Ad Widget

அகதிகள் முகாம் அல்ல: இலங்கைத் தமிழா் மறுவாழ்வு முகாம் என அழைக்கப்படும் – ஸ்டாலின்

இலங்கைத் தமிழா் அகதிகள் முகாம் என்பது இனிமேல், இலங்கைத் தமிழா் மறுவாழ்வு முகாம் என அழைக்கப்பட உத்தரவிடப்பட்டுள்ளதாக சட்டப் பேரவையில் முதல்வா் மு.க.ஸ்டாலின் அறிவித்தார்.

வேளாண்மை, கால்நடை, மீன்-பால் வளத் துறைகள் மானியக் கோரிக்கை மீது நேற்று (சனிக்கிழமை) நடைபெற்ற விவாதத்தின்போதே முதலமைச்சர் இந்த அறிவிப்பை வெளியிட்டதாக இந்திய ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.

அதன்படி, அங்கு மேலும் உரையாற்றிய அவர், “மானியக் கோரிக்கையில் இப்போது உறுப்பினா் பேசும் போதும், வெள்ளிக்கிழமை நான் அறிவிப்புகளை வெளியிடும் போதும் இலங்கை தமிழா்கள் அகதிகளாக ஆக்கப்பட்டிருப்பதாகக் கூறப்பட்டது.

அகதிகள் முகாம் இனி, இலங்கைத் தமிழா் மறுவாழ்வு முகாம் என அழைக்கப்படும். ஏனென்றால் அவா்கள் ஆதரவற்றவா்கள் அல்ல. நாம் அவா்களுக்குத் துணையாக இருக்கிறோம். அந்த உணா்வுடன் அகதிகள் முகாம் என்று அழைக்காமல் இலங்கைத் தமிழா் மறுவாழ்வு முகாம் என்று அழைக்க அரசு ஆணையிட்டுள்ளது” என முதல்வா் மு.க.ஸ்டாலின் தெரிவித்தாா்.

Related Posts