- Sunday
- September 7th, 2025

இலங்கை காங்கேசன்துறையில் இருந்து வினோத்குமார், சிந்துஜன் ஆகிய இரண்டு பேரும் படகில் இந்திய எல்லைக்குள் சென்றுள்ளார்கள். அப்போது அவர்கள் பயணம் செய்த படகு பழுதாகி நின்றுள்ளது. அவ்வழியாக வந்த நாகை மாவட்டம் வேதாரண்யம் அடுத்து ஆறுகாட்டுத்துறை பகுதி மீனவர்கள் படகையும் இரண்டு மீனவர்களையும் ஆறுகாட்டுத்துறை கடற்கரைக்கு கொண்டு சென்றுள்ளனர். இரண்டு பேரையும் வேதாரண்யம் கடலோர பாதுக்காப்பு...

செம்மணி மனிதப் புதைகுழி தொடர்பான வழக்கு யாழ்ப்பாணம் நீதவான் நீதிமன்றத்தில் நேற்று விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்பட்டிருந்தது. செம்மணி – சித்துப்பாத்தி மனிதப் புதைகுழியில் இரண்டாம் கட்ட அகழ்வுப் பணிகளை 45 நாட்கள் நடத்துவதற்கு முன்னதாக நீதிமன்றம் அனுமதி வழங்கியிருந்தது. அதற்கமைய மூன்று கட்டங்களாக முன்னெடுப்பதற்குத் திட்டமிடப்பட்ட அகழ்வுப் பணிகளில் இரண்டு கட்டங்கள் தற்போது நிறைவடைந்துள்ளன. இந்நிலையில்...

செஞ்சோலைப் படுகொலையின் 19ஆம் ஆண்டு நினைவேந்தல் நிகழ்வு யாழ்ப்பாண பல்கலைக்கழக மாணவர் ஒன்றியத்தின் ஏற்பாட்டில் யாழ். பல்கலைக்கழகத்தின் பிரதான வளாகத்தில் அமைந்துள்ள சுற்றுவட்டத்தில் நேற்று வியாழக்கிழமை (14) நடைபெற்றது. இதன்போது கொல்லப்பட்டவர்களின் உருவப் படங்களுக்குப் பல்கலைக்கழக மாணவர்களால் மலர் தூவி அஞ்சலி செலுத்தப்பட்டது. நினைவேந்தல் நிகழ்வில் பல்கலைக்கழக மாணவர்கள், கல்விசாரா ஊழியர்கள் எனப் பலரும் கலந்துகொண்டிருந்தனர்....

செம்மணி புதைகுழி தொடர்பான விசாரணைகள முறையாக இடம்பெற்று வருகின்றன. தேவையான வளங்களை அரசாங்கம் வழங்கி வருகின்றது. குற்றவாளிகள் கண்டுபிடிக்கப்பட்டு, நிச்சயம் தண்டிக்கப்பட வேண்டும் என்ற நிலைப்பாட்டிலேயே அரசாங்கம் உள்ளது என கடற்றொழில், நீரியல் மற்றும் கடல்வளங்கள் அமைச்சர் இராமலிங்கம் சந்திரசேகர் தெரிவித்தார். அத்துடன், நாமல் ராஜபக்சவின் நீலப்படையணியில் இருந்த சாணக்கியன் மற்றும் ரணிலின் விசுவாசியான சுமந்திரன்...

'இதயபூர்வமான யாழ்ப்பாணத்திற்கு - ஒற்றுமையின் தூய்மையான நெடும்பயணம்' எனும் கருப்பொருளிலான செயற்திட்டம் எதிர்வரும் 20 ஆம் திகதி வரையில் யாழ்ப்பாணத்தில் முன்னெடுக்கப்படவுள்ள நிலையில் அவற்றுக்கான குழுவினர் புகையிரதம் மூலம் நேற்று (13) மதியம் யாழ்ப்பாணத்தை வந்தடைந்துள்ளனர். கிளீன் ஶ்ரீலங்கா பணிப்பாளர்களான தசூன் உதார, துலீப் சேமரத்தன மற்றும் சாரதா உள்ளிட்டவர்கள் அடங்கிய குழுவினர்களுக்கு யாழ்ப்பாண புகையிரத...

