Ad Widget

துப்பாக்கியால் சுடப்பட்டே றெக்­சியன் கொல்லப்பட்டார்; நீதிமன்று நேற்று முடிவுரை

judgement_court_pinaiதுப்பாக்கியால் சுடப்பட்டு றெக்சி­யன் கொல்லப்பட்டார் என்று ஊர்காவற்றுறை நீதிமன்று நேற்று முடிவுரை செய்துள்ளது. மேலதிக நடவடிக்கைகளைத் தொடருமாறு வழக்குத் தொடுநர்களான குற்றப்புலனாய்வுப் பிரிவுப் பொலிஸாருக்கு நீதி மன்று அறிவித்துள்ளது.

ஊர்காவற்றுறை நீதிமன்றில் நீதிவான் எஸ்.லெனின்குமார் முன்னிலையில் இந்த வழக்கு நேற்று எடுத்துக் கொள்ளப்பட்டது. றெக்­சியனது கொலைக்குற்றச் சாட்டில் தொடர்புபட்ட கமல் தொடர்பான தமது தரப்பு விசாரணைகள் அனைத்தும் நிறை வடைந்து விட்டன என்று குற்றப் புலனாய்வுப் பொலிஸார் நீதி மன்றில் கடந்த தவணை தெரிவித்தனர். அதனையடுத்து வழக்கு முடிவுரைக்காக நேற்று வரை ஒத்திவைக்கப்பட்டது.

நேற்று வழக்கின் முடிவுரையை நீதிவான் அறிவித்தார். அதன் படி சாட்சியங்களின் வாக்கு மூலங்கள் மற்றும் சட்டவைத்திய அதிகாரியின் அறிக்கை என் பனவற்றின் அடிப்படையில் றெக்­சியன் துப்பாக்கியால் சுடப்பட்டதனால் மூளையில் பாதிப்பு ஏற்பட்டு உயிரிழந்தார் என்று முடிவுரை செய்யப்பட்டது.

தவிர மேலதிக நடவடிக்கைகளைத் தொடருமாறும் வழக்குத் தொடுநர்களான குற்றப் புலனாய்வுப் பிரிவுப் பொலிஸாருக்கு நீதிமன்று அறிவித்தது. அத்துடன் கொலைச் சந்தேகநபர்கள் மூவருக்கும் எதிர் வரும் 22 ஆம் திகதிவரை விளக்கமறியல் நீடிக்கப்பட்டுள்ளது.

நெடுந்தீவுப் பிரதேசசபைத் தலைவர் தானியல் றெக்­சியன் கடந்த நவம்பர் 26 ஆம் திகதி சுட்டுக் கொல்லப்பட்டார். அவரைச் சுட்டுக் கொலை செய்த குற்றச்சாட்டில் ஈ.பி.டி.பியின் முன்னாள் உறுப்பினரும் வடமாகாணசபை முன்னாள் எதிர்க்கட்சித் தலைவருமான கந்தசாமி கமலேந்திரன் (கமல்) கடந்த டிசம்பர் 3 ஆம் திகதி கைது செய்யப்பட்டார்.

அதற்கு முதல்நாள் வேலணையில் வசித்து வந்த லண்டன் யசிந்தன் மற்றும் றெக்சி­யனின் மனைவியான அனித்தா ஆகியோர் பொலிஸாரால் கைது செய்யப்பட்டனர்.

கொலையின் பின்னர் கமல் வடமாகாண சபை எதிர்க்கட்சித் தலைவர் பதவியிலிருந்து விலக்கப்பட்டு, கட்சியிலிருந் தும் விலக்கப்பட்டு பின்னர் உறுப்பினர் பதவியிலிருந்தும் விலக்கப்பட்டார்.

கமல் மற்றும் அனித்தா ஆகியோர் சார்பாக யாழ்.மேல் நீதிமன்றில் பிணைவிண்ணப்பம் தாக்கல் செய்யப்பட்டுள்ள மையும் குறிப்பிடத்தக்கது.

தொடர்புடைய செய்தி

கமலேந்திரனின் விளக்கமறியல் நீடிப்பு

Related Posts