Ad Widget

பேச்சுக்களை மீள ஆரம்பிப்பதற்கு பூரண ஒத்துழைப்பு வழங்க தயார் – கூட்டமைப்பு

அர­சியல் தீர்­வுக்­கான பேச்­சு­வார்த்­தை­யினை அர­சாங்­கமே முறித்­துக்­கொண்­டது. மீளவும் இந்தப் பேச்­சுக்­களை ஆரம்­பிப்­ப­தற்கு தென்­னா­பி­ரிக்­கா­விற்கு பூரண ஒத்­து­ழைப்பு வழங்க நாம் தயா­ரா­கவே உள்ளோம். ஆனால் அர­சாங்­கத்தை வழிக்கு கொண்­டு­வ­ர­வேண்­டி­யது உங்­களின் பொறுப்­பாகும் என்று தென்­னா­பி­ரிக்­காவின் இலங்­கைக்­கான விசேட பிர­தி­நி­தியும் பதில் ஜனா­தி­ப­தி­யு­மான சிறில் ரம­போஷா தலை­மை­யி­லான தூதுக்­கு­ழு­விடம் தமிழ் தேசி­யக்­கூட்­ட­மைப்பு சுட்­டிக்­காட்­டி­யுள்­ளது.

rambosha-TNA

இலங்கை வந்திருந்த ரம­போஷா தலை­மை­யி­லான தென்­னா­பி­ரிக்க தூதுக்­கு­ழு­வி­னரை நேற்­றுக்­காலை கொழும்பு தாஜ்­ச­முத்­திரா ஹோட்­டலில் தமிழ் தேசி­யக்­கூட்­ட­மைப்பின் தலைவர் இரா. சம்­பந்தன் தலை­மை­யி­லான தூதுக்­கு­ழு­வினர் சந்­தித்து பேச்­சு­வார்த்தை நடத்­தினர். காலை 7.15 மணி­முதல் 8.45 மணி­வரை நடை­பெற்ற இந்த பேச்­சு­வார்த்­தை­யின்­போதே கூட்­ட­மைப்­பினர் மேற்­கண்­ட­வாறு தெரி­வித்­துள்­ளனர்.இந்தச் சந்­திப்பில் கூட்­ட­மைப்பின் சார்பில் அதன் தலைவர் இரா. சம்­பந்தன் செய­லாளர் மாவை சேனா­தி­ராஜா, எம்.பி.க்களான சுரேஷ்­பி­ரே­மச்­சந்­திரன், எம்.ஏ. சுமந்­திரன் ஆகியோர் கலந்து கொண்­டனர். சந்­திப்பின் போது கூட்­ட­மைப்பின் தலைவர் இரா. சம்­பந்தன் தலை­மை­யி­லான தூதுக்­கு­ழு­வினர் இலங்­கையின் தற்­போ­தைய நிலை குறித்தும் அர­சியல் தீர்­வுக்­கான பேச்­சு­வார்த்­தை­யினை ஆரம்­பிப்­ப­தி­லுள்ள முட்­டுக்­கட்­டைகள் குறித்தும் எடுத்­துக்­கூ­றி­யுள்­ளனர்.

இங்கு கருத்துத் தெரி­வித்த கூட்­ட­மைப்பின் பிர­தி­நி­திகள், யுத்தம் முடி­வ­டைந்து ஐந்து வரு­டங்கள் நிறை­வ­டைந்­து­விட்ட நிலையில் அர­சாங்­க­மா­னது அர­சியல் தீர்­வுக்­கான நட­வ­டிக்­கைகள் எத­னையும் எடுப்­ப­தாக இல்லை. மேலும் மேலும் சர்ச்­சை­களை ஏற்­ப­டுத்தும் நட­வ­டிக்­கை­யி­லேயே அர­சாங்கம் ஈடு­பட்­டள்­ளது. வடக்கு, கிழக்கில் இரா­ணு­வத்­தி­ன­ரின்­தே­வைக்­கென தொடர்ந்தும் காணிகள் அப­க­ரிக்­கப்­பட்டு வரு­கின்­றன. இரா­ணுவப் பிர­சன்­னமும் அதி­க­ரிக்­கப்­ப­டு­கின்­றது. மக்­களின் காணிகள் இரா­ணுவத் தேவைக்கு சுவீ­க­ரிக்­கப்­பட்டு வரு­வ­தனால் மக்கள் முழு­மை­யாக மீளக்­கு­டி­யேற முடி­யாத நிலை ஏற்­பட்­டுள்­ளது.

