- Tuesday
- May 5th, 2026
இந்தியாவின் வட மாநிலமான பிகாரில் மூன்று முஸ்லிம்கள் உயிருடன் எரிக்கப்பட்ட சம்பவம் தொடர்பில் குறைந்தது 14 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். கிராமம் ஒன்றில் காணாமல்போன இந்து ஒருவரின் உடல் ஒருவாரத்துக்கு பின்னர் கண்டெடுக்கப்பட்ட நிலையில், பலரது வீடுகளுக்கு தீ வைக்கப்பட்டுள்ளன. இதிலேயே முஸ்லிம்கள் மூவரும் உயிரிழந்துள்ளனர். சடலமாகக் கண்டெடுக்கப்பட்ட அந்த இந்து இளைஞருக்கு 19 வயது...
விக்ரம் நடிப்பில் ஷங்கர் இயக்கத்தில் சில தினங்களுக்கு முன் வெளியான 'ஐ' படத்தில் ஒரு திருநங்கை வில்லியாக நடித்திருந்தார். 'எங்களை ஐ படத்தில் தவறாக சித்தரித்து விட்டார்கள்' என்று போர்க்கொடி தூக்கியுள்ள திருநங்கைகள், இப்போது படத்தின் இயக்குனர் ஷங்கர் மற்றும் படத்தில் நடித்த விக்ரம், சந்தானம் ஆகியோர் பகிரங்க மன்னிப்பு கேட்க வேண்டும் என்று குரல்...
அஜீத்தின் ‘என்னை அறிந்தால்’ படம் பொங்கலுக்கு ரிலீசாகும் என அறிவிக்கப்பட்டது. விளம்பரங்களும் வந்தன. ஆனால் பொங்கலுக்கு வரவில்லை. தொழில்நுட்ப பணிகள் முடிவடையாததால் ரிலீசாகவில்லை என விளக்கம் அளிக்கப்பட்டது. வருகிற 29–ந்தேதி படம் ரிலீசாகும் என படக்குழுவினர் தெரிவித்தனர். ரசிகர்கள் அன்றைய தினம் படம் வரும் என்ற எதிர்பார்ப்போடு இருக்கிறார்கள். ஆனால் ‘என்னை அறிந்தால்’ பட விளம்பரங்களில்...
வடமாகாணத்தைச் சேர்ந்த பட்டப்படிப்பினை முடித்த வேலையற்ற பட்டதாரிகள் நாளை மறுதினம் காலை 10 மணியளவில் யாழ்.மாவட்ட செயலகத்திற்கு அருகிலுள்ள பழைய பூங்கா முன்றலில் அமைதியான வழிமுறையில் ஒன்று கூடவுள்ளனர். குறித்த ஒன்றுகூடல் எந்தவொரு அரசியல் பின்னணிகளும் இன்றி வேலையற்ற பட்டதாரிகளின் கோரிக்கைகள் மட்டும் அடங்கிய மகஜர்களை வடமாகாண முதலமைச்சர்,வடமாகாண ஆளுநர் மற்றும் மாவட்ட அரசாங்க அதிபர்...
வட மாகாணத்தின் கலைஞர்களுக்கு ஓய்வூதியம் வழங்கும் நிகழ்வு இன்று வட மாகாண சபையின் பொங்கல் விழாவில் ஆரம்பித்து வைக்கப்பட்டது. வடக்கு மாகாண சபையின் 2015 ஆம் ஆண்டுக்கான முதலாவது அமர்வு ஆரம்பமாகி இடம்பெற்று வருகின்றது. அமர்வு ஆரம்பிக்கும் முன்னர் வட மாகாண சபையின் பொங்கல் விழா கொண்டாடப்பட்டது. இதன்போது வட மாகாணக் கலைஞர்களுக்கான ஓய்வூதியக் கொடுப்பனவு...