வடக்கு கிழக்கு தழுவிய ரீதியில் எதிர்வரும் 18ஆம் திகதி பூரண ஹர்த்தாலுக்கு அழைப்பு விடுக்கப்படுவதாக இலங்கை தமிழரசு கட்சியின் தலைவர் சி.வி.கே.சிவஞானம் தெரிவித்துள்ளார். யாழ்ப்பாணத்தில் நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பின் போதே அவர் இதனை தெரிவித்தார். மக்கள் குடியிருப்புகளுக்கு மத்தியில் ராணுவ முகாம்கள் அமைந்திருப்பதன் காரணத்தினாலேயே இவ்வாறான பல தாக்குதல்கள் நடைபெறுகின்றன எனவும் இதை அடிப்படையாகக் கொண்டு...

12ஆம் திகதி செவ்வாய்க்கிழமை மாலை 35 வயதுடைய குடும்பஸ்தர் ஒருவர் பனையால் விழுந்ததாக கூறி மயக்க நிலையில் அவரை வைத்தியசாலைக்கு கொண்டுவந்து சேர்ப்பித்துவிட்டு வைத்தியசாலைக்கு அழைத்து வந்தவர்கள் தப்பிச் சென்றுள்ளனர். இது குறித்து மேலும் தெரியவருகையில், பண்டத்தரிப்பு - சாந்தை பகுதியை சேர்ந்த குடும்பஸ்தரே இவ்வாறு தெல்லிப்பழை ஆதார வைத்தியசாலையில் சேர்ப்பிக்கப்பட்டார். பின்னர் அவர் மேலதிக...

தொண்டைமானாறு கடல் நீர் ஏரியிலிருந்து நேற்று மாலை (12) பெண் ஒருவரின் சடலம் ஒன்று மீட்கப்பட்டுள்ளதாக அச்சுவேலி பொலிஸார் தெரிவித்தனர். மீன்படி நடவடிக்கைக்கு வந்த மீனவர்கள் சடலம் ஒன்று மிதந்து இருப்பதைக் கண்டு அவசர தொலைபேசி இலக்கத்துக்கு தகவல் வழங்கியிருந்த நிலையில் சம்பவ இடத்துக்கு வந்த அச்சுவேலி பொலிஸார் விசாரணைகளை மேற்கொண்டுவந்தனர். இந்நிலையில் சடலமாக மீட்கப்பட்ட...

வடக்கு, கிழக்கில் நடத்துவதற்குத் தீர்மானிக்கப்பட்ட நிர்வாக முடக்கல் போராட்டத்தின் திகதியில் மாற்றம்!
வடக்கு, கிழக்கில் எதிர்வரும் 15 ஆம் திகதி நடத்துவதற்குத் திட்டமிடப்பட்ட நிர்வாக முடக்கல் போராட்டத்திற்கான திகதியில் மாற்றம் செய்யப்பட்டுள்ளதாக இலங்கை தமிழரசுக் கட்சியின் பதில் பொதுச் செயலாளர் எம்.ஏ.சுமந்திரன் அறிவித்துள்ளார். வடக்கு கிழக்கில் இராணுவ பிரசன்னத்தை ஆட்சேபித்தும், முத்தையன்கட்டுக் குளத்தில் தமிழ் இளைஞர் உயிரிழந்த சம்பவத்தைக் கண்டித்தும், இலங்கை தமிழரசு கட்சியினால் நிர்வாக முடக்கல் போராட்டத்திற்கு...

நாட்டில் இடம்பெறும் பல்வேறு குற்றச் செயல்கள் தொடர்பில் முறையிடுவதற்கு வட்ஸ் அப் தொலைபேசி இலக்கம் ஒன்று அறிமுகம் செய்யப்பட்டுள்ளதாக பொலிஸ் மா அதிபர் சட்டத்தரணி பிரியந்த வீரசூரிய தெரிவித்துள்ளார். இந்த வட்ஸ்அப் தொலைபேசி இலக்கமானது 24 மணிநேரமும் சேவையில் இருக்கும் என பொலிஸ்மா அதிபர் தெரிவித்துள்ளார். அதன்படி, பொதுமக்கள் அனைவரும் 071- 8598888 என்ற வட்ஸ்அப்...

