சம்பந்தன், சுமந்திரனுக்கு எதிர்ப்புத் தெரிவித்து யாழ்.பல்கலையில் சுவரொட்டி!

இலங்கையின் சுதந்திர தின விழாவில் பங்கேற்ற தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவர் இரா.சம்பந்தன், சுமந்திரன் எம்.பி. ஆகியோருக்கு எதிராக யாழ். பல்கலைக்கழக வளாகத்தில் சுவரொட்டிகள் ஒட்டப்பட்டுள்ளன. 'போலி தமிழ்த் தேசிய அரசியல்வாதிகளே' என விளித்து ஒட்டப்பட்ட அந்த சுவரொட்டிகளில் "ஜனநாயக சோசலிஷக் குடியரசு எனப்படும் இலங்கையின் தேசிய சின்னங்கள் அனைத்திலும் சிங்கள மேலாதிக்கத்தைப் பிரதிபலிக்கும் அடையாளங்களே...

வடக்கு மாகாண சபையில் இனவழிப்புப் பிரேரணை தீர்மானமாகியது!

வடக்கு மாகாண சபை உறுப்பினர் எம்.கே.சிவாஜிலிங்கத்தால் கடந்தவருடம் சமர்ப்பிக்கப்பட்ட பிரேரணை, நீண்ட இழுபறிக்குப்பின்னர் இன்று அனைத்து உறுப்பினர்களினதும் ஆதரவுடன் தீர்மானமாககியது. வடக்கு மாகாண சபையின் 24ஆவது அமர்வு கைதடியில் உள்ள வடக்கு மாகாண சபையின் பேரவைச் செயலகக் கட்டட தொகுதியில் நடைபெற்றது. இந்த அமர்வில் சிவாஜிலிங்கத்தின் பிரேரணையை வடக்கு முதலமைச்சர் க.வி.விக்னேஸ்வரன் சமர்ப்பித்து உரையாற்றினார். சட்டநடைமுறைகளை...
Ad Widget

தாமதமாக ஆரம்பமாகிய சபை அமர்வு

வடமாகாண முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரன் சபைக்கு வரத் தாமதமாகியதால் வடமாகாண சபை அமர்வு காலை 10.09 மணிக்கே ஆரம்பமாகியது. வழமையாக வடமாகாண சபை அமர்வு 9.30 மணிக்கு ஆரம்பமாகின்ற நிலையில் இன்றைய அமர்வு தாமதமாக ஆரம்பமாகியது. கைதடியில் அமைந்துள்ள வடமாகாண சபையில் மாதாந்த சபை அமர்வு செவ்வாய்க்கிழமை (10) ஆரம்பமாகியது. ஆளுங்கட்சி உறுப்பினர் எம்.கே.சிவாஜிலிங்கத்தால் கடந்த 2014...

கோமகனின் விடுதலையை வலியுறுத்தி மாகாண சபைக்கு முன் போராட்டம்

கைது செய்யப்பட்டு தடுத்து வைக்கப்பட்டுள்ள யாழ் மாநகர சபையின் முன்னாள் உறுப்பினர் முருகையா கோமகனை விடுதலை செய்ய நடவடிக்கை எடுக்கக் கோரி வடக்கு மாகாண சபைக்கு முன்னால் கவனயீர்ப்புப் போராட்டம் ஒன்று இடம்பெற்றது. வடக்கு மாகாணசபையின் 24 ஆவது சபை அமர்வு இன்று நடைபெற்று வரும் நிலையில் குறித்த கவனயீர்ப்புப் போராட்டம் கோமகனின் விடுதலைக்கான மக்கள்...

சுவிஸ் வங்கியில் பணம் பதுக்கியுள்ள இலங்கையர்கள்

சுவிட்சர்லாந்து வங்கிகளில் இலங்கையைச் சேர்ந்தவர்களால் 58.3 மில்லியன் டொலர் பணம் இரகசியமாகப் பதுக்கி வைக்கப்பட்டுள்ளதாக அதிர்ச்சித் தகவல்கள் வெளியாகியுள்ளது. சுவிஸ் லீக்ஸ் வெளியிட்டுள்ள தகவலின்படி, சுவிஸ் வங்கிகளில் பணம் பதுக்கி வைக்கப்பட்டுள்ள நாடுகளின் பட்டியலில் இலங்கை 112வது இடத்தில் தரப்படுத்தப்பட்டுள்ளது. இலங்கையைச் சேர்ந்த 92 வாடிக்கையாளர்களால் சுவிஸ் வங்கிகளில் 129 கணக்குகள் பேணப்பட்டு வருவதாகவும், அதிகபட்சமாக...