சுன்னாகம் பகுதியிலுள்ள கிணறுகளில் ஏற்பட்ட கழிவு எண்ணெய் கசிவை ஆராயும் பொருட்டு 9 பேர் கொண்ட குழுவொன்று வடமாகாண சபையால் அமைக்கப்பட்டுள்ளதாக, வடமாகாண அவைத்தலைவர் சி.வி.கே.சிவஞானம் தெரிவித்தார். வடமாகாணசபையின் மாதாந்த அமர்வு கைதடியில் அமைந்துள்ள வடமாகாண சபையில் இன்று திங்கட்கிழமை (19) நடைபெற்றபோதே, அவைத்தலைவர் இவ்வாறு குறிப்பிட்டார். முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரனின் நெறிப்படுத்தலில் அமைக்கப்பட்டுள்ள இந்தக்குழு, எண்ணெய்...
வடமாகாண முன்னாள் ஆளுநர் ஜி.ஏ.சந்திரசிறி தனக்கு ஒதுக்கப்பட்ட நிதியை வைத்து அதிகளவான வட்டியைப் பெற்றதாக தனக்கு தகவல்கள் கிடைத்ததாக வடமாகாண எதிர்க்கட்சித் தலைவர் சின்னத்துரை தவராசா குற்றஞ்சாட்டினார். வடமாகாண சபையின் மாதாந்த அமர்வு கைதடியில் அமைந்துள்ள வடமாகாண சபையில் திங்கட்கிழமை (19) இடம்பெற்றது. வடமாகாண ஆளுநர் ஜி.ஏ.சந்திரசிறிக்கு தனிப்பட்ட ரீதியில் ஒதுக்கப்பட்ட 6 மில்லியன் ரூபாய்...
வடமாகாண புதிய ஆளுநராக தெரிவு செய்யப்பட்ட எச்.எம்.ஜி.எஸ்.பள்ளிகக்கார எமது பிரச்சினைகள் தொடர்பில் நன்கறிந்தவர் என வட மாகாண எதிர்க்கட்சித் தலைவர் சின்னத்துரை தவராசா தெரிவித்தார். இது தொடர்பாக அவர் மேலும் கூறுகையில், 'புதிய ஆளுநர் நியமனம் வரவேற்கத்தக்கது. முறைப்படி ஆளுநரை நீக்கவேண்டும் அவ்வாறு நீக்கினால் அதற்கு நாம் ஒத்துழைப்பு வழங்குவோம் என்று நான் பல தடவைகள்...
ஈழமக்கள் ஜனநாயகக் கட்சியின் மக்கள் சபை உறுப்பினர் சரவணபவானந்தன் சிவகுமார் என்பவரது மோட்டார் சைக்கிள் விசமிகளால் ஞாயிற்றுக்கிழமை (18) இரவு தீவைக்கப்பட்டதாக மருதங்கேணி உப-பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு பதிவு செய்யப்பட்டுள்ளதாக பளைப் பொலிஸார் தெரிவித்தனர். வீட்டின் முன்பக்கத்தில் விடப்பட்டிருந்த 2 இலட்சம் ரூபாய் பெறுமதியான மோட்டார் சைக்கிளே இவ்வாறு எரிக்கப்பட்டது. இந்தச் சம்பவம் தொடர்பான விசாரணைகளை...
அரச தலைவர் கண்டிக்கு விஜயம் செய்யும் சந்தரப்பங்களில் பயன்படுத்தும் கண்டியிலுள்ள ஜனாதிபதி உத்தியோகபூவர் இல்லமான ஜனாதிபதி மாளிகையை மக்கள் பார்வையிடுவதற்கான சந்தரப்பம் வழங்கப்படவிருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. மக்களின் பார்வைக்காக இந்த மாளிகையை திறந்துவிடுவதற்கு யோசனைகள் முன்வைக்கப்பட்டுள்ளதாக அறியமுடிகின்றது. பிலிமத்தலாவை நிலமேக்கு சொந்தமான வளவில், ஆங்கிலேயர்களால் நிர்மாணிக்கப்பட்ட இந்த வீடு, அலங்காரத்துடன் நிர்மாணிக்கப்பட்டதுடன் குறித்த வீடு “அரசமாளிகை”...
