- Tuesday
- May 5th, 2026
விக்ரம் நடிப்பில் சமீபத்தில் வெளிவந்த ஐ படம் திரையரங்குகளில் வெற்றிகரமாக ஓடிக்கொண்டிருக்கிறது. பெரிய பட்ஜெட்டில் உருவான இப்படத்தை ஷங்கர் இயக்கியிருந்தார். ஆஸ்கார் பிலிம்ஸ் நிறுவனம் தயாரித்திருந்தது. இப்படத்தில் விக்ரம் மூன்றுவிதமான கெட்டப்புகளில் வந்து அசத்தினார். குறிப்பாக, கூனன் கதாபாத்திரத்திற்கு அவர் எடுத்துக் கொண்ட சிரமம் அனைவருக்கும் தெரிந்ததே. இப்படத்திற்கு மக்கள் மத்தியில் கிடைத்துள்ள வரவேற்பு விக்ரமை...
தமிழ் சினிமாவுக்கு வந்த புதிதில் ஹன்சிகாவை எல்லோரும் ‘சின்ன குஷ்பூ’ என்று அழைத்து வந்தனர். கொழுக் மொழுக்கென்று இருந்த அவரது தேகத்தை வைத்து எல்லோரும் அப்படி அழைத்தார்கள். தற்போது, விஜய்க்கு ஜோடியாக ‘புலி’ படத்தில் நடித்துக் கொண்டிருக்கும் ஹன்சிகாவை விஜய் செல்லமாக இளவரசி என்று அழைத்து வருகிறாராம். இதுகுறித்து ஹன்சிகா கூறும்போது, எனக்கு மிகவும் பிடித்த...
இலங்கை மின்சார சபையின் நொதேன் பவர் என்னும் தனியார் நிறுவனத்தால் வெளியேற்றப்பட்டதாகக் கூறப்படும் கழிவு ஓயில் சுன்னாகம் பகுதியையும் தாண்டி வேறு பகுதிகளுக்கும் பரவிவரும் நிலையில் இந்த ஆபத்தைக் கட்டுப்படுத்தக் கோரி மருத்துவர்கள் சிலர் சுழற்சி முறையில் உண்ணாவிரதப் போராட்டத்தை ஆரம்பித்துள்ளனர். பருத்தித்துறைப் பிரதேசத்துக்கு ஒயில் வருவதைத் தடுக்கும் முகமாக பருத்தித்துறை வைத்திய அதிகாரி டாக்டர்...
யாழ்ப்பாணப் பல்கலைக்கழக வெளிவாரி பேரவை உறுப்பினர்கள் 14 பேரும் தாமாக வெளியேற வேண்டும். அவர்களை தொழிற்சங்க உறுப்பினர்கள் ஏற்றுக்கொள்ளமாட்டார்கள். அவர்கள் தாமாக வெளியேறாவிடின் யாழ். பல்கலைக்கழக தொழிற்சங்கங்கள் பாரிய தொழிற்சங்க போராட்டத்தை நடத்த வேண்டிய சூழ்நிலை உருவாகும் என யாழ். பல்கலைக்கழக ஊழியர் சங்க உப தலைவர் சி.கலாராஜ் செவ்வாய்க்கிழமை (20) தெரிவித்தார். பல்கலைக்கழக வெளிவாரி...
பயங்கரவாத தடை சட்டத்தின் கீழ் சிறைகளிலும், முகாம்களிலும் தடுத்து வைக்கப்பட்டுள்ள அனைத்து தமிழ் கைதிகளின் பெயர் மற்றும் வழக்கு விவரங்களையும் நிறைவேற்று சபைக்கு சமர்ப்பித்து இந்த பிரச்சினைக்கு தீர்வு காணும் செயற்திட்டத்தை ஆரம்பிக்கும்படி தான் விடுத்த கோரிக்கையை ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன ஏற்றுக்கொண்டுள்ளதாக ஜனநாயக மக்கள் முன்னணி தலைவர் மனோ கணேசன் தெரிவித்துள்ளார். இதன்பிரகாரம் இந்த...
2005ஆம் ஆண்டு ஜனாதிபதி தேர்தலின் போது வடக்கு வாக்காளர்களை வாக்களிக்கவிடாமல் தடுத்தமை தொடர்பில் விசாரணை மேற்கொள்ளப்படவுள்ளதாக ஐக்கிய தேசிய கட்சியின் தகவல்கள் தெரிவிக்கின்றன. 2005ஆம் ஆண்டு ஜனாதிபதி தேர்தலின் போது தமிழீழ விடுதலை புலிகள் அமைப்பிற்கு நிதியுதவி வழங்கி வடக்கு மாகாணத்தில் வாக்காளர்களை வாக்களிக்க விடாமல் தடுத்த தற்போதைய நாடாளுமன்ற உறுப்பினர்கள் தொடர்பில் விசாரணைகள் முன்னெடுக்கப்படவுள்ளது....
