- Thursday
- May 1st, 2025

யாழ்ப்பாண பல்கலைக்கழக விஞ்ஞான பீட புதுமுக மாணவன் மீது தாக்குதல் மேற்கொண்டு சித்திரவதை புரிந்த குற்றச்சாட்டில் சிரேஷ்ட மாணவர்கள் இருவர் கைது செய்யப்பட்டு, நீதிமன்ற உத்தரவில் விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளனர். கடந்த 27 ஆம் திகதி பல்கலைக்கழக விடுதியில் இருந்து பல்கலைக்கழகத்துக்கு நடந்து வந்து கொண்டிருந்த புதுமுக மாணவனை விரிவுரைக்குச் செல்லவிடாமல் தடுத்த சிரேஷ்ட மாணவர்கள் சிலர்,...

யாழ்ப்பாணத்தில் இடுகாடு ஒன்றினை தனியார் ஒருவர் கொள்வனவு செய்து, அதில் கட்டடங்களை கட்ட நடவடிக்கை எடுத்துள்ளதாக அப்பகுதி மக்கள் தெரிவித்துள்ளனர். சுழிபுரம் பகுதியில் உள்ள காணி ஒன்றை நீண்ட காலமாக அப்பகுதி மக்கள் இடுகாடாக பயன்படுத்தி வருகின்றனர். அங்கு சுமார் 150 இற்கும் மேற்பட்ட உடலங்கள் நல்லடக்கம் செய்யப்பட்டுள்ள நிலையில் பல கல்லறைகளும் கட்டப்பட்டுள்ளன. அத்துடன்...

வட்டுக்கோட்டை பொலிஸாரிடம் இருந்து பொதுமக்களைப் பாதுகாக்குமாறு சமூக செயற்பாட்டாளரான பொன்ராசா என்பவர் ஜனாதிபதி மற்றும் பிரதமர் ஆகியோரிடம் கோரிக்கை விடுத்துள்ளார். இது தொடர்பாக இலங்கை மனித உரிமைகள் ஆணைக்குழுவிடமும் அவர் முறைப்பாடு செய்துள்ளார். அரச உத்தியோகத்தரான அவர் அலுவலகப் பணி முடித்து வீடு திரும்பிக் கொண்டிருந்த போது வீதியில் நின்ற வட்டுக்கோட்டை பொலிஸார் தன்னை மறித்து...

கிளிநொச்சி – பரந்தன் இரசாயன தொழிற்ச்சாலையின் இராணுவத்தினர் வசமிருந்த 15ஏக்கர் காணி இராணுவத்தினரால் பிரதேச செயலாளரிடம் கையளிக்கப்பட்டது. பரந்தன் இரசாயன தொழிற்ச்சாலையின் 15 ஏக்கர் காணி தொடர்ந்தும் இராணுவத்தினர் வசமிருந்த நிலையில் நேற்றையதினம் குறித்த காணி கண்டாவளை பிரதேச செயலாளர் த.பிருந்தாகரனிடம் 553வது படைப்பிரிவின் நிர்வாக அதிகாரியினால் கையளிக்கப்பட்டது. யுத்தம் காரணமாக கைவிடப்பட்ட பரந்தன் இரசாயன...

சென்னையிலிருந்து காங்கேசன்துறைக்கு, 10 பேர் அடங்கிய 2 பாய்மரப்படகுகள் நேற்று வியாழக்கிழமை (03) மாலை வந்தடைந்த நிலையில் இன்று வெள்ளிக்கிழமை (04) மீண்டும் காங்கேசன்துறையில் இருந்து நாகபட்டினம் நோக்கி பயணத்தை ஆரம்பித்துள்ளன. 400 கிலோமீற்றர் தூரத்தினை இலக்காக்கொண்டு "Royal madras yacht club" அங்கத்தவர்களால் சென்னையில் ஆரம்பிக்கப்பட்ட இப்படகுப் பயணம் நாகப்பட்டினத்தினை அடைந்து அங்கிருந்து காங்கேசன்துறையை...

