மற்றும் தொழில் முனைவோர் மேம்பாட்டு இராஜாங்க அமைச்சருமான நமல் ராஜபக்ச சம்பந்தப்பட்ட அதிகாரிகளிடம் கோரிக்கை விடுத்துள்ளார். தற்போதைய இ-தக்ஸலவா அமைப்பில் உள்ள குறைபாடுகளை நீக்க...

யாழ்ப்பாணத்தில் கடும் காற்றுடன் கூடிய மழை- 55 பேர் பாதிப்பு

யாழ்ப்பாணத்தில் கடும் காற்றுடன் கூடிய மழை நேற்று (சனிக்கிழமை) இரவு பெய்துள்ளது. இந்த சம்பவத்தினால் 17 குடும்பங்களைச் சேர்ந்த 55 பேர் பாதிக்கப்பட்டுள்ளதாக யாழ்ப்பாணம் அனர்த்த முகாமைத்துவ பிரிவு உதவிப் பணிப்பாளர் என்.சூரியராஜ் தெரிவித்துள்ளார். அதாவது நேற்று இரவு 8 மணி முதல் 10 மணி வரை, கடும் காற்றுடன் கூடிய காலநிலை நிலவியுள்ளது. இதில்...

அரசாங்கத்தை வீட்டுக்கு அனுப்புவோம்- எதிர்க்கட்சிகளுக்கு அழைப்பு விடுக்கும் சுமந்திரன்

தற்போதைய அரசாங்கம் கோரமான ஆட்சியை தொடர்ந்து முன்னெடுக்குமாயின், எதிர்க்கட்சிகள் ஒன்றிணைந்து அவர்களை வீட்டுக்கு அனுப்புவோம் என நாடாளுமன்ற உறுப்பினர் ஜனாதிபதி சட்டத்தரணி எம்.ஏ.சுமந்திரன் தெரிவித்துள்ளார். இன்று (ஞாயிற்றுக்கிழமை) யாழ்ப்பாணத்தில் நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துகொண்டு கருத்து தெரிவிக்கும்போதே அவர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார். குறித்த ஊடகவியலாளர் சந்திப்பில் எம்.ஏ.சுமந்திரன் மேலும் கூறியுள்ளதாவது, ‘மக்கள் மீது அடக்குமுறைகளையும் வன்முறைகளையும்...

பேக்கரி உற்பத்திகளின் விலை அதிகரிப்பு?

எரிபொருளின் விலை அதிகரிப்பு காரணமாக அனைத்து பேக்கரி உற்பத்திகளின் விலையையும் அதிகரிக்க வேண்டி ஏற்படும் என அ​கில இலங்கை பேக்கரி உரிமையாளர்கள் சங்கம் தெரிவித்துள்ளது. தற்போதைய நிலையிலும் சில பேக்கரி உரிமையாளர்கள் தமது உற்பத்திகளின் விலையை அதிகரித்துள்ளதாக அச்சங்கத்தின் தலைவர் என்.கே.ஜயவர்தன தெரிவித்தார். எரிபொருள் விலை போன்று பேக்கரி உற்பத்திக்கு தேவையான ஏனைய மூலப்பொருட்களின் விலையும்...

யாழ்ப்பாணத்தில் இன்று மேலும் இருவர் கோவிட்-19 நோயினால் உயிரிழப்பு

யாழ்ப்பாணத்தில் மேலும் இருவர் கோவிட்-19 நோயினால் உயிரிழந்துள்ளனர். யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வந்த ஆண் ஒருவரும் பெண் ஒருவரும் இன்று உயிரிழந்தனர் என்று வைத்தியசாலைத் தகவல்கள் தெரிவித்தன. இதன்மூலம் யாழ்ப்பாணம் மாவட்டத்தில் கோவிட்-19 நோயினால் உயிரிழந்தோர் எண்ணிக்கை 55ஆக உயர்வடைந்துள்ளது.