தாயின் பூதவுடலை சுமந்து சென்று சுடலையிலும் இறுதிக் கடன்களை நிறைவேற்றிய பெண் பிள்ளைகள்

யாழ்.கோப்பாயில் தாயின் இறுதிச் சடங்கில் பூதவுடலை அவரது பெண் பிள்ளைகள் நால்வரும் முன்வந்து கண்ணீர் சிந்தியவாறு காவிய சம்பவம் அங்கு நின்ற அனைவரதும் நெஞ்சங்களை உருக்கியதுடன் வியப்பிலும் ஆழ்த்தியது. திருநெல்வேலி சிவன் கோயிலடியைப் பிறப்பிடமாகவும் தற்போது இராமநாதன் கலட்டி கோப்பாயை வசிப்பிடமாகவும் கொண்டவர் திருமதி அருள்பிரகாசம் தையல்நாயகி. இவரது கணவர் கடந்த சில வருடங்களுக்கு முன்னர்...

இந்தியர் இருவருக்கு இசையுலகின் பிரபல கிராமி விருது

57 ஆவது கிராமி விருது வழங்கும் விழாவில், இந்தியாவை சேர்ந்த இருவர் இசையுலகின் கவுரவம் மிக்க இவ்விருதினை பெற்றனர். அமெரிக்காவின் லாஸ் ஏஞ்சல்ஸ் நகரில் இசையுலகின் உயரிய விருதான கிராமி விருது வழங்கும் விழா கடந்த ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது. திரையுலகம் மற்றும் பாப் இசை உலகை சேர்ந்த முக்கிய பிரமுகர்கள் பலர் இவ்விழாவில் பங்கேற்றனர். இவ்விருதுக்கான...

அரசியலில் சமுர்த்தி உத்தியோகத்தர்கள்?

புதிய தேசிய அரசாங்கத்தில் அமைச்சராகப் பொறுப்பேற்றுள்ள ரிஷாத் பதியுதீனை வரவேற்கும் நிகழ்வுகள் வன்னியில் இடம்பெற்று வருகின்றன. நேற்று திங்கட்கிழமை முல்லைத்தீவுக்கு வருகை தந்த அமைச்சரை 'எமது தலைவரே வருக' என்று எழுதிய பதாதைகளுடன் சமுர்த்தி உத்தியோகத்தர்கள் ஈடுபட்டிருந்தனர் என்று அப்பகுதி பொதுமக்கள் குற்றம் சாட்டியுள்ளனர். தேசிய அரசின் கொள்கைகளில் ஒன்றான அரச ஊழியர்கள் அரசியலில் ஈடுபடக்கூடாது....

புலிகளின் யாழ். மாவட்ட முன்னாள் அரசியல் பொறுப்பாளர் டொமினிக் மரணம்!

90களின் ஆரம்பத்தில் விடுதலைப் புலிகள் இயக்கத்தின் யாழ். மாவட்ட அரசியல் பொறுப்பாளராக இருந்த டொமினிக் (இந்திரன் சண்முகலிங்கன்) நேற்று முன்தினம் ஞாயிற்றுக்கிழமை திருச்சியில் காலமானார். இவர் யாழ்.மாவட்டப் பொறுப்பாளராக இருந்த சமயத்தில்தான் பிரேமதாஸா அரசுக்கும் விடுதலைப் புலிகள் இயக்கத்துக்கும் இடையில் நடைபெற்ற சமரசப் பேச்சு முயற்சிகள் தோல்வியைடைந்து, 1990 ஜூனில் இரண்டாம் ஈழயுத்தம் வெடித்தது. யுத்தம்...

தமிழ் அரசியல் கைதிகளின் விவரங்களைப் பதியுமாறு வேண்டுகோள்!

அனைத்துத் தமிழ் அரசியல் கைதிகளின் விவரங்களையும் பதிவு செய்யும்படி தமிழ் அரசியல் கைதிகளின் பெற்றோர் ஒன்றியம் வேண்டுகோள் விடுத்துள்ளது. இது தொடர்பாக அந்த அமைப்பு அனுப்பி வைத்துள்ள அறிக்கையின் விவரம் வருமாறு: இலங்கையின் பல்வேறு சிறைச்சாலைகளிலும் தடுப்பு முகாம்களிலும் தடுத்து வைக்கப்பட்டுள்ள அனைத்து அரசியல் தமிழ் கைதிகளினதும் விவரங்களை எதிர்வரும் மார்ச் முதலாம் திகதிக்கு முன்னர்...

