தொலைபேசி ஒட்டுக் கேட்பு: கூல்சனுக்கு 18 மாத சிறை

பிரிட்டிஷ் செய்தித்தாள் ஒன்றின் ஆசிரியராக இருந்து, பின்னாளில் பிரிட்டிஷ் பிரதமர் டேவிட் கெமரனின் தலைமை ஆலோசகராக இருந்த அண்டி கூல்சனுக்கு, தொலைபேசிகளை ஒட்டுகேட்ட குற்றத்துக்காக 18 மாத கால சிறைத்தண்டனை விதிக்கப்பட்டுள்ளது. (more…)

அரசாங்கம் எதிர்ப்பு, அமெரிக்க நிகழ்ச்சித் திட்டம் ரத்து

இலங்கையில் வாக்காளர்களை தெளிவுபடுத்தும் பொருட்டு அமெரிக்காவின் யூஎஸ்எயிட் நிறுவனத்தின் உதவித் திட்டத்தின் கீழ் நடத்தவிருந்த நிகழ்ச்சித் திட்டம், அரசாங்கத்தின் எதிர்ப்புக்கு மத்தியில் ரத்து செய்யப்பட்டிருக்கின்றது. (more…)
Ad Widget

தமிழ் அகதிகளை இலங்கையிடமே ஒப்படைக்கும் ஆஸி.. ஐ.நா. கண்டனம்

புகலிடம் நாடி, உயிரைப் பணயம் வைத்து ஆஸ்திரேலியாவுக்கு வந்து கொண்டிருந்த 200 இலங்கைத் தமிழர்களை தடுத்து மீண்டும் இலங்கையிடமே ஆஸ்திரேலியா ஒப்படைக்கவிருப்பதற்கு ஐ.நா. கடும் கண்டனம் தெரிவித்துள்ளது. (more…)

இந்திய வீட்டுத் திட்டத்தில் வீடுகள் கட்டுவதற்கான ஆவணப்பதிவுகள் இலவசம் – மாநகர முதல்வர்

யாழ். மாநகர எல்லைக்குள் இந்திய வீட்டுத் திட்டத்தில் வீடுகள் கட்டுபவர்களுக்கு அனுமதி பெறுவதற்கான ஆவணங்கள் மாநகர சபையினால் இலவசமாகச் செய்து கொடுக்கப்படுமென யாழ்.மாநகர முதல்வர் யோகேஸ்வரி பற்குணராசா தெரிவித்தார். (more…)

ஊடகவியலாளர் மீது தாக்குதல்

யாழ்ப்பாணத்திலிருந்து வெளிவரும் பத்திரிகையொன்றில் ஊடகவியலாளராக பணிபுரியும் தங்கராசா பிரபாகரன் (33) என்பவர் வரணி – கொடிகாமம் வீதியில் வைத்து 4 பேர் கொண்ட கும்பலினால் நேற்று வெள்ளிக்கிழமை (04) மதியம் தாக்குதலுக்குள்ளானதாக கொடிகாமம் பொலிஸார் தெரிவித்தனர். (more…)

தனுஷ் திரைப்பயணத்தையே மாற்றப்போகும் படம்!

தமிழ் திரையுலகின் புருஸ்லி என்று அழைக்கப்படுபவர் தனுஷ். இவர் நடித்த ஆடுகளம் திரைப்படத்திற்காக தேசிய விருது வாங்கியது மட்டுமில்லாமல், கொலை வெறி பாடலின் மூலம் உலகப் புகழ் பெற்றார். (more…)

இராணுவத்தினரின் நிகழ்வில் முதலமைச்சர் விக்னேஸ்வரன் பங்கேற்கமாட்டார்!

யாழ். இராணுவத் தலைமையகத்தின் ஏற்பாட்டில் இடம்பெறவுள்ள எல்லேப் போட்டிகள் நிகழ்வின் ஆரம்ப வைபவத்தில் வடமாகாண முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரன் கலந்துகொள்ளமாட்டார் என வடமாகாண விவசாய அமைச்சர் பொன்னுத்துரை ஐங்கரநேசன் தெரிவித்தார். (more…)

காணி சுவீரிப்புக்கு ஜனாதிபதியே பொறுப்பு – சரவணபவன்

இராணுவம் காணி சுவீகரிப்பில் ஈடுபடுவது ஜனாதிபதிக்கு நன்றாகத் தெரியும். எனவே காணி சுவீகரிப்பு நடவடிக்கைகளுக்கு ஜனாதிபதியே பொறுப்புக்கூற வேண்டும் என தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் ஈஸ்வரபாதம் சரவணபவன் தெரிவித்தார். (more…)

யூதக்குடியேற்றத்தையும் விஞ்சிவிட்டது – சிவாஜிலிங்கம்

இஸ்ரேலின் யூத குடியேற்றத்தை மிஞ்சிய வகையில் இலங்கையின் வடக்கு, கிழக்கு மாகாணங்களில் சிங்களக் குடியேற்றங்கள் மேற்கொள்ளப்பட்டு வருவதாக வடமாகாண சபை உறுப்பினர் எம்.கே.சிவாஜிலிங்கம் நேற்று வெள்ளிக்கிழமை (04) தெரிவித்தார். (more…)

அவுஸ்திரேலியா அணியை வென்றது யாழ்.மாவட்ட அணி

யாழ்.மாவட்ட பாதுகாப்பு படைகளின் ஏற்பாட்டில் நடைபெற்ற சிநேகபூர்வ இருபது – 20 துடுப்பாட்டப் போட்டியில், யாழ்.மாவட்டத் தெரிவுத் துடுப்பாட்ட அணி 150 ஓட்டங்களால் அவுஸ்திரேலியா மெல்போன் நகர யாராவலி துடுப்பாட்ட சங்க அணியினை வென்றது. (more…)