இதனால் தான் வடக்­கி­லி­ருந்து இரா­ணு­வத்­தி­னரை அகற்­று­மாறு நாம் கோரி­வ­ரு­கின்றோம். இரா­ணுவப் பிர­சன்­னத்தைக் குறைத்து மக்­களை முழு­மை­யாக குடி­யேற்ற நட­வ­டிக்கை எடுக்­கப்­ப­ட­வேண்டும். இவ்­வா­றான நிலை ஏற்­பட்டால் தான் யுத்­தத்தில் பாதிக்­கப்­பட்ட மக்­களை பழைய நிலைக்கு கொண்­டு­வர முடியும்.

அர­சாங்­கத்­துடன் 2011 ஆம் ஆண்டு நாம் ஒரு­வ­ரு­ட­காலம் பேச்­சு­வார்த்தை நடத்­தினோம். அர­சியல் தீர்­வுக்­கான தீர்­வுக்­கான திட்­ட­மொன்­றி­னையும் அர­சாங்­கத்­திடம் கைய­ளித்­தி­ருந்தோம். ஆனால் அதற்கு பதி­ல­ளிக்­காத அர­சாங்கம் பேச்­சு­வார்த்­தையை முறித்­துக்­கொண்­டது. 2012 ஆம் ஆண்டு ஜன­வரி மாதம் 18, 19 ,20 ஆம் திக­தி­களில் பேச்­சு­வார்த்­தைகள் நடை­பெ­று­வ­தற்கு தீர்­மா­னிக்­கப்­பட்­டது. நாம் பேச்­சு­வார்த்­தைக்­காக சென்று காத்­தி­ருந்­த­போதும் அர­சாங்­கத்­த­ரப்­பினர் பேச்­சு­வார்த்­தைக்கு வர­வில்லை. இதனால் நாம் காத்­தி­ருந்து விட்டு ஏமாற்­றத்­துடன் திரும்­பி­யி­ருந்தோம்.

பேச்­சு­வார்த்­தையை முறித்துக் கொண்டு அர­சாங்கம் தெரி­வுக்­கு­ழு­வொன்றை அமைத்­து­விட்டு அந்தத் தெரி­வுக்­கு­ழு­விற்கு வந்தால் மட்­டுமே பேச்­சு­வார்த்தை நடத்த முடியும் என்று தெரி­வித்­தது. ஆனால் அர­சாங்­கத்­துடன் நேர­டிப்­பேச்­சு­வார்த்­தை­களை நடத்தி அர­சியல் தீர்வு தொடர்பில் இணக்கம் காணப்­பட்ட பின்னர் அதனை அங்­கீ­கா­ரத்­திற்கு தெரி­வுக்­கு­ழு­விடம் சமர்ப்­பிக்­கலாம் என நாம் வலி­யு­றுத்­தினோம். ஆனால் இதற்கு அர­சாங்கம் உடன் பட­வில்லை. தெரி­வுக்­கு­ழுவில் 31 பேர் ஆளும்­த­ரப்­பி­ன­ருக்கு சாத­க­மாக இருக்கும் போது ஆகக்­கு­றைந்­தது மூன்று பிர­தி­நி­தித்­து­வத்தைக் கொண்ட நாம் கூறும் விடயம் அங்கு எடு­ப­ட­போ­வ­தில்லை.

அர­சாங்­க­மா­னது அளித்த வாக்­கு­று­தி­களை நிறை­வேற்­ற­வில்லை.அத்துடன் எத்­த­கைய ஒப்­பந்­தங்­க­ளையும் நடை­மு­றைப்­ப­டுத்த வில்லை. இந்­திய, இலங்கை ஒப்­பந்­தத்தின் கீழ் 13 ஆவது திருத்தச் சட்­டத்­திற்கு மேலாக சென்று தீர்வு காணப்­படும் என்று ஜனா­தி­பதி மஹிந்­த­ரா­ஜ­பக்ஷ இந்­தியா சென்­ற­போது உறு­தி­ய­ளித்­தி­ருந்தார். ஆனால் இலங்கை திரும்­பி­யதும் வடக்கு, கிழக்­கிற்கு காணி, பொலிஸ் அதி­கா­ரங்கள் வழங்க முடி­யாது என்று கூறு­கின்றார். இவ்­வாறு முரண்­பட்ட செயற்­பா­டு­க­ளி­லேயே அர­சாங்கம் ஈடு­பட்டு வரு­கின்­றது.