அலரிமாளிகையில் இருந்ததாக கூறப்படும் போனி எனப்படும் சிறிய இன குதிரைகள் நான்கு, கோழிகள் மற்றும் ஒரு தொகுதி கோழிக்குஞ்சுகள் மீட்கப்பட்டுள்ளன. ஹம்பாந்தோட்டை பறவைகள் சரணாலயத்துக்கு பொறுப்பாகவிருந்த நபரிடமிருந்தே மேற்குறிப்பிட்ட குதிரைகள், கோழிகள் மற்றும் கோழிக்குஞ்சுகளை 80ஆயிரம் ரூபாவுக்கு தாம் பெற்றதாக பிலியந்தலையைச் சேர்ந்த வர்த்தகர் ஒருவர் தெரிவித்துள்ளார். அலரிமாளிகையில் பணியாற்றிய மாலபேயைச் சேர்ந்த ஒருவருக்கு அந்த...
வடக்குக்கான அதிவேக நெடுஞ்சாலையின் பணிகளை தற்காலிகமாக இடைநிறுத்தி வைப்பதற்கு அரசாங்கம் தீர்மானித்துள்ளது. அந்த நெடுஞ்சாலைக்கான முழுமையான செலவுகளை ஆராய்ந்து பார்ப்பதற்காவே இந்த பணிகள் இடைநிறுத்திவைக்கப்பட்டுள்ளது. 6 ஆயிரத்து 750 கோடி ரூபாய் செலவில் நிர்மாணிக்கப்படவுள்ள வடக்குக்கான அதிவேக நெடுஞ்சாலையின் செங்கடகல நுழைவாயிலுக்கான அடிக்கல், ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவினால் கடந்த நவம்பர் மாதம் 14ஆம் திகதி நாட்டப்பட்டது....
அரச ஊழியர்களுக்கு 5 ஆயிரம் ரூபா சம்பள அதிகரிப்பு எதிர்வரும் 30 ஆம் திகதி தொடக்கம் அதிகரிக்கப்படவுள்ளது. புதிய அரசின் 100 நாள் திட்டங்களுக்காக 20 ஆயிரம் கோடி ரூபாவுக்கான இடைக்கால வரவு-செலவுத் திட்டம் சமர்ப்பிக்கப்படவுள்ளது. இந்த இடைக்கால நிதி நிலை அறிக்கை அமைச்சரவையின் அனுமதிக்காக வரும் 29ஆம் திகதி சமர்ப்பிக்கப்படும் . இதில் அரச...
தன்னைப் பிடிக்க முற்பட்டால் போத்தலால் குத்துவேன் என்று தாண்டவம் ஆடியுள்ளார் பெண் ஒருவர். அதனால் அவரைப் பிடிக்க முற்பட்ட பொலிஸார் செய்வதறியாது கைகட்டி வேடிக்கை பார்த்தனர். தொலைத்தொடர்பு வயர்களை அறுத்தனர் என்று தெரிவித்து கைது செய்யப்பட்ட இருவரில் ஒருவரின் தாயே இவ்வாறு நெல்லியடிப் பொலிஸ் நிலையத்துக்கு முன்பாக தாண்டவம் ஆடினார். பொலிஸ் நிலையத்துக்கு முன்பாக குறித்த...
ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன, பிரதமர் ரணில் விக்கிரமசிங்க உள்ளிட்டவர்களை இன்று தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு சந்தித்து பேச்சுவார்த்தை நடத்தவுள்ளது. கிழக்கு மாகாண சபையின் முதலமைச்சர், புதிய ஆட்சி அமைப்பு விவகாரம் தொடர்பாக கூட்டமைப்பின் தலைவர் இரா. சம்பந்தன் செயலாளர் மாவை சேனாதிராஜா உள்ளிட்ட உயர்மட்ட தலைவர்கள் இன்றைய தினம் கொழும்பில் நடைபெறவுள்ள இச்சந்திப்பில் தமது நிலைப்பாடு...