விடுதலைப்புலிகள் பயன்படுத்திய நிலங்களை மாத்திரம் அல்ல அவர்களது நினைவு தினங்களையும் இராணுவம் அபகரிக்கிறது

விடுதலைப்புலிகள் பயன்படுத்தினார்கள் என்பதற்காகப் பொதுமக்களின் நிலங்களை அபகரித்து வைத்திருக்கும் இராணுவம், இப்போது விடுதலைப்புலிகளின் நினைவுதினங்களையும் அபகரிக்க ஆரம்பித்திருக்கிறது என்று வடக்கு விவசாய அமைச்சர் பொ.ஐங்கரநேசன் குற்றம் சாட்டியுள்ளார். (more…)

பகிடிவதையில் மாணவன் மரணம்: மற்றொரு மாணவனுக்கு மரணதண்டனை

பேராதனை பல்கலைக்கழகத்தின் பொறியியல் பீட முதலாம் வருட மாணவனான செல்வவிநாயகர் வரபிரகாஷை பகிடிவதைக்கு உட்படுத்தி அவரை கடத்திசென்று கொலைசெய்தார் என்ற குற்றச்சாட்டப்பட்ட பாலேந்திரா பிரசாத் சதீஸ்கரனை குற்றவாளியாக (more…)

வடக்கின் அரசன் உதைப்பந்தாட்ட போட்டி, நாவாந்துறைக்கு வெற்றிக் கேடயம்

“வடக்கின் அரசன்” உதைபந்தாட்ட சுற்றுப்போட்டியின் நேற்றைய இறுதிப்போட்டியில் மன்னார் சாவல்கட்டு கில்லரி அணியை 5-1 என்ற கோல் கணக்கில் நாவாந்துறை சென்.மேரிஸ் அணி வெற்றி கொண்டது. (more…)

கோண்டாவில் கொலை: சகோதரர்கள் இருவருக்கும் தொடர்ந்தும் மறியல்

கோண்டாவில் வாள்வெட்டில் இறந்த சுகிர்தனின் சகோதர்கள் இருவரையும் எதிர்வரும் 10 ஆம் திகதி வரை தொடர்ந்தும் விளக்கமறியலில் வைக்குமாறு யாழ். நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. (more…)

லிங்கா படம் நின்றதா? அதிர்ச்சியில் திரையுலகம்!

’சூப்பர் ஸ்டார்’ ரஜினிகாந்த் நடித்து கொண்டிருக்கும் படம் லிங்கா. இப்படத்தில் இவருக்கு ஜோடியாக சோனாக்‌ஷி, அனுஷ்கா நடிக்க, கமர்ஷியல் கிங் கே.எஸ்,ரவிக்குமார் இயக்கி வருகிறார். (more…)

நான்கு தடுப்பு மருந்துகளை இந்தியா இலவசமாக வழங்கவுள்ளது

குழந்தை இறப்பு விகிதத்தைக் குறைக்கும் முயற்சியில், நான்கு புதிய தடுப்பு மருந்துகளை இந்திய அரசு இலவசமாக வழங்கப்போவதாக அறிவித்திருக்கிறது. (more…)

ஈராக்கில் சிக்கிய இந்திய செவிலியர்களும் விடுதலை?

ஈராக்கில் நடந்து வரும் மோதலில் திக்ரித் நகரில் உள்ள ஒரு மருத்துவ மனையில் சிக்கியிருந்த 46 இந்திய செவிலியர்களும் விடுதலை செய்யப்பட்டுவிட்டதாக அவர்கள் குடும்பத்தினர் சிலர் கூறுகின்றனர். (more…)

சிறுவனின் சடலம் மீட்பு

அச்சுவேலி அரச சிறுவர் நன்னடத்தைப் பாடசாலையில் இருக்கும் முல்லைத்தீவு உடையார்கட்டினைச் சேர்ந்த புவனேஷ்வரன் ரகுவரன் (16) என்ற சிறுவன் இன்று வெள்ளிக்கிழமை (04) அதிகாலை சடலமாக மீட்கப்பட்டுள்ளதாக அச்சுவேலிப் பொலிஸார் தெரிவித்தனர். (more…)

மீள்குடியேற்றத்தை வலியுறுத்தி கிளிநொச்சியில் ஆர்ப்பாட்டம்

கிளிநொச்சி, பரவிப்பாஞ்சன் உள்ளிட்ட இடங்களில் மக்களை மீளக்குடியமர்த்தக் கோரியும், கிளிநொச்சியில் இடம்பெறும் நிலஅபகரிப்புக்களுக்கு எதிராகவும் கிளிநொச்சி மாவட்டச் செயலகத்திற்கு முன்பாக கவனயீர்ப்புப் போராட்டமொன்று இன்று வெள்ளிக்கிழமை (04) காலை முதல் இடம்பெற்று வருகின்றது. (more…)

யாழ்,ஆஸி அணிகளின் கிரிக்கெட் மோதல் இன்று

இலங்கை கிரிக்கெட்டில் பல முரளிதரன்கள் உருவாக்கும் நோக்கில் இன்று ஆஸி.இளைஞர் அணியுடன் யாழ்.மாவட்ட கிரிக்கெட் அணியினர் இருபதுக்கு இருபது கிரிக்கெட் போட்டியில் இன்று மோதுகின்றன. (more…)
Loading posts...

All posts loaded

No more posts