சிறுவர் இல்லங்களில் சேர்ப்பதற்காக அனுமதி கோரும் சிறுவர்களின் எண்ணிக்கை வடக்கில் அதிகரித்துச் செல்வதாக வடக்கு மாகாண ஆளுநர் நா.வேதநாயகன் யுனிசெப் பிரதிநிதிகளிடம் சுட்டிக்காட்டினார். வடக்கு மாகாணத்துக்கு வருகை தந்து கள நிலைமைகளை ஆய்வு செய்யும் யுனிசெப் அமைப்பின் பிரதிநிதிகள் குழு வடக்கு மாகாண ஆளுநரை, ஆளுநர் செயலகத்தில் புதன்கிழமை (02) சந்தித்துக் கலந்துரையாடினர். இதன்போது ஆளுநரிடம்,...

தையிட்டி திஸ்ஸ விகாரை விடுவிப்பு தொடர்பான முக்கிய கலந்துரையாடலில் அரசாங்கத்தின் சார்பாக கலந்துகொண்ட நீதியமைச்சர் ஹர்ஷன நாணயக்கார உள்ளிட்ட அரச தரப்பு பிரதிநிதிகள் தீர்வு குறித்த காத்திரமான பேச்சுவார்த்தைகள் ஏதும் இன்றியும், ஊடங்கங்களைப் புறக்கணித்தும் மாற்றுப் பாதையூடாக வெளியேறிய விவகாரம் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. தேசிய ஐக்கியத்துக்கும் நல்லிணக்கத்துக்குமான அலுவலகம் ஊடாக ஏற்பாடு செய்யப்பட்ட பொதுமக்களின் காணிக்குள்...

யாழ்ப்பாணம் - பலாலி வீதியில் உயர் பாதுகாப்பு வலயத்திற்குள் உள்ள 2.5 கிலோ மீற்றர் நீளமான வீதி மிக விரைவில் திறந்துவிடப்படவுள்ளதாகவும், அதற்கான பூர்வாங்க நடவடிக்கைகள் ஆரம்பிக்கப் பட்டுள்ளதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளது. போர் காலத்தில் வலி, வடக்கில் பெருமளவு நிலப்பகுதி உயர்பாதுகாப்பு வலயமாக அறிவிக்கப்பட்டிருந்த நிலையில் போர் நிறைவடைந்த பின்னர் அதன் பெரும் பகுதி நிலம்...

யாழ் மாவட்ட கடற்தொழிலாளர் கூட்டுறவுச் சங்க சமாசங்களின் சம்மேளனம் இந்தியப் பிரதமரிடம் பகிரங்க கோரிக்கை ஒன்றை விடுத்துள்ளது. இந்தியப் பிரதமர் நரேந்திர மோடி எதிர்வரும் நாட்களில் இலங்கைக்கு விஜயம் செய்யவுள்ள நிலையில் இக்கோரிக்கையை மீனவர்கள் விடுத்துள்ளனர். இதற்கமைய பிரதமர் மோடிக்கு தமது கோரிக்கைகள் அடங்கிய மகஜரொன்றையும் யாழிலுள்ள இந்திய துணைத் தூதுவராலயத்தில் நேற்றையதினம் (02) கையளித்துள்ளனர்....

ஜப்பானின் மூன்றாவது பெரிய தீவான கியூஷு தீவுக்கு அருகில் 6.0 ரிக்டர் அளவில் நிலநடுக்கம் ஏற்பட்டதாக அந்நாட்டின் நில அதிர்வு மையம் தெரிவித்துள்ளது. 02ஆம் திகதி புதன்கிழமை இரவு 10.00 மணிக்கு ஜப்பான் நேரப்படி, காலை 7.34 மணியளவில் ஏற்பட்ட இந்த நிலநடுக்கம் கியூஷு தீவிலிருந்து சுமார் 40 கி.மீ ஆழத்தில் ஏற்பட்டுள்ளது. இருப்பினும், இந்த...