அரச ஊழியர்கள் அர்ப்பணிப்புடன் செயற்படவேண்டும்

பிரதேச செயலாளர்கள் மற்றும் கிராம அலுவலர்கள், மக்களின் தேவைகளை நிவர்த்தி செய்வதற்கு அர்ப்பணிப்புடன் செயற்படவேண்டும் என உள்நாட்டு அலுவல்கள் மற்றும் கடற்றொழில் அமைச்சர் ஜோசப் மைக்கல் பெரேரா, திங்கட்கிழமை(09) தெரிவித்தார். யாழ். பிரதேச செயலக புதிய கட்டட தொகுதி திறப்பு விழாவில் கலந்துகொண்டு உரையாற்றும் போதே அவர் மேற்கண்டவாறு கூறினார். அவர் தொடர்ந்து கூறுகையில், பொதுமகனை...

யாழ்.பிரதேச செயலக புதிய கட்டடம் திறந்து வைப்பு

பழைய பூங்கா வளாகத்தில் 48 மில்லியன் ரூபாய் செலவில் நிர்மாணிக்கப்பட்ட யாழ். பிரதேச செயலகத்தின் புதிய கட்டடத்தொகுதி உள்நாட்டு அலுவல்கள் மற்றும் கடற்றொழில் அமைச்சர் ஜோசப் மைக்கல் பெரேரா மற்றும் மகளிர் விவகார பிரதி அமைச்சர் விஜயகலா மகேஸ்வரன் ஆகியோரால் திங்கட்கிழமை (09) திறந்து வைக்கப்பட்டது. சென்.ஜோன்ஸ் கல்லூரியில் வசதிகள் குன்றிய நிலையில இயங்கி வந்த...

 யாழ்.தேசியக் கல்வியற் கல்லூரிக்கு அழகியற் பாட கற்கைநெறி அவசியம்

யாழ்ப்பாணம் தேசிய கல்வியற் கல்லூரியில் அழகியற் பாட கற்கை நெறியை மீள ஆரம்பிக்கவேண்டியது அவசியம் என கல்வியற் கல்லூரியின் பீடாதிபதி எஸ்.அமிர்தலிங்கம் திங்கட்கிழமை (09) தெரிவித்தார். இது தொடர்பாக அவர் மேலும் கூறுகையில், கல்வியற் கல்லூரியில் கற்பிக்கப்பட்டு வந்த அழகியல் கற்கைநெறி கடந்த 2013 ஆம் ஆண்டு தொடக்கம் நிறுத்தப்பட்டுள்ளது. இந்தக் கற்கை நெறியை கற்பதற்கு...

காணாமற்போன எனது மகனின் தகவல் பத்திரிகையில் வெளிவந்தது

ஆலயமொன்றின் தேர் திருவிழாவுக்குச் சென்று காணாமற்போன எனது மகன் பற்றிய தகவல்கள் உள்ளூர் பத்திரிகை ஒன்றில் வெளியாகியுள்ளதாக தாய் ஒருவர் தெரிவித்தார். காணாற்போன மற்றும் கைது செய்யப்பட்டவர்களின் உறவினர்களின் ஏற்பாட்டில் யாழ். மத்திய பேருந்து நிலையத்துக்கு முன்பாக திங்கட்கிழமை (09) நடைபெற்ற ஆர்ப்பாட்டத்தில் கலந்துகொண்ட தாயொருவரே இவ்வாறு கூறினார். அவர் தொடர்ந்து கூறுகையில், எனது மகன்...

இராணுவ முகாம்களை அகற்றுவதற்கு தீர்மானிக்கவில்லை – ருவான் விஜேவர்த்தன

“பொதுமக்களின் பாதுகாப்புக்காக அமைக்கபட்டுள்ள இராணுவ முகாம்களை அகற்றுவதற்கு நாங்கள் தீர்மானிக்க வில்லை. இராணுவத்தை குறைக்கும் தேவைப்பாடும் எமக்கு தற்போது இல்லை' என பாதுகாப்பு இராஜாங்க அமைச்சர் ருவான் விஜேவர்த்தன தெரிவித்தார். இதேவேளை, 'சர்வதேச நாடுகள் பல எமது பாதுகாப்பு படையினருக்கு பயிற்சிகள் வழங்க தற்போது முன்வந்திருக்கின்றன. இது வரவேற்கதக்கதாகும்' என்றும் அவர் தெரிவித்தார். திருகோணமலைக்கு ஞாயிற்றுக்கிழமை(8)...

