Ad Widget

பிரிட்டிஷ் நாடாளுமன்ற சதுக்கத்தில் காந்தி சிலை அமைக்கத் திட்டம்

பிரிட்டிஷ் நாடாளுமன்ற சதுக்கத்தில் மகாத்மா காந்தி சிலை ஒன்றை அமைக்கும் திட்டத்தை பிரிட்டிஷ் அரசாங்கம் அறிவித்துள்ளது.

A-police-boat-passes-in-front-of-the-Houses-of-Parliament

இந்த காந்தி நினைவிடம் அடுத்த ஆண்டு திறந்துவைக்கப்படும் என்று பிரிட்டிஷ் வெளியுறவு அமைச்சர் வில்லியம் ஹேக்கும் நிதியமைச்சர் ஜார்ஜ் ஆஸ்போர்னும் டில்லியில் இன்று அறிவித்தனர்.

பிரிட்டிஷ் வெளியுறவு அமைச்சரும் நிதியமைச்சரும் வர்த்தக தூதுக்குழுவொன்றுக்கு தலைமை தாங்கி இந்தியா சென்றுள்ளனர்.

இந்தியாவுடனான வணிக உறவுகளை மேலும் பலப்படுத்துவதே இந்தப் பயணத்தின் நோக்கம்.

‘உலகின் மிகப்பெரிய ஜனநாயகத்தின் தந்தையான மகாத்மா காந்தியின் உருவச் சிலை நாடாளுமன்றங்களின் தாய் என்று வர்ணிக்கப்படும் பிரிட்டிஷ் நாடாளுமன்றத்தின் முன்றலில் அமைவது பொருத்தமானது’ என்று ஆஸ்போர்ன் கூறினார்.

பிரிட்டிஷ் நாடாளுமன்ற சதுக்கத்தில் வின்ஸ்டன் சேர்ச்சில் மற்றும் நெல்சன் மண்டேலா உள்ளிட்ட முன்னாள் பிரிட்டிஷ் மற்றும் வெளிநாட்டு அரச தலைவர்களின் உருவச் சிலைகள் அமைந்துள்ளன.

Related Posts