“நாம் அரசுக்கு ஒன்றையும் மக்களுக்கு இன்னொன்றையும் கூறும் அரசியல் பச்சோந்திகளல்ல“ என ஈழ மக்கள் ஜனநாயகக் கட்சியின் செயலாளர் நாயகம் டக்ளஸ் தேவானந்தா அவர்கள் பொதுமக்களுக்கும், கட்சி உறுப்பினர்களுக்கும் விடுத்துள்ள செய்திக் குறிப்பில் தெரிவித்துள்ளார். அவ்செய்திக் குறிப்பு முழுமையாக வருமாறு... தமிழ் பேசும் மக்களின் அரசியல் இலக்கை வென்றெடுக்கும் எமது யதார்த்த அரசியல் பயணமானது இன்று...
யாழ். ஒருங்கிணைப்புக் குழுக்கூட்டத்தில் இடம்பெற்ற கைகலப்பு தொடர்பில் இன்று செவ்வாய்க்கிழமை (20) பிற்பகல் 3 மணிக்கு விசாரணைக்கு வருமாறு தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் 8 உறுப்பினர்களை யாழ்ப்பாண பொலிஸார் அழைத்துள்ளனர். நாடாளுமன்ற உறுப்பினர் சிவஞானம் சிறிதரன், வட மாகாண விவசாய அமைச்சர் பொன்னுத்துரை ஐங்கரநேசன், வடமாகாண சபை உறுப்பினர்களான பாலச்சந்திரன் கஜதீபன், எம்.கே.சிவாஜிலிங்கம், கந்தையா சர்வேஸ்வரன்,...
மரணப்படையொன்றின் தலைவராக முன்னாள் பாதுகாப்பு செயலாளர் கோத்தபாய ராஜபக்ச செயற்பட்டுள்ளதாக தகவல் கிடைத்துள்ளதாக பொலிஸ் பேச்சாளர் அஜித் ரோஹன தெரிவித்துள்ளார். இது குறித்து அவர் மேலும் தெரிவித்துள்ளதாவது, சண்டேலீடர் பத்திரிகையின் ஆசிரியர் லசந்த விக்கிரமதுங்கவை கொலைசெய்யுமாறு முன்னாள் பாதுகாப்பு செயலாளர் கோத்தபாய ராஜபக்ச இயக்கி வந்த மரணப்படைக்கு அவரே உத்தரவிட்டார் எனவும் எழுந்துள்ள குற்றச்சாட்டுகள் குறித்து...
வடமாகாண முன்னாள் ஆளுநர் ஜி.ஏ.சந்திரசிறியின் கீழ் இருந்த விடயதானங்களில், வடமாகாண சபையின் கீழ் மாற்றம் செய்வதற்கு வடமாகாண உறுப்பினர்களின் சம்மதம் பெறப்பட்டுள்ளது. வடமாகாண சபையின் மாதாந்த அமர்வு, கைதடியில் அமைந்துள்ள வடமாகாண சபையின் கட்டடத்தில் திங்கட்கிழமை (19) நடைபெற்றது. வடமாகாண ஆளுநருக்கு கடந்த 2014ஆம் ஆண்டு 89 ஆயிரத்து 169 மில்லியன் ரூபாய் ஆக இருந்த...
உள்ளுராட்சி மன்ற நியமனங்களில் இடம்பெறும் முறைகேடுகளை தடுத்து நிறுத்த வேண்டும் என வடமாகாண சபை ஆளுங்கட்சி உறுப்பினர் சந்திரலிங்கம் சுகிர்தன் வடமாகாண சபையில் தெரிவித்தார். வடமாகாண சபையின் மாதாந்த அமர்வு கைதடியில் அமைந்துள்ள வடமாகாண சபையில் திங்கட்கிழமை (19) நடைபெற்றபோதே, சுகிர்தன் இதனை தெரிவித்தார். அவர் தொடர்ந்து கூறுகையில், அண்மையில் வழங்கப்பட்ட பருத்தித்துறை பிரதேச சபையின்...
வடமாகாண சபை ஆளுங்கட்சி உறுப்பினர் எம்.கே.சிவாஜிலிங்கத்தின் பிரேரணை பெப்ரவரி 10 ஆம் திகதி சபை அமர்வில் எடுத்துக்கொள்ளப்படும் என அவைத்தலைவர் சி.வி.கே.சிவஞானம் தெரிவித்தார். வடமாகாண சபையின் மாதாந்த அமர்வு கைதடியில் அமைந்துள்ள வடமாகாண சபையில் திங்கட்கிழமை (19) நடைபெற்றது. இதன்போது, 'வடக்கு கிழக்கு தமிழர் தாயகத்தில் நடைபெற்றதும், நடைபெற்றுக் கொண்டிருப்பதுமான இன அழிப்பலிருந்து தமிழ் மக்களை...
பிறப்பு அத்தாட்சிப்பத்திரம் இல்லாதவர்களும் விசேட அனுமதி மூலம் தேசிய அடையாள அட்டையை பெறுவதற்கு ஏற்பாடு செய்ய வேண்டும் என உள்நாட்டு அலுவல்கள் அமைச்சை கோரும் பிரேரணை வடமாகாண சபையில் நிறைவேற்றப்பட்டுள்ளது. வடமாகாண சபையின் மாதாந்த அமர்வு கைதடியில் அமைந்துள்ள வடமாகாண சபையில் திங்கட்கிழமை (19) இடம்பெற்றது. இதன்போது, ஆளுங்கட்சி உறுப்பினர் துரைராசா ரவிகரன் இந்தப் பிரேரணையை...