கொரோனா தொற்றுக் காலத்தில் கீரிமலை மாளிகையை வழங்க முனைப்பு காட்டுவது ஏன்? – சி.வி.கே

கீரிமலையில் மக்களின் நிலத்தில் நிர்மாணிக்கப்பட்ட ஜனாதிபதி மாளிகையை கொரோனா தொற்றுக் காலத்தில் அவசரப்பட்டு வழங்குவதற்கான தேவை என்ன என வட மாகாண சபையின் முன்னாள் தவிசாளர் சி.வி.கே.சிவஞானம் கேள்வியெழுப்பியுள்ளார். யாழில் நேற்று இடம்பெற்ற ஊடக சந்திப்பில் கருத்து தெரிவித்த அவர், இந்த கட்டடத்தை மாகாண சபைக்கு கையளிக்க வேண்டும் என்ற தீர்மானம் வட மாகாண சபையில்...

யாழில் கொரோனா வைரஸ் தொற்று அதிகரிப்பு- மக்களை அவதானமாக செயற்படுமாறு எச்சரிக்கை

யாழ்ப்பாணத்தின் நாளுக்கு நாள் கொரோனா வைரஸ் தொற்றாளர்களின் எண்ணிக்கை அதிகரித்து வருகின்றமையினால், மக்கள் மிகவும் அவதானமாக செயற்பட வேண்டுமென மாவட்ட அரசாங்க அதிபர் க.மகேசன் தெரிவித்துள்ளார். இன்று (சனிக்கிழமை) யாழ்.மாவட்ட செயலகத்தில் நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துகொண்டு கருத்து தெரிவிக்கும்போதே அவர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார். குறித்த ஊடகவியலாளர் சந்திப்பில் க.மகேசன் மேலும் கூறியுள்ளதாவது, யாழ்ப்பாணத்தில் தற்பொழுது...

கொவிட் தொற்றாளர்களை ஏற்றி வந்த பேருந்து மோதியதில் ஒருவர் பலி!!

மட்டுவில் பன்றித்தலைச்சி அம்மன் ஆலயத்துக்கு அண்மையாக சைக்கிளில் பயணித்த ஒருவரை கொவிட் நோய்த் தொற்றாளர்களை ஏற்றி வந்த பேருந்து மோதியதில் அவர் உயிரிழந்துள்ளார். விவசாயி ஒருவரே உயிரிழந்த நிலையில் அந்தப் பகுதியைச் சேர்ந்தவர்களால் பேருந்துக்கு கற்கள் எறியப்பட்டன. அதனால் பேருந்தில் பாதுகாப்புக்கு பயணித்த இராணுவம் கற்கள் எறிந்தவர்கள் மீது நடவடிக்கை எடுக்க முற்பட்டதால் குழப்பநிலை ஏற்பட்டது....

நாட்டில் கோவிட்-19 நோயினால் மேலும் 101 பேர் சாவு; உயிரிழந்தோர் எண்ணிக்கை 2,000ஐத் தாண்டியது!!

நாட்டில் கோவிட்-19 நோய்த்தொற்றால் மேலும் 101 பேர் உயிரிழந்துள்ளனர் என்று சுகாதார அமைச்சு இன்று வெள்ளிக்கிழமை அறிவித்துள்ளது. இதன்மூலம் நாட்டில் கோவிட்-19 நோயினால் உயிரிழந்தோர் எண்ணிக்கை 2 ஆயிரத்தைத் தாண்டியுள்ளது. நாட்டில் கோவிட்-19 நோயினால் உயிரிழந்தோர் எண்ணிக்கை அதிகளவில் இன்று அறிவிக்கப்பட்டுள்ளது. நாட்டில் இதுவரை 2 ஆயிரத்து 11 பேர் கோவிட்-19 நோயினால் உயிரிழந்துள்ளனர். நாட்டில்...
Loading posts...

All posts loaded

No more posts