யாழ்ப்பாண பல்கலைக்கழக விஞ்ஞானப் பீட புதுமுக மாணவன் மீதான பகிடிவதை விவகாரம் குறித்து விசாரணை நடத்தி அறிக்கை சமர்ப்பிக்குமாறு இலங்கை மனித உரிமைகள் ஆணைக்குழுவின் பிராந்திய காரியாலயம் சம்பந்தப்பட்ட அதிகாரிகளுக்கு அறிவுறுத்தியுள்ளது. இலங்கை மனித உரிமைகள் ஆணைக்குழுவின் யாழ்ப்பாணம் மாவட்டத்துக்கான பிராந்திய இணைப்பாளர் த.கனகராஜ் வெளியிட்டுள்ள அறிக்கையில் குறித்த விடயம் தெரிவிக்கப்பட்டுள்ளது. குறித்த அறிக்கையில், "யாழ்ப்பாண...

அரசாங்கத்தின் கல்வி சீர்திருத்தங்களின் கீழ் பாடசாலை மறுசீரமைப்பு திட்டத்தின் கீழ், குறைந்த மாணவர் சேர்க்கை கொண்ட 1,557 ஆரம்ப பாடசாலைகளை மூடுவதற்கு அரசாங்கம் நடவடிக்கை எடுத்துள்ளது. இந்நிலையில் அரசின் குறித்த நடவடிக்கைகளினால் ”தற்போது சுமார் 3 சதவீதமாக இருக்கும் ஆரம்பக் கல்வியை விட்டு வெளியேறும் மாணவர்களின் எண்ணிக்கையை மேலும் அதிகரிக்கும் அபாயம் உள்ளதாக இலங்கை ஆசிரியர்...

யாழ்ப்பாணப் பல்கலைக்கழக விஞ்ஞான பீட புதுமுக மாணவன் ஒருவர் மீது மேற்கொள்ளப்பட்டுள்ள மிலேச்சத்தனமான பகிடிவதை காரணமாகப் பாதிக்கப்பட்டுள்ள அம் மாணவனுக்குப் பாதுகாப்பளிக்குமாறும், பகடிவதைக்கெதிராக நீதியானதும், சுதந்திரமானதுமான விசாரணைகள் மேறகொள்ளக் கோரியும் அம் மாணவனின் தந்தை பல்கலைக்கழக மானியங்கள் ஆணைக்குழுத் தலைவரிடம் முறைப்பாடு செய்துள்ளார். நாத்தாண்டியா பகுதியைச் சேர்ந்த மாணவன் ஒருவரின் தந்தையே இவ்வாறு முறைப்பாடு செய்துள்ளார்....

உள்ளுராட்சி மன்றத் தேர்தலில் வாக்களிக்கவுள்ள விசேட தேவையுடைய வாக்காளர்கள் தங்களது வாக்குச் சீட்டை அடையாளமிடுவதற்கு வாக்கெடுப்பு நிலையத்திற்கு உதவியாளர் ஒருவரை அழைத்துச் செல்வது தொடர்பாக தேர்தல் ஆணைக்குழு அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளது. அதன்படி, விசேட தேவையுடைய வாக்காளர்களுடன் வாக்கெடுப்பு நிலையத்திற்கு செல்லும் உதவியாளர்கள், 18 வயதை பூர்த்தி செய்த ஒருவராக இருத்தல் வேண்டும் என தேர்தல்...

இலங்கை பெற்றோலியக் கூட்டுத்தாபனம் (CPC) எரிபொருள் விலைகளைக் குறைப்பதாக அறிவித்துள்ளது. அதன்படி, 92 ஒக்டேன் மற்றும் 95 ஒக்டேன் வகையான இரு பெற்றோல்களும் ஒரு லீட்டருக்கு 10 ரூபாவினால் குறைக்கப்பட்டுள்ளன. திருத்தப்பட்ட விலைகள் நேற்று (மார்ச் 31) நள்ளிரவு முதல் அமலுக்கு வந்துள்ளன. ஏனைய எரிபொருட்களின் விலைகளில் எந்த மாற்றமும் இருக்காது என்றும் CPC கூறியுள்ளது....