நாட்டில் நுரையீரல் புற்றுநோய் வேகமாக அதிகரித்து வருவதாக வெலிசறை தேசிய மார்பு வைத்தியசாலையின் வைத்திய நிபுணர்கள் சுட்டிக்காட்டியுள்ளனர். அண்மையில் நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் பங்கேற்ற அவர்கள், ஒவ்வொரு ஆண்டும் 2,000 - 3,000 நுரையீரல் நோயாளிகள் பதிவாவதாக தெரிவித்தனர். நுரையீரல் புற்றுநோய் ஆண்களிடையே இரண்டாவது மிகவும் பொதுவான புற்றுநோயாக மாறியுள்ளது என சுவாச நோய் வைத்திய...

முத்ததையன்கட்டு இளைஞன் எதிர்மன்னசிங்கம் கவிராஜின் மரணத்திற்கு இராணுவத்தினர் காரணம் இல்லை எனவும் அவர் நீரில் மூழ்கியே உயிரிழந்துள்ளதாகவும் ஒட்டுசுட்டான் பொலிஸார் அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளனர். குறித்த அறிக்கையில் ”ஒட்டுசுட்டான் பொலிஸ் நிலையத்தின் சிவநகர் பிரதேசத்தில் அமைந்துள்ள 12 ஆவது சிங்கப் படையணி முகாமை அப்புறப்படுத்துவதற்குச் சில நாட்களாக நடவடிக்கை எடுக்கப்பட்டு வருவதாகவும், குறித்த முகாமிலிருந்து அகற்றப்பட்ட...

முல்லைத்தீவு, ஒட்டுசுட்டான் – முத்துஐயன்கட்டு பகுதியில் உள்ள 13ஆவது படையணி முகாமில் எதிர்மனசிங்கம் கபில்ராஜ் (32) எனும் தமிழ் இளைஞர் இராணுவத்தினரால் தாக்கப்பட்டு கொலை செய்யப்பட்டதாகக் கூறப்படும் சம்பவத்திற்கு எதிர்ப்புத் தெரிவித்து, எதிர்வரும் 15ஆம் திகதி வடக்கு மற்றும் கிழக்கு மாகாணங்களில் பூரண ஹர்த்தால் மற்றும் கவன ஈர்ப்பு போராட்டத்தை முன்னெடுக்க இலங்கைத் தமிழரசு கட்சி...

ஐந்து தமிழ் இளைஞர்கள், 8 ஆம் திகதி முத்தையன் கட்டு இராணுவ முகாமுக்கு சிப்பாய்களால் அழைத்து செல்லப்பட்டுள்ளனர். பின்னர் அவர்கள் அந்த முகாமில் இருந்து தப்பி சென்றதாக கூறப்படுகிறது. தப்பிச் சென்றவர்களில் ஒருவரான, கபில்ராஜ், 9 ஆம் திகதி முல்லை முத்தையன் கட்டு குளத்தில் சடலமாக மீட்க பட்டுள்ளார். தப்பிச் சென்ற ஏனைய நால்வர், தம்மை...

முல்லைத்தீவு - ஒட்டுசுட்டான் பொலிஸ் பிரிவுக்குட்ப்பட்ட முத்துஐயன்கட்டு குளத்திலிருந்து இளைஞர் ஒருவர் சடலமாக மீட்கப்பட்ட சம்பவம் தொடர்பில் கைது செய்யப்பட்ட மூன்று இராணுவ சிப்பாய்களும் விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளனர். கைதானவர்களை முல்லைத்தீவு நீதவான் நீதிமன்றில் முன்னிலைப்படுத்திய போது எதிர்வரும் 19ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு உத்தரவிடப்பட்டுள்ளது. குறித்த இளைஞனின் மரணம் தொடர்பில் பிரதேச மக்கள் வழங்கிய...