பொதுமக்களின் தேவைகள், கோரிக்கைகள் தொடர்பாக முறையாக நடவடிக்கை எடுக்காமல் தான்தோன்றித்தனமாக கடமைகளைப் புறக்கணிக்கும் அரச அதிகாரிகளுக்கு எதிராக ஒழுக்காற்று நடவடிக்கை எடுக்க பிரதமரின் அலுவலகம் முடிவெடுத்துள்ளது. தவறிழைக்கும் அரச அதிகாரிகளின் வருடாந்த சம்பள உயர்வினை இடைநிறுத்தவும் கவனம் திரும்பியுள்ளதாக பிரதமரின் செயலர் சமன் ஏக்கநாயக்கா தெரிவித்துள்ளார். ஜனாதிபதி தேர்தல் காலத்தில் வாக்குறுதி வழங்கியவாறு நல்லாட்சி வேலைத்...
"நாட்டின் பாதுகாப்பு நலனைக் கருத்தில் கொண்டு வடக்கில் இருந்து ஒருபோதும் படைகள் அகற்றப்பட மாட்டாது. இதில் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன உறுதியாக இருக்கிறார்." - இவ்வாறு பாதுகாப்பு இராஜாங்க அமைச்சர் ருவான் விஜயவர்த்தன தெரிவித்தார். நேற்று முன்தினம் கண்டிக்கு சென்ற பாதுகாப்பு இராஜாங்க அமைச்சர் விஜயவர்த்தன தலைமைப் பீடாதிபதியை சந்தித்து ஆசி வேண்டினார். இதன்போதே மேற்கண்ட...
முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ தலைமையிலான ஐக்கிய மக்கள் சுதந்திர கூட்டமைப்பு அரசாங்கத்தின் முக்கியஸ்தர்களால் மேற்கொள்ளப்பட்டதாக கூறப்படும் சட்டவிரோதமான சம்பவங்கள் அம்பலமாகிகொண்டிருக்கின்றன. தங்களுக்கு கிடைக்கின்ற இரகசிய தகவல்களை அடுத்து பொலிஸாரும் குற்றப்புலனாய்வு பிரிவினரும் சந்தேகத்துக்கு இடமான இடங்களில் திடீர் தேடுதல் நடவடிக்கைகளில் ஈடுபட்டு, சட்டவிரோதமான பொருட்களை மீட்டுவருகின்றனர். சனிக்கிழமை (17) முதல் ஞாயிற்றுக்கிழமை (18) மாலை...
'தேசிய பிரச்சினை தொடர்பான பேச்சுவார்த்தைக்கு நாம் தயார். தமிழ்த் தேசியக் கூட்டமைப்புடன் பேசி தீர்வுத் திட்டத்தை உருவாக்க புதிய அரசு தயாராக உள்ளதா?' என கூட்டமைப்பின் பேச்சாளரும் யாழ். மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினருமான சுரேஸ் பிரேமச்சந்திரன், நேற்று ஞாயிற்றுக்கிழமை (18) கேள்வி எழுப்பினார். வவுனியா வெளிவட்ட வீதியில் அமைந்துள்ள ஈழ மக்கள் புரட்சிகர விடுதலை முன்னணியினால்...
பப்புவா நியு கினியில் உள்ள ஆஸ்திரேலிய தடுப்புமுகாமில், தாங்கள் எதிர்நோக்கும் நிலைமைகளைக் கண்டித்து தஞ்சக் கோரிக்கையாளர்கள் இரண்டு கூடாரங்களுக்குள் முடங்கியிருந்து போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். இதனிடையே, மனுஸ் தீவு தடுப்புமுகாமில் நடக்கும் போராட்டம் வன்முறையாக மாறியுள்ளதாக வெளியாகியுள்ள தகவல்களை ஆஸ்திரேலிய அதிகாரிகள் மறுத்துள்ளனர். தொடர்ந்தும் நூற்றுக்கணக்கான தஞ்சக் கோரிக்கையாளர்கள் மனுஸ் தீவு முகாமில் உண்ணாவிரதப் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்....
Loading posts...
All posts loaded
No more posts