தென்­னா­பி­ரிக்­காவின் உத­வி­யுடன் அர­சியல் தீர்­வுக்­கான சமா­தானப் பேச்­சு­வார்த்­தை­க­ளுக்கு பூரண ஒத்­து­ழைப்­பினை வழங்க நாம் அன்றும், இன்றும் தயா­ரா­கவே உள்ளோம். ஆனால் அர­சாங்­கத்தை வழிக்குக் கொண்­டு­வ­ர­வேண்­டி­யது உங்­க­ளது பொறுப்­பாகும். அவ்­வாறு பேச்­சுக்கள் ஆரம்­பித்தால் நாம் பூரண ஒத்­து­ழைப்பை வழங்­குவோம்.

நாம் அர­சியல் தீர்வு விட­யத்தில் கசப்­பான அனு­ப­வங்­க­ளையே கொண்­டி­ருக்­கின்றோம். பல ஒப்­பந்­தங்கள் தென்­ப­குதி அர­சாங்­கங்­க­ளினால் கிழித்­தெ­றி­யப்­பட்­டன. இந்­திய, இலங்கை ஒப்­பந்தம் கூட நடை­மு­றைக்கு வர­வில்லை. அர­சியல் தீர்­வுக்­கான பேச்­சு­வார்த்­தை­யினை முறித்துக் கொண்ட அர­சாங்கம் மீண்டும் பேசு­வ­தற்கு முன்­வந்தால் நாமும் அதற்கு தயா­ராக உள்ளோம் என்று இந்தப் பேச்­சு­வார்த்­தை­யின்­போது கூட்­ட­மைப்பின் பிர­தி­நி­திகள் சுட்­டிக்­காட்­டி­யுள்­ளனர்.

இதன்­போது கருத்துத் தெரி­வித்த தென்­னா­பி­ரிக்­காவின் பதில் ஜனாதிபதி சிறில் ரமபோஷா தலைமையிலான தூதுக்குழுவினர், எமது நாட்டின் அனுபவங்களை கொண்டு இலங்கையிலும் பேச்சுவார்த்தையினை ஆரம்பிப்பதற்கு முயற்சி மேற்கொள்வதற்கே இங்கு வந்துள்ளோம். அரசாங்கத்தின் அழைப்பை ஏற்றே நாம் இலங்கை வந்திருக்கின்றோம். எமது குழுவின் விஜயம் தொடர்பில் பத்திரிகைகள் எம்மீது குற்றம் சுமத்தி செய்திகளை வெ ளியிட்டுள்ளமை கவலையளிக்கின்றது. இது குறித்து அரசாங்கத்தரப்பினரிடமும் எடுத்துக்கூறியுள்ளோம்.

ஜனாதிபதி மஹிந்தராஜபக்ஷ எதிர்க்கட்சித் தலைவர் ரணில் விக்கிமசிங்க உட்பட அரச தூதக்குழுவினரை சந்தித்து நாம் பேசியிருக்கின்றோம் என்று கருத்து கூறியுள்ளனர்.

சம்பந்தன் கருத்து

இந்தச் சந்திப்புக் குறித்து கூட்டமைப்பின் தலைவர் சம்பந்தன் கருத்து தெரிவிக்கையில்;

தென்னாபிரிக்கப் பிரதிநிதிகளுடனான சந்திப்பு ஆக்கபூர்வமானதாக அமைந்தது. இலங்கை இனப்பிரச்சினையைத் தீர்ப்பதற்கு தென்னாபிரிக்கக் குழுவினர் மத்தியஸ்தம் வழங்கினால் நாம் அவர்களுக்குப் பூரண ஒத்துழைப்பு வழங்குவோம்.

அவர்கள் தமது நாட்டில் ஏற்பட்ட பிரச்சினைகளை எவ்வாறு முடிவுக்குக் கொண்டு வந்தனர் என்பது குறித்து எமக்கு விளக்கினர்.இலங்கை இனப்பிரச்சினைக்குத் தீர்வை எட்டுவதற்கு தாம் முழு ஆதரவை வழங்குவோம் என்றும் தென்னாபிரிக்க குழுவினர் உறுதியளித்தனர்.

ஏற்கனவே தென்னாபிரிக்காவில் நாம் தீர்வு முயற்சிகள் குறித்து சந்திப்புக்களை நடத்தியிருந்தோம். இதன் தொடர்ச்சியாகவே இந்தச் சந்திப்பும் அமைந்தது.இலங்கை இனப்பிரச்சினையைத் தீர்ப்பதற்கு தென்னாபிரிக்கக் குழுவினர் மத்தியஸ்தம் வழங்கினால் நாம் அவர்களுக்குப் பூரண ஒத்துழைப்பு வழங்குவோம்.
இங்கு பல தரப்பட்ட தரப்பினர் இருக்கின்றனர் அவர்களுடனும் விரிவாகப் பேசி ஓர் இணக்கத்திற்கு வருவதே முக்கியமானது என்றார்.