வடக்கு மற்றும் கிழக்கு மாகாணத்தில் இராணுவத்தின் அதிகப்படியான பிரசன்னத்தை உடனடியாக தடுக்க உரிய நடவடிக்கைகளை எடுக்குமாறும் முத்தையன்கட்டு இளைஞன் மரணம் தொடர்பில் நீதிக்கான செயல்முறை தலையீடின்றி மேற்கொள்ளப்படுவதை உறுதிசெய்யுமாறும் இலங்கைத் தமிழரசுக் கட்சி ஜனாதிபதி அநுரகுமார திஸாநாயக்கவிடம் எழுத்துமூலமாக வலியுறுத்தியுள்ளது. இராணுவத்தினரால் அழைத்துச் செல்லப்பட்ட இளைஞன் மரணித்த சம்பவம் தொடர்பில் ஜனாதிபதிக்கு இலங்கைத் தமிழரசுக் கட்சியின்...

ஐந்தாம் தர புலமைப்பரிசில் பரீட்சை பெறுபேறுகள் எதிர்வரும் செம்டெம்பர் மாதம் 20 ஆம் திகதிக்கு முன்னர் வெளியிடப்படும். விடைத்தாள் திருத்தும் பணிகள் ஞாயிற்றுக்கிழமை (10) முதல் ஆரம்பிக்கப்படும் என்று பரீட்சைகள் திணைக்கள ஆணையாளர் நாயகம் இந்திகா குமாரி தெரிவித்துள்ளார். 2025 ஆம் ஆண்டுக்கான கல்வி பொதுதராதர உயர்தரப் பரீட்சை 2025.11.10 ஆம் திகதி முதல் 2025.12.05...

யாழ்ப்ப்பாணத்தில் ஞாயிற்றுக்கிழமை (10) இரவு இடம்பெற்ற கத்திக்குத்து தாக்குதலில் ஒருவர் உயிரிழந்துள்ளதுடன் , இரு பெண்கள் உள்ளிட்ட நால்வர் படுகாயமடைந்துள்ளனர். புங்குடுதீவு முதலாம் வட்டாரத்தை சேர்ந்த அற்புதராசா அகிலன் (வயது 40) என்பவரே உயிரிழந்துள்ளார். குறித்த நபர் மீது சரமாரியாக கத்திக்குத்து தாக்குதல் மேற்கொள்ளப்பட்டதில் , அந்நபர் சம்பவ இடத்திலையே உயிரிழந்துள்ளார். அதேவேளை கத்திக்குத்து தாக்குதலை...

செம்மணி பகுதியில் தற்போது அகழ்வு பணிகள் முன்னெடுக்கப்பட்டு வரும் இரண்டு மனித புதைகுழிகளுக்கு மேலதிகமாக அப்பகுதியில் வேறு மனித புதைகுழிகளும் காணப்படுகின்றனவா என்பதனை கண்டறியும் நோக்குடன் ஸ்கான் நடவடிக்கைகள் இன்று திங்கட்கிழமை (04) முன்னெடுக்கப்பட்டது. ஜி.பி.ஆர். ஸ்கானர் (தரையை ஊடுருவும் ராடர்) மூலம், பரந்துபட்ட ஸ்கான் நடவடிக்கைகளை முன்னெடுக்க பாதுகாப்பு அமைச்சின் அனுமதிகள் கிடைக்கப்பெறவில்லை இந்நிலையில்,...

செம்மணி மனித புதைகுழிகள் அகழ்வு பணிகளை மனித உரிமை ஆணைக்குழு ஆணையாளர்கள் நேரில் பார்வையிட்டனர் மற்றும் மனித புதைகுழிகள் தொடர்பிலான சாட்சிகளுக்கு பாதுகாப்பு வழங்க நடவடிக்கை எடுப்பதற்கு ஆணைக்குழு தயார் என்று தெரிவித்துள்ளனர். மனித உரிமை ஆணைக்குழுவின் கலாநிதி ஜகன் குணத்திலாக, பேராசிரியர் தை. தனராஜ் மற்றும் பேராசியர் பாத்திமா பர்ஷான ஹனீபா ஆகியோர் யாழ்ப்பாண...

All posts loaded
No more posts