வலிகாமம் தென்மேற்கு பிரதேசத்தில் மேற்கொள்ளப்படும் வேலைத்திட்டங்களில் சில வேலைத்திட்டங்களுக்கான வரிப்பணத்தை 2015ஆம் ஆண்டிலிருந்து அதிகரிப்பதற்கு முடிவு செய்துள்ளதாக பிரதேச சபை பதில் தவிசாளர் எஸ்.மகேந்திரன் திங்கட்கிழமை (19) தெரிவித்தார். இது தொடர்பாக அவர் மேலும் கூறுகையில், பிரதேச சபையில் மேற்கொள்ளவேண்டிய அபிவிருத்திப் பணிகளுக்கு அதிகளவு நிதி தேவையென்பதால் இந்த அதிகரிப்பு மேற்கொள்ளப்பட்டுள்ளது. வருமானம் குறைந்த பிரதேச...
கிணற்றுக்குள் வீழ்ந்த பேரனை காப்பாற்றச் சென்ற மூதாட்டியொருவர் உயிரிழந்த சம்பவம் குடத்தனை கிழக்கு பகுதியில் திங்கட்கிழமை (19) மதியம் இடம்பெற்றுள்ளதாக பருத்தித்துறை பொலிஸார் தெரிவித்தனர். சிதம்பரநாதன் தங்கம்மா (வயது 65) என்ற மூதாட்டி உயிரிழந்ததுடன், கலைச்செல்வன் கலைமயூரன் (வயது 6) என்ற சிறுவன் ஆபத்தான நிலையில் யாழ்.போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். கிணற்றடியில் நின்றிருந்த பேரன் கிணற்றுக்குள்...
யாழ்ப்பாணம் மாவட்டத்தில் இம்முறை காலநிலையின் நிச்சயமற்ற தன்மை காரணமாக காலபோக நெற்செய்கை விளைச்சலில் பாதிப்பு ஏற்படும் என வடமாகாண பிரதி விவசாய பணிப்பாளர் கி.ஸ்ரீபாலசுந்தரம், திங்கட்கிழமை (19) தெரிவித்தார். இது தொடர்பாக அவர் மேலும் தெரிவிக்கையில், இம்முறை 11 ஆயிரத்து 800 ஹெக்டேயரில் நெல் பயிரிடுவதற்கு திட்டமிடப்பட்டு, 10 ஆயிரத்து 900 ஹெக்டேயர் நிலப்பரப்பில் நெல்...
யாழ்ப்பாணம் தாவடி பகுதியில் வாளுடன் நின்றிருந்த ஒருவரை ஞாயிற்றுக்கிழமை (18) இரவு கைது செய்ததாக கோப்பாய் பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி ஸ்ரீநிக சஞ்சீவ ஜெயக்கொடி, திங்கட்கிழமை (19) தெரிவித்தார். தாவடிப் பகுதியில் இரண்டு நபர்கள், வாள் மற்றும் முள்ளுக்கம்பி சுற்றிய கட்டையுடன் நிற்பதாக கிடைத்த தகவலின் அடிப்படையில், அங்கு சென்ற பொலிஸார் இருவரையும் கைது செய்ய...
மகேஸ்வரி நிதியத்தில் சேவையில் ஈடுபட்ட யாழ். மாவட்ட பாரவூர்தி சங்க அங்கத்தவர்களின் அங்கத்துவ பணம் மீளளிக்கப்படவில்லை என்பதால் மகேஸ்வரி நிதியத்துக்கு எதிராக முன்னெடுக்கப்படவிருந்த போராட்டம், பணம் மீளத்தரப்படும் என நிதியத்தினர் உறுதியளித்ததையடுத்து கைவிடப்பட்டுள்ளதாக பாரவூர்தி சங்கத்தின் தலைவர் செ.ஜெயக்குமார் தெரிவித்தார். அங்கத்துவ நிதியை மீள வழங்காத காரணத்தால் யாழ். மாவட்ட பாரவூர்தி சங்க அங்கத்தவர்கள், திங்கட்கிழமை...
நாட்டில் ஜனநாயகம் மலர ஆட்சிமாற்றம் கட்டாயமானது என்பதை தமிழ் மக்களும், சிங்கள மக்களுக்கும் விரும்பியமையால், நடந்து முடிந்த ஜனாதிபதி தேர்தலில் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன வெற்றிபெற்றதையடுத்து குடும்ப ஆட்சிக்கு முற்றுப்புள்ளி வைக்கப்பட்டுள்ளதாக தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு நாடாளுமன்ற உறுப்பினர் மரியாபரணம் சுமந்திரன் தெரிவித்தார். ஜனவரி 08ஆம் திகதி நடந்து முடிந்த ஜனாதிபதி தேர்தலின் பின்னரான, தற்போதைய...
Loading posts...
All posts loaded
No more posts