சுமந்திரன் கருத்து

சந்திப்பையடுத்து ஊடகங்களுக்கு கருத்துத் தெரிவித்த சுமந்திரன் எம்.பி. கூறியதாவது;

தேசிய இனப் பிரச்சினைக்கு தீர்வு காணும் விடயம் தொடர்பில் தென்னாபிரிக்க பதில் ஜனாதிபதி சிறில் ரமபோஷா தலைமையிலான குழுவினருடன் சுமார் ஒன்றறை மணிநேர பேச்சுவார்த்தை நடத்தினோம். கடந்த ஏப்ரல் மாதம் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு சார்பில் தென்னாபிரிக்க விஜயத்தினை மேற்கொண்டு சிறில் ரமபோஷாவுடன் பேச்சுவார்த்தைகளை மேற்கொண்டோம். அதன் இரண்டாம் கட்டப் பேச்சுவார்த்தையாகவே தற்போது இச்சந்திப்பு அமைந்துள்ளது.

இந்த சந்திப்பின்போது இலங்கையில் நிலவும் இனப்பிரச்சினைக்கான தீர்வு தொடர்பாக தென்னாபிரிக்கா நல்க இருக்கும் உதவிகள் எவ்வாறானதாக அமையும் என்பதே பிரதானமாக பேசப்பட்டது. குறிப்பாக இலங்கையில் தீர்க்க முடியாத பெரிய பிரச்சினைகள் இங்கு உள்ளன. யுத்தத்திற்குப் பின்னர் நாட்டில் இருக்கும் மோசமான நிலைமைகள், வன்முறைகள் பற்றியே அவர்களின் கவனத்திற்கு கொண்டு வந்தோம். அதேபோல் வடக்கிற்கு வந்து தமிழ் மக்களின் நிலைமைகள் என்னவென்பதை நேரடியாக அறிய வேண்டும் எனவும் கேட்டுக்கொண்டோம். இன்று வடக்கில் உள்ள மக்கள் பல சிக்கல்களை எதிர்கொள்கின்றனர்.

தென்னாபிரிக்காவின் சொந்த அனுபவத்தில் இருந்து தமிழர் தரப்பிற்கும், தமிழ்த் தேசியக் கூட்டமைப்பிற்கும், அரசாங்கத்திற்கும் உதவிகளை வழங்க இருக்கின்றனர். இவ்வாறான தென்னாபிரிக்காவின் உதவிகளை நாம் ஆரம்பத்தில் இருந்தே வரவேற்றுள்ளோம். தொடர்ந்தும் இவ்விடயம் தொடர்பில் ஆதரிப்போம். அதேபோல் அரசாங்கத்தின் அழைப்பின் பேரிலேயே தென்னாபிரிக்கக் குழுவினர் இலங்கைக்கான விஜயத்தினை மேற்கொண்டுள்ளனர். நாமும் அவர்களை வரவேற்கின்றோம் எனவும் அவர் தெரிவித்தார்.

தென்னாபிரிக்க கறுப்பினப் பெரும்பான்மையினருக்கும் சிறுபான்மை வெள்ளையருக்குமிடையில் ஏற்பட்ட பிரச்சினைகளைத் தீர்ப்பதற்கு முக்கிய பங்காற்றியவர்களாக ரமபோசாவும் றூத் மேயரும் விளங்குகின்றனர்.

கறுப்பினத் தலைவர் நெல்சன் மண்டேலாவின் பிரதிநிதியாக இப்போதைய உப ஜனாதிபதி சிறில் ரமபோசாவும் வெள்ளையர்களின் பிரதமரான டி கிளார்க்கின் பிரதிநிதியாக றூத் மேயரும் செயற்பட்டனர்.

இவர்கள் இருவரின் மூலமே அந்த நாட்டுப் பிரச்சினை தீர்க்கப்பட்டது. இந்த நிலையில் இரண்டு தரப்பிலுமாக முக்கியத்துவம் வகித்த பிரதிநிதிகள் இலங்கை விவகாரத்தைக் கையாள்வதற்கு வந்திருப்பது முக்கியமானது என்று அரசியல் வட்டாரங்கள் தெரிவித்தன.

Related Posts