Ad Widget

வடக்கு மாகாண சபையில் இனவழிப்புப் பிரேரணை தீர்மானமாகியது!

வடக்கு மாகாண சபை உறுப்பினர் எம்.கே.சிவாஜிலிங்கத்தால் கடந்தவருடம் சமர்ப்பிக்கப்பட்ட பிரேரணை, நீண்ட இழுபறிக்குப்பின்னர் இன்று அனைத்து உறுப்பினர்களினதும் ஆதரவுடன் தீர்மானமாககியது.

வடக்கு மாகாண சபையின் 24ஆவது அமர்வு கைதடியில் உள்ள வடக்கு மாகாண சபையின் பேரவைச் செயலகக் கட்டட தொகுதியில் நடைபெற்றது.

இந்த அமர்வில் சிவாஜிலிங்கத்தின் பிரேரணையை வடக்கு முதலமைச்சர் க.வி.விக்னேஸ்வரன் சமர்ப்பித்து உரையாற்றினார்.

சட்டநடைமுறைகளை எதிர்கொள்ளும் வகையில் குறித்த பிரேரணை ஆங்கில மொழியில் தயாரிக்கப்பட்டுள்ளது என்றும், சிங்கள, தமிழ் மக்கள் விளங்கிக்கொள்ளும் வகையில் அந்தப் பிரேரணை விரைவில் தமிழ், சிங்கள மொழிகளில் வெளியிடப்படும் என்றும், இது வரலாற்று முக்கியத்துவம் மிக்க – தமிழ் மக்களது எதிர்கால நடவடிக்கைகளுக்கான – சர்வதேச அரசியல் முன்னெடுப்புக்கான முக்கிய பிரேரணையாக இருக்கும் என்றும் முதலமைச்சர் தெரிவித்தார்.

இதன்போது, பிரேரணையில் ”ஈ.பி.டி.பி.” என்ற கட்சிப் பெயர் பயன்படுத்தப்பட்டுள்ளது என்று குறிப்பிட்ட எதிரணி உறுப்பினர் தவநாதன், வரலாற்று முக்கியத்துவம்மிக்க இந்த தீர்மானத்தில் அந்த சொற்பதம் நீக்கப்படவேண்டும் என்று கோரினார்.

இதனை ஏற்றுக்கொண்ட முதலமைச்சர் அந்த சொற்பதத்தை மட்டும் நீக்க உடன்பட்டார். இதனையடுத்து அனைத்து உறுப்பினர்களும் தமது ஏகோபித்த ஆதரவை வெளிப்படுத்தி, தீர்மானத்தை நிறைவேற்றினர்.

பிரேரணை ஆங்கில மொழியில்

Related Posts