குற்றச்சாட்டுகளை மறுக்கிறார் மஹிந்த ராஜபக்ஷ

விமானக்கொள்வனவு, வாகனங்கள் மீட்பு, ஜனாதிபதி செலவுக்கென கோடிக்கணக்கான ரூபாய்கள் ஒதுக்கீடு மற்றும் ஊழல் மோசடி உட்பட தன்மீது சுமத்தப்பட்டுள்ள குற்றச்சாட்டுகளை முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ முற்றாக மறுத்துள்ளார். தன்மீது சுமத்தப்பட்டுள்ள குற்றச்சாட்டுக்களுக்கு விளக்கமளித்து ஊடக அறிக்கையொன்றை திங்கட்கிழமை வெளியிட்டுள்ள முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ அதில், '2015ஆம் ஆண்டில் ஜனாதிபதி செயலகத்துக்கு 959 கோடி...

 எனக்கு அழைப்பில்லை: மஹிந்த

ஐக்கிய மக்கள் சுதந்திர கூட்டமைப்பின் பிரதமர் வேட்பாளராக போட்டியிடுமாறு தனக்கு இதுவரையிலும் அழைப்பு விடுக்கப்படவில்லை என்று முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ தெரிவித்துள்ளார். வெலிக்கடை சிறைச்சாலை வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ள முன்னாள் சுகாதார அமைச்சர் திஸ்ஸ அத்தநாயக்க எம்.பியை பார்வையிட்டதன் பின்னர், அங்கு குழுமியிருந்த ஊடகவியலாளர்களிடமே அவர் மேற்கண்டவாறு தெரிவித்துள்ளார். நான், திஸ்ஸ அத்தநாயக்க, பிரேமலால் ஜயசேகர...

பாரிய ஊழல்கள் பற்றி விசாரிக்க விசேட ஜனாதிபதி ஆணைக்குழு

கடந்த அரசாங்கத்தின் போது இடம்பெற்ற பாரிய ஊழல்களை பற்றி விசாரணை செய்வதற்கு விசேட ஜனாதிபதி ஆணைக்குழுவொன்று அடுத்தவாரம் நிறுவப்படும் என்று ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தெரிவித்தார். அரலகங்விலவில் நேற்று இடம்பெற்ற வைபவமொன்றில் கலந்துகொண்டு உரையாற்றும் போதே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார். பதவி, தராதரம், கட்சி மற்றும் நபர்கள் யாரென்று பார்க்காது இந்த ஆணைக்குழு செயற்படும்.‍ சொத்துக்களை...

வலி. மேற்கு பிரதேச சபையின் புதிய நூலகம் மக்கள் பாவனைக்கு

வலிகாமம் மேற்கு பிரதேச சபையினால் சங்கானையில் புதிதாக நிர்மாணிக்கப்பட்ட பொது நூலக கட்டடம் நேற்று திறந்து வைக்கப்பட்டது. வலிகாமம் மேற்கு பிரதேச சபை தலைவர் திருமதி நாகரஞ்சினி ஐங்கரன் தலைமையில் காலை 10.30 மணியளவில் இடம்பெற்ற இந்த நிகழ்விற்கு பிரதம விருந்தினராக தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் யாழ். மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் மாவை சேனாதிராசா, சிறப்பு...

லொறி விபத்தில் நால்வர் சாவு: 13 பேர் காயம்

மதவாச்சியில் இடம்பெற்ற லொறி விபத்தில் ரயில்வே திணைக்களத்தின் ஊழியர்கள் நால்வர் உயிரிழந்துள்ளனர். யாழ்ப்பாணத்துக்கு ரயில் தண்டவாளங்களை ஏற்றிக்கொண்டு வந்தபோதே குறித்த விபத்து இடம்பெற்றுள்ளது. தண்டவாளங்களுக்குள் நசுங்குண்ட நிலையிலேயே அந்த நால்வரின் சடலங்களும் மீட்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர். மேற்படி சம்பவத்தில் காயமடைந்த 13 பேரும் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். குறித்த சம்பவம் தொடர்பில் மேலதிக விசாரணைகளை பொலிஸார் மேற்கொண்டு...
Loading posts...

All posts loaded

No more posts