இந்த வருடத்திற்கான அரச பாடசாலைகள் மற்றும் அரசினால் அங்கீகரிக்கப்பட்ட தனியார் பாடசாலைகளின் முதலாம் தவணையின் இரண்டாம் கட்டம் இன்று (01) ஆரம்பமாகியுள்ளது. கடந்த 14 ஆம் திகதி பாடசாலைகளின் முதலாம் தவணையின் முதற்கடடமானது நிறைவடைந்திருந்தது. எவ்வாறெனினும், ரமழான் பண்டிகையை முன்னிட்டு இன்று முஸ்லிம் பாடசாலைகளுக்கு விடுமுறை வழங்க கல்வி அமைச்சு தீர்மானித்துள்ளது. இதேவேளை, தற்போது சிறுவர்களுக்கு...

உள்ளூராட்சி சபைத் தேர்தலுக்கான தபால் மூல வாக்களிப்புக்கான வாக்குச் சீட்டுகள் எதிர்வரும் ஏப்ரல் மாதம் 07 ஆம் திகதி ஒவ்வொரு மாவட்ட செயலகத்திலும் விநியோகம் செய்யப்படும் என தேர்தல் ஆணைக்குழு தெரிவித்துள்ளது. தபால் மூல வாக்கெடுப்பு முன்னெடுக்கப்படும் திகதி மாவட்ட செயலகங்கள், தேர்தல் ஆணைக்குழு அலுவலகங்கள், சிரேஷ்ட பிரதி பொலிஸ்மா அதிபர் அலுவலகங்கள், பொலிஸ் அத்தியட்சகர்...

நாட்டில் உள்ள பாடசாலை மாணவர்களில் சிலருக்கு தற்கொலை செய்து கொள்ளும் போக்கு இருப்பதாக சுகாதார மேம்பாட்டு பணியகம் தெரிவித்துள்ளது. பெற்றோர்களின் கையடக்க தொலைபேசி மற்றும் சமூக ஊடக பாவனை அதிகரித்துள்ளதன் காரணமாக, பெற்றோர்-குழந்தை உறவுகள் குறைந்து வருவது இந்த துரதிர்ஷ்டவசமான சூழ்நிலைக்குக் காரணமாக இருக்கலாம் என வைத்தியர்கள் தெரிவிக்கின்றனர். 10 முதல் 19 வயது வரையிலான...

யாழ்ப்பாண பல்கலைக்கழக இணைந்த சுகாதார விஞ்ஞான பீட மாணவர்களினால் இன்று பேரணி ஒன்று முன்னெடுக்கப்பட்டு வருகின்றது. நீண்ட கால வேலையில்லா பிரச்சினைக்கு தீர்வு கோரி குறித்த போராட்டம் முன்னெடுக்கப்பட்டு வருகிறது. இன்னிலையில் பேரணியை இடைமறித்த பொலிசார் பேரணியை நடத்த வேண்டாம் என வலியுறுத்திய நிலையில் அங்கு பதற்றமான சூழ்நிலை ஏற்பட்டுள்ளதுடன் யாழ்ப்பாணப் பல்கலைக்கழக மருத்துவ பீடத்தில்...

மோசமான செயற்பாடுகள் மூலம் யாழ்.மாவட்ட ஒருங்கிணைப்புக்குழு கூட்டத்தை பாராளுமன்ற உறுப்பினர் அர்ச்சுனா குழப்பியுள்ளார். இனிவரும் காலங்களில் தலைவருக்குரிய அதிகாரத்தை முழுமையாக பயன்படுத்துவேன் என்று அமைச்சரும், யாழ்.மாவட்ட ஒருங்கிணைப்பு குழு கூட்ட தலைவருமான இராமலிங்கம் சந்திரசேகர் தெரிவித்தார். யாழ். மாவட்ட ஒருங்கிணைப்பு குழு கூட்டம் நேற்று காலை 9 மணியளவில் யாழ். மாவட்ட செயலக கேட்போர் கூடத்தில்...

All posts loaded
No more posts